விக்கிலீக்ஸ் இணையதளச் செய்திகளையடுத்து பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலகவேண்டும் என்று எதிர்கட்சிகள் கூறிவருவதையடுத்து காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான ஓட்டெடுப்பின் போது எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக விக்கிலீக்ஸ் இணையதளத்தில் செய்தி வெளியாகி இருப்பதை தொடர்ந்து, பிரதமர் மன்மோகன் சிங் ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வற்புறுத்தி உள்ளன.
ஆனால் இந்த கோரிக்கையை நிராகரித்துள்ள காங்கிரஸ்,
எதிர்க்கட்சிகளுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளது. இதுபற்றி அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில்:
பிரதமர் மன்மோகன் சிங் களங்கம் அற்றவர் என்றும், தேசத்தை பலவீனப்படுத்தும் வகையில் எதிர்க்கட்சிகள் பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்வதாகவும் கூறினார்.








மன்மோகன் சிங் களங்கம் அற்றவர் எனக் காங்கிரஸ்காரன் சொல்லுகிறான் ஆனால் தமிழர் தலைவனைக் களங்கப்படுத்த தமிழன் நினைக்கிறான் என்ன கொடுமையய்யா இது.