வடக்கு இங்கிலாந்தில் வீடற்றோர் தொகை 42 விதத்தால் அதிகரித்துள்ளது. மன்செஸ்டர் நகருக்கு அருகாமையில் மணல் கற்களில் அமைக்கப்பட்டுள்ள சிறிய் சுரங்கங்களில் மக்கள் உறங்கும் நிலை உருவாகியுள்ளது என அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு மணல் கற் குகைகளினுள்ளும் குறைந்தபட்சம் நான்கு பேர் உறங்குவதாகச் சொல்லப்படுகிறது. வீடற்றோருக்கான உள்ளூர் தன்னார்வ நிறுவனத்தின் அறிக்கையின் அடிப்படையில் ஒரு நாளைக்கு 140 பேர் வரை உதவி தேடிச் செல்வதாகக் கூறப்படுகிறது.
உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் மூக்கை நுளைத்து மனித உரிமை, ஜனநாயகம் என்ற பெயரில் தலையிட்டு பன்னாட்டு நிறுவனங்களுக்காக யுத்தம் புரியும் பிரித்தானிய அரசு தனது சொந்த நாட்டில் மக்களை மரணத்தின் வாயிலில் நிறுத்திவைத்துள்ளது. மன்செஸ்ர், யோக்செயர் போன்ற பல நகரங்களில் அவலத்துள் வாழும் மக்கள் குறித்து ஊடகங்கள் துயரடைவதில்லை. நவ காலனித்துவ – நிதி மூலதன அரசுகள் ஐரோப்பாவில் மூன்றாமுலக நாடுகளை உருவாக்கிக்கொண்டிருக்கின்றன.









நேர்மையாக உழைத்தாலும் அடிப்படை வசதிகளுக்காக அல்லாடும் மக்களின் அவலம் சொல்லி மாளாது. வீட்டு வசதிகளுக்காக உதவி கோரிச் செல்லும் உழைக்கும் மக்களை ஒரு குடும்பத்தில் எத்தனை பேர் இருந்தாலும் கும்பல் கும்பலாக அறைகளில் அடைத்து துப்பரவற்ற பொது சமையல் இடம் பொது கழிப்பிடம் காற்றே புக முடியாத இருண்ட இடவசதியற்ற அறைகள் என தற்கொலை செய்யத் தூண்டும் இடங்களில்எறிந்து விடுகிறார்கள். கட்டட உரிமையாளர்களுக்கோ பொதுமக்களின் பணத்தை வாரி வழங்கி முதலாளிகளை எந்த சிரமமும் இன்றி வாழவைக்கிறார்கள்.
We do make a differance in lot of hings in England too.
“நவ காலனித்துவ – நிதி மூலதன அரசுகள் ஐரோப்பாவில் மூன்றாமுலக நாடுகளை உருவாக்கிக்கொண்டிருக்கின்றன.” – இப்ப உங்களுக்கு திருப்திதானே ?