தெற்காசியாவில் கல்வித்தரத்தில் சிறந்த நாடாகவும், எழுத வாசிக்கத் தெரிந்தவர்களின் தொகையை அதிகமாகக் கொண்ட நாடாகவும் இலங்கை கணிக்கப்பட்டிருந்தது. இலங்கையில் வழங்கப்பட்ட முழுமையான இலவசக் கல்வி, இலவசப் பல்கலைக் கழகக் கல்வி ஆகியன பல்வேறு கல்விமான்களை உருவாக்கியது. தேசிய இன முரண்பாட்டின் தோற்றத்திற்கு அடிப்படையான காரணங்களில் தரப்படுத்தலும் ஒன்றாக அமைந்தது. பல்தேசிய வியாபார நிறுவனங்களின் அடியாட்களான ராஜபக்ச பாசிச அரசு கல்வி மருத்துவம் போன்ற அனைத்துத் துறைகளையும் தனியார் மயப்படுத்தி வருகிறது.
இதற்கு முன்னைய அரசுகளும் இத்துறைகளைத் தனியார் மயப்படுத்த முயன்ற போதும் மக்களின் போராட்டங்களால் அவை கைவிடப்பட்டன. இலங்கையில் அனைத்து அரசியல் நிறுவனங்களும் தேசிய இன முரண்பாடு குறித்து மட்டுமே பேசிக்கொள்ள புற்று நோய் போல இலங்கையின் கல்வி மற்றும் மருத்துவ சேவைகள் சூறையாடப்பட்டு அழிக்கப்படுகின்றன.
2015ம் ஆண்டில் 10 லட்சம் ரூபாவை செலவிட்டு இலங்கையில் கல்விப் பட்டங்களை பெற முடியும் என இளைஞர் விவகாரம் மற்றும் நிபுணத்துவ அபிவிருத்தி அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.