விஸ்வரூபம் என்ற அமரிக்க ஆதரவு பொழுதுபோக்கு சினிமா குறித்த மிகைப்படுத்தப்ப்பட்ட சர்ச்சைகள் தமிழகத்தின் நாளந்த பிரச்சனைகளில் ஒன்றாகிவிட்டது. சினிமாவோடு வாழ்க்கை நடத்திகின்ற தமிழக மக்களின் அறியாமையை உணர்ச்சி மயத்தை வியாபாரப் பெரு முதலைகள் பயன்படுத்திக்கொள்கிறார்கள். இன்று விஸ்வரூபம் என்ற சினிமாவை முன்வைத்து இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் இந்து அடிப்படை வாதிகளும் மோதிக் கொள்கிறார்கள். இந்த மோதலை தமிழக அரசே திட்டமிட்டு உருவாக்குகிறதா என்ற சந்தேகங்கள் உருவாக ஆரம்பித்துள்ளன.
இப்போது மத்திய உள்துறை அமைச்சர் ஷிண்டே இத்திரைப்படம் குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். விஸ்வரூபம் படத்தை தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் வெளியிடுவதில் என்ன பிரச்சனை என்று மத்திய அரசு விசாரணை நடத்தும் என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே கூறியுள்ளார்.
விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு விதித்துள்ள தடை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டேயிடம் கேட்டதற்கு, “நாம் சுந்திரமான சமூகத்தில் உள்ளோம். இங்கு கருத்து சுதந்திரம் உள்ளது. கலைஞர்களுக்கு சுதந்திரம் உள்ளது. நமக்கு என்று அரசியலமைப்பு உள்ளது. அந்த அரசியலமைப்பை அனைவரும் மதிக்க வேண்டும். கலைஞர்கள் தங்கள் பணியை செய்ய அவர்களுக்கு முழு சுதந்திரம் அளிக்க வேண்டும். விஸ்வரூபம் படத்தை ரிலீஸ் செய்ய தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் எதற்காக பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்று மத்திய அரசு விசாரணை நடத்தும்.” என்று பதில் அளித்தார்.
தமிழக மக்களை இருளுக்குள் வைத்திருக்கும் ஒரு சாதாரண பொழுதுபோக்கு சாதனம் இன்று மத அடிப்படைவாதிகளை மோதவிடுகின்ற அளவிற்கு வலிமைபெற்றுள்ளது.
சோனியா காந்தி ப் பற்றி படம் எடுத்தால் இவர்கள் இந்த வார்த்தைகளை சொல்வாரா?
இது என்னடா வம்பா போச்சு. படம் எடுத்தா குத்தம், டான்ஸ் ஆடுனா குத்தம், சாராயம் குடிச்சா குத்தம், எல்லாமே குத்தம். அல்லா கூ அக்குபரின்னாலும் குத்தம்.
வெல குடுத்து துப்பாக்கி வாங்குனேய்யா. நல்லா சுடுதான்னு டெஸ்ட் பன்ன ஒருத்தன குறிபாத்தேன் அது குத்தம்னு சொல்றாய்யா இவே.
விஷ்வ ரூபம் என்ற படம் முஸ்லிம் மக்களுக்கு எதிரானது, அவர்களின் உணர்வுகளை காயப்படுத்துகிறது என்கின்ற கோசங்கள் தூக்கிப் பிடிக்கப்பட்டு அதற்கெதிரான போராட்டங்களும் மாநில அரசுகளின் தடைகளும் நீதிமன்ற தடைகளும் மறு பரிசீலனையும் ஒத்திவைப்புகளும் ரசிகர்களின் கூச்சல் குழப்பங்களும் நடிகர் இயக்குனர் கமலஹாசனின் தன்னிலை விளக்க அறிக்கைகளும், கவிதைகளும் செய்தியாளர் சந்திப்புக்களும் என்று திரைப்படத்தை விட மிகவும் விறு விறுப்பாக திரையரங்கத்துக்கு வெளியில் ஓடிக் கொண்டிருக்கிறது இந்த இழுபறி நாடகம்.
இந்த நாடகத்தின் இயக்குனர் தயாரிப்பாளர் வசனகர்த்தா லொட்டு லோசுக்கு எல்லாமே முன் நாள் அரசியல் வாதியும் இந்நாள் நடிகையுமான அம்மா ஜெயலலிதாவே தான். “இதில் தெரியாமல் போய் சிக்கிட்டோமே”என்று முழித்துக் கொள்ள வேண்டிய நிலையில் இதனை முதலில் கையிலெடுத்த முஸ்லிம் அமைப்புக்களின் தலைவர்கள் இருக்கிறர்கள் நான் படத்தை வெட்டுகிறேன் ஓட்டுகிறேன் என்று கமல் இறங்கி வந்தாலும் பேச்சுவார்த்தைக்கும் போகும் நிலை அந்த அமைக்களின் கைகளில் இருந்து நழுவி தமிழக அரசிடம் போய் விட்டது. இப்பொழுது அவர்களின் வகி பங்கு வேடிக்கை பார்ப்பது மட்டுமே.
குறித்த திரைப்படம் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கைப் பாதிக்கும் என்று இவர்கள் கிளப்பி விட்ட புரளியும் இழுத்தடிப்புக்களும் திரைப்படம் பற்றிய முற் கற்பிதங்கலுமே திரைத் துறையை சார்ந்த சிலரின் கருத்துக்களுமே மக்களுக்கிடையே முரண்பாடுகளை உருவாகிவிடும் போல் தெரிகிறது.
இந்த திரைப்படத்தை பார்த்தவன் என்கின்ற வகையில் என்னுடைய சில கருத்துக்களை முன் வைக்க விரும்புகின்றேன். முஸ்லிம் மக்களுக்கு எதிரான திரைப்படம் என்கிற ஒற்றைப் படையான கோசம் இந்த திரைப்படத்தின் பின் ஒளிந்துள்ள மிக ஆபத்தான நுண் அரசியலை திசை திருப்புகிறது இந்த திரைப்படம் இஸ்லாம் மதத்தை கடைப் பிடிக்கும் மக்களுக்கு எதிரான திரைப் படமா? என்று என்னிடம் கேட்டால் என்னுடைய பதில் “இல்லை” என்பதே இது கமல்ஹாசனுக்கு ஆதரவாகவோ அல்லது படத்தை சரியாக புரிந்து கொள்ளாமலோ சொல்கின்ற பதில் இல்லை ஆனால் இத் திரைப்படம் அமெரிக்க அதிகார அரசியலுக்கு ராணுவ மயப்படுத்தலுக்கு ஆதரவான தொன்று இந்த அரசியல் உள் நோக்கத்தைப் புரிந்து கொண்டு அதற்கெதிரான எதிர் வினையை ஆற்ற வேண்டியதே எம் முன் உள்ள பொறுப்பு அந்தப் பொதுத் தளத்தில் மக்கள் ஒன்றுபடுதல் அவசியமானதாகும் அதுவும் திரைப்படம் முழுமையாக வெளியான பின்னரே சாத்தியமாகும். அமெரிக்காவுக்கு ஆதரவான படம் எனில் முஸ்லிம் மக்களுக்கு எதிரானது தானே என்று நாம் குறுக்கி சிந்தித்தால் உலக அரசியலை நாம் சரியாக விளங்கிக் கொள்ளவில்லை என்றே அர்த்தம். விஷ்வரூபம் ஓர் இந்தியத் தமிழனின் அமெரிக்கத் திரைப்படம் இது தொடர்பாக பகிர வேண்டிய செய்திகள் நிறைய உண்டு படம் பார்த்தவர்கள் இதனைப் புரிந்து இருந்தால் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
நன்றி
பகத் சிங்