Friday, April 24, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

வேலுப்பிள்ளை, நீலப்பெருமாள், முதலியார் : யோகன்

இனியொரு... by இனியொரு...
07/26/2011
in இன்றைய செய்திகள்
0 0
16
Home இன்றைய செய்திகள்

தமிழ் குறுந்தேசிய வாதம் எப்படி தமிழீழம் தவிர வேறு எதையும் ஏற்க மாட்டோம் என்று சொன்ன பொது கதை தட்டி வரவேற்றீர்களோ அவ்வாறே பெருந் தேசிய சிங்கள அலையில் நீந்தியவர்களும் கைதட்டினார்கள்.
இதற்குள் ஒளிந்திருக்கும் உளவியலை புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
17 ஆம் நூற்றாண்டில் தமிழகத்திலிருந்து குடியேறிய “நீலபெருமாள்” என்ற தமிழன் தன்னை “நீலபெருமாள்கே ” என்று சிங்கள பெயர் பெற்றார். நீலபெருமாளின் மகன் வழி வாரிசான “டயஸ் வியசதுங்க பண்டாரநாயக்கா ” [ 1770 இல் பிறந்தார் ] .இவர் கோரலை முதலியாராக இருந்தார்.இவரது மகன் “டானியல் பண்டாரநாயக்கா”, இவர் ஞானஸ்தானம் பெற்றது 1748 இல் .
“டானியல் பண்டாரநாயக்கா” வின் மகன் “தொன் சொலொமன் பண்டாரநாயக்கா”.இவர் பிரிட்டிசாருக்கு உளவாளியாக செயல் பட்டவர். இவரது மகன் தொன் கிறிஸ்டோபர் பண்டாரநாயக்கா. இவரது மகன் தொன் சொலொமன் டயஸ் பண்டாரநாயக்கா. இவரது புத்திரர் தான் எஸ்.டபுள் யூ .ஆர்.டி. இவரது மகன் பண்டாரநாயக்கா. பண்டாரநாயக்கவின் புதல்வியே சந்திரிக்கா.
பண்டாரநாயக்க தான் முதன் முதலில் தனிச் சிங்களச் சட்ட மூலத்தை உருவாக்கியவ்கர். இதன் எதிரொலியாக இன வன்முறையும் இனப்படுகொலையும் திட்டமிட்ட வகையில் நடத்தப்பட்டது.

இவர்கள் எல்லாம் கிறிஸ்த்தவ தமிழர்கள்.
சிறு வயதில் தந்தையை இழந்த தம்பி முதலியார் என்ற தமிழன் கொழும்பில் குடியேறினான்.ஒல்லாந்துக்கு உளவு பார்த்தல் அவன் செய்த தொழில். தன்னை” ஏட்ரியன் ஜெயவர்த்தன ” என்று பெயர் மாற்றி கொண்டான் தம்பி முதலியார். இவரது மகன் தொன் ஏப்ரஹாம் ஜெயவர்த்தன. இவரது மகன் ஜேம்ஸ் அல்பிரட் ஜெயவர்த்தன. இவரது மகன் யுஜின் வில்பிரட் ஜெயவர்த்தன.இவரது மகனே J.R.ஜெயவர்த்தன. இவர்களும் கடுமையான தமிழ் கிறிஸ்தவர்களே.
வேலுப்பிள்ளை என்பவர், கொல்லம் என்ற ஊரிலிருந்து வல்வெட்டித்துறையில் குடியேறினார்.அவர் ஒரு மலையாளி. அவரது மகன் தான் பிரபாகரன்.
ஆனால் இலங்கையில் இனவாதம் தலை விரித்து ஆடுகிறது. என்னே நூதனமான நாடு.

குறுந்தேசிய வாதிகள்  எண்ணுவது போல ஆண்ட  தமிழர்கள் குறித்துப் பேசுவது கேலிக் கூத்தானது. ஒடுக்கப்படும் தமிழர்கள் தமிழர்கள் தமது விடுதலைக்காகப் போராடுவது நியாயமானது .
தகவல் :  யோகன்


 

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

யாழ்ப்பாணத்தின் நாய்ச் சடல அரசியல் : சுனந்த தேஸப்ரிய

Comments 16

  1. Sri Sriskanda says:
    15 years ago

    Jothi Basu – 1921…

  2. நிர்மலன் says:
    15 years ago

    நூதனமான அறிவாளி அவர்களே!
    அதென்ன தமிழ்குறும் தேசீயம். தமிழர்களின் இனவிடுதலைப்போராட்டம் எப்படி தமிழ்குறும் தேசீயம் ஆகும்! இதையொருக்கால் விளக்கமாக சொல்லுங்கள்.
    அடுத்தது ஈழத்தமிழரின் விடுதலைபோராட்டமென்பது ஏதோ வேலுப்பிள்ளையினதும் அவரது புத்திரினதும் தனிப்பட்ட விருப்பு போல காட்டமுயல்கிறீர்களே! அதைவிட ஆதாரமற்ற புனைகதைகளை அவிழ்துவிடும் தங்களிற்கு தெரியாதோ தமிழன் இலங்கை தீவை இரண்டாயிரம் ஆண்டுகளிற்கு மேல் ஆள்கிறான். அதிலும் மேற்குநாட்டவர்கள் இலங்கைத்தீவை கைப்பற்றிய வேளை இலங்கைதீவிலிருந்த 3 இராட்சியங்களில் இரண்டு தமிழர்களுடையது. அந்நிய ஆக்கிரமிப்பாக பிரித்தானியா இருந்த போதும்சரி 1987ல் இந்தியா ஆக்கிரமித்த போதும் எதிர்த்து போராடிய ஓரேயினம் தமிழினம்தான். இதுவே சொல்லும் இலங்கைத்தீவின் சொந்தக்காரன் தமிழன் மட்டும்தான். அதனால்தான் அவனுக்கு எப்பவும் தாயகப்பற்றிருக்கு! நீங்கள் கேட்கலாம் தங்கள் பரம்பரையை சேர்ந்தவரான காக்கை வன்னியன் இலங்கைத்தீவின் மைந்தன் இல்லையா என! எப்பவும் விகாரிகள் எவ்வினத்திலும் இருப்பார்கள். அந்த விகாரிகளின் வாரிசுதான் தாங்கள். வந்திட்டராம் புரட்டு வரலாறு எழுத.

  3. armugam says:
    15 years ago

    தமிழ் நாட்டில் உள்ள தேசிய யாவாரிகள் மலையாளிகள் தமிழன் எதிரி என்று சொல்றாங்களே? தேசிய தலை அரை மலையாளி. ஆக அவர் தமிழனின் அரை எதிரியோ? திருவேங்கடம் என்றதே மலையாளி பேயர் என அவர்களுக்கு தெரியாமல் போனது எப்படி?

  4. "கோமாளி " நவநீதன் says:
    15 years ago

    கிணற்று தவளை கிணறு தான் உலகம் என்று எண்ணும்.
    தமிழ் குறுந்தேசிய வாதம் எப்படிபட்டது எனபதற்கு உமது குறுகிய ,சிந்தனையற்ற எழுத்துக்களே சான்று.
    உம்மை தற்கொலை படைக்கு சென்று விட்டதாக யாரோ எழுதினார்கள்.

  5. P.V.Sri Rangan says:
    15 years ago

    இக்கட்டுரை சரியான தகவல்களைச் சொல்கிறதா?
    உண்ணமயானதுதானா?
    இன்றையவுலகில் பிரபாகரன் குடும்பத்தின் பின்னணியை அறிவது பெருங்கடினமானதில்லைத்தாம்.எனினும்,தவல் சரியானதுதானாவெனப் பார்த்தா பிரசுரித்தீர்கள்?வாசகர்களது கவனத்தைக் குறித்தே கேட்கிறேன்
    நட்புடன்
    ஸ்ரீரங்கன்

    • இனியொரு.. says:
      15 years ago

      ஸ்ரீரங்கன்,
      யோகன் இனியொருவிற்கு நன்கு அறிமுகமானவர். அவர் அனுப்பிய தகவல் பின்னதாக பிரபாகரனின் உறவினர்களிடம் உரையாடியதன் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டது. மேலும் ஜெயவர்தன, பண்டாரநாயக்க குறித்த தகவல்கள் அவர்கள் வாழ்ந்த காலங்களிலேயே வெளிவந்துள்ளன. பல நூல்கள் ஆதாரங்களாக உள்ளன.

      • நெருஞ்சி says:
        15 years ago

        1ஆதார நூல்கள் எவையென இணைக்கப்பட்டிருத்தல் வேண்டும்.

        2.இனி தேசிய விடுதலைப் போராட்டம் நிறமூர்த்த(DNA) பரிசோதனையின் முன்னெடுக்கப்பட வேண்டும்.

        3.இனி தொழிலாளர் வர்க்கப் போராட்டம்,சர்வதேச நாணய மாற்றின் பின், சம உழைப்பாளர்களே ஒன்றிணைந்து தலைமை தாங்க வேண்டும்.

        ஆராய்ச்சி தூள் கிளப்புது.

        குறும்பாக, தேசியவாதத்தின் விளக்கம் அருமை.

        அது சரி,காலுக்கு மேல் கால் போடுபவர்களையா,ஒடுக்கப்படும் தமிழர்கள் என்கிறீர்கள்?

        • kodimudi says:
          15 years ago

          ஹாய் நெருஞ் ..
          உங்கட அப்பா எங்க இருந்து வந்தார் என்டு பிடிக்க டீஎன் ஏ தேவையோ.. பிரச்சனை அதில்லை காணும்… சிங்களவன் என்டா கொல்ல வேணும், முஸ்லிம் என்டா வதைக்க வேனும், மலையாளி என்டா எரிக்கவேணும் என்டு எடுப்பெடுக்கும் ஆக்களுக்கு ஈழப் போரட்டத்தை முப்பது வருயமா தலை மை தாங்கியதே அரை மலையாளி என்டு சொல்லி இருக்கீன .. அம்மளோந்தான்

  6. யோகன் says:
    15 years ago

    நண்பர்களே !
    பண்டாரநாயக்கா கொண்டு வந்த தனி சிங்கள சட்டம் ,அதனை மையமாக வைத்து கிளப்பப்பட்ட சிங்கள இனவாத முன்னெடுப்புக்கள் எல்லாம் பண்டாரநாயக்கா எதிர் பாராதவை.அவரும் பொறிக்குள் அகப்பட்டு கொண்டார் என்பதே உண்மை.
    பின் பண்டா செலவாவுடன் ஒப்பந்தமிட்ட போது “இந்த பிரச்சனை உங்கள் காலத்திலேயே தீர்க்கப்பட வேண்டும், இல்லை என்றால் மிகவும் கடினம் ” என்று பண்டாவிடம் செல்வா வேண்டிக்கொண்டதன் காரணம் பண்டாவின் பூர்வீகம் குறித்து அறிந்ததால் தான்.
    பண்டாரநாயக்கா ஒரு தமிழன் என்று பிரசாரம் செய்த ஜே.ஆர்.ஜெயவர்த்தனா [தம்பி முதலியாரின் என்ற தமிழனின் சந்ததி ]கண்டிக்கு கால்நடையாக நடந்து எல்லாவற்றையும் குழப்பி அடித்தார்.அமெரிக்க ஏகாதிபத்தியம் சார்ந்த வலதுசாரியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனா ஆரம்பம் முதலே தமிழர் விரோத அரசியலை நடாத்தியர்.அவருடன் பேசுவதையே தமிழ் தேசிய வலதுசாரி தலைவர்கள் விருப்பம் கொண்டிருந்தனர்.அது புலிகள் வரையில் தொடர்ந்தது.
    இன்று ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவின் மகன் [ ரவி ஜே.ஆர்.ஜெயவர்த்தனா ]மணம் முடித்திருப்பது ஒரு தமிழ் பெண்ணைத்தான்.
    ஒடுக்கப்பட்ட யூத இனத்தில் தோன்றி இன்று பிரான்சை ஆளும் சார்கோசி வெளிநாடவருக்கு எதிரானது போல , ஜே.ஆர்.ஜெயவர்த்தனா போல எங்கள் பிள்ளைகளும் நாளை இனவாத சேற்றில் நீந்துமோ ?

  7. யோகராசா says:
    15 years ago

    யதார்த்தம் என்ன என்று பார்த்தால், அன்று பண்டாரநாயக்காவும் ஜெயவர்த்தனாவும் தமது அரசியல் பிழைப்புக்காக தூண்டிவிட்ட இனவாதம் இன்று கொழுந்துவிட்டு எரிகிறது. அதை அணைப்பது நீங்கள் நினைப்பது போல் சுலபமல்ல. நாங்கள் விரும்புவதும் நடப்பதும் ஒன்றல்ல என்பதுதான் உண்மை. இலங்கைத்தீவில் சரித்திர ரீதியாக இருந்த இனப்பிளவைத்தான் அரசியல்வாதிகள் தமது அரசியல் லாபத்திற்காக மேலும் அதிகப்படுத்தினார்கள். அடிப்படையில் சிங்களவர்கள் எல்லோருமே அரைத்தமிழர்கள்தான். அதைத்தெரியாத சிங்கள இனவாதிகள் இருக்க முடியாது. ஆனால் தாம் மேலான இனமென்ற அகங்காரம் அதை ஒத்துக்கொள்ள மறுக்கிறது. பிரச்சினை என்னவெனில், என்று சிங்கள இனத்தின் இன வெறி தீர்ந்து இலங்கையில் வாழும் சிறுபான்மைத்தமிழினம் மரணபயமின்றி, மானமுள்ள மனிதர்களாக வாழ்வது என்பதுதான். சிங்களத்தின் இனவெறி மறையும் எப்பொழுதெனில், அது நம்பிக்கொண்டிருக்கும் எண்ணை வளத்தில் இடி விழும்போது. தவிர, பிரபாகரன் என்னும் மனிதர் போராடுவதற்கு முன்பாகவே இலங்கைத்தீவில் இனவாதம் வளர்ந்து விட்டது எனபது உண்மை. அவரின் தந்தையாரின் அடி மலையாளம் என்பதனால் அவர் போராடக்கூடாதென்பது தவறான கருத்து. அப்படியானால் உலக விடுதலைப் போராளிகள் போற்றும் சேகுவாரா பிறந்த நாட்டில் கூட போராடவில்லை. இனவாதம் தவறானது. அதில் மறுகருத்திற்கு இடமில்லை. அதை எம்மினத்தைக் கொல்பவர்கள் உணரும்வரை எம்மக்களை நாம் காப்பாற்றுவதற்கு என்ன வழி என்று சிந்திப்போம். மேலும் மலையாளம் என்னும் மொழி ஏறத்தாழ ஐநூறு வருடங்களுக்கு முன்பாகத்தான் தமிழிலிருந்து உருவான மொழி. எம்மினத்தைக் காப்பாற்ற நீதியுள்ள சிங்கள மக்கள் துணையாக வந்தாலும் பலம் தான் அதேபோன்று உண்மையான மனிதர்களைக்கொண்டதாக இந்தப் பூமிப்பந்து மாறும் வரை ஒவ்வொரு இனமும் மற்ற இனத்தை அழிக்காமல் தன்னினத்தைக் காப்பாற்ற வேண்டியது அறத்தின் பாற்பட்டதே. அதேபோன்று சிங்கள இனத்தைக் காப்பாற்றுவதும் தமிழினத்தின் கடமை என்று வந்தால் அதுவும் அறத்தின்பாற்பட்டதே.

    • chandran.raja says:
      15 years ago

      உங்கள் வாதம் எதையும் நாம் மறுப்பதற்கில்லை. பல்லுக்கு பல். கண்ணுக்கு கண் என்று அரசியல் செய்யப் புறப்பட்டால் நாம் எல்லாம் கண்பல் இல்லாதவர்களாகவே
      இருந்திருப்போம். வலிதந்தவர்களுக்கே வலியைத் திருப்பி கொடு என்பதும் இந்த வகைப் பட்டதே!. இதையும் சேர்த்திருந்தால் உங்கள் கருத்து இன்னும் மெருகேறியிருக்கும். தொடர்ந்து உங்கள் கருத்துக்ளை பகிர்ந்து கொள்ளுங்கள்.

      கருத்துச்சொல்வதற்கு ஊரையும் பார்கத்தேவையில்லை. பட்டணத்தையும் பார்க்க தேவையில்லை. குலம் கோத்திரமும் அவசியம் வராது. மனிதனுக்கு உள்ளது இந்த பூமி ஒன்றுதான் என்பதை புரிந்துகொண்டாலே போதுமானது. அரசியல் என்பது மனிதநாகரீகத்தின் பாதை என்பதில் தெளிவு பெற்றாலே போதுமானது.அது இன்னொருவரை கொண்று அதன் பிணத்தின் மீது நடப்பதல்ல.

  8. Kaluthai says:
    15 years ago

    சந்திரன் ராஜா சின்னப்பிள்ளையாகவே இருக்கிறார். தர்மம் என்னும் அரசியலில் அதர்மத்தை பிணமாக்கி அதன்மீது நடப்பதுதான் உன்மையான அரசியல். இதைத்தான் எல்லா நல்லாட்சிகளிலும் காணலாம். ஆனால் துரதிஸ்டவசமாக அதர்மமே தர்மத்தின் மீது நடைபோடுவது போலுள்ளது…. ஆனால் இறுதியில் தர்மம்தான் வெல்லவேண்டும். இதுதான் நியதி.

    • chandran.raja says:
      15 years ago

      நவீனகாலமக்களை மகாபாரதம்-நிலப்பிரபுத்துவ காலத்திற்கு கொண்டு போக முற்படுகிறீர்கள் கழுதை. நீங்கள் சொல்லும் தர்மம் சினிமாபடம் எடுக்கவும் சீரியல்
      தயாரித்து தொலைகாட்சியில் ஒருசிலருக்கு பணம்பண்ணமே உதவும். இல்லையேல்
      கைகால் ஒடுங்கி நாட்கள் சுமையாகும் போது பகவத்கீதை படித்து காலத்தை ஓட்டவே உதவும்.
      சர்வதேசபாட்டாளிகளுக்கு இல்லாவிட்டால் குறைந்தது தமிழினத்திற்காக எப்படி? உபதேசம் செய்து பெரியவனானீர்கள் என்பதையாவது சொல்லுங்கள். இந்த ஜலங்கள்
      எல்லாம் நாய்பார்க்கிற வேலையை கழுதைபார்த்து அடிவாங்கிய பழமொழியையே
      எனக்கு நினைவூட்டுகிறது கழுதை.

  9. vampu says:
    15 years ago

    இனவாதம், மத அடிப்படைவாதத்தை வளர்த்து அரசியல் செய்வதென்பது வெறிபிடித்த கடிநாயை வளர்ப்பதற்கு சமனாகும். இந்தக்கடிநாய்கள் வளர்ப்பவரின் விருப்பத்தின்படியே மற்றவரை கடிக்குமென்பதற்கு உத்தரவாதம் கிடையாது.. அதுவே அமீர் அண்ணாவிற்கும்(?), ஜே.ஆர். ஜெ வுக்கும் நடந்தது, ஏன் எஸ். டபிளியு.ஆர்.டி யும் கூட தப்பமுடியவில்லை. தமது இனத்தின் போர்வாள்களாக கர்ஜித்துத்துக்கொண்டிருந்த இவர்கள் வர்க்கநலன் எனும்போது ஒன்றுபட்டிருந்தார்கள். இலங்கைத்தீவில் மிக மோசமான ஒடுக்குமுறைக்குள் பலதலை முறைகளாக வாழ்ந்து வருகின்ற மலையகத்தமிழர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டதை இடதுசாரிய அரசியலின் ஆபத்திலிருந்து(?) நாட்டைக்காப்பாற்ற தமிழ்தலைவர்கள் ஆதரித்தார்கள் என்பதை பலரும் இன்று வசதியாக மறந்துவிடுகின்றார்கள். போதாக்குறைக்கு இந்திய ஆளும்வர்க்க ஆதரவுடன் இலங்கை இந்தியகாங்கிரஸ் (இன்றைய இ.தொ.கா) தொண்டைமானால் ஆரம்பிக்கப்பட்டு ஒடுக்கப்பட்ட மக்கள் பிளவுபடுத்தப்பட்டனர். ஜே.வி.பி மலையகத்தமிழ்தொழிலாளரை இந்தியமேலாதிக்கத்தின் கருவிகளாக பேதமை கொண்டனர். ஜே.வி.பி தமது அரசியல் வங்குரோத்தை கீரைப்பிலாக்காய் மரத்திலும்,( கீரை பிலாக்காய் சிங்கள தொழிலாள்ரின் பசியை போக்குவதால் புரட்சிக்கு தயார் இல்லை), மலையக மக்கள் மீதும் காட்டினார்கள்.( 76 களில் தோழர் சண்முகதாசன் சிறையில் இருந்தவாறு எழுதிய ஜே.வி.பி பற்றிய விமர்சனம் இன்றும் பொருத்தமானது.) மறுபுறத்தில் யாழ் வெள்ளாள மேலதிக்க தலைமை முதலில் சர்வஜன வாக்குரிமை கூடாது என்று வாதிட்டார்கள், பொதுப்போக்குவரத்தை வெறுத்தார்கள். சந்தையை நோக்கி பண்டங்களை நகர்த்துவதற்கு இன்றியமையாததாகவிருந்த புகையிரதப்போக்குவரத்தை காலனிய ஆட்சியாளர் அறிமுகப்படுத்தியபோது “எல்லாச்சாதியும் ஒன்டாக இருந்து போறதுக்கு வெள்ளைக்காரன் சதிபண்ணுறான்” என்று வெகுண்டு தம்க்கு அடிமைசாதியாகவிருந்த தொழிலாளரை கொண்டு புகையிரதத்திற்கு கல்லால் எறிவித்தார்கள். ஜவ்னா கொலிட்ஜ் முதலில் ஆரம்பிக்க தேர்வு செய்யப்பட்ட இடம் இணுவில். செம்மண்ணின் மையப்பகுதியிலேயே எல்லாச்சாதியும் படிக்க மிஷனரிகள் பள்ளிக்கூடம் கட்டுவதை பொறுக்கமுடியாத செம்மண்ணின் யுகபுருசர்கள் தமது தொழிலாளரை கொண்டே இரவோடிரவாக பாடசாலை கட்டுவதற்காக பறிக்கப்பட்ட கல்லையும்,மண்ணையும் தமதாக்கிக்கொண்டனர். இது தொடர்ந்த்ததால் வெறுத்துப்போன மிஷனரிகள் பாடசாலையை வட்டுக்கோட்டைக்கு மாற்றினார்கள். உச்சமாக பல்கலைக்கழகம் அமைப்பதற்காக பரமேஸ்வராக்கல்லூரியை எடுத்தபோது சிங்களவன் பள்ளிக்கூடத்தை பிடிச்சிட்டான் என காட்டுகூச்சல் எழுப்பியது ஆண்டபரம்பரை.

  10. கணேஷ் says:
    15 years ago

    நன்றாக சொன்னீர்கள் வம்பு.
    மற்ற சாதியாரை ஒடுக்கி பழகியவர்கள் வெட்கமில்லாமல் உலகமெல்லாம் “தாங்கள் ” ஒடுக்கப்படுகிரோம் என்று கூவித்திரிவது நல்ல வேடிக்கை .
    முக்கியமாக மலையக தமிழ் தொழிலாளிகள் நாட்டை விட்டு இந்த ஆண்ட பரம்பரையின் அனுமதியுடனேயே விரட்டியடிக்கப்பட்டனர் என்பதையும் வசதியாக மறைத்து விட்டார்கள்.
    மாவிட்ட புர ஆலய பிரவேசத்தின் பொது ஒடுக்கப்பட்ட மக்களை உள்ளே விட கூடாது என்று முன்னே நின்று சண்டித்தனம் செய்தவர் ” தமிழீழம் ” கோசத்தை முன் வைத்த “அடங்கா தமிழன் ” சுந்தரலிங்கம் என்பதையும் இப்போ தேசியம் என்று வாய் கிழிய பேசுகின்ற ஒடுக்கப்பட்டிருந்தவர்களும் “மறந்து” விட்டார்கள்.
    “அடங்கா தமிழன் ” சுந்தரலிங்கத்தின் கொட்டம் அன்றே அடக்கபட்டது என்பதும் உண்மை.நாகரீகமாக நடக்க தெரியாதவர்கள் ,இன்று சிங்களவரிடம் நாகரீகத்தை கோருகின்றனர்.

    • thurai says:
      15 years ago

      விடுதலையென்பது தனி ஒருமனிதனின் உருமைகளை மறுப்பதனையும்
      மறுப்பதனையும் வெற்ரி கொள்வதேயாகும். தமிழர் என்பது தமிழ்பேசும்
      மக்கள்.
      இவர்கள் இலங்கையின் பல பாகங்களிலும் வாழ்கின்றார்கள். இவர்களில்
      பல மதங்களைச் சார்ந்தவர்கள் உண்டு. அது மட்டுமல்ல சாதி ரீதியாக தமிழரைத் தமிழர் தாழ்த்துவதும் உருமைகளை பறிப்பதும் மறுப்பதும் சகசம்.

      எனவே இலங்கையில் இருந்து அகதியாகவும், கல்வி அந்தஸ்துடனும் மேற்குலகில்
      வாழும்
      தமிழர்கள் அந்தந்த நாடுகளில் சட்டங்களிற்கேற்ப சம் உருமையுடன் வாழ்கின்றார்கள். ஆனால் அந்த நாடுகளிலாவ்து தமிழர் தாமொரு இனம்மென்னுமுணர்வுடன் வாழ்கிறார்களா என்பது கேள்விக்குரிய விடயம்.

      என்வே தமிழருக்கு இலங்கையில் உருமை வேண்டுமென்று புலம்பெயர் தமிழர் கோருவது கேலிக்குரியதேயாகும்.-துரை

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...