Friday, April 24, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

வேசங்கள் கிழிந்து தொங்குகின்றன!:தேவா (ஜேர்மனி)

இனியொரு... by இனியொரு...
09/09/2009
in இன்றைய செய்திகள்
0 0
1
Home இன்றைய செய்திகள்

vacac11அரச அதிகாரத்தோடு சேர்ந்து கொண்டு தங்கள் உயிரை காப்பாற்றிகொண்டு, எங்களால் தான் எதிரி பலமிழந்தான் என்று அறிக்கை விடுகிறதை வாசிக்கும்போது இருக்குமிடத்தில் இருந்துகொண்டால் எல்லாம் சௌக்கியமே என தோணுவது மட்டுமல்ல இவர்கள் வேசங்கள் கிழிந்து தொங்குகின்றன.
 
ஒரு உத்தரவாதம்: கொலைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
 
பெண், ஆண், சிறுவர்கள்,குழந்தைகள் என  நிர்வாணமாக்கி ஈவிரக்கமில்லாமல் கொல்லுதல், வெடித்து சிதறிய உடல்களை சாகடித்த பின்னரும் பெண்ணுறுப்பை சிதறடிக்கப்படுத்தல் என்ற  இவ்வாறான  கொடுரங்களை நடாத்திக் கொண்டே வாய்மொழி மூலமான வன்முறையையும் சேர்த்து இணையங்களில் பார்க்க நேர்கையில் ஒவ்வொரு இதயத்தையும் ஆழமாக வலிக்கப்பண்ணுகிறது.
 
இது உண்மையில் நடந்ததா? அல்லது வெட்டி ஒட்டப்பட்ட நாசகார வேலையா அல்லது இலங்கையிலோ அல்லது உலகின் வேறேதாவது நாடுகளில் நடைபெற்றதா? என்ற பூராய்ப்பு வேறு.
 
ஆனால் இந்தப்பயங்கரம் நிகழ்ந்திருக்கிறது. இன்னும்நிகழ்ந்துகொண்டிருக்கிறது.
ஒவ்வொருவருக்குமே. இவ்வாறான கோரங்கள் யுத்தங்களில், போராட்ட காலங்களில் நடைபெறுவதுதான் இயல்பு என்று ஒதுக்கிவிடுவது மனிதமா? போர் என்ற போர்வைக்குள் எதிரியை எதுவும் செய்யலாம் இது கோட்பாடா?
 
கொலையை நியாயப்படுத்த தான் செய்யும். அதிகாரத்தை உறுதிப்படுத்தும் நிலையை உருவாக்குகிறது. கொலை எந்த வடிவில் நிகழ்த்தப்பட்டிருந்தாலுமே கொல்வது ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல. அது எந்த வடிவத்தில் வந்த கொலையாக இருந்தாலும்.சரி.
 
இணையங்களில்  நல்லூர்கந்தசாமி கோவில் தேருக்கு அரசு வானில் இருந்து விமானம் மூலம்  மலர்தூவி பக்தகர்களை  மெய்சிலிர்க்க வைத்ததாம்.  ஆனால் இதே அரசுதான் 4மாதங்களுக்கு முன்  விஷக் குண்டுகளை பொழிந்து மக்களை கொன்று குவித்து அவர்களின் வாழ்விடங்களை சுடுகாடாக்கியது. இது ஒரு கேலிக் கூத்தாக இல்லை
 
மதத்துக்காக, இனத்துக்காக, நாட்டுக்காக, மொழிக்காக, கொள்கைக்காக, நிலத்துக்காக போர்கள் நடைபெற்று,எத்தனையோ உயிர்கள் பலியெடுக்கப்பட்டிருக்கின்றன. இவைகளை திரும்பி நோக்கினால் இந்தப்பலிகள் யாருக்காக நிகழ்த்தப்பட்டன என்ற உண்மை நன்றாகவே புரியும். மொத்தத்தில் சொல்லப்போனால், பலமானவன், தேர்ந்த ஆயுதம் கையில் வைத்திருப்பவன், அரசியல் தந்திரத்தோடு செயல்படுபவர்களின் கைகளிலேயே இந்த படுகொலைகள் செயற்பட்டுள்ளதை செயல்படுகிறதை யாராலுமே உணர்ந்து கொள்ள முடியும். 
 
நாட்டுக்காக, சொந்த இனத்துக்காக தாமாகவே முன்வந்து உயிர்கொடுத்து தம் வாழ்வை இழந்தவர்கள் பலர்  உலகில் வாழ்ந்துள்ளார்கள் வாழ்கிறார்கள் இது சரித்திரம் நமக்கு கூறும் கட்டியம்.  ததனி மனித உலகம் தாண்டி, குடும்பத்தையும் தாண்டி அதற்கப்பால் பொது உலகம் என்ற பரப்புக்குள் போய்விட்ட சமூகநலம் கொண்ட மனிதங்கள் அவை. இவர்களின் தொண்டினை‐தியாகங்களை பயன்படுத்திக் கொண்டவர்கள் அதன் தலைமைகளும்,அரசுகளும்தான்.
 
மனித நேயத்திற்காகவும், உரிமைக்காகவும், கொள்கைக்காகவும், மதத்துக்காகவும் போராடுவதும் அவரவரின் உரிமை. ஒவ்வொரு மனிதர்களுமே தன்குடும்பத்தின் ஒரு உயிரைக்கூட எந்த நிலையிலும்‐ எந்தக் கொள்கைக்காகவும், ஏன் எதற்காகவுமே இழக்கதயாரில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. ஆனால் இப்படி ஏதோ ஒன்றுக்காக என் குடும்பத்தில் ஒருத்தரை இழந்தேன் என்று மார்தட்டிக்கொள்பவர் எந்த நேரத்திலும் உன் உயிரைக்கொடு என்றால் கொடுப்பாரோ? உயிர்வாழ்தல் வாழ்பவனுக்கு பெறுமதியாயிருக்கிறது போல் உயிரை பறிகொடுத்தோருக்கும் மிகவும் பெறுமதியானது.
 
அரச அதிகாரத்தோடு சேர்ந்து கொண்டு தங்கள் உயிரை காப்பாற்றிகொண்டு, எங்களால் தான் எதிரி பலமிழந்தான் என்று அறிக்கை விடுகிறதை வாசிக்கும்போது இருக்குமிடத்தில் இருந்துகொண்டால் எல்லாம் சௌக்கியமே,என தோணுவது மட்டுமல்ல இவர்கள்; வேசங்கள் கிழிந்து தொங்குகின்றன. வேசங்களை களைந்து உண்மையானவைகளை உலகத்துக்கு காட்டியதற்காக ஊடகவியலாலருக்கு கிடைத்திருக்கிற (நீதியாம்?) 20வருடங்களும் அவரை கொலை பண்ணுவதற்கு ஏற்ற எத்தனமே. இப்படி கைதுகள் இன்னும் தொடருகின்றன. வன்முறைக்குள்ளாக்கப்படுகின்றன. வெளிவரப்படாமலே மூடிமறைக்கப்படுகின்றன. கடைசியில் எஞ்சுவது மரணங்களே.
 
இதற்கு யார் பொறுப்பு?
 
ஒவ்வொரு சித்திரவதை முகாம்களிலும், தடுப்பு முகாம்களிலும் இன்று வரைக்கும் கைதாகி அடைக்கப்பட்டிருக்கும் மக்களின் உயிர் இன்னும் கொலையை எதிர்பார்த்து  காத்திருக்கிறார்கள் என்ற நோக்கத்தை   நினைக்கும்போது, இவ் மனித உயிர்களுக்கான  கவலை, பொறுப்பு அவர்கள் மீதான எம்  கடமை வாழும் எம்  ஒவ்வொருத்தர் கைகளிலும் இருக்கிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.  கொலைகள் உடனடியாக  நிறுத்தப்படவேண்டும். சிறையில் அடைக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளித்து சிறைப்படுத்தி வைத்திருப்பவர்கைளை விடுதலை செய்யவேண்டும். அதே போல்  முகாம்களிலுள்ள மக்கள் விடுதலை செய்யப்பட வேண்டும். அவரவர் விரும்பிய இடங்களுக்கு அனுப்பப்பட வேண்டும்.
 
 இம் மக்களுக்காக புலத்திலும், தாயகத்திலும் பெரிய அளவில் அரசுக்கு மேலான அழுத்தங்களை பல்வேறு வடிவங்களில் நடத்தியாகவேண்டும். இது எம் இனத்தின், சமூகத்தின் இன்றைய அவசியமான கட்டாயமும் தேவையுமே…
 
தேவா ஜேர்மனி

Thanks: http://udaru.blogdrive.com/archive/1036.html

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

மக்களை விடுவிக்குமாறு கொழும்பு நகரில் ஆர்ப்பாட்டம்!

Comments 1

  1. பாரதி. says:
    17 years ago

    சகோதரி தேவா சரியான நேரத்தில் கொடுத்த சாட்டையடி உங்களுடைய கட்டுரை. அளவு உள்ள அரச எடுபிடிகள் தொப்பியை போட்டுக் கொள்ளட்டடும்.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...