அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான அரசியல் அகதிகள் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படுகிறார்கள் என தி இன்டிபெண்டன் என்ற ஆங்கில நாளிதள் செய்தி வெளியிட்டுள்ளது. முன்னூறு வரையான அகதிகள் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட உள்ளனர் என குடியகல்வு மற்றும் எல்லைகள் நிறுவனத்தை ஆதாரம் காட்டி அந்தப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. பிரித்தானியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு குடியேற்ற வாசிகளே பிரதான காரணம் என்ற கருத்தை மக்கள் மத்தியில் பிரித்தானிய அரசு விதைக்க ஆரம்பித்திருக்கிறது. இதன் அடிப்படையில் அகதிகள் மீதும், வெளிநாட்டுக் குடியேற்றவாசிகள் மீதும் ஒடுக்குமுறைகள் பிரயோகிக்கப்படுகின்றன.
அதே வேளை ஏனைய நாடுகளை யுத்தகளமாக மாற்றிவரும் பிரித்தானியா உட்பட்ட ஐரோப்பிய அரசுகள் அங்கு அகதிகளை உருவாக்கி வருகின்றன. இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலையில் பிரித்தானிய ஆயுதங்கள் விற்பனைசெய்ய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழ்த் தேசிய வாதம் பேசும் பிரித்தானிய தமிழ் மேட்டுக்குடி அமைப்புக்கள் அகதிகள் குறித்து எந்த அக்கறையும் கொள்வதில்லை.
ஐரோப்பாவில் போராடும் அமைப்புக்களுடன் எந்தத் தொடர்புகளுமற்ற அதிகாரவர்கத்துடன் சமரசம் செய்துகொண்டுள்ள இவர்களின் தேசிய வியாபார அமைப்புக்கள் அகதிகள் குறித்தும் இலங்கையிலிருந்து வரும் மாணவர்கள் குறித்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள மாட்டார்கள் என்பது தெளிவு.









Where and how this word OCCUPY came into being?