05.05.13 அன்று டென்மார்க்கில் உள்ள றொன்ட (rønde) தமிழ் மகளிர் அமைப்பினரின் ஒழுங்கமைப்பில் றொன்ட வாழ் தமிழ் மக்களுக்காக வைத்திய ஆலோசனைகளும் சில நோய்களுக்கான விளக்கங்களும் தமிழ் மொழியில் வழங்கப்பட்டது.
இச்சேவையை இங்கு வைத்தியர்களாக சேவையாற்றிவரும் இளந்தமிழ்
வைத்தியர்கள் மூவர் முன்வந்து செய்து, தாமும் மனநிறைவோடு அங்கு
வருகை தந்திருந்த மக்களுக்கான பல மருத்துவ விளக்கங்களை வழக்கியுள்ளார்கள்.
மக்கள் மிகவும் ஆர்வத்துடன் வருகை தந்திருந்தார்கள். தங்களுக்குத் தேவையான விளங்கங்களை தனித்தனியாகவும் பெற்றுள்ளார்கள்.
இறுதியில் மகளிர் அமைப்பின் சார்பில் இங்கு வருகைதந்து சேவையாற்றிய வைத்தியர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
தமிழ் மகளிர் அமைப்பு
றொன்ட (rønde)
டென்மார்க்








