Thursday, April 23, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

ரிசானா விவகாரம் குறித்து மரணதண்டனைக்கு எதிரான…

இனியொரு... by இனியொரு...
01/31/2013
in பிரதான பதிவுகள் | Principle posts, அரசியல்
0 0
2
Home பிரதான பதிவுகள் | Principle posts

Rizana_Nafeek Killed

ரிசானா விவகாரம் குறித்து மரணதண்டனைக்கு எதிரான தமிழ்நாடு மற்றும் இலங்கை இஸ்லாமிய எழுத்தாளர்கள், கலைஞர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களின் கூட்டறிக்கை.

இலங்கை இஸ்லாமிய பெண்ணான ரிசானா நபீக் சவூதி அரேபியாவுக்கு வீட்டு வேலைக்கு சென்ற நிலையில் அந்த வீட்டில் இருந்த நான்கு மாத குழந்தையை கொன்றதாக குற்றஞ்சாட்டப்பட்டு அவளுக்கு ஜனவரி 9ம்தேதி மரணதண்டனை விதிக்கப்பட்டது. கொலைக்குற்றங்களுக்கு தலை வெட்டு (Behead) தண்டனை வழக்கில் இருக்கும் ஒரு நாட்டில் அதன் தண்டனை முறைகள் அதற்கான நியாயப்பாடோடு இருக்கும் சூழலில் அதைத்தாண்டிய மனித உரிமைகள், குற்றத்தன்மை , குற்றத்தின் தர்க்கம் மற்றும் குற்றம் உருவாகும் சூழல் இவை ஆராயப்பட வேண்டும். மேலும் இஸ்லாம் போதிக்கும் ஆரம்பகால குற்றவியல் சட்டங்கள் தற்காலிக பரிகாரம் தான். குற்றத்தை தடுப்பதற்கான ஒரு தற்காலிக தீர்வு தான். அதை விட நிரந்தரமான ஒன்று கருணையும், மன்னிப்பும் தான். மன்னிப்பு என்பதன் எதிரிணையாக தான் அது குற்றத்தை பார்க்கிறது. இஸ்லாம் இதை பல சந்தர்ப்பங்களில் வலியுறுத்தி இருக்கிறது. ஆரம்பகால இஸ்லாமிய சட்டங்கள் அதற்கு முந்தைய பாபிலோனிய, சுமேரிய நாகரீகங்களின் தொடர்ச்சியே. மேலும் முறைப்படுத்தப்பட்ட நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் இல்லாத அந்த காலகட்டத்தில் நிச்சயமாக அது அப்போதைய சமூக இயங்கியலாக (Social Dialectics)தான் இருந்திருக்க முடியும். அதனால் தான் உலகின் பெரும்பாலான இஸ்லாமிய நாடுகள் அந்த சட்டங்களை பின்பற்றுவதில்லை. சில அரபு நாடுகள் ஐ.நா மனித உரிமை அமைப்புகளில் உறுப்பினராக உள்ளன. சவூதியில் அடிக்கடி இம்மாதிரியான நிகழ்வுகள் நடக்கின்றன. அவையெல்லாம் இம்மாதிரி சர்வதேச அரங்குகளில் விவாதப்பொருளாவதில்லை. சில தருணங்களில் மேற்கத்தியவர்கள் குற்றங்களை செய்து விட்டு பணம் செலுத்தி தப்பிய நிகழ்வுகளும் உண்டு. ஜார்ஜ் புஷ் காலத்தில் இதுபோன்ற நிகழ்வு ஒன்று நடந்தது.மேலும் ரிசானா விஷயத்தில் சவூதிய சட்டம் சரியான முறையில் செயல்படவில்லை. விசாரணை, குற்றத்தின் உறுதித்தன்மை பரிசோதிக்கப்படவில்லை. அவளுக்கு மொழிபெயர்ப்பு உதவிகள் மற்றும் வழக்கறிஞர் உதவிகள் சரியான முறையில் செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. மேலும் அவளிடம் ஒப்புதல் வாக்குமூலத்தில் கட்டாய கையெழுத்து பெறப்பட்டிருக்கிறது. இதை அவளின் கடித வரிகள் தெரிவிக்கின்றன. அவள் நான் அந்த குழந்தையை கொலை செய்யவில்லை என்றே கடைசி நிமிடம் வரை தெரிவித்துக்கொண்டிருந்தாள். (கடிதம் ரிசானா கடிதம்இணைக்கப்பட்டுள்ளது) மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு சற்று நேரத்திற்கு முன்பு வரை அவளுக்கு தன் தலைவெட்டப்பட போகிறது என்பது தெரியாது. மேலும் முப்பது வயதுக்கு மேற்பட்டவர்களை தான் பணிப்பெண்ணாக அமர்த்தப்பட வேண்டும் என்ற விதி கடைபிடிக்கப்படவில்லை.அவளின் வயதை உறுதி செய்வதற்கான பரிசோதனைகள் நடத்தப்பட வேண்டும். வெறும் பாஸ்போர்ட் வயது கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது தவறு. வெளிநாட்டினர் குற்றச்செயல்களில் ஈடுபடும் போது அவர்களின் வயது கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். அதற்காக தடயவியல் பரிசோதனைகள் செய்யப்பட வேண்டும். ஆனால் ரிசானா விஷயத்தில் இவை எதுவும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. மேலும் பிறந்த குழந்தைக்கு இரண்டு வயது வரை தாய்ப்பால் ஊட்ட வேண்டும் என்பது இஸ்லாமிய விதி. இஸ்லாமிய சட்டத்தை பின்பற்றுவதாக சொல்லப்படும் சவூதி அரேபிய அரசு புட்டிப்பால் ஊட்டப்பட்டதற்கான மருத்துவ காரணத்தை தெரிவிக்கவில்லை. குற்றம் நடந்த போது அவளின் வயது 17. வெளிநாட்டினர் சம்பந்தப்பட்ட வழக்குகளில் இம்மாதிரியான அம்சங்கள் கணக்கில் எடுக்கப்பட வேண்டும். சவூதியில் கொலைவழக்குகள் விரைந்து விசாரிக்கப்பட்டு உடனடியாக தண்டனை அளிக்கப்படுவது வழக்கம். ஆனால் ரிசானா விஷயத்தில் அது ஏழு வருடங்கள் தள்ளிப்போனது இவ்வழக்கில் மனித நியாயத்தை மேலும் வலுப்படுத்தவதாக உள்ளது. குற்றத்திற்கு ஈடாக ரத்தப்பணம் (Blood money)கொடுக்க அங்கிருந்தவர்கள் தயாராக இருந்தும் இறந்த குழந்தையின் தாய் சம்மதிக்காத காரணத்தால் இது மேலும் தள்ளிப்போனது. சவூதிய சட்டங்கள் சாசுவதமானதன் விளைவு இது… மேலும் தண்டனைக்குள்ளாக்கப்பட்டது இலங்கை பெண் என்ற நிலையில் இலங்கை அரசு இதற்கான சரியான, உறுதியான நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும். ஆனால் வெறும் சம்பிராயத அளவிலே இருந்தது ராஜபக்ஷே அரசின் நடவடிக்கைகள். ஏற்கனவே போரில் லட்சக்கணக்கான தமிழர்களை குண்டு வீசி கொலை செய்து , சர்வதேச அரங்கில் குற்றவாளியாக இருக்கும் ராஜபக்ஷே எப்படி இதை கவனிப்பார்? மொழிபெயர்ப்பில் தவறு நடந்து விட்டது என்று இலங்கை அரசின் வழக்கறிஞரே குறிப்பிட்டார். ரிசானாவிற்கு தண்டனை உறுதி செய்யப்பட்ட தருணத்தில் அது வலுவாக மேல்முறையீடு செய்திருக்க வேண்டும். அதுவும் நிராகரிக்கப்படும் போது சர்வதேச அளவில் இந்த பிரச்சினையை கொண்டு சென்றிருக்க வேண்டும். தன் மீதான குற்ற கறையை போக்க சர்வதேச உதவியை நாடும் ராஜபக்ஷே இதற்கு தேடாமல் இருந்தது மிகப்பெரும் அவலம். இந்த தருணத்தில் மரணதண்டனை விதிக்கப்பட்ட ரிசானாவிற்கு ஆழ்ந்த அனுதாபங்களை இந்த கூட்டறிக்கை தெரிவித்துக்கொள்கிறது. அவளின் இழப்பால் வாடும் குடும்பத்திற்கும் அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறது. வஹ்ஹாபிய மரபுகளை பின்தொடரும் சவூதிய நிலப்பிரபுத்துவ அரசிற்கும், அவளை காப்பாற்ற உரிய நடவடிக்கைகளை எடுக்காத ராஜபக்ஷேவிற்கும் கடும் கண்டனத்தை இந்த அறிக்கை பதிவு செய்கிறது.

இவண்

தமிழ்நாடு மற்றும் இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், கலைஞர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் கூட்டமைப்பு.

 

கவிஞர் ரியாஸ் குரானா (இலங்கை)

 

கவிஞர் பைசல்  (இலங்கை)

 

கவிஞர் அஸ்மின் (இலங்கை)

 

இம்தாத் (இலங்கை)

 

மஜீத்  (இலங்கை)

 

கவிஞர் ரிஷான் செரீப் (இலங்கை)

 

கவிஞர் பஹீமா ஜஹான் (இலங்கை)

 

கவிஞர் லறீனா ஹக்  (இலங்கை)

 

எ.பௌசர் (ஆசிரியர் எதுவரை இணைய இதழ்,  லண்டன்)

 

கவிஞர் ஏ.ஆர். பர்ஸான் – (இலங்கை)

 

ஏ.பி.எம். இத்ரீஸ் (இலங்கை)

 

அப்துல் ரசாக் (எழுத்தாளர், இலங்கை)

 

கவிஞர் சல்மா (சென்னை)

 

கவிஞர் ஹெச்.ஜி. ரசூல் (தக்கலை)

 

பேராசிரியர் ஹாமீம் முஸ்தபா (தக்கலை)

 

எழுத்தாளர் முஜிபு ரஹ்மான் (தக்கலை)

 

நாவலாசிரியர் மீரான் மைதீன் (நாகர்கோவில்)

 

இடலாக்குடி ஹசன் (எழுத்தாளர்)

 

குளச்சல் மு.யூசுப் (மொழிபெயர்ப்பாளர்)

 

அகமது கபீர் (இலைகள் இலக்கிய  இயக்கம் , இடலாக்குடி)

 

சம்சுதீன் (இலைகள் இலக்கிய இயக்கம், இடலாக்குடி)

 

கவிஞர் பைசல்  (தக்கலை)

 

எச்.பீர்முஹம்மது (எழுத்தாளர் , வேலூர்)

 

நதீம் (மனித உரிமை ஆர்வலர், வாணியம்பாடி)

 

ஆபிதீன் (எழுத்தாளர் , நாகூர்)

 

சதக்கத்துல்லா ஹசனீ (பதிப்பாசிரியர் அல் ஹிந்த் மாத இதழ், மதுரை)

 

அன்வர் பாலசிங்கம் (எழுத்தாளர், புதுக்கோட்டை)

 

பீர்முகமது (செய்தியாளர், சென்னை)

 

ரபீக் இஸ்மாயில் (திரைப்பட இயக்குநர், சென்னை)

 

வழக்கறிஞர் உமர் (இன அழிப்புக்கு எதிரன இஸ்லாமிய இளைஞர் இயக்கம், திருப்பூர்)

 

கவிஞர் சாகிப் கிரான் (சேலம்)

 

தாஜ் (எழுத்தாளர், சீர்காழி)

 

வஹீதா பானு (கரூர்)

 

சபீலா தஸ்னீன் (மென்பொருள் பொறியாளர், சென்னை)

 

முனைவர் லைலா பானு (நாகர்கோவில்)

 

அனுஷ் கான் (பதிப்பாளர், பொள்ளாச்சி)

 

பைசல் மசூத் (பத்திரிகையாளர் , சென்னை)

 

களந்தை பீர்முஹம்மது (எழுத்தாளர், சென்னை)

 

கீரனூர் ஜாகிர் ராஜா (எழுத்தாளர், சென்னை)

 

சிராஜுதீன் (புத்தகம் பேசுது இதழ், சென்னை)

 

அர்ஷியா (எழுத்தாளர், மதுரை)

 

மௌலவி முஹம்மது ரபீக் மிஸ்பாஹி (மதுரை)

 

முனைவர் அன்வர் பாஷா (திருப்பத்தூர்)

 

அனார்கலி (முனைவர் பட்ட ஆய்வாளர், டெல்லி பல்கலைகழகம்)

 

அமீர் அப்பாஸ் (திரைப்பட உதவி இயக்குநர், சென்னை)

 

பப்பு சிராஜ் (மனித உரிமை ஆர்வலர் , தக்கலை)

 

அஷ்ரப்தீன் (மானுட விடுதலைக் கழகம், அருப்புக்கோட்டை)

 

அமீர் (வழக்கறிஞர், மதுரை உயர்நீதிமன்றம்)

 

சவுதியில் மரண தண்டனைக்கு உள்ளான ரிசானா நஃபீக் எழுதிய கடிதம்!

 

எனது உண்மையான வயது 19. நான் பிறந்த தேதி 02-02-1988. எனது வயது ஏஜெண்ட் அஜிர்தீன் என்பவரால் 02-02-1982 என மாற்றப்பட்டு எனக்காக கடவுச்சீட்டு வழங்கப்பட்டது. 01-04-2005-ல் நான் சவுதி அரேபியாவுக்கு வீட்டு வேலைக்காக வந்தேன். சுமார் ஒன்றரை மாதங்கள் ஒரு செல்வந்தரின் வீட்டில் வீட்டு வேலை செய்தேன். இந்த வீட்டில் சமைத்தல், பாத்திரங்களை கழுவுதல், நான்கு மாதக் குழந்தையைக் கவனித்துக் கொள்ளுதல் உள்ளிட்ட வேலைகளை நான் பார்த்து வந்தேன்.

 

குறித்த சம்பவம் நடந்த தினம் எனக்கு நினைவில் இல்லை. அது ஒரு ஞாயிற்றுக் கிழமை பகல் 12-30 மணியிருக்கும். அப்போது யாரும் வீட்டில் இருக்கவில்லை. நான் மட்டுமே இருந்தேன். அங்குள்ள நான்கு மாதக் குழந்தைக்கு நானே பால் கொடுப்பேன். அன்றைக்கும் வழமை போல பால் கொடுத்த போது குழந்தையின் மூக்கிலிருந்து பால் கொட்டியது. அப்போது நான் குழந்தையின் தொண்டையை தடவிக் கொடுத்தேன். குழந்தை கண் மூடியிருந்த படியால் நான் அது அயர்ந்து உறங்குகிறது என நினைத்துக் கொண்டேன்.

 

குழந்தையின் தாய் எஜமானி சுமார் 1-30 மணியளவில் வந்து சாப்பிட்டு விட்டு குழந்தையைப் பார்த்தார். பின்னர் என்னை செருப்பால் அடித்து விட்டு குழந்தையைத் தூக்கிச் சென்றார்.அப்போது அவர் அடித்ததில் என் மூக்கில் ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. பின்னர் என்னை போலீசில் ஒப்படைத்தார்கள். அவர்கள் என்னை ஒரு பட்டியில் அடைத்து அடித்தார்கள் குழந்தையின் கழுத்தை நெறித்ததாக எழுதிக் கொடுக்குமாறும், கையொப்பமிடுமாறும் மிரட்டினார்கள்.

 

கையெழுத்திடவில்லை என்றால் மின்சார வதை கொடுக்கப் போவதாக மிரட்டிய போது நான் பயந்து போய் அவர்களுக்கு கையொப்பமிட்டுக் கொடுத்தேன். அப்போதுதான் நான் பயங்கரமாக உணர்ந்தேன்.சரியான நினைவு எனக்கில்லை குழம்பிய மன நிலையில் கையொப்பமிட்டேன்.

 

அல்லாஹ் மீது ஆணையாகச் சொல்கிறேன் நான் அக்குழந்தையின் கழுத்தை நெறிக்கவில்லை.

 

ரிஸானா நபீக்.

அல் த்வாத்மி சிறைச்சாலை,

அல் தவாத்மி, சவுதி அரேபியா.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
கடற்கொள்ளைக்கு எதிராக இனப்படுகொலை அரசோடு இணைந்து கொள்ளையடிக்கும் நெதர்லாந்து அரசு

கடற்கொள்ளைக்கு எதிராக இனப்படுகொலை அரசோடு இணைந்து கொள்ளையடிக்கும் நெதர்லாந்து அரசு

Comments 2

  1. P.V.Sri Rangan says:
    13 years ago

    ரிசானா விவகாரம் குறித்து மரணதண்டனைக்கு எதிரான தமிழ்நாடு மற்றும் இலங்கை இஸ்லாமிய எழுத்தாளர்கள், கலைஞர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களின் கூட்டறிக்கை மீதான சில மறுப்புரைகள்
    -ப.வி.ஸ்ரீரங்கன்

    திரு.இத்திரயாஸ்அவர்கள் எழுதிய கட்டுரையான “ரிஷானா குற்றமும் தண்டனையும்” (இத்திரியாஸின் தளம் இப்போது முடங்கியுள்ளது)எனும் தொடர் கட்டுரைகள் விவாதிக்கும்குதர்க்கத்துக்கும்-தர்க்கத்துக்கும் இந்த இஸ்லாமியப் படைப்பாளிகள் -அறிஞர்களது கூட்டு “அறிக்கை”க்கும் எந்த வேறுபாடுமில்லை!இத்திரியாசாவது சரியாவின் வன் கொடுமைத்தண்டனையை இடம்-சூழலில் வைத்து மிகச் சாதுரியமான வார்த்தைகளால் விவாதித்து-விசாரித்து அதைக் காக்கின்றார்.இந்த அறிக்கையோ சரியாவைக் குறித்து வாயே திறக்காது “குற்றவியல்-மன்னிப்பு”எனும் பொது மொழியால் உரையாடிக்கொள்கிறது.இது ,1993 வீனாப் பிரகடனமும் நடவடிக்கைகளுக்கான திட்டத்தையும் [Vienna Declaration and Programme of Action-VDPA ]ஒரு பொருட்டாகக் கணக்காக எடுக்காதவொரு கூட்டறிக்கை.இஸ்லாமியச் சிந்தனையாளர்கள் விரிந்த தளத்திலான மதங்கடந்த மனிநேயக் கருத்தாடலுக்குள் சிக்குப்படாத மதவாதச் சிந்தனையாளர்களாவிருப்பதன் அர்தம் என்ன?எந்த அதிகாரத்துக்கும் கட்டுப்படாத கலகத்தனமான போராட்டமென்பது பெரும்பகுதி மக்களை அண்மித்தியங்கும் அரசியலாகவே இருக்க முடியும்.அத்தகைய இலக்கை மறுத்துவிட்டு மதவாதிகளாகவிரிந்துகொண்டு சரியாவின் வன் கொடுமை மனிதவிரோச் சட்டங்களுக்கெதிராகக் குரல்கொடுக்க முடியாது!

    இங்கு, குற்றிவியல்சார்ந்த வெறும் சட்டவாதப் பிரச்சனையாக இந்த மனிதவிரோதக் கழுத்தறுப்பு ஒறுப்புச் சட்டமான சரியாவைக் காப்பதில் கொலை செய்யப்பட்ட ரிhனாவை இவர்கள் மீளவும் கொலை செய்கின்றனர்.

    சரியாவின் இருப்பானதும்,அதை இலங்கை-இந்தியச் சூழலில் நிலைப்படுத்த முனையும் ஒவ்வொரு எழுத்தும் தொடர்ந்து பல ரிஷானாக்களது கழுத்துக்களைத் தேடியலைவதாகவே பார்க்கப்படவேண்டும்.

    இது,நியாயமா?

    இந்தக் கூட்டறிக்கை மானுட நேயமான அறிக்கையாக இருக்குமா?

    சரியாச் சட்டங்களையும்,அதன் பாதகத்தையும் குறித்து Islamophobia வெளியில் உலகில் பல பலதளத்தில் நேர்மையானவுரையாடலெழுகிறது.ஆனால், இந்திய-இலங்கைச் சூழலலோ மிகக் கெடுதியான முறையில் சரியாவையும் அதன் வன் கொடுமையையும் நிலை நிறுத்தவும்,நியாயப்படுத்தவும் முனைகிறது.இதை வன்மையாகக் கண்டிப்பதோடு இதுள் இருக்கும் மதவாதப் புனைவுகள்,அதன்வழி மீள மனிதவிரோதச் சட்டங்களை நிலைப்படுத்தும் ஆதிக்கத்தின் விசுவாசமும் அம்பலப்படுத்தப்படவேண்டும்.

    இங்கே நான் சுட்டும் புள்ளியில் இந்த மனிதவிரோத அறிக்கையையும்,இஸ்லாமியத் தாரளவாதிகளது சரியாவின்மீதான மறைமுக ஆதரவும் தெளிவாக மறுக்கப்படவேண்டுமென்பதே எனது கருத்து.

    நவீன திறந்த சமுதாயத்துக்கெதிரான இத்தகைய மழுப்பு அறிக்கைளால் இன்னொரு ரிஷானா படுகொலையாவதை மனித நேயமிக்க மனிதர்கள் எவருமே விரும்பார்.அத்தகைய மனிதநேயமிக்கோர் இதுபோன்ற அறிக்கைகளைத் தொடர்ந்து விவாதித்து இதற்குள் மறைக்கப்படும் மனிதவிரோத ஆதிக்க உளவியலைத் தோலுரிப்பர்.இனியொரு இந்த அறிக்கைமீது எந்த ஆய்வுக் கண்ணோட்டத்தையும் வைக்காது சதித்தனமாகச் இஸ்லாமியச் சட்ட ஓழங்கான சரியாவைக் காக்கும் தந்திரத்துக்குப் பலியாவதை நான் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

    இது சார்ந்து நான் தொடராக விமசர்னத்துக்குட்படுத்தும் சரியாவைக் காக்கும் இஸ்லாமியத் தாராளவாத எழுத்துக்கள்மீதான கருத்துக்களாகவே மேற் கூறுபவைகள் தொடர்ந்து எழுதப்படுகிறது.

    மனிதவுரிமை,தண்டனை,சட்டம் என்பதெல்லாமே இப்போது கசாப்புக் கடைக்கு நிகராச்சு.நிலவும் உடமைகளைக் காப்பதிலும்,உலகிலுள்ள அனைத்து வளங்களையும் தமதாக்க முனைந்த கடந்த கால ஆதிக்கமுடையவர்கள் தமக்கேற்ப அமைத்துக்கொண்ட கொடிய சட்டங்களை இறைவன் பெயரால் எழுதியபோது அது நீதியாகவும்-நேர்மையானதாகவும் புரிந்துகொள்கிறோம்-புரிந்துகொள்ள வைக்கப்பட்டோம்.

    இயற்கையில் ஜடப்பொருள்கள்மீதும்,உயிர்களது உடல் வரை நிகழ்த்தப்படும் அரசியலானது பௌதிகவிருத்தலைத் தமது அதிகாரத்துக்குட்படுத்தும் முயற்சியில் இத்தகைய கொடிய”திறந்த சமுதாயத்துக்கு எதிரான”அன்றைய காட்டுமிராண்டிகளது உணர்வுக்கும்,அகவொழுங்குக்கும் அமைய அதிகார மனிதர்கள்அமைத்துக்கொண்டனர்.

    எனவேதாம், கி.மு. 1770 களில் பாபிலோனியச் சமுதாயத்துள் கமுராபியின் [Hammurabi]ஆளுமைகளை நிலை நாட்டும் தந்திரத்துள்:
    “இறைவன்அரசனின் நிழல் அதுபோல் அரசனது நிழல் மனிதர்கள்”என விளக்கப்பட்டது.[ Zu den ersten Gesetzessammlungen gehörte die des König Ur-Nammu aus der Ur-III-Zeit. Die ersten babylonischen Gesetze stammten aus der Zeit des Herrschers Lipit-Ischtar (1934-1924 v. Chr.) ]

    இத்தகைய ஒழுங்கை கி.மு. 6 ஆம்நூற்றாண்டில் கிரேக்க சட்டவாதி டிராக்கோன் [ Drakon der Athener‘ um 650 v. Chr. ]மிக நுணுக்கமாகப் பாவித்து, இன்றை அரேபியக் காண்டுமிராண்டித்தனத்தின் அன்றைய முளையை ஊன்றினான்.

    பின் கி.பி. 5 ஆம் நூற்றாண்டு இஸ்லாமோ அதைத் தகவமைத்துக் கொண்டு இன்றுவரை அதை மனிதர்களது உடலில் எழுதிவரும் குறியீடுகளைக் கழுத்து-கை-கால்,மூக்கிழந்த மனிதர்களில் வாசிக்க முடியும்.இதைத்தாம் காட்டுமிராண்டிகளென்றும், நாய்கள், என்றும்,கபோதிகளென்றும் திட்டித் தீர்த்து இந்த குறியீட்டைக் காவும் ஒவ்வொரு மனிதர்மீதும் இரங்கிக்கொள்கிறேன்.

    அவர்களைத் தகவமைத்த “குற்றம்”இந்தச் சமுதாயத்தினது. மனிதர்களது வாழ்நிலைதாம் சமூகவுணர்வைத் தீர்மானப்பதில் பெரும் ஆதிகாரஞ் செலுத்துகிறது.எனவே,குற்றமென்பது நிகழக் காரணமானது இந்த அமைப்பு முறையே.ஆதலால் ,குற்றமென்பது வெறும் தனிநபர் நடாத்தையல்ல.

    இத்தகைய கொடிய தண்டனைகள் யாவும் அதிகாரத்தை நம்ப வைப்பதற்கும் அதை நிலைப்படுத்தவும் ஏற்படுத்தப்பட்டவை.

    களவு,கொலை,சச்சரவுகள் அனைத்தும் இந்தத் தோற்று வாயிலிருந்து ஆரம்பமாவது.மனிதர்களது உடல் மீதானவுரிமையானது அடிமைகளையுருவாக்கிய அன்றைய சமுதாயத்தின் நேரடியான அராஜகம் இத்தகைய வடிவில் உருவாகியது.இதே கொடிய உடலாதிக்க-உலகாதிக்க அரசியல்,அதிகாரம்,சட்டமாகவும்,கருத்தியலாகவும்,குறியீடுகள் ரீதியாகவும் இப்போதும் கொடிய அடக்குமுறையாகக் கண்ணுக்தெரியாத நவீனவொழுங்காச்சு.

    நான்,இங்கு உரையாடுவது மனித நடாத்தை குறித்து.உணர்வு வழிப்பட்ட அநுதாபத்தின் அடிப்படையை தள்ளிவைத்துவிட்டும்,பொதுப் புரிதலை அழித்துவிட்டும் “குற்றமும்,தண்டனையும்”குறித்த வரலாற்றுப் புரிதலிலிருந்து இதை அணுகவும்.

    அதைவிட , இது குறித்த புரிதல்கள் ஏலவே பூப்கா போன்ற பிரஞ்சியச் சிந்தனையாளர்களால் தெளிவாகப் புரிய வைக்கப்பட்டுள்ளது.பூப்காவின் “கண்காணிப்பும் தண்டனையும்”எனும் நூலை[ Discipline and Punish] வாசித்தால் குரானும்,ஷரியாவும் வகுத்துரைக்கும் ஒழுங்குகள் புரிந்துபோகும்.

    குழந்தையின் மரணத்தைக் கொலையா,விபத்தாவென அறியும் அடிப்படைப் புரிதலற்றவொரு தீர்புக்கும் நாகரீகமேயற்ற கழுத்தறுப்புக்கும் அல்லாவையும்,மதத்தையும் சார்ந்து மனிதத்தைத் தொலைப்பதே இன்றைய இத்தகைய அரேபியப் பயங்கரவாதிகளைக் காக்கிறதில் முடிகிறது. காட்டுமிராண்டிகளாகச் சிந்திக்கும் காலம் கடந்துவிட்டது.

    இங்கே,சட்டம்-தண்டனைகள் குறித்துப் புதிய புரிதல்களைப் பாமரத்தனமாக மதவாதியாவிருந்து புரியமுடியாது!!

    மதம் கொண்டு மனிதத்தை அளவிடாது,நிகழ்த்தப்படும் அராஜகத்தைப் புரிய முனையுங்கள்-மனிதனாக!

    ஒரு மதவாதியாக மனிதத்தைத் தொடமுனைந்தால் இறுதியில் நமது தேசங்களிலெல்லாம் ஒரு அரேபியக் காட்டுமிராண்டிகளது கழுமரம் முற்றத்துக்கு வந்துவிடும்.

    இதை, ஏலவே நாம்கண்ட வரலாறு நமக்குப் போதும்.

    முதலில் மனிதனாக வாழ்வதற்கு வரலாற்றையும்,மதங்கள்-சட்டங்கள்,அரசு,அமைப்பு,பொருளாதார முறைமைகள் குறித்து ஓரளவாவது விஞ்ஞான பூர்வமாக அறிய முனையுங்கள். இதற்கும்,மதத்துக்கும் என்ன சம்பந்தமென்ற கேள்வியோடு. மற்றும்படி,கழுத்தறுத்துப் போட்டுக் காசப்புக் கடை நடாத்தும் ஷரியாவைக் கொண்டாடும் வக்கிரம் எனக்கு இல்லை!

    நான் எந்த மதத்தையும் ஏற்க்கப்போவதில்லை!

    அனைத்துமே மனிதவிரோதப் பயங்கர நச்சுப் பொருட்கள்.இதற்கு உலகிற் தோன்றிய எந்த முதமும் விலகல்ல!

    அனைத்துமே இன்றைய 21 ஆம் நூற்றாண்டில் காலப் பொருத்தமற்ற கபட விஷக்கருத்தியல் கட்டுமானங்கள்.அதிகார வர்க்கத்துக்கு பாதுகாப்பளிக்கும் பெரும் நிறுவனங்கள் இவை.இத்தகைய மேற்கட்டுமானமின்றி இந்த அரேபிய-உலக பெரும் பணக்காரரின் பொருள் வாழ்வு நிலைக்காது.

    மனிதர்களை முதலில் மொழியிலிருந்தும்,மதத்திலிருந்தும் விடுவிக்கும்போது அதன் வழியிலான குறியீட்டுவினை அகச் சிந்தனை-நினைவுகளிலிருந்தும்,வாழ்நிலையில் உணர்வுபெறும் ஊக்கத்தோடு இவை இரட்டிப்பாகிப் ஏதோவொன்றின்மீது பைத்தியமாகித் தனது சுய இலபத்துக்கு-பாதுகாப்புக்கு”ஒரு இறைவன்”தேவையெனப் பிரதியெடுக்கும் மனிதர்களது நினைவிலி மனதுக்கும் இந்த விடுதலை சாத்தியமாகும்.

    தறித்தெறியும் தலைகளைக் கண்டும்”குற்றம்-தண்டனை”எனவும்,முஸ்லீம் எனவும் உரையாட நெஞ்சு வலிக்கா உங்கள் குணம்தாம் அல்லாவினதும்-ஆண்டவனதும், இறைவனதும்,கர்த்தரினதும் மகிமை!

    இந்தவுலகம் ரொம்பக் கொடுமையானது.இஃது, பெரும்பாலும் மெலிந்தவர்களை அனைத்து வடிவிலுஞ் சுரண்டியே கொழுத்துப் போயிருக்கிறது.இந்த மெலிந்தவர்கள் உலகில் பெரும்பகுதியாவிருந்தும் இந்த அதிகார மனிதக் குழுவைச் சிதைத்து தமக்கானவொரு அமைப்பை நிறுவமுடியவில்லை.

    “இது,ஏன்? “என்று, யாரும் புரிய முற்பட்டால்-அஃது, ” இந்த வகையில் ஒன்றுக்கொன்று முரணாகவுரைத்தும்-விளக்கியும்,உண்மையானவொரு கொலையை,கொலையெனச் சொல்லாது கருத்தாடும் இத்திரியாசினது கட்டுரையை வாசிக்கும்போது,அந்த அதிகாரக் குழுவினது ஆதிக்கத்தைத் தொடர்ந்து, மெலினப்பட்டவர்களுள் “இறையச்சம்” செய்து அஃது, கடவுளால் அருளப்பட்ட “மேன்மை-நியாயம்” என்றெல்லாஞ் சொல்லித் தப்பிக்க வைக்கப்படும் டிராக்கோனியின்[draconian] சட்டவரைவின் கொப்பியான ஷரீயாவுக்கு இப்படியெத்தனை பேர்கள் ஒத்தூதுவர்?” என்று நம்மை, நாம் கேட்டுக்கொள்ளலாம்!

    எனக்கு இத்திரியாசைவிட மிகப்பெரும் அறிஞர்களும்,நவ இஸ்லதமியச் சிந்தனையாளர்களான திரு.பாஷான் ரைபியையும்[Prof. Dr.Bassam Tibi ],ராறிக் ராமடானையும்[ Prof.Dr. Tariq Ramadan ],நன்றாகவே புரியும்.எனவே,இத்திரியாஸ் கூறும் [ரிசானா மீதான மரணதண்டனை: எதிர்வினைகளும் பதில்களும் ]கருத்துக் கலவை வடித்தெடுத்த கயமையானது!ஒரு கொலையை நியாயப்படுத்துவதென்ற புள்ளியில் நேரடியான கருத்தைக் கூறுவதிலிருந்து தப்பிக்கும்பொருட்டு, படுகொலை செய்யப்பட்ட ரிஷானாவின்பக்கம் நியாயத்தைச் சொல்லிச் ஷரியாவின் பெயரால் நடாத்தப்பட்ட காட்டுமிராண்டித் தனத்தைக் கருத்துக்களால் நீத்துப்போக வைக்கும் இவர்களை யாரால் மன்னிக்க முடியும்?

    நாம்,உண்மைகளைப் பாதிக்கப்படும் பெரும்பகுதி மக்களது பக்கம் நின்றும்,அவர்களது நலனுக்காவும் கருத்தாடுகிறோம்.இத்தகைய இத்திரியாஸ்போன்று நிலவும் அதிகார வர்க்கத்தின் நிறுவனங்களை இறைவனதோ அன்றி எதன் பேராலும் நாம் தக்கவைக்க-நியாயப்படுத்த முனையவில்லை!ஆனால்,முற்போக்கு முஸ்லீம் அறிஞர்கள்-சிந்தனையாளர்கள் இந்த அப்பாவி பெண்ணைப் படுகொலை செய்த “சட்ட” அறத்தைக் காப்பதிலேயேதாம் குறியாகக் கருத்தாடுகிறார்கள்.

    கழுத்தறுத்துக் கொல்லப்பட்ட உடலைப் பார்த்தும் இப்படியாகவா கருத்து வைத்துச் ஷரியாவைக் காப்போம்?குறிப்பாக, ஏபிஎம் இத்ரீஸ் சின் கட்டுரையையொட்டி. அவரது கருத்துக்களை ஆழ்ந்த புரிதலற்ற வாசகர்கள் ” சிறப்பானது-நேர்மையானதென்பது” இந்தப் போக்கின் ஆபத்தின் தொடர்ச்சியை இன்னொரு தளத்துக்கு[ dar al-islam ]நகர்த்துவதாகும்.

    உலகம் இறை மூலத்தைக் குறித்து Higgs-Boson ஆய்வுக்குள் நிறுவப்பட்டவுண்மைக்குள்[ Higgs particle ] வந்துவிட்ட 21 ஆம் நூற்றாண்டின் நாம் வாழ்கிறோம்.இதுள் மதங்கள் தம்மைப் புதிப்பித்தபடி நிறுவனப்பட்ட அத்திவாரத்தைக் காக்க முனையும் போது பற்பல கருத்துக்களை முன் வைக்கின்றனர்.

    இலங்கைப் பெண் ரிஷான சவுதியரசாலும்,அதன் இஸ்லாமியச் சட்டச் ஷரியாவின் மனிதத்தன்மையற்ற கொடிய வரையறுப்புக்கமைய அவள் படுகொலை செய்யப் பட்டதை இலங்கை முஸ்லீம்கள் பலர் குறிப்பாக,ஏ பி எம் இத்ரீஸ் புதிய விளக்கத்துக்கமைய[ dar asch-schahada ] விமர்சிப்பதும், நிலவும் ஷரியச் சட்டத்தை நிலைப்படுத்துவதும் புதியதில்லை!

    இங்கே, ஐரோ இஸ்லாமென [ Euro-Islam ]விரித்துக் கருத்தாடுபவர்களை யொட்டியவுரையாடலே [Dr.Bassam Tibi ,Prof.Dr. Tariq Ramadan ]இது.

    1992 இல் பாசான் ரைபியால் [Bassam Tibi ] உருவாக்கப்பட்ட நவ இஸ்லாம் எனும் கருத்துக்கொட்ப [ Liberal movements within Islam involve Muslims who have produced a considerable body of liberal thought on the re-interpretation and reform of Islamic understanding and practice. Their work is sometimes characterised as “progressive Islam”. ]இவர் [ஏபிஎம் இத்ரீஸ் எழுதியுள்ள ‘ரிசானா மீதான மரணதண்டனை-எதிர்வினைகளும் பதில்களும் ]உரையாடுகிறார்.

    இது நிலவுகின்ற அதிகாரத்தைத் தொடர்ந்திருத்தும் புதியவகையான மொழியாடல்கள்[Dar asch-Schahada ].இதற்குள் மறைந்திருப்பது ஷரியாவைக் காத்து நிலைப்படுத்தும் தந்திரம்.ராறிக் ராமாடான் [Tariq Ramadan ] போன்றவர்கள் ஐரோப்பாவுக்குள் வாழும் இஸ்லாமியர்களுக்கான நவ லிபரல் மட்டத்திலான இஸ்லாம் பேசுவதும்,அவ்வண்ணம் ஷரியாவைத் தமக்குள் இணைப்பதென்பதில் நிலவும் ஐரோப்பிய ஜனநாயகப் பண்புகளோடு அண்மித்த புதிய போக்குகளைப் புதிதாகவிணைப்பதும், பெருப்பிப்பதும்,மனிதவிரோதத் தன்மையுள் இணைவு மறுவாக்கஞ் செய்ய முனையும் ஷரியாவின் நுட்பத்துள் அவரும் , மேற்கூறிய இத்திரீயாஸ்கூட அமைப்பாண்மை-நிறுவனப்பட்ட அதிகாரத்துக்கிசைந்த ஷரியாவை மறு விளக்கமளித்துக் காக்க முனைவதைச் சுட்டிக் காட்டுவது என் தலை முறைக்கு அவசியம்.

    எனவே,இந்த ஆபத்தைப் புரிவதற்கு நான் மேலே சொன்ன ஐரோ-இஸ்லாம் குறித்த புரிதலை நிலவும் அதிகாரத்தோடான புரிதலிருந்து புரியும்போது இத்திரியாஸ் கூறுவதும் முற்றிலும் மனிதவிரோதத் தன்மையிலான புதிய அடிமைப்படுத்தும் அதிகாரத்துக்கமைவான எண்ணங்களென்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

    ரிசானவென்ற பெண்ணை வைத்துப் புரட்சி-அரசியல் செய்யும் பலருக்குள் நான் இதை எனது அறிதலுக்கும் மானுடப் பெரு நோக்கிலும் வைத்துரைப்பதில் இன்னுஞ் சிலவற்றைச் சொல்வேன்.
    இந்தவுலகத்தில் தினமும் ஆயிரக் கணக்கான மனிதர்கள் கொல்லப்படுகின்றனர்.அரசியலின் பெயராலும்,மதத்தின் பெயராலும்-சமூக விரோதத்தின் பெயராலும் பலர் கொல்லப்படுகின்றனர். இதையெழுதும்போது கூட இவ்வுலகத்தின் ஒரு மூலையில் அநியாயமாகவொரு மனிதர் எதன் பெயராலோ கொல்லப்பட்டிருப்பார்.

    யுத்தம்-தூக்கு-மருந்தூசியடித்துக் கொலையெனப் பலரூபத்தில் இந்தச்சாவு மனிதருக்கு நேரிடுகிறது.எனவே,மதங்கள்,அரசியல் அதன் ஓழுங்குவெனும் அனைத்து மனிதவிரோத முறைமைகளது பெயராலும் மனிதர்கள் தண்டிக்கப்படுகின்றனர்-கொலை செய்யப்படுகின்றனர். அஃது, எந்தவொரு அரசுக்கும் விதிவிலக்கல்ல!ஆனால், இஸ்லாத்தின்-ஷரியாச் சட்டத்தின் பெயரால் நடாத்தப்படும் அட்டூழியம் மிகப்பெரும் அவஸ்த்தை இவ்வுலகுக்கு-திறந்த சமுதாயத்துக்கு-வரலாற்றுக்கு!

    கொடூவாள்-கழுத்தறுப்பு!

    வாழும் மனிதவிருப்பைச் சில கபோதிகள் ஆட்டை வெட்டுவதுபோல் மனிதரை வெட்டும் அரேபிய முஸ்லீம் நாய்களை அணுக்குண்டடித்துக் கொல்

  2. thabitha says:
    13 years ago

    மத அடையாளத்தோடு மனித உரிமைக் குழுவா, எழுத்தாளர் கூட்டமைப்பா, என்னே புண்ணாக்கு இது?  இஸ்லாத்தா கொக்கா என்ற பாணியில் கேவலமான அறிக்கை. சிரிரங்கன் வாழ்த்துக்கள் அண்ணா!

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...