தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்படும் 10 பேர் சுவிட்சர்லாந்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு சட்டமா அதிபரின் அலுவலகம் அறிவித்துள்ளது.
அந்நாட்டின் அல்பைன் பிரதேசத்தில் நடத்தப்பட்ட தேடுதல்களின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் பல வருடங்களாக அவ் இயக்கத்திற்காக அங்குள்ள இலங்கையர்களை மிரட்டி பலவந்தமாக நிதி சேகரிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும், மணி லோண்டரிங் ( Money laundering ) போன்ற குற்றங்களில் ஈடுபட்டிருப்பதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சேகரிக்கப்பட்ட நிதியானது இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டதாகவும், அதிகமானவை அவ் இயக்கத்துடன் தொடர்புடைய நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டதாகவும் சட்டமா அதிபரின் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது







