Sunday, April 26, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

வால்காவிலிருந்து கங்கை வரை(1) : ராகுல்ஜி

இனியொரு... by இனியொரு...
11/14/2012
in பிரதான பதிவுகள் | Principle posts, இலக்கியம்/சினிமா, அரசியல்
0 0
15
Home பிரதான பதிவுகள் | Principle posts

பேராசிரியர் ராகுல சங்கிருத்தியாயனின் ‘வால்காவிலிருந்து கங்கைவரை’ இந்தியாவில் சிந்தனைப் புரட்சியை ஏற்படுத்திய நாவல். மனித சமுதாயத்தின் தோற்றம், வளர்ச்சி, நாகரிகம் இவைகளை இருபது கதைகளாகப் படைத்துள்ளார் ராகுல்ஜி.
இவைகள் வெறும் கதைகளல்ல. சரித்திரத்தை படிக்கும் சலிப்போ, தத்துவத்தைக் கற்கும் சிரமமோ இல்லாமல் வெகு இயல்பான , சுவையான நடையில் கூறப்பெற்றுள்ள அறிவுப் பெட்டகம் இந்தப் புத்தகம்.
கி.மு 6000 த்திலிருந்து 20 நூற்றாண்டு வரை உள்ள காலங்கள் ஆதாரபூர்வமாக அலசப் பெற்றுள்ளன.
உலகின் மிகப்பெரும் அறிஞரான ராகுல்ஜீ, 36 மொழிகளைக் கற்றுத் தேர்ந்தவர். அறிவுத் தேடலில் உலகின் மூலை முடுக்கெல்லாம் சுற்றித்திரிந்தவர். வெவ்வேறு நாடுகளில் வாழ்ந்தவர். தனது உழைப்பால் சேகரித்துக்கொண்டவற்றை 150 நூல்களாக மக்களுக்கு வழங்கியவர். ‘வால்காவிலிருந்து கங்கைவரை’ என்ற நூலை இணைய வாசகர்களுக்காக தொடர் பதிவுகளாகத் தருவதில் மகிழ்ச்சிய்டைகிறோம்.
-இனியொரு

நிஷா

அத்தியாயம் 1 பகுதி1

இடம் : வால்கா நதிக்கரைப் பிரதேசம்
இனம்: ஹிந்தோ ஐரோப்பியர்
காலம் : கி.மு. 6000

எத்தனையோ நாட்களுக்குப் பிறகு இன்றுதான் சூரியனைக் காண முடிந்திருக்கிறது. மத்தியான வேளை ஆனால் இன்னும் உச்சிக்கு நேரே சூரியன் வரவில்லை. பொழுது புலர்ந்து நான்கு ஐந்து மணி நேரமாகியும் சூரியனுடைய ஒளியில் அவ்வளவு உஷ்ணத்தைக் காணோம். அவனை- சூரியனை மேகங்கள் மறைக்கவில்லை. பனிப்படலங்களும் மூடவில்லை. பெரிய காற்றோ புயலோ கிடையாது. இந்த நிலையில் உடம்பைத் தொட்டுக்கொண்டிருக்கும் அவனுடைய கிரகணங்கள் மனதுக்கும் தேகத்திற்கும் எவ்வித ஆனந்ததைக் கொடுக்கின்றன!

சரி நாலா பக்கங்களிலும் இருக்கும் காட்சிகளை நோக்க்குவோமே!

மேலே நீலநிறமான ஆகாயம்; கீழே க்ற்பூரத்தைப் போன்ற பனிப்படலங்கள் கவ்விக்கொண்டிருக்கும் பூமி. கடந்த இருபத்துநான்குமணிநேரமாகப்பனி விழாததால், பூமியின் மீது படிந்திருக்கும் பனித்திரள் கொஞ்சம் கெட்டியாகிவிட்டது. பனி மூடிய இந்தப்பூமி எங்கும்வியாபித்திப்பதாக நீங்கள் நினைத்துவிடவேண்டாம். அதேஇருமருங்கிலும்மலைகளின் மீதுள்ள மரக்கூட்டங்களின் நடுவே சில மைல்கள் தூரம் மேடும் பள்ளமுமாக, வடக்கிலிருந்துதெற்கு நோக்கி வெள்ளிப்பலகை மாதிரி கிடக்கிறது இந்தப் பூமி.

வாருங்கள்; இனி அந்த மரக்கூட்டங்களைக்கொஞ்சம் நெருங்கிப்பார்ப்போம். இங்கே இரண்டு விதமான விருட்சங்கள் அதிகமாயிருக்கின்றன. ஒரே வண்மை நிறமாயும் ஆனால் இலைகளே இல்லாத கொம்புகள்-கிளைகள் உள்ளனவாயும் நிற்பன ஒரு வகை; ஓங்கி வளர்ந்து,ஆனால் அடர்ந்த கிளைகளையும் ஊசியைப் போன்ற முனையான இலகளையும் உடைய தேவதாருவிருட்சங்கள் மற்ற வகை. அடர்ந்த கிளைகள் அந்த மரங்களை அப்படியே மூடிக்கொண்டிருப்பதும். கண் கொள்ளாக் காட்சியாயிருக்கிறதல்லவா?

தனிமையில் இருக்கும் நாம், கொஞ்சம் உற்றுக் காதுகொடுத்துக்கேட்போமா? பட்சிகளின் சப்தமாவது கேட்கிறதா? மிருகங்களின் இரைச்சலாவது கேட்கிறதா? சிறிய வண்டுகளின் ரீங்காரமாவது கேட்கிறதா? இல்லை. பயங்கரம் நிறைந்த நிசப்தத்தியின் ஆட்சி ஆரண்யமெங்கும் நிலவியிருக்கிறது.
சரி வாருங்கள் அதோ மலையின் மீதூயர்ந்து வளர்ந்திருக்கும் தேவதாருமரத்தின்மீது ஏறி நாலா பக்கங்களின் காட்சிகளைப் பார்ப்போம் யார்கண்டார்கள்? பனிக்கட்டி தேவதாரு விருட்சங்கள் இவைகளையயல்லாமல் வேறு ஏதாவது அந்தப் பக்கம் தென்படாதா?அப்படி ஒன்றையும் காணோம் .எங்கு பார்த்தாலும் பெரிய பெரிய மரங்களும், பனியுந்தானா? புற்களோ ,புதர்களோ இந்தக் காட்டில் முளைக்கவே செய்யாதா?

ஆனால் இவைகளைப்பற்றியெல்லாம் அபிப்பிராயம் கூறுவதற்காக நாம் இங்கு வரவில்லையே ? பனி சூழ்ந்த இரண்டு பாகங்களைக் கடந்து கடைசிப் பாகத்துக்கு நாம் வந்திருக்கிறோம்.இந்த வருஸ்ம் பனியும் அதிகமென்று சொல்வதையும் நாம் கேட்டிருக்கிறோம் அல்லவா? இவ்வளவு பனியிலும் நின்று கொண்டிருக்கிற இந்த மரங்கள் எவ்வளவு பருமனாயிருக்கின்றன! அளந்து பார்ப்பதற்கு கூட நம்மிடம் சாதனம் இல்லை ஆனால் சுமாராகச் சுற்றளவு எட்டு முழம் இருக்குமல்லவா? அதற்கு மேலும் இருக்கும்.

இந்த உயரமான மரத்தில் ஏறி நிற்கும் நாம் என்ன பார்க்கிறோம்? அதே பனிப்படலம் . அதே மரங்களின் கூட்டம். மேடு பள்ளமான அதே மலைப்பிரதேசம்! அதே புகை; ஆம் உண்மையிலேயே புகைதான் இந்த நிசப்தமான வளர்ந்ததரத்தில் புகை எங்கிருந்து வந்தது? நமக்கு ஆச்சரியமாயும். ஆனால் சந்தோசமாயும் இருக்கிறதல்லவா? வாருங்கள், போய்ப் பார்த்து விடுவோமே!.

புகை கிளம்புவது உண்மைதான் . ஆகாயம் நிர்மலமாயிருப்பதனாலும் ,நாம் உயரத்தில்நிற்பதாலும் சமீபமாகத்தெரிகிறது. இருந்தாலுமென்ன? நெருங்கி வந்து விட்டோம். பிண நாற்றமும் மாமிசவாசனையும் நம்முடைய மூக்குக்கு முதல் விருந்தாகக் கிடைத்திருக்கிறது. அதோ சப்தம்: ஆம் சிறு குழந்தைகளின் சப்தம்: ஜாக்கிரதை; நாம் ரொம்ப மெதுவாக நடக்கவேண்டும். காலடிச் சத்தங்கூடக் கேட்கக்கூடாது. மூச்சும் மெதுவாகவிட்டால் நல்லதுதான்.யார் கண்டார்கள்! நம்மை வரவேற்பதில், அவர்களைப் பார்க்கிலும் அவர்களுடைய நாய்கள் முந்திக்கொண்டால்?

இந்தக் குழந்தைகளைப் பார்த்தீர்களா? உண்மையிலேயே சின்னஞ்சிறிய குழந்தைகள். அதோ யாவற்றிலும் பெரிய குழந்தைக்கு எட்டு வயதிருக்கும்.சின்ன குழந்தைக்கு ஒரு வயது இருக்குமல்லவா?

ஆம் ஒரே வீட்டில் ஆறு குழந்தைகள்; இது வீடில்லையே; மலையின் இயற்கைக் குகை உட்பக்கம் ஒரே இருட்டாகவல்லவா இருக்கிறது! இது எவ்வளவு அகலமும் நீளமும் இருக்கும்? எவ்வளவும் இருக்கட்டுமே! நீளத்தையும் அகலத்தையும் பார்ப்பதற்காகவா நாம் வந்திருக்கிறோம்?

இனி இங்கு வசிப்பவரைக் கவனிப்போம். ஒரு பழுத்த கிழவி, அழுக்குப் படிந்து வெண்மையாய், ஆனால் சடை மாதிரி கற்றை கற்றையாக விரிந்து. அவளுடைய முகத்தையே மூடிக்கொண்டிருக்கின்றன , ரோமங்கள்! தன்னுடைய கைகளினால் அந்த ரோமக்கற்றைகளை விலக்குகிறாள். அவளுடைய புருவ ரோமங்களும்கூட ஒரே வெண்மை நிறம். அவளுடைய வெண்மையான முகத்தில் விழுந்துள்ள சுருக்கங்கள் அவளுடைய வாய்க்குள்ளிருந்து வெளிக் கிளம்புவன போன்று காட்சியளிக்கின்றன.

புகையும் நெருப்பும் வெளித் தோன்றும் அந்தக் குகைக்குள்ளே தான் குழந்தைகளும் கிழவியும் வசிக்கிறார்கள்.அவளுடைய உடம்பில் எந்த ஓர் ஆடையையும் காணோம்.குழந்தைகளின் சப்பதத்தைக்கூட அவளால் கேட்கமுடிகிறது. இந்த நேரத்தில் ,ஒரு குழந்தை கத்துகிறது.அவளுடைய கண்கள் அந்தப் பக்கம் திரும்பின, கிட்டத்தட்ட ஒன்று- ஒன்றரைவயதுள்ள இரண்டு குழந்தைகள்; ஒன்று ஆண் குழந்தை; மற்றது பெண். மஞ்சள் படிந்த வெண்மையும்மிருதுவுமான ரோமமும் பெரிய நீல நிறமான விழிகளையுமுடைய அந்தப் பையன் அழுது கொண்டிருக்கிறான்.வாயில் ஓர் எலும்பை வைத்துச் சுவைத்துக் கொண்டிருக்கும் சிறு பெண் பக்கத்தில் நிற்கிறாள்.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
ஒடிசா வனப்பகுதியில் மோதல் மாவோயிஸ்டுக்களும் அதிரடிப்படையும் பலி

ஒடிசா வனப்பகுதியில் மோதல் மாவோயிஸ்டுக்களும் அதிரடிப்படையும் பலி

Comments 15

  1. ma.sithivinayagam says:
    13 years ago

    மானிட குலத்தின் வாழ்வியலை மனக்கண்நிறுத்துகிற அற்புதமான படைப்பு வால்காவிலிருந்து கங்கை வரை. ராகுல சங்கிருத்தியாயன் அவர்கள் இந்தியாவிற்குமட்டுமென்றல்ல ஒட்டு மொத்த மானிட குலத்திற்குமான கொடை. அவரது படைப்பை இனியொரு வாசகர்களுக்கும் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. தன்னுடைய வாழ்நாள் சுயசரிதையை “புதிய ஒளி” என்கின்ற படைப்பாக்கியிருக்கின்றார் ராகுல் அவர்கள்.

    • Dr. Sri S. Sriskanda says:
      13 years ago

      Great title. Volga to Ganges. This Rahul is a Professor. Rahlji. There is Varunji, too.

  2. j.jenney says:
    13 years ago

    இனியொரு நிர்வாகத்தினருக்கு!

    ராகுல்ஜியின் ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ என்ற நாவலை தொடராக வெளியிட ஆரம்பித்தமைக்கு நன்றிகள்!

    மனித சமுதாயம் எப்படி படிமுறை வளர்ச்சியினூடு தன்னை வளம்படுத்திக்கொண்டதோ அதே போன்று எமது அறிவியல் வளர்ச்சிக்கும் நாம் படிக்கும் புத்தகங்களுக்கும் ஒரு தெரிவுசெய்யப்பட்ட ஒழுங்கமைப்பு தேவையென்பது அனுபவத்தால் உணரக்கூடியதே.இந்த வகையில் இந்த நாவலின் அறிமுகமும் அதன் வாசிப்பு தூண்டலும் எமது இளம் சமூகத்திற்கு அத்தியாவசியமானதே!இன்றைய இணையதள உலகவலத்தில் புத்தக வாசிப்பு அருகிக்கொண்டுவரும்நிலையில் எமது இளம் தலைமுறைக்கு இந்த வழிமுறை அறிவியல் கண்டிப்பாக பயன்படும்.

    இதுபோன்ற சிந்து முதல்கங்கை வரை>தாய் >புத்துயிர்ப்பு>வீரம்விளைந்தது>குணாவின் இயக்கவியல் பொருள் முதல்வாதமும் வரலாற்று பொருள்முதல்வாதமும் போன்ற மானிடவியலின்அடிப்படைத்தத்துவங்களை எளிமையாக மக்கள் மனதில் அதுவும் இளம்சமூகத்தில் விதைக்கக்கூடிய நாவல்களை நீங்கள் தொடர்ந்து வெளிக்கொணரவோ அன்றி இப்படியான நாவல்களின் அறிமுகங்களுடன் இணையதளத்தில் ஒரு நிரந்தர பக்கங்களை செயற்படுத்துவதோ சிறப்பாக இருக்கும் என்பது எனது பணிவான வேண்டுகோள்.

    எனினும் உங்களின் இந்த சமூக அக்கறையுடன் ஆக்கபுர்வமான புதிய பரிமாணத்திற்கு எனது வாழ்த்துக்கள்!
    இதனை இன்றே நாட்டிலுள்ள சில இளைஞர்கள் மத்தியில் ஈமெயில் மூலம் அறிமுகப்படுத்த வசதியாக வழியமைத்த செயற்பாட்டிற்குமாக உங்கள் நிர்வாகத்திற்கு நன்றிகள்

  3. MustangGT says:
    13 years ago

    அது சரி கிழவிக்கு எப்படி 2 வயது குழந்தை ? அடுத்த அத்தியாயத்தில் விளக்கம் உள்ளதோ ??

  4. manithan says:
    13 years ago

    எண்பதுகளின் அரசியல் நினைவுகளை மீண்டும் அங்குலம் அங்குலமாய் இத் தொடர் தட்டியெழுப்பும். துயரில் மூழ்குவோமா? புத்துயிர் பெறுவோமா?

  5. muththu says:
    13 years ago

    வாழ்த்துக்கள். பதிவைத்தொடருங்கள்.

  6. thava says:
    13 years ago

    அண்மித்த காலங்களில் இனியொரு மக்கள் இலக்கிய முயற்சிகளில் அக்கறையுற்றுவருவதை அவதானிக்க முடிகிறது. மக்கள் இலக்கியம் சமூகத்தின் கண்ணாடி. புத்துயிர்ப்பான சிந்தனைகளை வாசகர்களுக்குத்தரவேண்டுமெனும் சீரிய வாசிப்பிற்கான ஊக்கம் மகிழ்வைதருகிறது தொடரட்டும் தங்கள் பணி.

  7. அபு says:
    13 years ago

    நல்ல முயற்சி.

  8. Ithayachandran says:
    13 years ago

    Many thanks Inioru. As Jenny said, please allocate separate folder for this book.

  9. Sippy says:
    13 years ago

    Well done, every one need read this.

  10. thevan says:
    13 years ago

    இனியாவது ஒழுங்காக விளங்கி வாசிக்க சந்தர்ப்பம் தந்ததிற்கு நன்றிகள். இதை விளங்காமல் வாசித்ததால் தானோ என்னவோ இடதுசாரிகள் என்று முப்பது வருடங்களிட்கு மேலாக பொருமை கொள்ளும் நாங்கள் இந்த சமூக அமைப்பை ஒரு அங்குலம் கூட நகர்த்தவில்லை போலும்.

    சிந்து முதல்கங்கை வரை>தாய் >புத்துயிர்ப்பு>வீரம்விளைந்தது>குணாவின் இயக்கவியல் பொருள் முதல்வாதமும் வரலாற்று பொருள்முதல்வாதமும் விளங்கி வாசித்திருந்தால் சில வேளை நூறு அடி நகர்ந்திருப்போமோ என்ற கவலையும் எனக்கு இருக்கு.

  11. thevan says:
    13 years ago

    வாசிப்புகள்,தரவுகள் ,தத்துவங்கள் ,கோட்பாடுகள் ஞாபகத்தில் மட்டும் பதிவற்கல்ல,பதிந்து ஒரு அதிகாரத்தை புரியாத உழைக்கும் மக்கள் மீது ஆதிக்கம் செலுத்தவும் அல்ல என்னுமொரு (புத்தியால்) ஆளும் அதிகாரமாக மாறுவதற்கும் அல்ல,
    என்றாவது இந்த நூல்கள் தெளிவு படுத்தும் என்று நம்புவோமாக.இவற்றை வாசித்து சமூக அமைப்பை மாற்றியவர்களை உழைக்கும் மக்கள் கும்பிட தயார், எங்கே அவர்கள் ?

  12. vijey says:
    13 years ago

    மீண்டும் வாசிக்கப்பட்ட புத்தகம். வெளியிட்டமைக்கு மகிழ்ச்சி.
    விஜய்

  13. manithan says:
    13 years ago

    நாம் பேசிக்கொண்டிருக்கும் போது ராகவன் ஒரு மார்க்சிய நூலை வாசித்துக்கொண்டிருந்தார். பிரபாகரன் திடீரென எழுந்து அந்தப் புத்தகத்தை ராகவனின் கைகளிலிருந்து பறித்து தூரே வீசிவிட்டு “இதையெல்லாம் தூக்கிப் போட்டுவிட்டு ஆயுதங்களைக் களட்டிப் பூட்டக் கற்றுக்கொள்ளுங்கள் ” என்று சொல்கிறார்.
    படிக்கல படிக்கல.

  14. nirosh says:
    13 years ago

    உங்கள் பணி தொடர எம் வாழ்த்துக்கள். 

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...