கனேடியப் பாராளுமன்ற உறுப்பினரான பொப் ரேயை இலங்கை அரசாங்கம் வெளியேற்றிய நடவடிக்கையானது ஏற்றுக்கொள்ளப்பட முடியாத நடவடிக்க்கையாகுமென வெளிவிவகாரப் பேச்சாளர் எமா வேல்பேர்ட் தெரிவித்துள்ளார். இதேவேளை இலங்கையிலுள்ள அகதி முகாம்களைப் பார்வையிடுவதற்காக வெளிவிவகார அமைச்சர் லோரன்ஸ் கனொனின் பாராளுமன்றச் செயலாளரான தீபக் ஒப்ரை இவ்வார இறுதியில் இலங்கைக்கு விஜயம் செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இவரின் விஜயத்திற்கான விசா அனுமதியை இலங்கை அரசு வழங்க மறுத்துவிட்டது.
ரேயிற்கு விசா அனுமதி வழங்கப்பட்டிருந்தும் இலங்கை விமான நிலையத்தில் திருப்பியனுப்பப் படுவத்ற்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
நீண்ட காலமாகவே புலிகளின் ஜனநாயக மீறல்களுக்கெதிராகக் குரல் கொடுத்துவந்த ரே இலங்கையில் சமஸ்டி முறையிலான தீர்வையே முன் மொழிந்தவர். அரசியல் தீர்வுக்கும் சமஸ்டிக்கும் ஆதரவான இவரின் கருத்துக்களே இவர் வெளியேற்றப்படக் காரணமானது என அரசியல் அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.







