லைக்கா மோபைல் நிறுவனத்தின் உரிமையாளரும். சிறீலங்கன் ஏர்லைன்ஸ் இன் பிரதான முகவரான லைக்கா பிளை, லைக்கா புரடக்ஷன் ஆகியவற்றை நடத்திவருபவருமான சுபாஸ்கரன் அல்லிராஜா இலங்கை விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டதாகவும் பின்னர் விடுதலை செய்யப்பட்டதாகவும் தமிழ் ஊடக மாபியாக்கள் கட்டுக்கதை ஒன்றை பரப்பினர். அதிர்வு இணையம், தீபம் தொலைக்காட்சி, தமிழ்வின் இணையம் ஆகியவற்றில் இப் பொய்ச் செய்தி பரப்பப்பட்ட, சீமான் கும்பல் அதனை உள்வாங்கிப் பிரசாரத்தில் இறங்கியது. கைதான செய்திய ஐரோப்பிய நேரம் இன்று மாலைவரை பரப்பிய இந்த ஊடகங்கள் இறுதியில் எதிர்பார்த்தபடி சுபாஸ்கரன் விடுதலையானார் என்ற செய்தியையும் வெளியிட்டன.
நேர்த்தியாகத் திட்டமிடப்பட்டு இச் செய்தி புலம்பெயர் நாடுகளிலும் தமிழகத்திலும் பரப்பப்பட்ட போதிலும் இறுதியில் மிகப்பெரும் ‘சொதப்பலில்’ முடிவுற்றது.
வெளியான செய்தியின் சாரம்:
‘மாலை தீவிலிருந்து லண்டன் விமான நிலையத்தை நோக்கிப் பயணம் செய்த லண்டனைச் சேர்ந்த பணக்காரர்களில் ஒருவரான சுபாஸ்கரனின் விமானம் கொழும்பு விமான நிலையத்தில் தரித்து நின்றது. விமானத்தினுள் நுளைந்த இலங்கை அரச உளவுப்படை சுபாஸ்கரனையும் உதவியாளரையும் கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றது.’
திருட்டுச் செய்தியின் ‘சொதப்பல்’ இதுதான்:
விமானம் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்குச் செல்லும் போது இடையில் தரித்து நிற்கும் மூன்றாவது நாட்டின் இடைத்தங்கல் -Transit- பகுதி அந்த மூன்றாவது நாட்டின் சட்டத்திற்கு உட்பட்டதல்ல. அதாவது, மாலைதீவிலிருந்து பிரித்தானியா சென்ற விமானம் இலங்கையில் தரித்து நிற்கும் இடைத்தங்கல் பகுதி இலங்கை அரசின் சட்டத்திற்கு உட்பட்டதல்ல. அங்கு சர்வதேசச் சட்டத்திற்க்கு புறம்பன விடையங்களான கடவுச்சீட்டு மாறாட்டம்,போதைப்பொருட் கடத்தல், வெடிகுண்டுகளைப் பயன்படுத்தல் போன்ற விடையங்கள் மட்டுமே ஆராயப்படலாம். அதிலும் சுபாஸ்கரன் விமானத்தின் உள்ளே வைத்தே கைது செய்யப்பட்டார் என்கிறது பொய்ச் செய்தி. லண்டன் மில்லியனேரை விமானத்தினுள் வைத்துக் கைது செய்து தடுத்து வைத்தமைக்காக இலங்கை அரசிடம் பில்லியன் பவுண்ஸ்கள் நட்டைஈடு கோரலாம். அதுமட்டுமன்றி சர்வதேசச் சட்டங்களுக்குள் இலங்கை அரச விமானச் சேவைத் துறையைச் சிக்கவைக்கலாம்.
பிரித்தானியாவில் ஆளும் கட்சியின் முதல் பத்து நிதி வழங்குனர்களில் ஒருவரும், ராஜபக்ச குடும்பத்தின் வியாபாரப் பங்காளியுமான சுபாஸ்கரனை இலங்கை அரசு கைது செய்தது என்று அப்பாவி மக்களின் காதில் பூச்சுற்றுகிறார்கள். விட்டால் மகிந்த ராஜபக்ச வெள்ளவத்தைப் போலிசாரால் கைது செய்யப்பட்டு அண்ராயரோடு அடைக்கப்பட்டுள்ளார் என்று நாளை செய்தி வெளியிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
ஊடக மாபியாக்கள் வெளியிட்ட செய்தியில்,
ஐரோப்பிய ஒன்றியன் புலிகளின் தடை நீக்கியது தொடர்பாக சுபாஸ்கரனிடம் இலங்கை அரசு கேள்வி எழுப்பியதாகக் கூறுகின்றன. Transit பகுதியில் தரித்து நின்ற விமானத்திற்குள் நுளைந்து ஒருவரை இலங்கை அரச விவாகரம் தொடர்பாகக் கேள்வியெழுப்ப முடியாது.
அப்பாவி மக்களை மந்தைகள் கூட்டம் என்று எண்ணிக்கொள்ளும் இந்த ஊடக வியாபாரிகளின் அருவருக்கத்தக்க பண வெறி லைக்காவைப் புனிதப்படுத்தும் முயற்சியில் இறங்கியிருக்கிறது.
பொய்ச் செய்தியைப் பரப்பிய ஊடகங்கள்:
1. அதிர்வு:
இலாபத்தை மட்டுமே நோக்கமாகக்கொண்டியங்கும் புலம்பெயர் ஊடகங்களில் அதிர்வு பிரதானமானது. மகிந்த ராஜபகசவைத் தலைவராக்கும் நோக்குடன் இலங்கையில் நடைபெற்ற கொமன்வெல்த் மாநாட்டிற்கு கோல்டன் ஸ்பொன்சராக லைக்கா பெரும்தொகைப் பணத்தை வாரி வழங்கிய காலப்பகுதியிலேயே சிங்கக்கொடியோடு லைக்கா விளம்பரத்தைப் பிரசுரித்த அதிர்வு அந்த நிறுவனத்திற்கு ஆதரவான செய்திகளையும் வெளியிட்டுவந்தது.
தென்னிந்தியாவில் கத்தி படம் வெளியிடப்படுவதற்கு முன்பாகவே லைக்காவின் ஊதாங்குழல் போன்று செயற்பட்ட இந்த இணையம் புலம்பெயர் போலித் தேசியவாதிகளின் ஆதரவைப் பெற்றது.
2.தமிழ்வின் இணையம்:
‘மகிந்த ராஜபக்ச அவர்கள் மக்கள் நலத் திட்டங்களை ஆரம்பித்தார்’ என்று ஆரம்பிக்கும் இனக்கொலை ஆதரவுச் செய்திகளையும் எந்தக் கூச்சமும் இன்றி வெளியிடும் தமிழ்வின்னைப் பொறுத்தவரை செய்தி என்பது காசு,பணம், துட்டு, மணிமணி….! இலங்கை அரசாங்கத்துடன் வியாபாரம் செய்வதற்காகவும், பிரித்தானியாவில் வரிகட்டாமல் தப்பித்துக்கொள்ளவும் லைக்கா இலங்கையில் வீசும் எலும்புத்துண்டுகளை சேவை என்று செய்தியும் கட்டுரையும் வெளியிட்ட தமிழ்வின் ஒடுக்கப்படும் சமூகத்தின் சாபக்கேடு.
3.தீபம் தொலைக்காட்சி:
ஏற்கனவே லைக்கா-லிபாரா மோதலில் லிபாரவோடு முரண்பட்டுக்கொண்டு லைக்கா விளம்பரங்களில் செயற்பட்டுவந்த தீபம் தொலைக்காட்சிக்கு ஊடகத் துறை என்பது வியாபாரத்தைத் தவிர வேறு ஒன்றுமில்லை. ஊடக தர்மம் என்ற அடிப்படை வரைபுகளைகளிருந்து மக்கள் சார்பு நிலை என்ற அனைத்தையும் பணத்தின் ஊடாகவே அணுகும் தீபம் தொலைக்காட்சி லைக்காவைப் புனிதப்படுத்த விரும்பியது வியப்பானதல்ல.
அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக இடைவெளியின்றிச் சூறையாடப்படும் ஈழத் தமிழத் தேசிய இனத்தின் மரண ஓலத்தைக்கூடத் தமது பிழைப்பிற்காகப் பயன்படுத்தும் இவர்கள் இனக்கொலையாளி ராஜபக்சவிற்கு எவ்வகையிலும் சளைத்தவர்கள் அல்ல. பச்சிழம் குழந்தைகளும், சிசுக்களைச் சுமந்த கர்ப்பிணைத் தாய்மார்களும். வரலாற்றின் சோகத்தைச் சுமந்த முதியவர்களும் கொத்துக்கொத்தாகக் கொல்லப்பட்ட போது ராஜபக்சவோடு வியாபாரம் செய்துக்கொண்டிருந்த லைக்காவைப் புனிதப்படுத்தும் இந்த ஊடகங்களிடம் தர்மத்தையும் அறத்தையும் எப்படி எதிர்பார்க்க முடியும். அவர்களைப் பொறுத்தவரை நாளாந்தம் கட்டவிழ்த்துவிடும் ஆயிரம் பொய்களில் இதுவும் ஒன்று. ஒரு வேறுபாடு – இதற்கு மட்டு சற்று அதிகமாகத் துட்டுக் கிடைக்கும். இந்த ஊடகங்களை காணும் மக்கள் அவமானத்தை உணரவேண்டும்.
லைக்கா தொடர்பாக ஊடகங்களில் பேசப்படுவது வெறும் கட்டுக்கதைகள் அல்ல, ஆதாரங்களோடு முன்வைக்கப்படும் ஆவணங்கள்!
லைக்காவை முதலில் அம்பலப்படுத்தியது தமிழ் ஊடகங்கள் அல்ல. ராஜபக்சவால் படுகொலை செய்யப்பட்ட லசந்த விக்கிரமதுங்கவின் ஊடகமான் சண்டே லீடர். அபோதெல்லாம் லைக்காவை யாரும் கண்டுகொண்டதில்லை. லசந்த படுகொலை செய்யப்பட்ட போது லைக்கா-இலங்கை அரசு இணைந்த ஊழலான நூறு மில்லியன் டோலர்கள் வியாபாரம் ஒபந்த இலக்கங்களோடு சண்டேலீடர் வெளிக்கொண்டுவந்திருந்தது.
இனக்கொலை அரசிற்கு உலக அங்கீகாரம் வழங்கும் பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாட்டை இலங்கையில் நடத்த லைக்கா பிரதான நிதிவழங்குனராகச் செயற்பட்டு அதில் கலந்துகொண்ட போது தான் இனியொருவில் ஆரம்பித்து தமிழ் ஊடகப்பரப்பில் லைக்காவின் அரசியல் தலையீடு பேசப்பட்டது. அதுவரை கண்டுகொள்ளப்படாமலிருந்த லைக்காவின் அரசியல் தலையீடு தொடர்பான ஆதரங்கள் பொது நலவாய நாடுகளின் பின்புலத்தில் வெளியாக ஆரம்பித்தன.
இலங்கை அரசுடன் அதுவும் ராஜபக்ச குடும்பத்துடன் இணைந்து நூறு மில்லியன் டொலர் ஊழல், இராணுவ உலங்கு வானூர்தியில் லைக்கா உரிமையாளரின் உலா, கொமன்வெல்த் மாநாட்டில் லைக்காவின் தலையீடு போன்றன ஒரளவாவது மக்களைப் பற்றிச் சிந்திக்கும் ஊடகங்களால் வெளிக்கொண்டுவரப்பட்டன.
முதல் தடவையல்ல…
லைக்காவிற்கும் இனகொலை அரசிற்குமான தொடர்பை மறைப்பதற்கான முயற்சி முன்பும் இதே ஊடகங்களால் முன்னெடுக்கப்பட்டு பின்னர் பிசுப்சுத்துப் போனது. .2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் லைக்காவைப் புனிதப்ப்படுத்தி அந்த நிறுவனம் இலங்கை அரசிற்கு எதிரானது என்ற நாடகத்தை அதிர்வு இணையமும் இலங்கை அரச ஊடகங்களும் இணைந்து நடத்த ஆரம்பித்தன. இச்செய்தியின் பின்னர் லைக்கா மோபைல் நிறுவனம் இலங்கை அரச விருந்தாளிகளாகச் சென்ற நிழல்படங்ள் வெளியானதைத் தொடர்ந்து அந்த நாடகம் தோல்வியில் முடிந்தது. இப்போது தமிழ்வின், தீபம் ஆகியவற்றின் துணையோடு மீண்டும் ஒரு நாடகம் அரங்கேறியுள்ளது.
இலங்கை அரச ஆதரவோடு லைக்காவைப் புனிதப்படுத்தும் அதிர்வு இணையம்
ஒடுக்கப்பட்ட தமிழ்த் தேசிய இனத்தில் கலை, கலாச்சாரம், ஊடகம், அரசியல் என்ற அனைத்துத் தளத்திலும் லைக்கா செயற்படுகிறது. அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்துகொண்ட நிகழ்வும் லைக்காவிம் பணத்திலேயே நடைபெற்றது.
சீமானும் லைக்காவும்:
லைக்கா தொடர்பான இவ்வளவு ஆதாரங்கள் வெளியான பின்பும் அந்த நிறுவனத்திற்கு ஆதரவு தெரிவித்தும் நன்றி தெரிவித்தும் அறிக்கைகள் வெளியிடும் சீமானிற்கு இவையெல்லாம் வெறும் பிழைப்பு மட்டுமே. பிணங்களை வைத்துப் பிழைப்பு நடத்தும் அருவருப்பான அரசியல் நடத்தும் சீமான், ஈழப் போராட்டத்தின் எதிரிகளும் ராஜபக்சவோடு வியாபாரம் நடத்தும் எஸ்.ஆர்.எம். பச்சைமுத்து, லைக்கா சுபாஸ்கரன் ஆகியவர்களின் கூட்டாளி. இவர்களுக்குத் தேசிய முகமூடி அணிவித்து வியாபாரத்தை இணைந்து நடத்தும் சீமான் என்ற அரசியல் கோமாளி ஈழப் போராட்ட அரங்கிலிருந்து அகற்றப்பட வேண்டும்.
சுபாஸ்கரன் கைது என்ற பொய்ச் செய்தி வெளியானதும் சிமானின் வால்கள் முகநூலில் விசிலடிக்க ஆரம்பித்துவிட்டன. ரஜனியையும் விஜையையும் பார்த்தே அரசியல் கற்றுக்கொண்ட இவர்கள், ஈழப் போராட்டம் என்ற சினிமாக் கொட்டகையில் குவாட்டரோடு உட்கார்ந்துகொண்டு விசிலடிப்பதை அரசியல் என்று எண்ணுகிறார்கள். அப்பாவி மக்களின் உயிர்களோடு விளையாடும் இவர்கள் எமக்கு உள்ளிருந்து அதிகாரவர்க்கத்தைப் பலப்படுத்துகிறார்கள்.
சுபாஸ்கரன் கைது உண்மையானால்..
இரும்பைத் தங்கமாக்குதல், செத்தவனை உயிர்ப்பித்தல் போன்ற அற்புதங்களையெல்லாம் நம்பியே வளர்ந்த தமிழ் முட்டாள்களின் உலகம் எண்ணுவது போல மகிந்தவின் நண்பர் சுபாஸ்கரன் ஒருவேளை கைதாகியிருந்தால் என்ற கற்பனை கூடப் பொருந்தவில்லை.
இலங்கை அரசு நடத்தும் சிறீலங்கன் ஏர் லைன்சின் பிரித்தானிய முகவர் லைக்கா நிறுவனம்.
சரி, ராஜபக்சவிற்கும் சுபாசிற்கு ஊடல் என்றால் கூட இந்த நிறுவனத்தை முடக்குவதற்கு ராஜபக்சவிற்கு நாளாகாது. தவிர, லைக்காவிற்கு கொழும்பில் அலுவலகம் உண்டு, அங்கு தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். நூறு மில்லியன் ஊழல் நிறுவனம் இன்னும் இயங்குகிறது. இவற்றையெல்லாம் ராஜபக்ச ஒரு நாளைக்குள் அழிக்க முடியாதா என்ன?
சுபாஸ்கரன் கைதானதாகப் பரப்பப்பட்ட வதந்தி லைக்காவைப் புனிதப்படுத்தவே! தென்னிந்தியாவில் சினிமாத் துறைக்குள் லைக்காவை நிரந்தரமாகப் புகுத்தவும், புலம்பெயர் நாடுகளில் தமிழர்களில் தலையில் மிளகாய் அரைக்கவும் இப் புனிதப்படுத்தல் தேவைப்படுகின்றது. இதற்கு ஊடகங்கள் துணை போகின்றன.
உண்மையை எழுதவேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக இலங்கை பாசிச அரசின் பிடியில் நூற்றுக்கணக்கான ஊடகவியலாளர்கள் சிக்கிச் சிதைந்து போயினர். பலர் கொல்லப்பட்டனர். பலர் மிருகத்தனமாகத் தாக்கப்பட்டனர். பலர் மிரட்டப்பட்ட்டு நாட்டைவிட்டுத் துரத்தப்பட்டனர்.
இவ்வாறனா சூழல் புலம்பெயர் நயவஞ்சக ஊடகவிலாளர்கள் ஈழத் தமிழ்த் தேசிய இனத்தின் சாபக்கேடுகள்.
தொடர்புடைய பதிவுகள்:
பிரபாகரனின் பெயரால் லைக்காவிற்கு நன்றி தெரிவிக்கும் சீமான்
ராஜபக்ச வடைசுட்ட கதையும் லைக்காவும் உணர்வாளர்களும்: அருவன்
லைக்காவின் ஞானம் அறக்கட்டளையின் பின்னணியில்
லைக்கா : குருதிபடிந்த கரங்கள்
இனக்கொலைக்கு பூஜை நடத்திய பௌத்த பிக்குவிற்கு பணம் வழங்கிய லைக்கா
லிபாரா, லைக்காவின் கைகளுக்கு மாறும் தமிழ்த் தேசிய ஊடக வியாபாரம்
லைக்கா லிபாரா போன்ற நிறுவனங்களின் துணையுடன் பண்பாட்டுச் சிதைப்பு
சேரன் நடிக்கும் பிரிவோம் சந்திப்போம்
பொதுநலவாய மாநாடு ஆரம்பம் : இனக்கொலைக்கான ஏகபோக அங்கீகாரம்
இனக்கொலையாளிகளுடன் லைக்கா குழுமம் : ‘தமிழ்த் தேசியவாதிகள்’ தலைமறைவு
வியாபாரி! : விஜி.
‘ஒரு’ பேப்பர் மீது தாக்குதல் : அருவருப்பான வியாபார வெறி
Tory donor Lycamobile linked to Sri Lankan President’s family businesses
லைக்கா, ஐங்கரன் குழுமங்கள் இலங்கை அரச விமனப்படை விமானத்தில்
http://www.eelamdaily.com/news/11847/57/.aspx
http://www.huffingtonpost.co.u k/2013/11/18/sri-lanka-david-c ameron_n_4296542.html
http://www.dailynews.lk/local/ cameron-tories-funded-big-dias pora
பணம் பத்தும் செய்யும்!
பாருங்கள் தமிழ் மக்களே நான் ராஐபக்ஸவின் நண்பனாக இருந்தால் இப்படி கைது செய்வாா்களா ஆகவே எனக்கும் ராஐபக்சாக்களுக்கும் எந்தவித தொடா்பும் கிடையாது நீங்கள் அறிந்தவைகள் யாவும் சுத்தப்பொய்.
இந்த நாடகத்தில் பங்கேற்ற மேன்மைதங்கிய ஐனாதிபதி மற்றும் தமிழன் பெயாில் பிழைப்பு நடத்தும் தரகு மீடியாக்களுக்கும் எனது நன்றிகள்
இப்படிக்கு சுபாஸ்கரன்
What are you trying to say Kumar. These are case by case incidences. The system is moving but slow after the war ended in 2009.That is all to it.
சுபாஸை குறை சொல்பவர்கள் உண்மையான தமிழ் தேசியவாதிகள் கிடையாது. சுபாஸ் என்னும் தனி மனிதன் தன் தனி ஒருவனின் முயற்சியாலேயே லைக்கா நிறுவனத்தை நிறுவி இன்று நீங்கள் பார்த்து வயிறு எரியும் நிறுவனமாக மாற்றியிருகின்றார். இந்த அபார வளற்சியை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் போடும் கூச்சலே இந்த ராஜபஷ சுபாஸ் கூட்டுறவு. இதில் போதாக்குறைக்கு இலங்கை தமிழனை வைத்து அரசியல் நடத்தும் இந்திய வியாபாரிகளின் குசும்பு ஓலம் தாங்க முடியாதுள்ளாது. சரி ஒரு பேச்சுக்கு சுபாஸ் இலங்கை ஜனாதிபதியோடு வியாபார உறவு வைத்து கொண்டால் இதில் என்ன தப்பு இருகின்றது? நீங்கள் எல்லோரும் 1995 இல் வாக்கு போட்டு தானே ஜனாதிபதி ஆக்கினீர்கள்? அது போக இப்போ யாழ்ப்பாணத்தில் புகையிரத நிலையம் திறந்த போது மகிந்த வாறார் என்றதும் அங்கு ஓடிப் போய் மகிந்தவை பார்த்து ஜெயவேவ சொன்னதும் இதே தமிழ் மக்கள் தானே? வடக்கு கிழக்கிலே அரச வேலை வேண்ண்டும் என்றால் தமிழ் மாந்தருக்கு டக்கிளஸ், மகிந்த உதவி சிபாரிசு வேண்டும் பின் எல்லாம் முடிந்ததும் பழைய குருடி கதவை திறவடி. இது போல் இன்னும் நிறைய எங்கள் தமிழ் மாந்தரின் கைங்கரியங்கள் சொல்லலாம். இவை எல்லாம் இந்த தமிழ் தேசியவாதிகளின் கண்களுக்கு தெரிவதில்லை. பாவம் இந்த சுபாசு.. வியாபார போட்டி காரணமாக வியாபாரத்தில் ஜெயிக்க முடியாத வியாபார எதிகளின் பசப்பு பரப்புரைக்கு இந்த தமிழ் உணர்வு மந்தைகள் எல்லாம் எடுபட்டு போனது தான் பெரும் கேலி கூத்து.. உணர்வாளர்களே உங்கள் நெஞ்சில் கை வைத்து சொல்லுங்கள் நீங்கள் உண்மைழில் தமிழ் உணர்வால் சுபாசை எதிர்க்கின்றீர்களா? அல்லது அவரின் அபார வளற்சியை பொறுக்க முடியாமல் எரிச்சலில் அவரை எதிர்க்கின்றீர்களா? நீங்கள் கத்தி படம் பார்க்கவில்லையா? நான் அடிச்ச்சு சொல்கின்றேன் நெற்றிலையேனும் களவாய் என்றாலும் பார்த்திருப்பீர்கள். சுபாஸ் வெளிவிடும் லைக்கா சிம் மூலம் இலங்கைக்கு கதைப்பீர்கள் அப்போ அவர் துரோகி கிடையாது… ஆனால் அவரின் இன்னொரு வியாபாரம் தமிழ் திரை உலகு அங்கு படம் எடுத்தால் உடன் பைஸ்கரிப்பு? என்னடா சாமி உங்கள் மனசு? வியாபாரத்தில் ஜெயிக்க முடியாத சில ஜென்மங்களும், சுபாசின் வளர்ச்சியை கண்டு பொறுக்க முடியாத சில நல்ல மனசுக்காரரின் சூழ்ச்சி இப்போ ஓ..கோ என வேலை செய்யுது… என்ன ஜென்மங்கள் நீங்கள்? நீங்கள் சுயமாய் சிந்திக்கவே மாட்டீர்களா?
// நீங்கள் எல்லோரும் 1995 இல் வாக்கு போட்டு தானே ஜனாதிபதி ஆக்கினீர்கள்?
தமிழரில் பெரும்பான்மையானோர் வாக்கு போடாமல் தான் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதி ஆனதைப் பற்றி 2005 -ஐப் பற்றி குழப்பமடையாதே.
பிறகு மற்றோரைக் குழப்பும் வித்தையில்
// சுபாஸ் வெளிவிடும் லைக்கா சிம் மூலம் இலங்கைக்கு கதைப்பீர்கள் அப்போ அவர் துரோகி கிடையாது
??
அதுதாண்டா இனியொருவினால் தெட்டத்தெளிவாக்கப்படுகிறதே. திருப்பித் திருப்பி வாசித்து அறி.
ஆனந்தகிருஷ்ணன் போன்ற பல்தேசிய தொலைத்தொடர்பு வியாபார மூலதாரிகளுக்கு ஈழத்தமிழர் நன்றி தெரிவிக்க வெண்டுமென்றால் ஒருவகையில் உன் அலம்பலை ஏற்கலாம். அதற்கு மேல் வியாபாரப் போட்டிதான் காரணம் என்று கூட எழுதிற்று முழுப் பூசனிக்காயயுமல்லவா புதைக்கப் பார்க்கிறாய்!
##மிழரில் பெரும்பான்மையானோர் வாக்கு போடாமல் தான் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதி ஆனதைப் பற்றி 2005 -ஐப் பற்றி குழப்பமடையாதே.##
தமிழ் மகக்ளில் பெரும்பானமையானவர்கள் வாக்களிக்கவில்லைத்தான் .
ஆனால் ராஜபக்சவிற்கு விழுந்த வாக்குகளில் கணிசமான தமிழ் வாக்குகள் உண்டென்பதை மறுக்க முடியுமா ?
லைக்கா சிம்மை பாவித்து இலங்கைக்கு பேசலாம் தப்பில்லை .
ஆனால் தமிழ்நாட்டில் படம் எடுத்தால் மட்டும் ஏன் எதிர்ப்பு என்ற கேள்விக்கு சரியான விளக்கம் இல்லை
ராஜபக்ச டிரான் அலெஸ்-ஊடாக புலிகளுக்கு காசு கொடுத்தது பற்றி கதைக்கத் தொடங்கிய ஸ்ரீபதி சூரியாராய்ச்சி கொலை செய்யப்பட்டதாக ரணில் விக்கிரமசிங்க சில நாட்களுக்குள் முழங்கியதைப் பற்றி ஆராய்வதை விட்டு வாக்குப் போக்குகளை அலசுவது வீண் விரயம்.
தமிழகமே சினிமாப் போதைக் குப்பையில் சில தசாப்தங்களாக மூழ்கியிருப்பதே தப்பு. அதற்குள் லைக்காவின் குழப்பவாதம் ஒன்றும் பெரிய தவறில்லை.
ஆனால் ராஜபக்ச குடுபம்பத்தின் ஜனாதிபதி ஆனதன் பின்னரான பெருங்களவுகளில் ஒன்றான ஸ்கைநெட் – ஸ்ரீலங்கா-டெலிகொம் சுத்துமாத்தில் லைக்காவின் இரு முக்கியஸ்தர்கள் (சுபாஸ்கன் அல்லாதவர்கள்) நேரடி பங்கு வகித்ததான குற்றச் சாட்டை ஒப்புக் கொள்லாமல் சுற்றிச் சுழன்று வாறது போறது எல்லத்துக்கும் கராட்டே அடித்துக் கொண்டிருப்பது ஏளனத்துக்குரியது.
மூடர் லைக்கா சிம் பாவனை மட்டுமல்ல லைக்கா என்று பச்சையும் குத்தித் திரியலாம். அதற்கும் தற்போது கிழம்பியுள்ள சர்ச்சையின் அடித்தளத்திற்கும் தொடர்பு எற்படுத்த முயற்சிப்பது உண்மையை மறைக்கும் முயற்சி.
பயங்கரவாத்மென்பது பணத்துடன் ஒன்றாக இணந்துள்ளது.
தமிழரின் உருமைக்கான போராட்டம் பயங்கரவாதமாக்கப்பட்டது
முதலில் புலம்பெயர் தமிழரின் பணப்புழக்கத்தினால். அதன்பின்பே இலங்கையில் நடைபெற்ர புலிகளின் செயல்கள்
இலங்கையில் விடுதலைப்போர் தமிழர் பெயரில்நடக்கும்போது
போரை நடத்தும் அரச தரப்பினரும் தமிழர்மத்தியில்
வளரும் தமிழரின் நிறுவனமும் ஒன்றாக இணந்து
மோசடிகளில் ஈடுபட்டிருந்தால் அவர்களில்
ஒருவரை சிங்கள்வர் ஆனபடியால் தமிழரை கொன்றகொலையாளியென்பதும் மற்ற பங்காளி தமிழராக
இருப்பதால் அவரை சிறந்த தொழிலதிபர் என போற்றுவதும்
எதற்காக?
தன் குடும்ப சுகத்தையும் சொத்துக்களையும் காப்பதற்கு
இராணுவத்தினதும் மக்களினதும் அழிவினை பொருட்படுத்தாமல்
சுய நலநோக்கொடு செயற்பட்டவர்கழுடன் சிலதமிழர்
வர்த்தக உறவுகளை தமிழரின் இரத்தம் ஆறாக வன்னியில்
ஓடும்போதே வைத்திருந்துள்ளார்கள் .
இவர்களை ஏன் எல்லோரையும் துரோகிப்பட்டம்
சூட்டியவ்ர்களால் 30 ஆண்டுகளாக கண்டுகொள்ளாமல்
இருக்க முடிந்த்து.?
அநுராதபுரம் விமானக் கட்டளைத் தளத் தாக்குதல் அநுராதபுரம் அரசமரத்தடி படுகொலைகளுக்கு பாவ விமோசனம் தேடுவது. அரசமரத்தடி பட்கொலைகளுக்கு உந்து சக்தி புலத்துத் தமிழர் இல்லை – உளவுப்பிரிவுப் போர்வையில் பிராந்திய பார்ப்பணியம்.
நீங்கள் சுட்டிக்காட்டும் ஏனைய விடயங்கள் முற்றிலும் சரியானவை.
றோ – தெரியாமலா லைக்கா படந் தயாரிப்பது? சுப்பிரமணியன் சுவாமி இப்போ 2 G அலைவரிசை துப்பறிவு நாடகத்தை சிறிது காலம் குறைத்தே நடாத்துவான். சீன அரச கோபொரேட் உளவுத்துறையும் தொலைதொடர்பு வியாபரதினூடு இதற்குள் சிக்குண்ட மனித அவலத்திற்கு ஒரு முக்கிய காரணி.
சகோதரரே உங்கள் மனக்குமுறல் எனக்கு புரிகின்றது. என்ன செய்ய உங்களுக்கு திறமை இல்லை. நீங்கள் பிச்சை எடுகிண்றீர்கள். திறமை உள்ளவன் முன்னேறுகின்றான்.சொந்த பெயர் சொல்ல துணிவில்லாத நீர் எல்லாம் ஒரு ஆம்பிளை?
பிறரை ஏமாற்ரவும் கொள்ளையடிக்கவும் ஓர் இனத்தின்
அழிவில் தம்து வாழ்வை மேமபடுத்தவும் கூட் ஒருவரிற்கு திறமை
தேவைதான்
சுபாஸ் வளந்தால் எமக்கென்ன? அவரை மகிந்தா அரஸ்ட் பண்ணினால் எமக்கென்ன? அவர் ஈழப்போராட்டத்திற்கு மஞ்சள் அரைத்துப் பணி புரிந்தாரா?
தமிழ் அகதிகளில் இவா் மட்டுமா கோடீஸ்வரா் நிறையப்போ் உள்ளனா் அவா்கள் எல்லோரையும்பற்றி நாம் கதைக்கின்றோமா இல்லையே இவரைப்பற்றி கதைப்பதற்கு இவரே காரணம் இனக்கொலை புாிந்த கூட்டத்துடன் அந்த இரத்தவடு காயும் முன்பே ஒரு அகதி அந்தக்கூட்டத்திற்கு ஆதரவளிப்பதன் தாக்கத்தை உம்மால் புாிந்து கொள்ள வக்கில்லாவிட்டால் பேசாதிருங்கள் நீங்கள் ஒரு விதமான அடிமை விசுவாச மனநிலை கொண்டவா். லைக்காவின் சேவையை நாங்கள் பணம் கொடுத்துத்தான் வாங்குகிறோம் என்பதை மறந்துவிடவேண்டாம்
எத்தனை தடவைகள் இந்த இணையத்தில் நியாயங்களை எழுதினாலும் செக்கிழுக்கும் மாடுகள் போலவே மறுபடியும் மறுபடியும் அதே இடத்தில் வந்து நின்று கேள்வி கேட்கும் இந்த கூட்டம் எப்போதுதான் மாறப்போகின்றதோ தொியவில்லை.
குமாரு இவர் மட்டுமல்ல இலங்கையில் வியாபாரம் செய்யும் அனைவருமே மகிந்தருக்கு சலாம் போட்டு அவங்ககூட பங்கு போட்டுத்தான் பிசினஸ் பண்றாங்க. சும்மா இவங்களை மட்டும் தெரிந்தெடுத்து உங்க வயித்தெர்ச்சல இங்க கொட்டிக்க வேண்டாம்.
ஆனால் அக்களவுகளை மறுப்பது மட்டுமல்ல வியாபாரப் போட்டி, விழல் அலம்பல், வயிற்று எரிச்சல்!, தேசியத்துக்கு எதிரானது, ஈழத் தமிழரின் அபிவிருத்திப் ‘பணிகளுக்கு’ ஆப்பு வைப்பது என ஒருவனாவது பெரும் பொய்கள் சொல்ல இவ்வளவு துணிந்தது உண்டா?
Tell me one business that doesn’t do it. I think it is here in Inioru there was a link to the criminality of one big oil giant that publicizes its clean water charity project in Africa to its investors and the public but in reality there is no clean water flowing for the people there. I know of expat ( and local ) Tamils doing business in SL who will employ Singhalese ( and sometimes Sinhala speaking Muslims ) but not Tamils so that they do not have to identify themselves with the Tamils. There are numerous examples like this. Nine out of ten businesses started fail in general and the ones that survive cannot be there if they have tried to be honest in every respect of the word honesty. This applies to some of the big businesses too. In accounting they say there are three books of accounts these companies carry, one is for the tax man, the other is for the investor and the last one is the real one. Guys you have to get real about it. If at all start your own phone card company from the scratch and try to beat them. If you don’t have the will to do it then don’t grumble here. Why are these people successful? It because others did not want to do this, it was too little or below their expectations to do it. With all the hard work and sacrifices when they succeed we start picking on them. I will give another example here. The Patels are successful in Motel industry in the US. One day I asked an American man whom I met why it is so. He said it is because the Americans thought it is below their expectations to own such businesses ( this includes gas stations, ice cream shops and so on. When you start a motel you and your family are the managers, the cleaners, the cooks, the drivers and everything else that goes with it. Now when you look they not only own motels they own big name hotels in big cities in the US. Another older Patel man told me that he felt proud about the SL men and women who run grocery stores in London. He said this is what the Patels did before they succeeded in it and moved on the other larger money making concerns. We can go on with this in an endless loop but it doesn’t benefit the people you care about.
That is right Sutharsan. 1952. The Rajapakse Family has a right to a legacy. It will take some more time for the Green to mount a good opposition. Too much indulgence in the War Victory. That actually belongs to a lot of people.
செய்தி பிழை என்பதற்கு உங்களிடமும் சான்றுகள் இல்லை. லைக்கா வை கண்ணை மூடிக்கொண்டு எதிர்ப்பதில் இனியொழு இணையதளம் முன்வரிசையில்.
தமிழீழவிடுதலைப்புலிகளிற்கும் பிரபாகரனிற்கும் உலகில் தமிழ்
எவ்வளவு ஆதரவு கொடுத்தார்கள். அரச கெலிகொப்டர்கழும் அவ்ர்களை
ஏற்ரி இறக்கியது.. இறுதியில் நடந்தது என்ன?
அதே பின்னணி தான் இந்த மாபியாக் கூட்டம். பொறுத்திருந்து பார்ப்போம்
இவர்களிற்காக பேச யாருமே இல்லாத காலமும் வரும்.
சிறப்பான ஒரு பதிவு.
ரணில் விக்கிரமசிங்க ஊழல் அரசியல் உட்கொலை என தேர்தலை முன்னிட்டு கத்தத் தொடங்கியுள்ள இக் காலகட்டத்தில் விமான இறக்கத்தின் பின்னர் இரண்டு அடிகளும் போடப்பட்டு லண்டனில் தாலாட்டு வரவேற்புக்கு எப்படி நாடகமாட வேண்டும் என்ற அறிவுறுத்தலும் ஊட்டப் பட்டிருக்காலாமல்லவா?
// நூறு மில்லியன் ஊழல் நிறுவனம் இன்னும் இயங்குகிறது
ஸ்கைநெட் நிறுவனம் இப்போ 2G அலைவரிசை ஊழலில் முக்கிய புள்ளியாக குற்றங்சுமத்தப்பட்டிருக்கும் தொலைத்தொடர்பு தாதா ஆனந்தகிருஷ்ணன் -இன் கட்டுப்பாட்டில் ஸ்ரீலங்கா டெலிகொம்-இன் ஒரு முக்கிய பாகமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
அண்மைக்காலங்களில் ஸ்ரீலங்கா டெலிகொம்-இன் இணையதளத்திலிருந்தான ஒரேயொரு இணைய இணிப்புத் துண்டிப்பு ராஜபக்ச-இன் மைத்துனன் ஹிமால் ஹெட்டியாராட்சி தலைமை தாங்கும் ஸ்கைநெட் நிறுவனத்தை மறைப்பதற்கே என்பதையும் கவனத்தில் எடுக்கவும்.
ஆரதாரம்:
http://www.slt.lk/content/sky-network-private-limited-launches-skymax-first-ever-wimax-16e-broadband-service-sri-lan-0
http://www.slt.lk/about-us/profile/subsidaries
Sky Network (Pvt.) Ltd
1st Floor,OTS Building,
Sri Lanka Telecom Headquarters,
Lotus Road,
Colombo 01.
+94 11-2449477
நல்லதொரு நாடகம்.
கத்தி படம் வெற்றிபெற்றதனைத்தொடர்ந்து நாடக அரங்கேற்றம்.
(வடிவேலு பாணியில) நானும் ராசபக்ச எதிர்ப்பாளன்தான், நானும் ராசபக்ச எதிர்ப்பாளன்தான்.
லைகா சுபாஸ்கரன் கைது செய்தி
ஆதவன் ரிவியில் ஏன் இல்லை?
லைகா சுபாஸ்கரன் கைதாகி விடுதலை என்ற செய்தி வெளிவந்ததுமே வழக்கம்போல கொப்பி அன் பேஸ்ற் ஊடகங்கள் எவ்வித தயக்கமும் இன்றி அந்தச் செய்தியை பிரசுரித்தன. சீமான் போன்ற தமிழ்உணர்வாளர்களின் லைகா ஆதரவு பிரச்சாரத்தை தமிழகத்தில் கொண்டுசெல்ல இது போன்ற செய்தி அவர்களுக்கு தேவைப்பட்டதால் அவர்களும் அதனை தலையில்வைத்து கொண்டாடிக்கொண்டிருக்கின்றனர்.
ஆனால் இப்படி நடந்திருக்க முடியுமா என்பதை பல்வேறு ஆதாரங்களுடனும் நியாயங்களுடனும் சில ஊடகங்கள் முன்வைத்து லைகாவின் கைது நாடகத்தை வெளிச்சம் போட்டுக்காட்டின.
லைகா கைது ஒரு நாடகம்தான் என்பதை அறிய அதிகம் போவான் ஏன்? கொழும்பில் பாரிய அலுவலகத்துடன் சில பத்து ஊடகவியலாளர்களுடன் இயங்கும் ஆதவன் ரிவி ஏன் அந்தச் செய்தியைப் போடவில்லை?. இன்று யாழ்ப்பாணத்தில் கோத்தபாயாவின் டான் ரிவியைத் தவிர வேறு எந்த தொலைக்கட்சியும் இதுவரை பகிரங்கமாக இயங்கவில்லை. புலம்பெயர் நாடுகளிலுள்ள ஊடகங்கள் தமக்கென ஊடகவியலாளர்களை இரகசியமாகவே பணியில் அமர்த்தியுள்ளனர். ஆனால் லைகாவின் ஆதவன் ரிவி இன்று கொழும்பில் மட்டுமல்ல, யாழ்ப்பாணத்திலும் மிக சாதாரணமாக இயங்குகின்றது என்றால் அவர்கள் யார் என்பதற்கு வேறு விளக்கம் தேவையாக இருக்காது.
இன்று லைகா நடாத்தும் ஆர்த்தி சேவையில் இலங்கையிலிருந்து அரசின் தொலைக்காட்சிகளும் கோத்தபாயாவின் டான் ரிவியும் மட்டுமே ஒளிபரப்பாகின்றது.
லைகா யார் என்பதற்கு இதற்கு மேலும் சத்திரசிகிச்சை தேவையா என்ன?
பறை பிளேயர்,
அவன் இவன் என்று ஒருமையில் அலம்புகிறீர்கள். உணர்ச்சிவசப்படத் தேவையில்லை.நீங்கள் எழுதியதில் பாதி தெளிவில்லை.
மேலே குறிப்பிட்ட ஸ்ரீலங்கா டெலிகொம்-இன் துண்டிக்கப்பட்ட இணைய இணைப்பு ஒளிப்பது இது :-
https://archive.today/Y1Al3
ஸ்கைநெட் நிறுவனத்தின் தற்போதைய நிர்வாகிகள்
Our Board of Directors (31-10-2014)
Mr. Nimal Welgama – Chairman <–இன்னொரு ஆட்டப்பொம்மை
Mr. Himal Hettiarachchi <————ராஜபக்சவின் மைத்துனன் (அக்கா மகன்)
Mr. Lawrence Paratz <—————-ஆனந்த கிருஷ்ணனின் இன்னொரு அடியாள்
ராஜபக்ச குடும்பத்தால் முடக்கப்பட முன்னர் சண்டேலீடர் வெளியிட்ட இதே பட்டியலில் ஸ்கைநெட் நிறுவனத்தின் முன்னாள் (2008 அளவில்) நிர்வாகிகள்
Mr. Himal Hettiarachchi <————ராஜபக்சவின் மைத்துனன் (அக்கா மகன்)
Chris Tooley க்ரிஸ் டூலி <————–லைக்கா-இனது தற்போதைய தலைமை அதிகாரி
Milind Kangle மிலின்ட் கங்லே <—— லைக்கா-இனது முன்னாள் (2014 வரை) தலைமை அதிகாரி
க்ரிஸ் டூலி-உம் மிலின்ட் கங்லே-உம் ச்கைநெட் களவில் ஆகக் குறைந்தது $100 மில்லியனை சுருட்ட ராஜபக்ச குடும்பத்துக்கு உதவி செய்தது லைக்கா நிறுவனத்தினூடாக என்றும் சண்டே லீடர் அன்று வெளியிட்டது. லைக்கா தமிழரின் நிறுவனம் என்பது தெரியாமல் இருந்ததாலும் ராஜபக்ச குடும்பத்தின் தொடர் கொலைகளாலும் இவ்விடையத்தில் லைக்கா-இனது பங்கு சண்டே லீடரினால் புறக்கணிக்கப் பட்டே வந்தது. லசந்த விக்கிரமதுங்க படுகொலையான பின்னரும் சண்டே லீடரினால் இக்களவு பற்றிய ஆராய்ச்சி திறக்கப் பட்டது. உடனேயே கோத்தபாயாவின் குண்டர் படைகளால் மீண்டும் முடக்கப்பட்டது.
இதில் ஒன்றும் புதிதான விடயங்கள் இல்லை. இனியொருவிலேயே பல பதிவுகள் இந்த உண்மையை காட்டி நிற்கின்றன. உதாரணம்: https://inioru.com/?p=39516
இப்படியிருந்தும் சுபாஸ்கரன் அல்லிராஜா நடுநடுங்கிக் கொண்டு தமக்கும் ராஜபக்ச-வுக்கும் அதுவித தொடர்புமில்லை என்று செய்தியாளர் மாநாடு என்று கொண்டு பொய் உரைத்தது தமிழ்ச் சமுதாயத்துக்கே பெரு அவமானம்.
இதற்குப் பின் என்ன போர்க் குற்றங்களும் இன அழிப்புக்களும் என்று பிதற்றுவது?! கண் முன்னே உள்ள ஆதாரத்தையே அனுமானிக்க முடியாதவரெல்லாம் பேய்க்காட்டுவது என்று தான் முடிவுறும்.
ஸ்கைநெட் களவின் பின்னணியிற் தான் ஆனந்தகிருஷ்ணனின் மக்ஸிஸ் தாபனம் ஜப்பானின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான NTT-ஐ அப்புறப்படுத்தி சமுத்திரந் தாண்டும் கடலடி தொலைத்தொடர்பு இணைப்பு வியாபாரத்தையே தன்னகப் படுத்தியது.
ஸ்கைநெட் களவின் விரக்தியினாலேயே உடைக்கப் பட்ட ஸ்ரீலங்கா டெலிகொம் உரிமை வியூகம்:-
http://www.island.lk/2005/12/22/business3.html
இக்காலப் பகுதியிலேயே ஆனந்தகிருஷ்ணன் 2G அலைவரிசை விவகாரத்திலும் இந்தியாவில் ஈடுபடுகிறான்.
சுப்பிரமணியன் சுவாமி மாறன் நாளைக்கு கருணாநிதி நாளன்றைக்கு என கொக்கரித்து திசை திருப்புவது அம்பானி, டாடா போன்றோர் கடலடி தொலைத்தொடர்பு விடயத்திலும் ஸ்ரீலங்காவில் சீன ஆதிக்கத்துடன் மோதித் தோற்ற உண்மைகளையே என்பதையும் நாம் நோக்க வேண்டும்.
இதற்குள் லைக்கா ஒரு சிறு கரப்பான் பூச்சி. ஆனால் ஒரு நலிவடைந்த சமுதாயத்தையே அழிக்கக்கூடிய கிருமிகளைப் போன்ற பொய்கலைக் காவும் ஒரு கரப்பான் பூச்சி.
வெக்டொன், லைக்கா போன்ற தமிழ் வர்த்தகர்கள் எத்தனை தமிழ் உழைப்பாளிகளைச் சுரண்டி அழித்தார்கள் தெரியுமா? கிட்டக் கிட்டவாக இருக்கும் அவர்களின் ஆபீசில் வைத்து எத்தனை பேர் உதை வங்கியிருக்கிறார்கள் தெரியுமா? முதலில் அதை பேசுங்கள்.
வெக்டோன்,லைக்கா மட்டுமல்ல 50 மேற்பட்ட பெயரில் ஒரே முகவ்ரியில்
பல நிறுவனக்கள். ஒவ்வொரு நாட்டிலும் இந்திய படம் தயாரிப்புபோல்
பங்காளிகள். இவர்கள் நூற்றுக்கண்க்கானோர்.. இவ்ர்களெல்லாம்
இந்த பல்தேசிய நிறுவங்களின் தூண்கள்தான். தலைமறைவாக
செயற்படுகின்றனர்.
இவ்ர்கள் தமிழரையே சுரண்டுவதாலும் தமிழரின் வாழ்வில் அக்கறையில்லாதவ்ர்களென்பதாலும் இவ்ர்களின் சட்டமீறல்களிற்கும்
சுரண்டலிற்கும் சர்வதேச உளவுப்படிகள் உதவுகின்றனர். இவர்களை
நன்றாக பயன்படுத்தி தமது ஆதிக்கத்தினை. இலங்கை அரசு
தமிழர் மீதும்,இந்திய அரசு இலங்கை அரசு மீதும், சர்வதேசம்
ஆசியாமீதும் செலுதுகின்றனர்.
லைக்கா தொலைபேசி நிறுவனம் பல பெயர்களில் முன்னர் ஆரம்பித்து பல தமிழ் வர்த்தகர்களையும் சற்றலைற் நிறுவனங்களையும் ஏமாற்றியே முன்னுக்கு வந்தது. முதலில் அவர் பிரான்ஸ்சிலேயே தனது மோசடி வேலையை ஆரம்பித்தார். அதாவது பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்னர் பிரான்ஸ்சில் இருக்கும்போது தொலைபேசி அட்டைகளை வியாபாரிகளுக்கு மொத்தமாகவிற்றுவிட்டு பணத்தை வாங்கியதும் சற்றலைற் கம்பனிகளுக்கு பணம் கட்டாமல் ஏமாற்றுவார். அவர்கள் உடனே போன் கார்ட்டுகளை செயலிழக்கச்செய்துவிடுவார்கள்.அதனால் பாதிப்பு வியாபாரிகளுக்கே .. கடன் வாங்கி போன் கார்ட்டு வியாபாரத்தையே நம்பி வாழ்ந்த பல குடும்பங்கள் பிரான்ஸ்சிலும் லண்டனிலும் நடுத்தெருவுக்கு வந்தது இவர்களால்த்தான். லண்டனில் ஞானம் தொலைபேசி நிறுவனம் என்ற பெயரில் மோசடி செய்தவர்களும் இவர்கள்தானாம். எது எப்படியோ இப்போது ஞானம் அறக்கட்டளை என்ற பெயரில் வடபகுதியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி புரிவது பாராட்டப்படவேண்டியதே!
// தொலைபேசி அட்டைகளை வியாபாரிகளுக்கு மொத்தமாகவிற்றுவிட்டு பணத்தை வாங்கியதும் சற்றலைற் கம்பனிகளுக்கு பணம் கட்டாமல் ஏமாற்றுவார்.
இது நற்செயல்
// இப்போது ஞானம் அறக்கட்டளை என்ற பெயரில் வடபகுதியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி புரிவது பாராட்டப்படவேண்டியதே!
இது இன அழிப்புக்குத் துணை போகும் கண்துடைப்பு மட்டுமல்ல நயவஞ்சகமும் கூடியது.
பெற்றோரைக்கொன்று திருடிய திருட்டுப்பணத்த்தில் அவ்ர்களின்
அனாதைப்பிளைகளிற்கு அன்னதானமிட்டு தொலைக்காட்சியில்
தன்னை ஓர் கொடையாளியாக காட்டுபவ்ர்கள் போல்தான் எல்லாம்.
தமிழக அரசியல்,இலங்கையின் இராஜபக்ச குடும்பம், புலம்பெயர்
புலிகளின் நிதியினை கையாழ்வோர் அனைவரும்..
இந்தlyca கைடது எல்லாம் ஒருநாடகம் இவன் drunked companies guys started playing with airhostess then they call the airport security after that the boss told that he knows the srilankan airline co ( kapila) he want to show off but security told just get out from the flight then they negotiate with the pilot he agree to get them on board but this allis vappu want apologize from pilot ,air hostess they both refused then this vappu kootam get down from sri lanlkan air line went to the 5 star hotel stayed for the day next day came to london in Emirates airlines