Thursday, April 23, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

மேற்கு வங்கம் : இந்தியாநிகழ்த்தும் இன்னொரு இனப்படுகொலை : பத்மா

இனியொரு... by இனியொரு...
07/05/2009
in அரசியல்
0 0
1
Home அரசியல்

genocide1மேற்கு வங்கத்தின் மித்னாபூர், புருலியா, பங்குரா மாவட்டங்கள் ஒரு மினி போர்க்களமாக

மாறியுள்ளன. அங்குள்ள சந்தால் பழங்குடியின மக்களை மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் என்று கூறி போலீசும், துணை

 தொடர்பான பதிவு
 ஆதவன் தீட்சண்யா – பில்டிங் ஸ்டிராங்கு பேஸ்மெண்ட்டு கொஞ்சம் வீக்கு : டி.அருள் எழிலன்

ராணுவமும் அவர்கள் மீது போர் தொடுத்துள்ளது. பதிலுக்கு வில் அம்பு, கோடரிகளுடன் பதில்தாக்குதல் நடத்தி வருகிறார்கள் பழங்குடியின மக்கள். அங்கே கிராமங்கள் படிப்படியாக மீட்கப்படும் நிலையில் பழங்குடியினப் பெண்கள் வன்கொடுமைக்குக்கு ஆளாவதாகவும், குழந்தைகள் கொல்லப்படுவதாகவும், ஆண்களை கைதியாகப் பிடித்து சித்திரவதை செய்வதாகவும் புகார்கள் வரத் தொடங்கியுள்ளன. இத்தனையும் மேற்குவங்க மாநில மார்க்சிஸ்ட் அரசின் ஆசியுடன் நடப்பதாகக் கூறப்படுவதுதான் கொடுமை.

மேற்குவங்கத்தில் என்னதான் நடக்கிறது என்பதை அறிய, உண்மை கண்டறியும் குழு ஒன்று அண்மையில் அங்கு சென்று வந்துள்ளது. அந்தக் குழுவில் இடம்பெற்ற சென்னையைச் சேர்ந்த புரட்சிகர பெண்கள் விடுதலை இயக்கத்தின் மாநிலச் செயலாளர் பத்மாவிடம் நாம் பேசினோம்.

மேற்கு வங்கத்தில் நடக்கும் மோதலுக்கு என்னதான் காரணம்?

அந்த மாநிலத்தில் உள்ள மித்னாபூர், புருலியா, பங்குரா மாவட்டங்களில் வாழும் பழங்குடி மக்களுக்கு குடும்ப அட்டை உள்பட எந்தவிதமான அடிப்படை நலத்திட்டங்களையும் அந்த மாநில மார்க்சிஸ்ட் அரசு செய்து தரவில்லை. இதற்காகப் பழங்குடியின மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்த நிலையில் ஜின்டால் என்ற தனியார் நிறுவனத்தின் எகு ஆலைக்காக, சந்தால் பழங்குடியின மக்கள் வாழும் காட்டுப் பகுதிகளை அழித்து, ஐந்தாயிரம் ஏக்கரில் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்கும் முயற்சியில் மேற்கு வங்க அரசு இறங்கியது. கடந்த நவம்பர் 2ம்தேதி அவசர அவசரமாக இதன் அடிக்கல் நாட்டு விழா நடந்த போது பழங்குடியின மக்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்துப் போராட்டம் நடத்தினர்.

மறுநாள் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளைத் தேடுவதாகக் கூறி பழங்குடியினரின் கிராமங்களுக்குள் போலீஸார் புகுந்து பெண்களை வன்கொடுமை செய்தனர். குழந்தைகளைக் கொன்று குவித்து, ஆண்களை சட்டவிரோதமாக கைது செய்தனர். போலீஸாருடன் சேர்ந்து, சி.பி.எம். கட்சி குண்டர்கள் நடத்திய இந்த வன்முறை வெறியாட்டத்தால் பழங்குடி மக்கள் பீதியில் உறைந்து போயினர். இந்த அடக்குமுறைக்கு எதிராக 1,100 கிராமங்களைச் சேர்ந்த மக்களை ஒன்றிணைத்து, சத்ரதார் மகோதா என்பவர், போலீஸ் அடக்கு முறைக்கு எதிரான மக்கள் கமிட்டியை பி.சி.பி.ஏ. உருவாக்கினார்.

அந்தக் கமிட்டி, பெண்களிடம் வன்கொடுமையில் ஈடுபட்ட போலீஸார் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்; மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் என்ற பொய்க் குற்றச்சாட்டில் கைதான பழங்குடி மக்களை விடுதலை செய்ய வேண்டும்; போலீஸார் நடத்திய வன்முறை வெறியாட்டத்திற்குப் பொறுப்பேற்று காவல்துறை உயரதிகாரி ராஜேஷ்சிங் தோப்புக்கரணம் போட வேண்டும்; வன்கொடுமைகளில் ஈடுபட்ட போலீஸார் தங்கள் மூக்கு தரையில்படும்படி மன்னிப்புக் கோர வேண்டும் என்ற தங்கள் மரபு ரீதியிலான தண்டனைகளை கோரிக்கைகளாக முன்வைத்தனர். அத்துடன், கிராமங்களைவிட்டு போலீஸார் வெளியேற வேண்டும். அதுவரை போலீஸாருக்கு முடிவெட்டுதல், துணி துவைத்தல் உள்ளிட்ட வேலைகளை செய்ய மாட்டோம் என்று கடும் நிபந்தனைகளை விதித்தனர்.

இதற்காக பழங்குடி இன மக்கள் வில்அம்பு போன்ற ஆயுதங்களால் போலீஸாரை தாக்கியது நியாயமா?

பழங்குடியின மக்களின் ஜனநாயக ரீதியிலான போராட்டத்திற்கும், கோரிக்கைகளுக்கும் செவி சாய்க்காத மேற்கு வங்க கம்யூனிஸ்ட் அரசு, போலீஸ் அடக்குமுறைக்கு எதிரான மக்கள் கமிட்டியை ஒரு மாவோஸ்ட் தீவிரவாத குழு என்று அறிவித்து அவர்கள் மீது தனது தாக்குதல் தொடுத்து வருகிறது. சாதாரணமாகவே தங்களின் மரபுவழி ஆயுதங்களான வில்அம்பு, கோடாரி, அரிவாள் வைத்திருக்கும் பழங்குடி மக்கள், தங்கள் உயிருக்கே ஆபத்து என்ற நிலையில் அதைப் பயன்படுத்தத்தானே செய்வார்கள்? அதன்படிதான், காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போலீஸாரைச் சிறைபிடித்து அவர்கள் போராட்டத்தைத் தொடங்கினர்.

இப்போது எல்லாம் சரியாகிவிட்டதா?

சிங்கூர் நந்திகிராமத்தில் ஏவிவிட்ட அடக்குமுறையைவிட இரண்டு மடங்கு அதிகமான வன்முறையை சந்தால் பழங்குடியின மக்கள் மீது அம்மாநில பாசிச முதல்வர் புத்ததேவ் பட்டாச்சாரியா ஏவி விட்டிருக்கிறார். அந்த மக்கள் ஆயுதமேந்துவதற்குக் காரணமான சமூக பொருளாதாரக் காரணங்களை ஆய்வு செய்யாமல் போலீஸாரையும், சிபிஎம் குண்டர்களையும் மே.வங்க கம்யூனிஸ்ட் அரசு ஏவிவிட்டு வேடிக்கைப் பார்ப்பது வெட்கக் கேடான விஷயம். அமெரிக்க உதவியுடன் உளவு செயற்கை கோள் மூலம் மித்னாபூர், புருலியா, பங்குரா மாவட்டங்களைக் கண்காணித்து ஹெலி காப்டர்கள் மூலம்கூட தாக்குதல்கள் நடத்தப்படுகிறது. சிறைபிடிக்கப்பட்ட பழங்குடி மக்களை நிவாரண முகாம்களில் அடைத்து சித்திரவதை செய்கிறார்கள். இங்கு, இலங்கையில் முகாம்களில் தங்கவைக்கப் பட்டுள்ள தமிழ் மக்களைப் போல் சந்தால் இன மக்களும் கொடுமைகளை அனுபவித்து வருகிறார்கள். பாகிஸ்தான், சீனாவுடன் சேர்ந்து இலங்கையில் இனப்படுகொலையை நடத்திய இந்திய அரசு, இப்போது அமெரிக்காவின் துணையுடன் உள்நாட்டிலேயே இனப்படுகொலையை நடத்தி வருகிறது.

இந்த பகிரங்கக் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் உண்டா?
 
சர்ச்சைக்குரிய அந்த மாவட்டங்களில் என்னதான் நடக்கிறது என்று, உண்மை நிலைகளை அறிய மேற்கு வங்கத்துக்குச் சென்றோம். கடந்த 27ம் தேதி மித்னாபூர் ரயில் நிலையத்தில் இறங்கிய எங்களை, பயங்கர ஆயுதங்களுடன் வந்த தீவிரவாதிகளைப் போல போலீஸார் பிடித்துச் சென்றனர். காரணம் கேட்டதற்கு, லால்கரில் 144 தடை உத்தரவு அமுலில் உள்ளதால் அங்கு செல்லக் கூடாது என்றனர். இப்படியே ஊருக்குச் சென்று விடுங்கள்; மீடியாவில் பேசக்கூடாது என்று நிபந்தனை போட்டனர். முடியாது. எங்கள் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடையுங்கள் என்றோம். பின்னர் வழக்கு எதுவும் போடாமல், போலீஸ் வேனில் ஏற்றி, கொல்கத்தாவில் விட்டுவிட்டனர். பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதியில் ஏதோ விரும்பத்தகாதவைகள் நடப்பதால் தான் எங்களை அங்கு செல்லவிடாமல் அரசு தடுக்கிறது.
கம்யூனிஸ்ட் ஆட்சியில் மனித உரிமை ஆர்வலர்களுக்குத் தடை விதிப்பது வெட்கக் கேடானது. எங்களை மட்டுமல்ல அபர்ணாசென் உள்ளிட்ட முக்கியமான மனித உரிமை ஆர்வலர்களையும் அந்தக் கிராமங்களுக்குள் நுழைய விடாமல் தடுத்து விட்டனர். நடந்து வரும் இனப் படுகொலைகளை மூடிமறைக்கவே யாரையும்
தொடர்பான பதிவு
இனப்படுகொலை நிகழ்த்திய இந்தியா! – சர்வதேச அரசியற் பின்புலம்

உள்ளே விடாமல் தடுத்து வருகின்றனர். காடுகளுக்குள் ஊடுருவிவிட்ட துணை ராணுவத்தினர், பழங்குடி மக்களுடன் யுத்தம் நடத்தத் தயாராகி விட்டனர். அமெரிக்க உளவு செயற்கைக் கோள் மூலம் அப்பகுதி கண்காணிக்கப்படுகிறது என்று, அம்மாநில காவல்துறையில் உள்ள ஒருசிலரே எங்களிடம் தெரிவித்தனர். சிங்கூர்நந்திகிராமத்தில் காட்டிய தனது பாசிச முகத்தை மித்னாபூரிலும் காட்டத் தொடங்கி விட்டார், புத்ததேவ் பட்டாச்சார்யா.

நன்றி : குளோபல் தமிழ் நியூஸ், குமுதம்

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

சமாதானத்திற்கான கதவுகள் திறக்கபட்டபோதும் அவற்றைப் பிரபாகரனே அடைத்துவிட்டார்:ஜசூசி அகாசி

Comments 1

  1. vetry says:
    17 years ago

    இந்தியா என்னும கருத்தாக்கம் நடத்திவரும் படுகொலைகளில் இதுவும் ஒன்று.
    பலவேளைகளில் அதன் கை;யாட்கள் கொடுக்கும் முண்டு அதற்கு உதவியாய் இருக்கிறது.
    ஈழத்தில் இந்தியா மூன்று முறை படுகொலைகளை நிகழ்த்திக் காட்டியுள்ளது.
    ஈழம் தனது வரலாற்றில் இந்தியா ஒரு நட்புநாடு… இந்தியாவும் சலாமியாவும் நட்புநாடுகள் என்று ‘விக்கிரம்’ படத்தில் வரும் காட்சிமாதிரி சொல்ல முடியாது. துர் மகிழ்ச்சிக்குரிய வகையில் சுஜாதாவும் இறந்துவிட்டார்.
    அதற்காக அந்தளவிற்கு அறிவுடையவர்; என்று நினைத்து நாங்கள் மணி ரத்தினத்திடம் இதைக் கேட்கவும் முடியாது.
    பத்மா எழுதியது என்று இதைப்பற்றி எவ்வாறு மங்கையிடம் கேட்கமுடியாதோ அதே போல…
    ஆனால் ஆதவன் தீட்சணியாவிடம் எல்லாமும் கேட்கலாம். அவருக்கு எல்லாமும் தெரிந்திருக்கும். எப்படி சி.பி.எம் இதில் சதிப் பங்கு வகிக்கிறது என்று தெரியாமலா இருந்திருக்கும். ஒரு இந்தியனாகவே எப்போதும் சிந்திக்கும் ஒரு சி.பி.எம். மார்க்சியனாக இருக்கம் அவருக்கு இந்தப் படுகொலைகள் பத்தி கொலைகொலையா முந்திரிக்கா பாணியில் தெரியாமலா இருந்திருக்கும்.

    அவரால் முடிந்தால் சிவசேகரம் போன்ற சீன பாணிக் கமுயுpஸ்டுகிளடம் கேட்கவும் முடியுமே!

    இந்தியா செய்யும் படுகொலையில்
    கொள்கை
    கோட்பாடு
    கொத்தவரங்காய் எல்லாத்துக்கும் அப்பால எப்படி இரண்டுபேரும் எப்படி ஒன்றிப்போவது
    பல ஆயிரம் இந்தியர்களையும் தமிழர்களையும் காவு கொண்டாலும் எப்படி சியாசென்னில் குனியவிட்டு …கொடுப்பது என்று சீனாவிடம் இந்தியா கேட்கின்ற பாடங்களைப்பற்றி…
    சீன சார்புக் கட்சிகளிடம் (அட மறந்து போச்சுது மார்க்கசியக்கட்சிகளிடம்) கேட்டுச் சொல்ல எங்கள் ஆதவன் தீட்சணியாவிற்கு நுணுக்கங்கள் தெரியாமலா போய்விடப் போகிறது.

    நான்காவது அகிலத்தையே கூட்டிக்கொடுத்த சோபா சக்த்தியும் பக்கத்தில் அவருடன் இருக்கையில் இ….

    யாமிருக்கப்பயமேன்….
    நீயிருக்கப்பயமேன்…
    பீரிருக்கப்பயமேன்…

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...