University of Central Lancashire(UCLAN) பல்கலைக் கழகத்தின் இலங்கை வளாகத்தை ஆரம்பிப்பதற்கான நிகழ்வில் பங்குபற்றுவதற்காக மகிழ்ச்சியடைகிறேன். இலங்கை மக்களுக்கும் பிரித்தானிய மக்களுக்கும் இடையே உறுதியான கல்வித்தொடர்பை இது தோற்றுவிக்கும். நாட்டின் உறுதித்தன்மையையும் சமாதானத்தையும் ஏற்படுத்துவதில் கல்வி மிக முக்கிய பாத்திரத்தை வகிக்கும். பிரித்தானியப் பல்கலைக்கழகம் இலங்கையில் உருவாகும் நிகழ்வு கொண்டாடப்பட வேண்டும். இவ்வாறு கூறுயிருப்பது பிரித்தானிய அரசின் வெளிவிவகாரச் செயலாளர் வில்லியம் ஹக்.
இலங்கையில் பிரித்தானியப் பல்கலைக்கழகத்தின் வளாகத்திற்கான திட்டத்தை ஆரம்பித்துவைத்து உரையாற்றிய போதே வில்லியம் ஹக் இவ்வாறு தெரிவித்தார்.
கல்வித் தரத்தில் பிந்தங்கியுள்ள இந்த பிரித்தானியப் பல்கலைக்கழகம் மாணவர்களின் தொகையில் நான்காவது இடத்தை வகிக்கிறது. இலங்கை அரசு கல்வியைத் தனியார்மயப்படுத்தும் திட்டம் தமக்கு மகிழ்ச்சி தருவதாக பல்கலக் கழகத்தின் வெளியகக் கல்விக்கான பிரிவு தெரிவித்துள்ளது.
தெற்காசியாவில் சிறந்த இலவசக் கல்வித்திட்டடத்தைக் கொண்ட இலங்கை இலவசக் கல்விக்கு உதராணமாகக் காட்டப்பட்ட்து. ஏகாதிபத்தியங்களின் அடியாள் அரசான ராஜபக்ச பாசிச அரசு இலங்கையின் இலவசக் கல்வியைக் கூட தமது எஜமானர்களுகுக் காணிக்கையாகக் கொடுக்கிறது.
இலங்கையில் எஞ்சியிருக்கும் மக்களின் சொத்துக்கள் அனைத்தையும் சூறையாடும் வரை ராஜபக்ச அரசும் அதன் நண்பர்களான இந்தியா, பிரித்தானியா போன்ற நாடுகளின் அரசுகளும் ஓயப்போவதில்லை.
தாம் கொள்ளையடிக்கப்படுவதாக உணர்ந்துகொண்ட சிங்கள் மக்களும் ஒடுக்கப்படும் தேசிய இனங்களும் இணைந்து போராடுவத்னூடக மட்டுமே உரிமைகளை வென்றெடுக்க முடியும்.