Wednesday, April 29, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

யாழ்ப்பாண மேலாதிக்க சமூகம்: புறக்கணிக்கப்படும் முன்நாள் போராளிகள்

இனியொரு... by இனியொரு...
03/01/2011
in இன்றைய செய்திகள்
0 0
17
Home இன்றைய செய்திகள்

புலம்பெயர் நாடுகளின் பணத்தை பிரதானவருவாயாகக் கொண்ட உற்பத்தித் திறனற்ற யாழ் வேளாள மேலாதிக்க சமூகம் முன்னை நாள் போராளிகளை மீது கீழ்த்தரமான புறக்கணிப்பு யுத்ததை நடத்திவருவதாகத் தெரியவருகிறது.

கொலைசெய்யப்பட்ட போராளிகள் தவிர்ந்த ஏனையோரைதெருவோரங்களில் அனாதரவாகத் கைவிட்ட இலங்கை அரச பாசிசம் அவர்களுக்கு உதவிபுரியும் நிறுவனங்கள் மீதும் அழுத்தங்களைப் பிரயோகித்துவருகிறது.

தவிர சுய நலம்மிக்க உற்பத்தித் திறனற்ற யாழ்ப்பாண சமூகம் இவர்களை சமூகத்தின் புறக்கணிக்கப்பட்ட அங்கமாகவே நடத்திவருகிறது.

அதிலும் குறிப்பாக இளம் வயதினரும் வறிய குடும்பத்தைச் சேர்ந்தோரும் சமூகத்தின் புறக்கணிப்பிற்கும் உளவியல் பாதிப்பிற்கும் உள்ளாவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வேலை வாய்ப்பு, பாடசாலை அனுமதி போன்ற அனைத்து அடிப்படைத் துறைகளிலும் புறக்கணிக்கப்படும் இவர்கள் குறித்து அரசியல்வாதிகளோ, புலம் பெயர் பிரமுகர்களோ துயர்கொள்வதில்லை. அடிமைகள் போன்றும் பாலியல் நோக்கங்களுக்காகவும் இவர்கள் பல சந்தர்ப்பங்களில் பயன்படுத்தப்படுகின்றனர்.

இவர்களுக்கான சமூக அங்கீகாரம் கோரி பிரச்சாரங்களும் போராட்டங்களும் நடத்தப்பட வேண்டும் என சமூக அக்கறையுள்ளவர்கள் மத்தியில் பொதுவான கருத்து நிலவுகிறது.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

மனித உரிமை மாநாட்டில் இலங்கை அமைச்சர்

Comments 17

  1. Kumar says:
    15 years ago

    நானும் அதை அறிந்தேன்,மிகவும் மனமுடைந்து போனேன் இதயமற்ற மனிதா்களாய் நமது மக்கள் கூட்டம் மாறிப்போவதை உணா்கிறேன் அந்த அப்பாவி போராளிகள் செய்த குற்றம்தான் என்ன?? யாழ் குடாநாட்டைச்சோ்ந்தவன் என்ற வகையில் வெட்கித்தலை குனிகின்றேன். இதை சாதாரண விடயமாக விட்டுவிடக்கூடாது.

  2. ethayam says:
    15 years ago

    கையில் துப்பாக்கி இருந்தபோது என்ன பாடுபடுத்தியிருப்பார்கள். அவர்களை பெரிதாக நான் குற்றம் சொல்ல வரவில்லை. மக்களை மதிக்கவும் சரியாக மக்கள் மத்தியில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் எனவும் புலித்தலமை என்றாவது அவர்களுக்கு கற்று கொடுத்ததுண்டா? நானும் ஒரு விடுதலை அமைப்பில் உறுப்பினராக இருந்தேன் புலி எனது அமைப்பை நிர்மூலமாக்கிய பின் வீடு சென்ற போது யாராலும் பிரச்சனை இருக்கவில்லை. ஆனால்.புலியின் ஆயுததாரிகளும் ஆதரவாளர்களும் கொடுத்த நெருக்குதல்கள் மறக்கமுடியாதவை. வன்மத்தினால் இதை எழுதவில்லை. அந்த போராளிகளின் நிலைக்காக புலித்தலமையைதான் இன்னொரு தடவை முள்ளிவாய்காலிற்கு அனுப்ப வேண்டும்.

  3. S.G.Raghavan says:
    15 years ago

    “புலம்பெயர் நாடுகளின் பணத்தை பிரதானவருவாயாகக் கொண்ட? உற்பத்தித் திறனற்ற?? யாழ் வேளாள மேலாதிக்க(???) சமூகம்!!! முன்னை நாள் போராளிகளை மீது கீழ்த்தரமான புறக்கணிப்பு யுத்ததை??? நடத்திவருவதாகத் தெரியவருகிறது.” இனிஒருவின் செய்திதரும் பாங்கு இதுவா? இது ஒரு சமூகப் பொறுப்புள்ள செய்தியா? எனையா விசத்தை விதைக்கிறீர்கள் இந்த விஷ விதைப்பு முள்ளி வாய்கால் அவலத்தைவிட கொடுமையானது. முன்னாள் போராளிகள் வன்னியில் மட்டக்களப்பில் திருகோணமலையில் அம்பாறையில் கூட சமுகத்தால் புறக்கணிக்கப் படுகிறார்கள். அதர்க்கான காரணம்;-

    அரசபயங்கரவாதத்தின் மிரட்டல்

    புலிகள் மக்களுடன் பேணிய உறவு முறையில் ஏற்பட்ட இடைவெளி

    தமிழ் மக்களிடம் காணப்படும் கலாச்சார பாதிப்புகள் அல்லது வெறுமை குறிப்பாக பெண் போராளிகளாயின் உவள் இயக்கத்துக்கு போனவள் என்ற குறுகலான பார்வை

    இப்படி இருக்கும் போது குதம் வழியால் புணரும் ஸ்ரீலங்கா அரச பயங்கர வாதத்தின் நிகழ்ச்சி நிரலுக்கான செய்தி எதற்காகவோ?

    • Kumar says:
      15 years ago

      அவா்களை அணுகி நன்மை செய்யாவிட்டாலும் தீமையாவது செய்யாதிருக்கலாமல்லவா அவா்களைப்பொறுத்தவரை கீழ்மட்டத்தில் இருந்த போராளிகளாகும் அவா்கள் எந்த குற்றச்செயலுக்கும் பொறுப்புடயவா்களாக இருக்கமுடியாது, அரச புலனாய்வுத்துறையின் கண்காணிப்பிற்கு பயந்து அவா்களை துன்புறுத்தவேண்டுமென்றில்லை.

      இங்கே சாதியை இழுப்பது கண்டிக்கப்படவேண்டியது இருந்தாலும் மேலே கூறப்பட்ட விடயங்களில் உண்மை இல்லாமல் இல்லை என்பது எனது வாதம்.இயக்கத்திற்கு சென்றவா்களை தாழ்த்தப்பட்டவா்களாக பார்க்கின்ற நிலை தமிழ் பகுதிகள் எங்குமே உண்டு அது இன்று மட்டுமல்ல ஆரம்பத்திலேயே இருந்தது இதை நீங்கள் அறியாமல் இருக்கமுடியாது.        

      புலிகள் விட்ட இடைவெளியை மக்களும் உணராமல் மனிதாபிமானத்தை மறந்து செயல்படுவதானால் வித்தியாசம் இல்லாமல் போய்விடுமல்லவா?? எந்த மக்கள் ரெலோ இயக்கத்தினரை உயிரோடு எரிக்கும் போது அலட்சியமாக இருந்தார்களோ அதே கூட்டத்தைத்தான் இப்போதும் நான் பார்க்கிறேன் வருத்தப்படுகிறேன். 

      • S.G.Raghavan says:
        15 years ago

        எனது கோபம் முழுக்க செய்தி தந்த பாங்கில் மாத்திரம் உள்ளடக்கத்தில் அல்ல. செய்தியின் தலைப்பு உள்ளடக்கத்தை கொன்றுவிடும். குறிப்பாக ஒருவிடயம் நீங்கள் யாழ்ப்பாணப் போராளிகளை மாத்திரம் பார்ப்பீர்களா? ஏனைய மாவட்டப் போராளிகள்?? நிலை என்ன??? இந்த இடங்களில் தேசிய ரீதியாக கதைக்க வேண்டும். திட்டுவதாயினும் வாழ்த்துவதாயினும் யாழ்பானத்தையே கதையுங்கள் என எனது நண்பர் ஒருவர் கிண்டலாக சொன்னார்.

  4. a voter says:
    15 years ago

    1. யாழ் சமூகம் ஒன்றும் உற்பத்தித் திறனற்ற யாழ் வேளாள மேலாதிக்க சமூகம் அல்ல. (அப்படிப்பட்டவர்களும் இருக்கின்ற போதிலும்). இன்று இலங்கையில் வெண்காயம் பச்சை மிளகாய் பீற்றூட் வகைகளில் விலையை பெருமளவில் கட்டுப்படுத்தும் நிலையில் இருப்பவர்கள் யாழ் விவசாயிகளே. வெண்காயத்தின் விலை கிலோ 600 ரூபாயிலிருந்து 100 ரூபாவிற்கு மாறுமளவிற்கு அவர்கள் நிலை இருக்கிறது.
    2. யாழ் சமூகமே இப்போது தனது இருப்பைத் தக்க வைக்கப் போராட வேண்டிய நிலையில் உள்ளது. குடாநாட்டில் இதுவரை ஒரே ஒரு பொதுக்கம்பனிதான் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏனையவை தென்னிலங்கைக்கம்பனிகளும் பல் தேசியக் கம்பனிகளுமே.
    3. துரதிஷ்டவசமாக கேபி மட்டுமே போராளிகள் புனர்வாழ்வு பற்றிப் பேசுகிறார் என்றால் நிலமை எவவ்ளவு கவலைக்கீடம்.
    4. நான் அறிந்தவரை போராளிகள் மட்டுமல்ல வன்னியிலிருந்து அகதிகளாக வந்தவர்களும் வேலை வாய்ப்பில் புறக்கணிக்கப்படுகிறார்கள். குடாநாட்டில் நிலவும் தொழில் வாய்ப்புப் பற்றாக்குறைதான் இதற்கான காரணம்.

    இதுவரை யுத்தத்திற்காக நிதி உதவி செய்து யுத்தத்தின் மூலம் புலம் பெயர்ந்துள்ளவர்கள் அதே யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவ முன்வருவார்களா?

  5. YOGA.S says:
    15 years ago

    ///இதுவரை யுத்தத்திற்காக நிதி உதவி செய்து யுத்தத்தின் மூலம் புலம் பெயர்ந்துள்ளவர்கள் அதே யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவ முன்வருவார்களா?//இதே கேள்வியை யுத்தத்துக்கு?!உதவிய இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளிடம் கேட்கலாமே?போராடியே விடுதலை பெற வேண்டுமென்ற நிலைக்குக் கொண்டு வந்தது பேரினவாதம்!பயங்கரவாதமாகச் சித்தரித்து,பிரச்சாரம் செய்து உலகிடம் மன்றாடி இன அழிப்பைச் செய்து முடித்த பேரினவாதிகளிடம் கேள்வி கேட்க வக்கில்லை,வந்து விடுவார்கள் புலம் பெயர்ந்தோர்கள்”புடுங்கவில்லையென்று”குற்றம் சாற்ற!(இது என் தனிப்பட்ட கருத்து!புலிகளுக்கோ,புலம் பெயர்ந்தோருக்கோ வக்காலத்து வாங்குவது எனது நோக்கமல்ல!திருப்பிக் கல்லெறிவோருக்குப் பதில் சொல்வதற்கில்லை!சேற்றை வாரி தாராளமாக இறைக்கலாம்!மேலும்,தாய் தந்தையர் அல்லது பேரன்,பேர்த்திகள் உற்றார்,உறவினர் பெயர் வைப்பது “அழைப்பதற்காகவே”!மறைவதில் என்ன சுகம்? (à voter?)

    • a voter says:
      15 years ago

      யுத்தத்திற்கு அரசிற்கு உதவியவர்கள் பற்றிய புரிதல் உங்களிற்கு இருந்தால் அவர்களிடம் உதவி கேட்க யோசிக்க மாட்டீர்கள்.
      பேரினவாதிகளிடம் போராட்டம் தான் நடத்த வேண்டும் – உதவி கேட்ட முடியாது.
      எனது கருத்து புலம் பெயர்ந்தோர்கள்”புடுங்கவில்லையென்று”குற்றம் சாற்றுவதல்ல. வீணாக செலவழிக்கப்படும் பணத்தில் ஒரு சில டொலர்களைத்திருப்பி விடுங்கள் என்று சொல்வதே!
      இன்றுள்ள நிலைமை போராளிகள் புனர்வாழ்வு கேபி மட்டும் பேசும் போருளாயிருப்பதே. இதனை மாற்ற புலம் பெயர்ந்தோர்கள் முன்வர வேண்டும்.

    • S.G.Raghavan says:
      15 years ago

      a voter இன் கருத்து செம்மையானது பதிலும் ஏற்றுகொள்ளக் கூடியது புலம் பெயர்ந்த மக்களே எமது மக்களை காக்க வேண்டும் பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் உதவ வேண்டும். யோகா நாம் இலங்கைக்கு போருக்கு உதவிய நாடுகளை பொய் கேட்க முடியுமா? புலம் பெயர் மக்கள் மாதம் தலைக்கு 10 பவுன் கொடுத்தால் போதுமானது அது ஒரு முறையான திட்டத்துடன் கொடுக்கப் படவேண்டும். கிராமிய சங்கங்கள் மூலம் அந்த நிதி கொடுக்கப் படவேண்டும். வடகிழக்கில் கிராமந்தோறும் கிராமியச் சங்கங்கள் உருவாக்கப் பட்டு அவை தேசிய அளவில் இணைக்கப் பட்டு அவற்றுக்கு ஒரு பொதுவான இணையம் ஒன்று உருவாக்கப் பட்டால் அதனூடாக அவசியமான கோரிக்கைகள் உதவி தேவைப்படும் பிரதேசங்கள் இனங்காணப்பட்டு உடனுக்குடன் நிதி கையளிப்பு செய்ய முடியும் துஸ் பிரயோகமும் இல்லாது இருக்கும், அவை கொடையாளர்களால் வரவேற்கப்படும்.

    • a voter says:
      15 years ago

      “மறைவதில் என்ன சுகம்?”
      யோகா நானும் புலம் பெயர்ந்தவனாக இருந்திருந்தால் சொந்தப் பெயரில் வந்திருப்பேன். சகல பின்னூட்டங்களையும் ஒரே பெயரில் இடுவதால் இங்குள்ள சூழலில் மறைவது தேவைப்படுகிறது.
      மறைவது சுகமல்ல காலத்தின் கட்டாயம்.
      எ வோட்டர் என்பதற்குப் பதில் சுந்தரம்பிள்ளை என்ற பெயரில் எழுதியிருந்தால் இப்படி நீங்கள் கேட்டிருக்க மாட்டீர்கள். அதுதான் எனது பெயரென நீங்கள் நினைப்பது அறியாமை. இணையத்தின் வசதிகளில் ஒன்று மறைவது.

  6. சி. உமா says:
    15 years ago

    கட்டுரையில் தவறிருப்பதாக எனக்குப் படவில்லை. எழுத்துநடை வேண்டமானால் சிலருக்கு ஏற்புடையல்லாது இருக்கலாம். ராகவனிடம் இருந்து இப்படியான பதிலை நான் எதிர்பார்க்கவில்லை. யாழ் சமூகத்தைப்பற்றி உயர்வான எண்ணம் இருந்ததாலேயே கட்டுரையாளருக்குக் கோபம் வந்துள்ளதாக நான் நினைக்கின்றேன். மற்ற இடங்களில் இப்படி நடந்திருந்தாலும் யாழ்ப்பாணத்தவர் முன்மாதிரியாக இருந்திருக்கலாமே. புலம்பெயர்ந்த நாம் கூட முன்னாள் போராளிகளை> மாவீரர் குடும்பங்களை மறந்து விட்டோம். சரியோ தவறோ தமிழுக்காக வாழ்ந்தவர்கள் அவர்கள். அதிலும் பெண் போராளிகள் மதிக்கப்பட வேண்டியவர்கள் மாறாக மிதிக்கப்படுகின்றார்கள். பெரும்பாலும் இன்று பாதிக்கப்படுபவர்கள் போராளிகளும்; மாவீரர் குடும்பத்தவருமே. ஆனால் நாம் இங்கு மாவீரர் புகழ்பாடுவதற்காக பெரும்பணம் செலவழிக்கின்றோம். புத்தம் புதுப்பூவை இலங்கையில் இருந்து இறக்குமதி செய்கின்றோம். ஆனால் மாவீரரின் மனைவியும்; பிள்ளைகளும் ஒரு நேரச் சோற்றுக்காக அலைகின்றனர். இங்கு நாம் நினைத்தால் அங்கு அவர்களை வாழவைக்கலாம் செய்வோமா? இப்படியான அவலங்களைத் தொடர்ந்து எழுதுங்கள். அப்படியாவது நாங்கள் திருந்துவோமா பார்ப்போம்.

    • Seziyam says:
      15 years ago

      Very good point.I think btf need to think this way and kind life back to normal for them.actions we need more than a words.

    • S.G.Raghavan says:
      15 years ago

      போராளிகள் புறக்கணிக்கப் படுகிறார்கள் என்ற கட்டுரையாளரின் கருத்தில் எனக்கு உடன்பாடுண்டு அதனால் எழும் நியாயமான கோபத்திலும் எனக்கு உடன்பாடுண்டு. சாதீய பிரதேச வேறுபாடுகளை தூண்டாதீர்கள் என்பதுதான் எனது கோபம். யாழ்பாணத்தவரை கட்டுரையாளர் வைதார் என்பதால் நான் கோபப் படவில்லை. இது ஒரு பொதுப் பிரச்சினை இதனை பொதுவாகவே பார்க்கவேண்டும்.

      “புலம்பெயர் நாடுகளின் பணத்தை பிரதானவருவாயாகக் கொண்ட? உற்பத்தித் திறனற்ற?? யாழ் வேளாள மேலாதிக்க(???) சமூகம்!!! முன்னை நாள் போராளிகளை மீது கீழ்த்தரமான புறக்கணிப்பு யுத்ததை??? நடத்திவருவதாகத் தெரியவருகிறது.” என்பதில் அவர் சொல்லவரும் செய்தியின் கனபரிமாணம் செயலற்று போய்விடும் அல்லது திசை திரும்பிவிடும். மற்றும் தவறான என் சொற்பிரயோகம் யாரையும் புண்படுத்தக் கூடாது.

      • சி. உமா says:
        15 years ago

        சொற்பிரயோகங்களில் தவறிருக்கின்றன ஆனால் யதார்த்தம் அதுவே. பெரும்பான்மையினர் சோம்பேறிகளாகவே உள்ளனர். இதில் சாதியைக் குறித்தது பிழையே. யாவரும் ஆண்டவனின் குழந்தைகளே என்றும்> அதற்கும் மேலாய் ஆண்டவனும் நாமும் ஒன்றேயென்றும் கூறும் உயர்தத்துவம் கொண்ட இந்துமதத்தின் தலைமையைத் தாங்கள் தக்கவைப்பதற்காக சாதிகளைக் கொணர்ந்து> வேறுபாடுகளை விதைத்த ஒருபிரிவினரின் வலைக்குள் நாம்வீழாமல் இருக்க வேண்டமாயின் சாதியை மறக்க வேண்டியதுதான். எமது இளைய சமூகத்திற் பலருக்குத் தெரியாமலே மறைந்து கொண்டிருக்கும் ஒருவிடயத்தை திரும்பவும் உருவாக்குவதில் கட்டரையாளருக்கும் உடன்பாடிருக்க முடியாது.

  7. ethayam says:
    15 years ago

    புலம் பெயர்ந்துள்ளவர்கள் அதே யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவ முன்வருவார்களா?

    அ
    டித்து நொருக்கி அழித்தது பேரினவாதம். ஆனால் அபிவிருத்தியை புலம் பெயர்ந்தோர் செய்ய வேண்டுமாம். என்ன நியாயம் இது?

    • a voter says:
      15 years ago

      இலங்கையில் உள்ள ஒருவயாக இதை எழுதுகிறேன். உங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ மனம் இல்லாவிட்டால் அவர்களைப் பற்றிப் பேச ஒரு அருகதையும் இல்லை.

      அடித்தி நொருக்கிய பேரினவாதம் அபிவிருத்தியும் செய்யும் / செய்ய வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்ப்பீர்களாயின் உங்களைப்பற்றிப் பரிதாபப்படுவதை விட எனக்கு வேறு வழியில்லை.

  8. T.BALA. pannipulam says:
    15 years ago

    யுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஒரு வலுவிழந்த கணவன், அதே நிலையில் மனைவி, இந்த இருவருக்கும் வைத்தியம்,செலவு, இருப்பிடம்,தொழில் இதை நான் ஒருவருடமாக செய்துவருகிறேன்.இது தொடரும்.இதேபோல் பலர் இருக்கிறார்கள்.நீங்கள் கூறிய நிலையிலும் உள்ளார்கள்.ஆலயங்கள் புனர்நிர்மானம் என்ற பெயரில் நிதிகளை கல்லுக்குள் புதைக்கிறார்கள் இதற்க்கு பதில் ஒரு தொழில் நிறுவனம் ஒன்றைக்கட்டலாமே ஏன் இதை தட்டிக்கேட்க்க மறுக்கிறீர்கள. பணிப்புலம் பாலா

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...