மார்ச் மாதம் 5ம் திகதி வெனிசூல நேரம் 4.25 இற்கு வெனிசூலா அதிபர் ஹூகோ சவேஸ் காலமானார். இத்தகவலை உதவி ஜனாதிபதி மதுரோ பொதுமக்களிற்கு அறிவித்தார். கடந்த ஒராண்டு காலமாக சாவேஸ் புற்று நோயினால் பீடிக்கப்பட்டு பல தடவைகள் சத்திரசிகிச்சைகளுக்கு உள்ளான சாவேஸ் தனது 58 வயதில் காலமானார்.
செய்தியைக் கேள்வியுற்றதும் பொலிவார் சதுக்கத்திலும், நகரங்களின் முக்கிய பகுதிகளிலும் மக்கள் திரளாகக் கூடினர். வெனிசூலா மக்களின் பெரு மதிப்பைப்பெற்ற சாவேஸ் பாராளுமன்ற ஜனநாயகத்தின் ஊடாக தெரிவான ஜனாதிபதியாக கடந்த 14 ஆண்டுகள் ஆட்சி செலுத்துகிறார்.
மக்கள் கண்ணீரோடு தெருக்களிலும், வீடுகளிலிருந்து புறப்பட்டபடியும் காணப்பட்டதாக அங்கிருந்து வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றன.
வெனிசூலாவில் சதிப்புரட்சி நடத்தி ஆட்சியை மாற்ற அமரிக்க அரசு சார்ந்த அரசியல் சக்திகள் பலதடவை முயன்று தோற்றுப் போயின.
அமரிக்காவிற்கும் ஏகாதிபத்தியத்திற்கும் எதிராகப் போராடும் உலகம் முழுவதும் பரந்திருக்கும் ஜனநாயக முற்போக்கு சக்திகளுக்கு ஹூகோசவேஸ் நம்பிக்கை தருபவராகத் திகழ்ந்தார்.









சவேசுக்கு செவ்வணக்கங்கள்.