Thursday, April 30, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

லண்டன் ரூட்டிங் தேருக்கு தீ : புலி சார்ந்த அமைப்புகளிடையே மோதலின் வெளிப்பாடு?

இனியொரு... by இனியொரு...
11/19/2011
in இன்றைய செய்திகள்
0 0
15
Home இன்றைய செய்திகள்

லண்டன் ரூட்டிங் பகுதியில் சிவயோகம் அறக்கட்டளையின் கீழ் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக இயங்கிவரும் இலண்டன் முத்துமாரி அம்மன் திருக்கோயிலின் சித்திரத்தேர் 16.11.2011 இரவு 11.00 மணியளவில் தீவைத்து அழிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தை கண்ட அயலில் உள்ளவர்கள் கொடுத்த தகவலில் விரைந்து வந்த பொலிசாரும் தீயணைப்புப் படையினரும் செயற்பட்டு தீயை ஏனைய கட்டிடங்களுக்குப் பரவாது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த போதும் சித்திரத்தேர் மீண்டும் உபயோகிக்க முடியாத அளவிக்கு எரிந்துவிட்டது.

விடுதலைப் புலிகள் சார்ந்து இயங்கிய பிரித்தானிய அமைப்புக்களிடையே மாவீரர் தினம் குறித்த வியாபார மோதலே இத்தேர் தீ வைக்கப்ப்பட்டதற்கான காரணம் என்று கருதப்படுகிறது. சர்ச்சைக்குரிய இக் கோவிலின் குறித்த ஏனைய விவகாரங்கள் ஏற்கனவே பத்திரிகைகளில் வெளியாகியிருந்தன. புலம் பெயர் நாடுகளின் “தேசிய வியாபாரிகளின்” மோதல்கள் அங்கு வாழும் மக்களை போராட்ட உணர்விலிருந்து முற்றாக அன்னியப்படுத்தும் என அச்சம் தெரிவிக்கப்படுகிறது.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
ஐரோப்பாவும் அமரிக்காவும் எந்தக் கணத்திலும் சரிந்து விழலாம்(இரண்டாம் பகுதி) : சபா நாவலன்

ஐரோப்பாவும் அமரிக்காவும் எந்தக் கணத்திலும் சரிந்து விழலாம்(இரண்டாம் பகுதி) : சபா நாவலன்

Comments 15

  1. kovilkaaran says:
    14 years ago

    ஐயோ!  ஐயோ!   இது தெய்வகுற்றம் அன்பர்களே.  எங்கள் பிழைப்பில் கைவைப்பதா? 

  2. Thevan 2 says:
    14 years ago

    தெய்வம் நின்று கொல்லும்,வியாபாரம் தெய்வத்தையே கொல்லும்

  3. யோகன் says:
    14 years ago

    தண்ணிக்குள்ளே “குசு “விட்டால் வெளியில் வராமலா போகும்.? “தேசியம்” என்ற பொய் எத்தனை நாள் கை கொடுக்கும் ?
    இந்திய தமிழ் தேசியவாதிகளின் முகத்திரையை எப்படி “புனிதம்மன் ” ஜெயலலிதா பரமக்குடியில் கிழித்தாரோ அது போல் “லண்டன் அம்மன் ” ஈழ தமிழ் தேசியவாதிகளின் முகத்திரையை கிழித்துவிட்டாள்.
    தேரை காப்பற்ற முடியாத கடவுள் தமிழரையா [தந்தை செல்வா சொன்னது]காப்பாற்ற போகிறது.!?
    அரோகரா !!!!!
    இன்னுமொரு “கறவைக்கு” ரெடியாகி விடுவார்கள் சைவ தமிழர்கள்.!!! மடி கவனம் மக்களே !!!!

  4. Mahendra says:
    14 years ago

    மிகக்கொடூரமான செயல்களையும் செய்யக்கூடியதான வல்லமையைக் கொண்டு மனிதனைத் தவிர வேறு எந்த உயிரினமும் உலகில் தோன்றவில்லை. மனிதனை கட்டுப்படுத்தி வைத்திருப்பது கடவுள் அல்லது அதற்கு ஈடான ஒரு சக்தி என்ற நம்பிக்கை பாதுகாக்கப்பட வேண்டும். எப்போது இவை பொய்யானது என மனிதனுக்கு உணர்த்தப்படுகிறதோ, அதனை மனிதன் உணர்ந்து செயற்படத் தொடங்குகிறானோ அன்றிலிருந்து மனிதவாழ்வு கற்பனை செய்யவும் முடியாத அளவிற்கு நரகமாக்கப்படும். தேர் ஏன் எரிக்கப்பட்டது?… காரணம் அவரவர் இயல்புக்கு ஏற்ப வெளிப்படுகிறது. முடிவில் உண்மை தெரியவரும். எரித்தவர்கள் எங்கிருந்தாலும் எவ்வகையிலேனும் தண்டிக்கப்படுவார்கள். அதில் நம்பிக்கை கொள்வோம்.

    • shivaShiva says:
      14 years ago

      ஷிவ ஷிவா அப்ட்சாரம் அப்ட்சாரம்.. கவனமா சாமியக் கும்டுங்கோ.. தலித்துகளை மட்டும் ஷிவனை அண்ட விடாவேண்டாம். மாமிஷம் ஷாப்பிடும் கரையோரப் பிரபாகரனையும் தான்………. அப்படியே ஆர்.எஸ்.எஸ் ஐப் புடிச்சு முஸ்லிம் வீட்டுக்குள்ள குண்டுவைச்சூட்டு வாங்கோ…

      • Mahendra says:
        14 years ago

        சிவ சிவா என்று வணங்கும்போதே முஸ்லிம் வீட்டுக்குள்ளே குண்டுவைப்பவன், சிவ சிவாவும் இல்லையென்றால் நிர்ப்பயமாக எங்கெங்கோ எல்லாம் குண்டுவைப்பான். இதற்கு இந்திய இராணுவத்திடமும் பாடம் படிக்கவேண்டிய அவசியமும் இல்லை.

    • Thevan 2 says:
      14 years ago

      கடவுளை உருவாக்கியதே இந்த சமுகத்தை கட்டுப்படுத்த விரும்பியோர்தான்.சமுகத்தை கட்டுப்படுத்த சட்டம், கடவுள்,பண்பாடு போன்ற கருத்தால் அடக்கினர். மீறினோரை கரத்தால் அடக்கினர்.

      கரமும் , கருத்தும் தம்மை கட்டுப்படுத்தும் போது கடவுளையே கொல்கின்றனர்.

  5. chandran.raja says:
    14 years ago

    முப்பது வருடங்கள் தனது இனத்தையே எரியக்குடுத்த யாழ்பாண மேட்டுகுடி சிந்தனைக்கு தேர் எரிப்பது என்பது ஒன்றும் கஷ்ரமான காரியமாக தெரியவில்லை.

    ஏற்கனவே பொரியகோழி எண்ணையை கோவிலுக்குள் ஊற்றிய மாவீரர் ஆச்சே!.

  6. veeran says:
    14 years ago

    தேசிக்காய் தலைவர் போய்விட்டார் பிறகு என்னநடக்கும், தெய்பவம்நிண்று கொல்கிறது

  7. RAAJKUMAR says:
    14 years ago

    இந்தக் கோயில் இப்போது மூடப்பட்டுள்ளது. பல கோயில் தளபாடங்கள் ஒரு தமிழ் அச்சக கட்டிட வளாகத்தில் குவிக்கப்பட்டுள்ளது.
    கோயில் மூடப்பட்டவுடன் தூதுவர் ஹம்சாவின் சதி என்று மின்னஞ்சல்கள் பறந்தன. கட்டிட உரிமையாளர் இவர்களை எழுப்பி விட்டார் . அதனால் யாரும் ஹம்சா கதையை நம்பவில்லை.
    புது கட்டிடம் வாங்க தேசியக் கதை எல்லாம் பேசிப் பார்த்தார்கள். எடுபடவில்லை. இப்போது அடிபடும் இரண்டு குழுக்களும் கோயிலைத் திரும்பிக்கூடப்பார்க்கவில்லை. இப்போது ‘தேர்’ எரிந்த செய்தி வந்துள்ளது. அம்மனின் அன்பர்கள் கவலைப்பட்டு காசு தருவார்கள் எண்டு
    எதிர்பார்கிறார்கள். தமிழ் தேசியத்தை வைத்து என்னவெல்லாமோ வியாபாரம் நடக்குது.

  8. Thevan 2 says:
    14 years ago

    புலிகள் மிக புத்திசாலித்தனமாக தேசியம், மாவீரர், தாயகம்,
    தன்னாட்சி , சுயநிர்ணயம் போன்ற சொற்பதங்களை

    குத்தகைக்கு எடுத்து தமக்கு மட்டுமே உரித்தான தாக்கிகொண்டார்கள்.இவை யாவும் தமிழ் மக்களிட்குரியதே.

    தேசியம்,மாவீரர்,தாயகம்,தன்னாட்சி ,சுயநிர்ணயம் போன்ற சொற்பதங்களை பாவித்தே தம்மை ,தம் அதிகாரத்தை, தம் வியாபாரத்தை தக்கவைத்தார்கள்.எம் நியாயமான போராட்டத்தைகூட மே 09 இல் அடகு வைத்தார்கள் தம் உயிரித்காக.

    புலிகள் உரிமை கொண்டாடியதால் இந்த சொற்பதங்கள் தமிழரினுடையது அல்ல என்பது மிக தவறு.தமிழர்கள் இந்த சொற்பதங்களை புலி சார் அமைப்புகளிடம் இருந்து மீட்டு எடுக்க வேண்டிய வரலாற்றுக் கட்டாயத்தில் உள்ளோம்.

  9. கொம்பன் says:
    14 years ago

    நிர்மலன் குழுவின் கோயில் வியாபாரத்தை கடாசியவர்கள் தனம் கொம்பனியாக தான் இருக்க வேண்டும் -நிர்மலன் நாடுகத்தியவர் என்பதால்- ஆனல் சங்கீதன் கொம்பனி கோயிலை கொன்பிஸ்கேட் பண்ண முயற்சித்த தாக வும் தகவல் – எல்லாம் அந்த சிவனுக்கு தான் வெளிச்சம் –

  10. manithan says:
    14 years ago

    தேசியத் தலை புரட்சிக்காரனையா வளர்த்துவிட்டடது? அது வளர்த்ததோ மாபியாக்களை. கொலை கொள்ளை அடிதடி குத்து வெட்டு இது தான் புலிப் பாணி. சினிமா பார்த்து வளர்ந்த கூட்டம். சரி எல்லாம் முடிஞ்ச பிறகும் இன்னும் புலி எண்டு மார்தட்டிப் பெருமை பேசுற கேவலம்…………. ஐயோஓஓ

    • Mahendra says:
      14 years ago

      புரட்சிக்காரன் வென்றால் அவனை தேசத்தலைவனாக மக்கள் கொண்டாடுவார்கள்.

      புரட்சிக்காரன் தோற்றால் அவனை தேசத்துரோகியாக அதே மக்கள் தூற்றுவார்கள்.

      தமிழ்மக்களுக்கு மட்டும் இதில் விதிவிலக்கில்லை,

  11. Canadathambi says:
    14 years ago

    அந்த புனிதமான பெரும் போராட்டத்தையே இப்படியானவங்கள் தான் கெடுத்து போட்டு இப்ப சாமிகளையும் விடுகிரான்கள் இல்லை! ஆனால் பாருங்கோ கடவுள் விடமாட்டார்!!

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...