வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வருகின்ற மக்களில் சந்தேகத்தின் பேரில் மேலும் 38 சிறுவர்கள் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் வவுனியா நீதிவான் ஏ.ஜி. அலெக்ஸ்ராசா முன்னிலையில் வெள்ளிக்கிழமை ஆஜர் செய்யப்பட்டபோது, இவர்களை புனர்வாழ்வு நிலையத்தில் தடுத்துவைக்குமாறு உத்தரவிடப்பட்டது.
20 சிறுமிகளும் 18 சிறுவர்களுமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
வன்னிப் பகுதியைச் சேர்ந்த நூற்றுக் கணக்கான இளைஞர், யுவதிகள் இதற்கு முன்னரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் 18 வயதுக்கு குறைந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இவர்களுக்கு புனர்வாழ்வு அளிப்பதற்காகவே இவ்வாறு தடுத்துவைக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.







