Tuesday, June 9, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

வாக்குப் பொறுக்கிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு மக்களை அவமானப்படுத்தியது

இனியொரு... by இனியொரு...
02/29/2012
in இன்றைய செய்திகள்
0 0
5
Home இன்றைய செய்திகள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜெனீவா செல்ல மறுத்ததற்கான காரணங்கள் இன்னமும் தெளிகவில்லை. வன்னினிப் படுகொலை போன்ற மனித குல அழிப்பின் சூத்திரதாரிகளான ராஜபக்ச பாசிசக் கும்பலும் அதன் பின்புலத்தில் செயலாற்றும் பேரினவாதத் தத்துவமும் உலக மக்கள் மத்தியில் அம்பலப்படுவதற்கான சந்தர்ப்பங்கள் சிலவே தேசியக் கூட்டமைப்புப் போன்ற வாக்குப் பொறுக்கும் கட்சிகளுக்குக் காணப்படுகின்றன, அவ்வாறான சந்தர்ப்பங்களில் ஒன்றாக மேற்குலகின் ஜனநாயக முற்பொக்காளர்கள் மத்தியில் இனப்படுகொலையின் கோரம் குறித்துக் குரல்கொடுக்க குறைந்தபட்ச நடவடிக்கையைக் கூட முன்னெடுக்கத் தவறும் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற எம்பிக்களான சிறீதரன், மாவை சேனாதிராசா, சுமந்திரன், சம்பந்தன் போன்றோர் ஜெனீவா பயணத்தினால் எந்தப் பலனும் ஏற்படப் போவதில்லை என்று பகிரங்கமாகக் கூற ஆரம்பித்துவிட்டனர்.
இலங்கை அரச துணைக்குழுக்களின் ஆசை வார்த்தைகளுக்கு மயங்காமல் தமிழ்ப் பேசும் மக்கள் தமது அரச எதிர்ப்பை கூட்டமைப்பிற்கு வாக்களித்ததன் ஊடாக வெளிப்படுத்தினர். அவர்களின் ஒற்றை வாக்கைக் கூட அவமானப்படுத்தும் வகையில் ஜேனிவா செல்ல மறுப்பதற்கான காரணத்தைக் கூட மக்கள் மத்தியில் அவர்கள் முன்வைக்கத் தவறிவிட்டனர்.
ராஜபக்ச குடும்பம் தமக்கான ஆதரவாளர்களைத் திரட்டுவதற்கு தாரளமான பணமுடிச்சுக்களை வழங்கிவருகிறது என்பது இலங்கையில் சாதாரணமாக அறியப்பட்ட விடயம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜெனீவா செல்ல மறுத்ததற்கான காரணங்கள் இன்னமும் தெளிகவில்லை. வன்னினிப் படுகொலை போன்ற மனித குல அழிப்பின் சூத்திரதாரிகளான ராஜபக்ச பாசிசக் கும்பலும் அதன் பின்புலத்தில் செயலாற்றும் பேரினவாதத் தத்துவமும் உலக மக்கள் மத்தியில் அம்பலப்படுவதற்கான சந்தர்ப்பங்கள் சிலவே தேசியக் கூட்டமைப்புப் போன்ற வாக்குப் பொறுக்கும் கட்சிகளுக்குக் காணப்படுகின்றன, அவ்வாறான சந்தர்ப்பங்களில் ஒன்றாக மேற்குலகின் ஜனநாயக முற்பொக்காளர்கள் மத்தியில் இனப்படுகொலையின் கோரம் குறித்துக் குரல்கொடுக்க குறைந்தபட்ச நடவடிக்கையைக் கூட முன்னெடுக்கத் தவறும் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற எம்பிக்களான சிறீதரன், மாவை சேனாதிராசா, சுமந்திரன், சம்பந்தன் போன்றோர் ஜெனீவா பயணத்தினால் எந்தப் பலனும் ஏற்படப் போவதில்லை என்று பகிரங்கமாகக் கூற ஆரம்பித்துவிட்டனர்.
இலங்கை அரச துணைக்குழுக்களின் ஆசை வார்த்தைகளுக்கு மயங்காமல் தமிழ்ப் பேசும் மக்கள் தமது அரச எதிர்ப்பை கூட்டமைப்பிற்கு வாக்களித்ததன் ஊடாக வெளிப்படுத்தினர். அவர்களின் ஒற்றை வாக்கைக் கூட அவமானப்படுத்தும் வகையில் ஜேனிவா செல்ல மறுப்பதற்கான காரணத்தைக் கூட மக்கள் மத்தியில் அவர்கள் முன்வைக்கத் தவறிவிட்டனர்.
ராஜபக்ச குடும்பம் தமக்கான ஆதரவாளர்களைத் திரட்டுவதற்கு தாரளமான பணமுடிச்சுக்களை வழங்கிவருகிறது என்பது இலங்கையில் சாதாரணமாக அறியப்பட்ட விடயம்.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

மட்டக்களப்பு வரலாறு : மட்டக்களப்பு பூர்விகக் குடிகளின் குமார தெய்வமும் முருகனும் : விஜய்

Comments 5

  1. Mahesh says:
    14 years ago

    மடிக்குள் இருக்கும் ஓணானை வெளியில் எடுத்து எறியுங்கள்- சம்பந்தன் ஐயாவுக்கு பகிரங்க மடல்!
    Pஉப்லிச்கெட் ஒன் Fஎப்ருஅர்ய் 29, 2012-10:02 அம் · 7 Cஒம்மென்ட்ச்
    ஐயா,
    பாராட்டு மழைகளில் நனைந்து சளி பிடித்து என்ன கஷ்டப்படுகிறீர்களோ என்ற கவலையுடன் இந்த மடலை உங்களுக்கு எழுதுகிறோம்.

    சாதாரண நபர்களின் பாராட்டா அது, அமைச்சர் பசில், டக்ளஸ், கருணா, இப்படி ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களின் பாராட்டுக்களால் நீங்கள் இப்போது திக்குமுக்காடிப்போய் இருப்பீர்கள்… அது மட்டுமல்ல நீங்கள் அடிக்கடி தனிமையில் சென்றுவரும் அலரிமாளிகைக்கு கூட உங்களுக்கு விசேட அழைப்பு வந்திருப்பதாக கேள்வி.

    தலைவர் பிரபாகரன் காலத்தில் தமிழ் மக்களுக்கான விடுதலை கிடைக்கும் என்று பெரும்பாலான தமிழ் மக்கள் நம்பியிருந்தார்கள். அந்த நம்பிக்கைகள் கலைந்த போது சம்பந்தன் ஐயாவின் காலத்தில் ஒரு தீர்வு கிடைக்கும் என எங்களில் பலரும் நம்பியிருந்தோம். அகிம்சைப்போராட்டம், ஆயுதப்போராட்டம் என தொடர்ந்த எமது பயணம் இப்போது இராஜதந்திரப்போராட்டத்தில் நிற்கிறது. அ, ஆ, இ, அடுத்த கட்டம் ஈ……. நீங்கள் அடிக்கடி இதைத்தான் கூறிவருவதாக கேள்விப்பட்டிருக்கிறேன்.

    உங்கள் மீதும் நீங்கள் தலைமை தாங்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீதும் பெரும்பாலான தமிழர்கள் நம்பியிருந்தோம். தமிழ் மக்களின் அரசியல் தலைமை தமிழ் தேசியக் கூட்டமைப்புதான். அதற்கு உறுதியான ஒரு தலைவராக சம்பந்தன் ஐயா இருக்கிறார் என இறுமாப்புடன் பெருமை கொண்டிருந்தோம். சம்பந்தன் ஐயா காலத்திலாவது எங்கள் மக்களுக்கு ஒரு விடிவு, விடுதலை கிடைக்கும் என மலைபோல நம்பியிருந்தோம்.

    அப்படி பட்ட உங்களுக்கு கொடும்பாவி எரிப்போம் என வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் கொதித்தெழுந்திருக்கிறார்கள் என கேள்விப்பட்டே இந்த மடலை உங்களுக்கு எழுதுகிறோம். உங்களை தலைவர் என்று நம்பியிருக்கும் ஈழத்தமிழ் மக்கள் உங்களின் கொடும்பாவிகளை எரிக்கும் நிலைக்கு அவர்களை தள்ளிவிடாதீர்கள் என்று பணிவோடு சொல்வதற்காகவே இந்த மடலை உங்களுக்கு வரைகிறோம்.

    இதற்கு எல்லாம் காரணம் உங்கள் மடிக்குள் இருக்கும் ஒரு ஓணான்தான். அந்த ஓணானை மடிக்குளிருந்து எடுத்து வெளியில் எறியாத வரைக்கும் அது உங்களை குடைந்து கொண்டே இருக்கும். அந்த ஓணான் யார் என்று உங்களுக்கு விளங்கியிருக்கும். விளங்காவிட்டால் நேரடியாக சொல்லிவிடுகிறோம். அது வேறுயாருமல்ல.. உங்களுக்கு பக்கத்தில் இருக்கும் சட்டம் படித்த சுமந்திரன்தான்.

    2010ஆம் ஆண்டுவரை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் போக்கு நன்றாகத்தான் இருந்தது. சரியான தீர்மானங்கள் தான் எடுக்கப்பட்டன. எல்லோரின் ஒத்த கருத்துக்கு மதிப்பளித்தே தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. ஆனால் எப்போது சுமந்திரன் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளே வந்தாரோ அன்று தொட்டதுதான் தமிழ் தேசியக்தேசியக் கூட்டமைப்புக்கு சனியன் என தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேசிக்கொள்வது உங்களின் காதுகளுக்கு கேட்டிருக்குமோ தெரியவில்லை.

    தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் விரும்பத்திற்கு மாறாக யாரையோ நீங்கள் திருப்திபடுத்துவதற்காக தன்னிச்சையான தீர்மானங்களை எடுப்பதும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரியாமல் அடிக்கடி தனியாக பாதுகாப்பு செயலாளர் கோதபாயாவையும், அலரிமாளிகைக்கு சென்று மகிந்த ராசபக்சவையும் சந்தித்து வருவதும் உங்களை யாரோ தவறான திசைக்கு அழைத்து செல்கிறார்கள் என்பதை உணரமுடிகிறது.

    தமிழீழத்தை நாங்கள் ஒருபோதும் கோரவில்லை என சொன்னீர்கள், 1977ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் விஞ்ஞாபனத்தில் தனித்தமிழ் ஈழத்திற்கான அங்கீகாரம் கோரி சர்வஜன வாக்கெடுப்பாக பொதுத்தேர்தலில் போட்டியிடுவதாக தமிழர் விடுதலைக் கூட்டணி பிரகடப்படுத்தியிருந்தது. அந்த பிரகடனத்தின் கீழேயே திருகோணமலை தொகுதியில் போட்டியிட்டி நீங்கள் வெற்றி பெற்றீர்கள். 32ஆண்டுகளின் பின்னர் விடுதலைப்புலிகளின் அஸ்தமனத்திற்கு பின்னர் தமிழீழத்தை நாங்கள் ஒரு போதும் கோரவில்லை என சொன்னீர்கள்.

    அண்மையில் கனடாவில் விருந்து ஒன்றில் பேசிய போது வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கு சொந்தம் என்று சொல்லவரவில்லை என சொன்னீர்கள்….

    இவை எல்லாம் உங்கள் ஞாபகமாறாட்டமோ அல்லது யாரையோ திருப்திப்படுத்துவதற்காக சொல்கிறீர்களோ என குழம்பி போய் இருந்தோம்.

    ஒரு வருடத்திற்கு மேலாக அரசாங்கத்துடன் நடத்தும் பேச்சுகளில் இணக்கம் காணப்பட்ட சில விடயங்களை நடைமுறைப்படுத்தாமல் இனிப்பேச்சுக்கள் இல்லை என பேச்சிலிருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு குழு தீர்மானித்திருந்த வேளையில் யாருக்கும் சொல்லாமல் அலரிமாளிகைக்கு சென்று மகிந்தவுடன் பேச்சு நடத்தி விட்டு மீண்டும் பேச்சுவார்த்தையை ஆரம்பித்தீர்கள். இது கூட ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரியாமல் நீங்களும் சுமந்திரனும் எடுத்த முடிவு என்றே ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேசிக்கொண்டனர்.

    ஏற்கனவே நடந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற குழு கூட்டத்தில் ஜெனிவா கூட்டத்திற்கு குழு ஒன்றை அனுப்புவது என தீர்மானிக்கப்பட்டிருந்ததை நீங்கள் மறுக்க மாட்டீர்கள். அந்த தீர்மானத்தை மாற்றுவதாக இருந்தால் நாட்டில் இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களை அழைத்து கருத்துக்களை பெற்றே ஒரு தீர்மானத்திற்கு வந்திருக்க வேண்டும்.

    எந்த கலந்துரையாடல்களையும் நடத்தாது ஜெனிவாவுக்கு குழுவை அனுப்புவதில்லை என்று அறிக்கை தயாரித்து ஊடகங்களுக்கு அனுப்புவதற்கு 10 நிமிடங்களுக்கு முதல் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அந்த தகவலை சொன்னதை தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஏகமனதான தீர்மானம் என்று எப்படி சொல்ல முடியும்?

    தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜெனிவாவுக்கு சென்று எதையாவது சாதிக்க முடியுமா இல்லையா என்பது வேறு விடயம். அங்கு போவதால் ஒரு துரும்பை கூட உங்களால் தூக்கி போடமுடியாமல் கூட இருக்கலாம். நீங்கள் போகவில்லை என்ற பிரச்சினைக்கு அப்பால் யாரையோ திருப்திபடுத்துவதற்கு அவசராவசரமாக அந்த ( யாருக்கும் விளங்காத) அறிக்கையை விட்டிருக்கிறீர்கள் என்றே கருதுகிறோம்.

    நீங்கள் ஜெனிவாவுக்கு போகவில்லை என்றால் அதை உங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவித்து விட்டு இருப்பதுதான் இராஜதந்திரம். யாரையோ திருப்திப்படுத்துவதற்காக விளங்காத அறிக்கை ஒன்றை வெளியிட்டு உங்களையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பையும் சிக்கலில் மாட்ட வைத்தவர் பற்றி நீங்கள் அவதானமாக இருக்க வேண்டும்.

    இந்த அறிக்கையின் பின்னணியில் உங்கள் மடிக்குள் இருக்கும் சுமந்திரன்தான் உள்ளார் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம்.

    இப்போது சுமந்திரன் உங்களை தவறான வழிக்கு கொண்டு செல்வதைப்போலவே 2000ஆம் ஆண்டுக்கு முன்னர் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த நீலன் திருச்செல்வம் உங்களை தவறாக வழிநடத்தி வந்தார் என்பதை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள்.

    தமிழர் விடுதலைக் கூட்டணியாக இருக்கட்டும், தமிழ் தேசியக் கூட்டமைப்பாக இருக்கட்டும். வடகிழக்கு தமிழ் மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியாத கொழும்பை சேர்ந்த சுமந்திரனை சட்டம் படித்தவர் என கூறி தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக்கியது போலவே தமிழர் விடுதலைக் கூட்டணியில் நீங்கள் செயலாளராக இருந்த போது வடகிழக்கு தமிழ் மக்களின் உணர்வுகளை புரியாத நீலன் திருச்செல்வத்தை தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக்கினீர்கள்.
    நீலன் திருச்செல்வம் எவ்வாறு உங்களை தவறாக வழிநடத்தினார் என்பதற்கான பல சம்பவங்களை குறிப்பிடலாம்.

    ஆனால் ஒரு சம்பவத்தை மட்டும் உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறோம். ஏனெனில் இச்சம்பவத்தை உங்களால் நிட்சயம் மறந்திருக்க முடியாது.

    சந்திரிக்கா பண்டாரநாயக்க ஜனாதிபதியாக இருந்த போது அலரிமாளிகையில் நடந்த கூட்டத்தில் இனிமேல் புலிகள் தென்னிலங்கையில் சிங்களவர்கள் மீது தாக்குதல் நடத்தினால் நானே தலைமை தாங்கி தமிழர்களை தாக்குவேன் என கூறியதாக சண்டே லீடரில் செய்தி வெளியாகியிருந்தது. அந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் இலங்கை வங்கி தலைவர் ராஜன் மட்டுமே தமிழர். அவரே அந்த தகவலை வெளியில் சொல்லியிருக்க வேண்டும் என சந்திரிக்கா உட்பட ஆளும் கட்சி தரப்பினருக்கு சந்தேகம் ஏற்பட்டிருந்தது. ஆனால் ராஜன் அந்த தகவலை தனக்கு சொல்லவில்லை என சண்டேலீடர் பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க கூறியிருந்தார்.

    நானே தலைமை தாங்கி தமிழர்களை தாக்குவேன் என்று சந்திரிக்கா சொன்ன விடயம் சர்வதேச ஊடகங்களிலும் வெளிவந்தது. இராஜதந்திர மட்டத்தில் சந்திரிக்காவுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டது. குமார் பொன்னம்பலம் அதை ஒரு சவாலாக எடுத்து பலத்த கண்டனத்தை தெரிவித்திருந்தார்.

    அந்த வேளையில் நானே தலைமை தாங்கி தமிழர்களை தாக்குவேன் என ஜனாதிபதி சந்திரிக்கா கூறவில்லை என தமிழர் விடுதலைக் கூட்டணி அறிக்கை ஒன்றை ஊடகங்களுக்கு அனுப்பியிருந்தது. தமிழர் விடுதலைக் கூட்டணி செயலாளராக இருந்த நீங்கள் அப்போது திருகோணமலையில் இருந்தீர்கள்.

    அந்த அறிக்கையை நீலன் திருச்செல்வமே தயாரித்து தமிழர் விடுதலைக் கூட்டணி கடித தலைப்பில் தன்னுடைய வீட்டு தொலைநகல் இயந்திரத்தின் மூலம் அனுப்பியிருந்தார். அதில் பெரிய மோசடியே இடம்பெற்றிருந்ததை அப்போது சண்டே லீடர் பத்திரிகை ஆதாரபூர்வமாக வெளியிட்டிருந்தது.

    அந்த அறிக்கையில் தமிழர் விடுதலைக் கூட்டணி செயலாளர் நாயகம் ஆர். சம்பந்தன் என குறிப்பிட்டு ஆர்.சம்பந்தன் என நீலன் திருச்செல்வம் கையொப்பம் இட்டிருந்தார். சம்பந்தனின் கையொப்பத்தை நீலன் திருச்செல்வம் கள்ள கையொப்பம் இட்டிருக்கிறார் என அந்த நேரத்தில் குமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டியிருந்தார். இந்த விடயங்கள் எல்லாம் சண்டே லீடரில் வெளிவந்ததை நீங்கள் அறிவீர்கள்.

    தமிழர் விடுதலைக் கூட்டணி செயலாளர் நாயகத்திற்கு பதிலாக என குறிப்பிட்டு நீலன் திருச்செல்வம் என கையொப்பம் இடுவது தவறல்ல. ஆனால் ஆர். சம்பந்தன் என நீலன் திருச்செல்வம் கையொப்பம் இடுவது மோசடி வேலையாகும்.
    இது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து நான் சொல்லித்தான் நீலன் திருச்செல்வம் அறிக்கையை அனுப்பினார் என நீங்கள் நீலன் திருச்செல்வத்தை காப்பாற்ற முற்பட்டிருந்தீர்கள்.

    நானே தலைமை தாங்கி தமிழர்களை தாக்குவேன் என சந்திரிக்கா சொன்னாரா இல்லையா என்பது எப்படி தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு தெரியும்? சந்திரிக்காவை காப்பாற்றுவதற்காக தமிழர் விடுதலைக் கூட்டணி எதற்காக அறிக்கை விட வேண்டும்? அதுவும் கள்ள கையொப்பம் இட்டு.

    அது தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுச்சபை உறுப்பினர்களிடையே பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. பல உறுப்பினர்கள் அதிருப்தியை வெளியிட்டிருந்தனர். ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கோ பொதுச்சபை உறுப்பினர்களுக்கோ தெரியாமல் தவறான சில தீர்மானங்களை நீலனும் நீங்களும் எடுப்பதாகவும், நீலன் திருச்செல்வம் உங்களை தவறாக வழிநடத்துகிறார் என்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஏனைய உறுப்பினர்கள் குற்றம் சாட்டி வந்ததை நாம் அறிந்திருக்கிறோம்.

    சந்திரிக்காவை காப்பாற்றுவதற்காக நீலன் திருச்செல்வம் கள்ள கையொப்பம் இட்டு வெளியிட்ட அறிக்கை தொடர்பாக கொழும்பு தமிழர் விடுதலைக் கூட்டணி அலுவலகத்தில் பெரும் சர்ச்சை எழுந்து அக்கூட்டத்தை இடையில் முடிந்து கொண்டு நீங்களும் நீலன் திருச்செல்வமும், ஆனந்தசங்கரியும் நேரடியாக சந்திரிக்காவின் அதிபர் மாளிகைக்கு சென்று ஆலோசனை நடத்தியதாக கூட அப்போது செய்திகள் கசிந்திருந்தன.

    சந்திரிக்கா ஒரு அற்புதமான பொதி வைத்திருக்கிறா என நீலன் திருச்செல்வம் சொல்லி தமிழர் விடுதலைக் கூட்டணியை அப்போது தவறான வழிக்கு அவர் கொண்டு சென்றிருந்தார். சந்திரிக்கா தன்னுடைய பொதியை உங்களுக்கு காட்டினாரோ தெரியாது. சந்திரிக்காவிடம் பொதி ஒன்று இருக்கிறது என கூறி அதில் நீங்கள் மயங்கியிருந்த காலங்களையும் நாம் அறிவோம்.

    சந்திரிக்காவின் கையாளாக மாறியிருந்த நீலன் திருச்செல்வம் எப்படி உங்களை தவறான வழிக்கு கொண்டு சென்றிருந்தாரோ அதே போலவே இன்று சுமந்திரனும் உங்களை தவறான வழிக்கு கொண்டு செல்கிறார் என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

    நீலன் திருச்செல்வம் தற்கொலை தாக்குதலில் கொல்லப்பட்ட பின்னர் உங்களுக்கு குண்டு துளைக்காத கார் ஒன்றை சந்திரிக்கா வழங்கியிருந்தார்.

    தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு உரிமை கோரி நீங்களும், ஆனந்தசங்கரியும் நடத்திய வழக்கில் உங்களுக்காக சுமந்திரன் இலவசமாக வழக்கு பேசியதையும், ஆனந்தசங்கரியை நீதிமன்றில் நிறுத்தி கேள்வி கேட்டதையும் எண்ணிப்பார்க்கிறோம். இது போன்ற சில நன்றிக்கடனுக்காக நீங்கள் சுமந்திரனுக்கு தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்கினீர்கள்.

    யாருக்கு தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்குவது என்பதை தீர்மானிப்பது நீங்களும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களும்தான். அது இப்போது பிரச்சினை இல்லை.

    அண்மைக்கால வரலாற்றில் இலங்கையில் இருக்கும் அனைத்து கட்சிகளையும் பிளவுபடுத்தி பலவீனப்படுத்தி துண்டு துண்டாக உடைத்த பெருமை மகிந்த ராசபக்சவை சாரும்.

    ஐக்கிய தேசியக்கட்சி தலைவராக ரணில் இருக்கும் போது அக்கட்சியுடனான சகல தொடர்புகளுக்கும் கரு ஜயசூரியாவுடன் தொடர்பு கொண்டு ஒரு கட்டத்தில் ஐக்கிய தேசியக்கட்சியை உடைத்து சிலரை சிலரை தன்னுடன் சேர்த்துக்கொண்டார் மகிந்த.

    அதேபோல ஜே.வி.பி தலைவராக சோவன்ச அமரசிங்க இருக்கும் போது விமல் வீரவன்ச போன்றவர்களுடன் நெருக்கத்தை ஏற்படுத்தி கட்சியை பிளவு படுத்தி பலவீனப்படுத்தினார் மகிந்த.

    அதேகதி சிறிலங்கா முஸ்லீம்காங்கிரஷ் கட்சிக்கு ஏற்பட்டது. மனோ கணேசனின் ஜனநாயக மக்கள் முன்னணிக்கு ஏற்பட்டது.

    மகிந்த உடைத்து பலவீனப்படுத்தாத கட்சி இல்லை என்றே கூறலாம். இப்போது தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் பிளவை ஏற்படுத்துவதற்கு மகிந்த பலவழிகளில் முயற்சி செய்து வருகிறார். அதற்கு ஆயுதமாக சுமந்திரன் பயன்படுத்தப்பட்டு வருகிறார் என்பதை கொழும்பு அரசியல் நடவடிக்கைகளை அவதானிக்கும் எவரும் புரிந்து கொள்வார்கள்.

    எமக்கு கவலை தரும் விடயம் இதுதான். தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பது வெறுமனே ஒரு அரசியல் கட்சியல்ல. தேர்தலில் போட்டியி;ட்டு பாராளுமன்றம் சென்று 10ரூபாவுக்கு சாப்பிட்டு விட்டு வருவதல்ல அந்த அமைப்பின் நோக்கம்.
    விடுதலைக்காக போராடும் ஒரு இனத்திற்கு தலைமை தாங்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் அதன் தலைவர் என்ற வகையில் உங்களுக்கும் உ

  2. veeran says:
    14 years ago

    countability for past crimes must not come at expense of Sri Lanka’s future
    29 February 2012, 12:47 am
    The Boston Globe | Editorial
    IT’S BEEN nearly three years since the Sri Lankan government ended a long war by crushing the Tamil rebel army, killing thousands of civilians – perhaps tens of thousands.
    The United Nations Human Rights Council, which meets in Geneva this week, should push Sri Lanka to investigate war crimes. But accountability for past crimes must not come at the expense of Sri Lanka’s future.
    Tamils who are full of bitterness over their defeat must not miss this chance to offer a vision for peaceful coexistence. The questions that perpetuated this terrible conflict remain unresolved: How much autonomy will the Tamil minority have? What must be done for Tamils to feel respected as equal citizens?
    Until recently, many Tamils refused to accept anything short of a separate country. Even today, hardcore leaders in the United States and Canada cling to that dream. Their denial is a disservice to their people. Many refuse to acknowledge war crimes committed by their own fighters – the Liberation Tigers of Tamil Eelam, who pioneered suicide bombings and kept civilians as human shields during the war’s bloody finale. If Tamils want a UN probe into the past, they must acknowledge that both sides committed unspeakable crimes.
    The Sri Lankan government is also in denial about its crimes, which include the systematic shelling of hospitals, arbitrary arrests, and disappearances. Allegations of summary executions and rape abound.
    The Sri Lankan government must implement the modest recommendations of its own war inquiry commission, including investigations into disappearances, an end to attacks on journalists, and a halt to policies aimed at settling members of the Sinhalese majority in Tamil areas. If Sri Lanka’s leaders prove unwilling, the United Nations should set up an independent probe. But no United Nations investigation can replace an honest effort by Sri Lankans to come to terms with what they have done to each other. [Courtesy: The Boston Globe]
    Full Text of Editorial by The Boston Globe, Feb 29, 2012

  3. thamizhan says:
    14 years ago

    தமிழ்தேசியக் கூட்டமைப்பை சிதைப்பதற்கும், பிரிப்பதற்கும் , தமிழ்தேசியக் கூட்டமைப்பு எதிர்காலத்தில் ஈழதமிழ்மக்களின் ஒரு பலமான அமைப்பாக இல்லாமால்போகச்செய்வதற்குமான ஓர் குற்றச்சாட்டே ஒழிய வேறொன்றுமில்லை. இலங்கைக்கு எதிராய் அமேரிக்காவும் அதன்நேச சக்திகளும் கொண்டுவந்த இந்த தீர்மானம் , தமிழ்மக்கள் மீது வைத்த பாசத்தினாலோ, அல்லது அக்கறையினாலோ அல்ல என்பது ஒருவருக்கும் தெரியாதல்ல. எனவே கூட்டமைப்பு ஜெனிவா போவதாலோ, போகாமால் விடுவதாலோ எந்த மாற்றமும் ஜெனிவாவில் நடைபெறப்போவதில்லை. ஏற்கனவேநடந்த ஜெனிவா மானாட்டில் கூட்டமைப்பு பங்குபற்றியதுதானே. அங்கு அப்போது என்னநடந்தது? கூட்டமைப்பால் ஏதும் மாற்றத்தைக் கொண்டு வர முடிந்ததா? இன்றையநிலவரப்படி அமேரிக்காவின் இந்தத் தீர்ர்மனம், இலங்கை அமேரிக்கவின் அந்தரங்கக் கோரிக்கைக்கு செவிசாய்த்துவிட்டால், தீர்மானம் ஜெனிவாவில் அரோகராதான். அதைத்தானே பிளெக் இறுதியாக வெளியிட்ட பத்திரிகை அறிக்கையும் சுட்டிக்காட்டிநிக்கின்றது.தமிழ்தேசியக் கூட்டமைப்பை பலம்குன்றச்செய்ய்வதற்கும் தமிழ்மக்களோ, தமிழ்புத்திஜீவிகளோ அல்லது தமிழ் பத்திரிகைகளோ ஒரு போதும் முன்நிற்கக் கூடாது.

    • Bala says:
      12 years ago

      ஜெனிவா தீர்மானம் அமெரிக்காவினால் அதன் நலன்களுக்காக சமர்ப்பிக்கபடுகிறது என்பது எல்லோரும் அறிந்ததே. அவர்களின் நன்மைக்காக கொண்ட்டுவரப்படும் தீர்மானத்தை நாம் எப்படி எமது மக்களின் விடிவிற்காக அதாவது சிறந்த அரசியல் தீர்வுக்காக பயன்படுத்தலாம் என்பதே தற்போதயை பிரச்சனை. தற்போதைய நிலையில் சர்வதேச தலையீடு அன்றி எந்த தீர்வும் உள்நாட்டில் சாத்தியபடாது என்பதே யதார்த்தம். அமெரிக்க ஸ்ரீலங்காவின் அந்தரங்க கோரிக்கைக்கு செவிசாய்த்து விட்டால் பாதிக்கபடுவது தமிழ் மக்கள் தான் அவ்வாறான நிலை ஏற்படும்போது நிரந்தர அடிமை நிலைதான் என்று வந்து விட்ட பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பு பலமா இருந்து யாருக்கு என்ன பிரயோசனம்

  4. Kumar says:
    14 years ago

    கூட்டமைப்பு ஜெனிவா சென்று சில வேளை தீா்மானம் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்டால் அவா்கள் திரும்பி நாடு செல்கின்றவேளை சிங்கள காடையா்களால் கொல்லப்படுவது உறுதி.தோற்றால் அவமானப்படுத்தப்படுவதும் உறுதி.
    இந்தத்தீா்மானத்தை கொண்டுவருபவா்கள் தமிழா்மேல் கரிசனை கொண்டு எமது பிரச்சனையை தீா்க்கவா முயல்கின்றார்கள்?? இல்லை,அவா்கள் தமது வியாபாரத்திற்காக இதை செய்கின்றார்களேயன்றி எமக்காக அல்ல என்பதை முதலில் தமிழா்கள் உணரவேண்டும், அத்தோடு கூட்டமைப்பின் நிலையை தமிழா்களாகிய நாம் அறியாவிட்டாலும் மேற்குலகம் நன்கறியும்.சிங்களமும் அதன் தமிழ் கைக்கூலிகளும் இதையும் தங்களுக்கு சாதகமாக்கி தமிழா்களை மீண்டும் மடையா்களாக காட்டி பிரிவினையை ஏற்படுத்த முயல்கின்றார்கள் ஆனால் நாமோ சிறுபிள்ளைத்தனமாக செய்திகளை வரைகின்றோம்.

    தமிழா்களாகிய எமக்கு இன்றய அவசரத்தேவை நிரந்தர தீா்வேயன்றி சிங்கள தலைகளை கூண்டில் ஏற்றுவதல்ல,கூண்டில் ஏற்றிவிட்டால் நமது பிரச்சனை தீா்ந்துவிடுமா?? ஆக தீா்வைபெறுவதற்கு இப்படிப்பட்ட தீா்மானங்களின் மிரட்டல்கள் உதவியாக இருந்துவிடாதா என்பதே ஒவ்வொரு தமிழனின் அவாவாகும்.

    குட்டையை குழப்பி இலாபம் தேட சிலா் முனைவது வெளிச்சமாகிறது,இதில் இனியொரு எந்தப்பக்கமோ?

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Loading Comments...