வடக்கிழக்கு இராணுத்தின் கட்டுப்பாட்ட்லிலுள்ள திறந்தவெளிச் சிறைச்சாலை என்பது வெளிப்படை. இந்த நிலையில் அங்கு ஜனநாயஜ ஆட்சி நிலவுவதாக வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். அதேவேளை, வடபகுதியில் நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தல் இடம்பெறுவதற்கான சூழ்நிலை இல்லாது போயுள்ளதோடு, அரசாங்கத்தின் அடக்குறை தலைதூக்கி சிவில் நிர்வாகம் அற்றுப் போயுள்ளது என்று ஜே.வி.பி.யின் பிரசாரச் செயலாளரும் எம்.பி. யுமான விஜித ஹேரத் குற்றஞ்சாட்டினார்.
நாட்டில் ““அரசாங்கம்” என்பது பெயரளவில் மட்டுமே உள்ளதே தவிர, செயலில் எதுவும் இல்லையென்றும் அவர் தெரிவித்தார்.
ஜே.வி.பி.யின் தலைமையகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்தபோதே விஜித ஹேரத் எம்.பி. மேற்கண்டவாறு குற்றஞ்சாட்டியுள்ளார்.
இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
வடக்கில், உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் வீட்டில் நாய் கழுத்து வெட்டப்பட்டு வீசப்பட்டுள்ளது.
அத்தோடு வேட்பாளர்களின் வீடுகளில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
எமது ஆதரவாளர்கள் கிளிநொச்சியில் பிரசாரங்களை நடத்தியபோது சிறு இராணுவக் குழுவினரால் தடுக்கப்பட்டுள்ளனர்.
சுதந்திரமாக பிரசாரங்களை முன்னெடுக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.
வட பகுதிக்கு அண்மையில் கொழும்பிலிருந்து சென்ற அரச தொலைக்காட்சி குழுவினர் அங்குள்ள தாய்மாரை அழைத்து அரசாங்கத்தின் அபிவிருத்திகள் தொடர்பாக பேட்டி எடுத்துள்ளனர்.
ஆனால் இப்பேட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தாய்மார் தாம் அனுபவிக்கும் துன்பங்கள் தொடர்பிலும் காணாமல் போன உறவுகள் தொடர்பாகவும் கண்ணீர் மல்க கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். இதனால் ஏமாந்து போன படப்பிடிப்புக் குழுவினர் ஏமாற்றத்துடன் கொழும்பு திரும்பியுள்ளனர்.
வடக்கில் இன்று சிவில் நிர்வாகம் இல்லை. அரசாங்கத்தின் அடக்குமுறையே தலைதூக்கியுள்ளது. நாட்டில் இன்று அரசாங்கம் என்பது பெயரளவிலேயே உள்ளது. செயலில் எதுவும் இல்லை. மக்கள் பிரச்சினைகளை அடையாளம் கண்டு தீர்வுகளை வழங்க முடியாமல் உள்ளது.
யுத்தம் முடியட்டும், சம்பள உயர்வை வழங்குகிறோம். வாழ்க்கைச் செலவை குறைப்போம். வரிகளை குறைப்போம், மக்கள் மீது சுமைகளை சுமத்தமாட்டோமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் மக்களுக்கு அறிவித்தது.
இன்று யுத்தம் முடிந்து இரண்டு வருடங்கள் கடந்து விட்டது. எதுவுமே நிறைவேற்றப்படவில்லை.
கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடந்து முடிந்த பின்னர் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டது.
இந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல்களுக்கு பின்னரும் விலையேற்றங்கள் இடம்பெறும். எதுவிதமான நிர்வாகத் திறனும் இல்லாத மக்கள் மீது சுமைகளை அதிகரிக்கும் இந்த அரசாங்கத்தை மக்கள் தேர்தலில் தோல்வியடையச் செய்ய வேண்டும் என்றார்.








சொல்லப்படும் செய்திகள் அனைத்துமே “அவர்கள்” காதுகளில் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.அது ஆளும் தரப்பாக இருந்தாலென்ன,எதித் தரப்பாக இருந்தாலென்ன.சட்டத்துக்குப் புறம்பாக “எல்லாமே” செய்து விட்டோமே,இது என்ன பிசுக்கோத்து???????????????