இலங்கையில் முஸ்லிம் தமிழர்கள் மீதான இலங்கை அரச ஆதரவுப் பயங்கரவாதிகளின் தாக்குதலை பிரித்தானியத் தமிழர் பேரவை கண்டித்துள்ளது. பாதிக்கப்பட்ட இஸ்லாமியத் தமிழர்களின் வலியை உணர்ந்துகொள்வதாகத் தெரிவிக்கும் பேரவை இலங்கை அரசின் அடிவருடிகளாகச் செயற்படும் முஸ்லிம் தலைவர்களைக் கண்டித்துள்ளது. இலங்கை அரச ஆதரவுப் படையும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்சவுடன் நேரடித் தொடர்பிலும் உள்ள பொதுபல சேனா என்ற அமைப்பு இத் தாக்குதல்களில் நேரடியாகப் பங்குபற்றியுள்ளது என பிரித்தானியத் தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.
புலம்பெயர் தமிழர் அமைப்பு ஒன்று இஸ்லாமியத் தமிழ்த் தேசிய இனத்தின் மீதான வன்முறைக்கு எதிராக அவர்களுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்க முன்வந்திருப்பது சிறப்பு மிக்க நிகழ்வாகும்.
அறிக்கையின் முழுமையான ஆங்கில வடிவம் இணைக்கப்பட்டுள்ளது:
இஸ்லாமிய தமிழா்கள் என்று அழைத்து எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறீா்கள் ஆனால் இதை அவா்கள் ஏற்றுக்கொள்வாா்களா?
அவா்கள் எப்போதும் தமிழ்,சிங்கள,முஸ்லீம் இனங்கள் என்றல்லவா கூறிவருகின்றாா்கள்.
Correct…
இவர்கள் இஸ்லாமிய தமிழா்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கிறார்கள். வலியை உணர்வதாக சொல்கிறார்கள். புலிகளின் வலியால்தான் முஸ்லீம்களின் இஸ்லாமிய தேசியம் உருவானது. பொதுபல சேனாவுக்கு ; புலிகள் ஒன்றும் குறைந்தவர்கள் இல்லை. நீலிக் கண்ணீரா? முதலைக் கண்ணீரா?
jaffnala muslims, pulikalai kaaddi koduththapadijal than, pulikal muslim methu kovam kondarkal.ok
## புலிகளின் வலியால்தான் முஸ்லீம்களின் இஸ்லாமிய தேசியம் உருவானது. பொதுபல சேனாவுக்கு ; புலிகள் ஒன்றும் குறைந்தவர்கள் இல்லை. நீலிக் கண்ணீரா? முதலைக் கண்ணீரா ##
புலிகள் முஸ்லிம்கள் மீது தாக்கினார்கள் வெளியேற்றினார்கள் என்று புலிகள் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டுகள் எல்லாம் 1990 பின் சொல்லப்படுபவை ,.
அதற்கு முன்னர் முஸ்லிமகள் சிங்கள அரசுடனும் , ராணுவத்துடனும் சேர்ந்து எவ்வ்றெல்லாம் தமிழ்கர்களுக்கெதிராக செயற்பட்டார்களென்பது சரித்திரம் .
இலங்கை இந்திய ஒப்பந்த்தத்தின்போது ( 1987 இல் அப்போது புலிகள் முஸ்லிமகளுக்கு எதிராக எந்த செயலையும் செய்திருக்கவில்லை ) முஸ்லிம்கள் தமக்கு தனியான அலகு கேட்டிருந்தார்களே அதுக்கு பேற் என்ன முஸ்லிம் தேசியவாதம்தானே ?
Yes, like Tamil nationalism … There is a Muslim Nationalisam there…
And that’s not wrong…
Only by language they are united by with Tamils…
By religion & culture they have their own identity…
But now they say their language is Arabic or Uruthu…
Here I’m confused… As mothers language comes as a Mother tounge… How they get their fathers language as their Mother tounge…?
If any Muslim brothers clear this confusion about their Mother tounge… It’ll will be better…
I think there is a lawyer Bazeer or some one usually criticize LTTE .. & writes articles mostly in thenee… He can clear this…
Seems nowadays he keep quiet about these Muslim-Singalese disputes… Hmm…
All are survival… Hmm…
முஸ்லீம்களிற்கு மட்டுமல்ல சகல இந மக்களிற்கும் எதிராக புலிகளும் ஏனைய இயக்கங்களும் செயற்பட்டார்கள் என்பது வரலாறு.
பல வேளைகளில் அரச உளவாளிகளும் இதனை இயக்கங்கள்போல வேடமிட்டுச் செய்தார்கள்.
இப்போது நீங்கள் செய்வதைப் போல.
ஆமாம் எல்லோரும் முஸ்லிம்களுக்கு எதிராக நேரடியாகவும் வேடமிட்டும் செயற்பட்டார்கள் . ஆனால் முஸ்லிம்கள் மட்டும் நல்ல அவர்களுக்கு எதுவுமே தெரியாது .
கிழக்கில் இவர்கள் சிங்கள அரச படையோடு சேர்ந்து கொண்டு மேற் கொண்ட படுகொலைகளை உங்களைப்போன்றவர்கள் மறைத்து விடலாம் என எண்ணுவது மடத்தனம் அல்லாமல் வேறென்ன ?
இருவருமே தவறு செய்திருக்கிறோம் அந்த தவறுகளை மீண்டும் மீண்டும் பேசிக்கொள்வதால் எமது இருப்பு கேள்விக்குறியாகிறது.இது பழி தீர்க்கும் தருணமல்ல பிரிந்தவர்கள் சேர்வதற்கான சந்தர்ப்பம்.கடந்தகால விடயங்களில் அனைவருமே பாடம் கற்றிருப்போம்.
நீ என்னை மன்னிக்கவில்லை
நான் உன்னை மன்னிக்கமாட்டேன்” என்றால் கவலைகள் தொடரும்.
ஒரு கை ஓசை எழுப்பாது என்பதை உணர்வோம் அன்றுதான் இருவருமே மகிழ்வோம்.
I agree
சிங்களன் தெளிவாக இருக்கிறான்.. இந்து என்றாலும் இஸ்லாமியர் என்றாலும் கிருத்துவர் என்றாலும் பௌத்தனாக/சிங்களனாக இல்லாவிட்டால் அவர்களுக்கு எதிராக இருக்கிறான்.. ஒடுக்கப்படும் சிறுபாண்மையினர் நாம் தான் மதமாக,சாதியாக பிரிந்து கிடக்கிறோம்..முன்பொரு நாள் யாழ்பாணத்தில் நடந்தது நேற்று அலுத்கமாவில் நடந்தது நாளை சிறுபாண்மையினர் வசிக்கும் எங்கு வேண்டுமானாலும் நடக்கும். இதை புரிந்துகொள்ளாமல் இதுவரை இருந்தது போதும் இனியேனும் ஒடுக்குமுறைக்கு எதிராக கைகோர்ப்போம்.
நீண்டகாலமாகவே முஸ்லீம்கள் தம்மை ஒரு வேறுபட்ட சமுகமாகவே உணர்ந்து –வாழ்ந்து வந்திருக்கிறார்கள். ஆகவே முஸ்லீம் தேசியத்திற்கு புலிகள் காரணமல்ல. உங்களது ஏனய கருத்துக்களிற்கு மறுப்பில்லை.
Muslims in Sri Lanka from north to south east to west speak Tamil and their mother tongue is Tamil. Only power hungry greedy dirty politicians for their own selfish benefit join hands with brutal Buddhist Sinhalese and create division. Now the Tamil speaking Muslims will understand the truth: If all Tamil speaking communities join hands the GOSL will think twice to attack us. Time to make decision. Muslim Congress Leadership must make a decision immediately and act accordingly without any further delay.
TRUE…MUSLIM MPs+PC REPs SHD WITHDRAW SUPPORT TO UPA NOW! JOIN HANDS WITH TNA+DPF+JVP+NSSP+ASSAD SALLY..THEN CHANGES COME SOON IN SL-POLITICS!
குமாா் என்ற பெயாில் நீங்களும் எழுதி ஒரு வித குழப்பத்தை வாசகா்களுக்கு ஏற்படுத்தாது வேறு ஒரு பெயரை தொிவு செய்யும்படி வேண்டுகிறேன்.
”நீ என்னை மன்னிக்கவில்லை
நான் உன்னை மன்னிக்கமாட்டேன்” என்றால் கவலைகள் தொடரும்.
ஒரு கை ஓசை எழுப்பாது என்பதை உணர்வோம் அன்றுதான் இருவருமே மகிழ்வோம்.
BTF முதலில் தமிழர்கள் பக்கத்தில் நின்று தமிழர்களுக்காக போராடட்டும். தமிழ் மக்களுக்காக போராடுவதாகக் கூறிகொண்டு ஏகாதிபத்தியங்களுக்கு சாமரம் வீசி மக்களிடம் எதிர்ப்பை சம்பாதித்திருக்கும் இவர்கள் இவ்வாறான அறிக்கைகளை விட்டு மக்களை ஏமாற்றுவதை இனியாவது நிறுத்திக்கொள்ளவேண்டும்.
தமிழர் அமைப்புகள் பல இதனைக் கண்டித்துள்ளன. நல்ல விடயம்.
இவர்களில் பலர் இன்னமும் யாழ் முஸ்லீம்களின் பலாத்கார வெளியேற்றத்தை இவ்வாறான தொனியில் கண்டிக்கவில்லையே. யாழ் முஸ்லீம்களின் மீள் குடியேற்ற விடயத்தில் தடைகளை ஏற்படுத்திவரும் அங்குள்ள “தலைவர்களையோ”அதிகாரிகளையோ கண்டிக்க முன்வரவில்லையே? ஏன்? முஸ்லீம்களை ஒடுக்கும் ஏகபோக உரிமையும் தமிழ் அமைப்புகளிற்குத் தானோ?
நான் எனது சக்திக்கும் வாழ்நிலைகளிற்கும் ஏற்றவகையில் இருவிடயங்களையும் கண்டித்தே வந்திருக்கிறேன். இருவிடயங்களையும் கண்டிக்காதவர்கள் சந்தப்பவாதிகள்.
## மிழர் அமைப்புகள் பல இதனைக் கண்டித்துள்ளன. நல்ல விடயம்.
இவர்களில் பலர் இன்னமும் யாழ் முஸ்லீம்களின் பலாத்கார வெளியேற்றத்தை இவ்வாறான தொனியில் கண்டிக்கவில்லையே. யாழ் முஸ்லீம்களின் மீள் குடியேற்ற விடயத்தில் தடைகளை ஏற்படுத்திவரும் அங்குள்ள “தலைவர்களையோ”அதிகாரிகளையோ கண்டிக்க முன்வரவில்லையே? ஏன்? ##
யாழில் முஸ்லிம்கள் ஒரேயடியாக மீள் குடியேற்றம் செய்யப்படவில்லை என்பது பொய் . அதேசமயம் முற்றாக மீள் குடியேற்றம் னடந்து முடிந்ததாகவும் சொல்ல முடியாது .
ஆனால் கிழக்கிலங்கியில் குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிமகளால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு பலியான தமிழர்கள் போக மிகுதி தமிழர்கள் முஸ்லிம்களால் விரட்டியடிக்கப்பட்டு அந்த தமிழ் கிராமங்கள் முழுவதும் இன்று முஸ்லிம் கிராமங்களாக மாறியுள்ளது .
எனவே இரு இனங்களூக்குமிடையேயான இணக்கப்பாடு , மீள்குடியேற்றம் என்பன இரு தரப்பிலும்நடைபெற வேண்டும் .
ஆனால் உண்மையில் அரைகுறையாகவேனும் அது தமிழர் தரப்பில்நடந்தேறியிருக்கிறது .
ஆனால் முஸ்லிம் தரப்பில் ???
எப்போது கிழக்கிலங்கையில் தமிழ் கிராமங்களிலிருந்து வெளியேற்றப்பட்ட தமிழ் மக்கள் , மீண்டும் தமது சொந்த கிராமங்களுக்கு திரும்பி போகவும், மீள்குடியேறவும். பலவந்தமாக முஸ்லிம் கிராமங்களாக மாற்றப்பட்ட அந்த கிராமங்கள் மீண்டும் தமிழ் கிராமங்களாக மாற அனுமதிக்கிறார்களோ அப்போது யாழிலும் முஸ்லிம்கள் குடியேற யாழ் மக்களும் , தலைவர்களும் , அதிகாரிகளும் பூரண ஒத்துழைப்பு வழங்குவார்கள் .
மீள் குடியேற்றம் செய்யப்படவில்லை அல்லது முழுமையாக முடிந்து விட்டது ஏன்று நானும் கூறவில்லை. அதிகாரிகள் தடை போடுகிறார்கள் அதனைக் கண்டிக்கத் தமிழர் அமைப்புகள் முன்வரவில்லை என்பதே.
இவர்கள் உண்மையில் இதய சுத்தியுடன் முஸ்லீம்கள் மீதான தாக்குதல்களைக் கண்டிக்கிறார்களா அல்லது அரசுக்கு எதிராக முஸ்லீம்களை கொம்பு சீவிவிட முயற்சி செய்கிறார்களா?
தமிழ் மக்களைத் தாக்கியவர்கள் முஸ்லீம்கல்ல காடையர்கள். அதுபோலவே அன்று முஸ்லீம்களை வெளியேற்றியவர்கள் தமிழர்களல்ல புலிகள். இன்று முஸ்லீம்களைத் தாக்கியவர்கள் சிங்களவர்களல்ல (பொது பல சேனாவைச் சேர்ந்த) காடையர்கள்.
கிழக்கில் தமிழர்களை சில (இனஅடையாளங்களிற்கு அப்பால்) காடையர்களால் தாக்கப்பட்டதற்காக அதற்கு எதுவித சம்பந்தமும் இல்லாத இதர முஸ்லீம்கள் மீது பழி சுமத்தக் கூடாது. உங்களது வாதம் புலிகளைக் காட்டி கொழும்பிலிருந்து தமிழர்களை இரவோடிரவாக வெளியேற்ற முயற்சி செய்த கோத்தபாயவின் செயலையும் நியாயப்படுத்துகிறது.
லாப நட்டக் கணக்குப் பார்த்துக் கொண்டிருந்தால் நல்லுறவு ஏற்படாது.
##மீள் குடியேற்றம் செய்யப்படவில்லை அல்லது முழுமையாக முடிந்து விட்டது ஏன்று நானும் கூறவில்லை. அதிகாரிகள் தடை போடுகிறார்கள் அதனைக் கண்டிக்கத் தமிழர் அமைப்புகள் முன்வரவில்லை##
இதற்கான பதிலைநான் முன்பே வழங்கி விட்டேன் .
யாழில் முஸ்லிம்கள் ஒரளவுக்காவது மீள் குடியேறியிருக்கிறார்கள்
ஆனால் கிழக்கில் தமிழ் கிராமங்களிலிருந்து துரத்தப்பட்டு இன்று முஸ்லிம் கிராமங்களாக மாறியிருக்கும் தமது சொம்த இடத்திற்கு ஒரு தமிழ் குடும்பந்தானும் மீள் குடியேறவில்லை.
இந்தநிலையில் யாழில் முஸ்லிம்கள் மீள் குடியேற்றம் செய்தது போதாதென ஏன் ஒப்பாரி வைக்கிறீர்கள் ?
கிழக்கில் முஸ்லிம்களால் துரத்தப்பட்ட தமிழர்களின் மீள் குடுயேற்றம் பற்றி மூச்சு விடாததன் மர்மதான் என்ன ?
நீங்கள் யாருக்கு கொம்பு சீவி விட பார்க்கிறீர்கள் ?
உங்கட கொம்பு உங்கட தலை.
இங்கு பேசு பொருள் முஸ்லீம்கள் மீதான வன்முறை பற்றிய அறிக்கை. எனது கேள்வி இதை வெளியிட்ட தமிழர் அமைப்புகளின் நேர்மை.
முஸ்லீம்கள் ஒற்றுமைக்காக ஏதும் செய்யவில்லை என்றால் தமிழர் அமைப்புகளின் அறிக்கையை நீங்கள் எதிர்க்க வேண்டும்.
##இன்று முஸ்லீம்களைத் தாக்கியவர்கள் சிங்களவர்களல்ல (பொது பல சேனாவைச் சேர்ந்த) காடையர்கள். ##
இதென்ன புது வாதமாக இருக்கிறது ? பொது பல சேனாவை சேர்ந்தவர்கள் சிங்களவர்கள் இல்லையா ?
சொல்லவே இல்லை ?
சிங்களவ்ர்கள் அனைவரும் பொது பல சேனாவில் இல்லை .
ஆனால் பொது பல சேனாவிலுள்ளவர்கள் அனைவரும் சிங்களவர்களே
சிங்கள மக்களையும் பொதுபல சேனாவையும் வேறுபடுத்தக் கற்றுக் கொள்ளுங்கள்.
## மிழர் அமைப்புகள் பல இதனைக் கண்டித்துள்ளன. நல்ல விடயம்.
இவர்களில் பலர் இன்னமும் யாழ் முஸ்லீம்களின் பலாத்கார வெளியேற்றத்தை இவ்வாறான தொனியில் கண்டிக்கவில்லையே ஏன் ? ##
கிழக்கிலஙகையின் பல கிராக்மங்களிலிருந்து தமிழர்களை வெளியேற்றிய முஸ்லிமகளை முஸ்லிம் காங்கிரசும் அதன் தலவர்களும் , ஏனைய முஸ்லிம் அமைப்புகளும் கடும் தொனியில் கண்டிக்கட்டும்
அப்புறம் தமிழ் அமைப்புகளும்நீங்கள் எதிர்பார்ததைப்போல் கடும் தொனியில் கண்டிப்பார்கள் .
இது வரை முஸ்லிம் தலைவர்கள் கிழக்கிலங்கையில் தமிழர்களை வெளியேற்றிய முஸ்லிம்களை ஒப்புக்காகவேனும் கண்டித்ததில்லை என்பதை உங்களுக்கு இடித்துரைக்க விரும்புகிறேன்..
லாப நட்டக் கணக்குப் பார்த்துக் கொண்டிருந்தால் நல்லுறவு ஏற்படாது.
மக்கள் வேறு தலைவர்கள் வேறு. இது முஸ்லீம்களுக்கும் பொருந்தும். சிங்களவர்களிற்கும் பொருந்தும். தமிழர்களிற்கும் பொருந்தும்.
டக்ளசும் லக்ஷ்மன் கதிர்காமரும் இன்னும் பலரும் தமிழர்களாய் இருப்பதற்காக எல்லாத் தமிழர்களையும் கொல்ல வேண்டுமோ?
லாப நட்டக்கணக்கு பார்ப்பதற்கு இது வியாபாரமல்ல.
இன உறவு அய்க்கியம் சம்பந்தப்பட்டது.
இன இணக்கப்பாடென்பது இரு தரப்பிலும் ஏற்படுத்தப்பட வேண்டும்.
தமிழர் தரப்பு தமது தரப்பில் ஒரளவாவது செய்துள்லநிலையில் , இன அயிக்கியத்திற்காக இதுவரை எதுவுமே செய்யாது இலங்கை அரசுடன் சேர்ந்து தமிழர்களை இது வரை காலமு ம் நசுக்கி வந்த முஸ்லிம் தரப்பிற்கு மேலும் மேலும் விட்டு தர வேண்டுமென கூறுவது உள்நோக்கம் கொண்டது.
லாலா
இன இணக்கப்பாடென்பது இரு தரப்பிலும் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் தமிழர் தரப்பு ஓரளவு நடவடிக்கை எடுத்துள்ளது என்பதில் சில முரண்பாடுகளுள்ளன. தமிழர் அமைப்புகள் தெரிந்தெடுக்கப்பட்ட விடயங்களிற்கு மட்டுமே கண்டனம் தெரிவிக்கின்றனர். இது அவர்களின் நேர்மையைக் கேள்விக்குறியாக்குகிறது. நேர்மையில் சந்தேகம் இருக்குமானால் நாம் என்ன நடவடிக்கை எடுத்தாலும் மற்றத் தரப்பு சந்தேகத்துடனே நோக்கும்.
“நீ நடவடிக்கை எடு அதன் பின் நான் நடவடிக்கை னடுப்N
“நீ நடவடிக்கை எடு அதன் பின் நான் நடவடிக்கை எடுப்பேன்” என்ற நிலைப்பாடு உள்ளவர்களிற்கு இப்போது கண்டன அறிக்கை விட அருகதை இல்லை.
Here I accept “a voter” & “lala”s comments…
எஙிக இலங்கையில் இனங்களுக்கு இடையில் ஒற்றுமை ஏற்பட்டு ராஜபக்ச அரசு பலவீனப்பட்டுவிடுமோ என பயந்த்ட்கு பயந்த்து அணிலேறவிட நாய் மாதிரி பதுகிங்கியிருந்து நோட்டம் விட்டு நசுக்கிடாம குழிபறிக்கும் ராஜபக்ச ஆட்கரவாளன் லால்லா……..
இனங்களுக்கிடையே ஒற்றுமை , ஒன்றுபடுதல் பின் அனைத்து சிறுபானமை இனங்களும் இணைந்து போராடி ( ?? ) பாஸிச அரசை வீழ்த்துதல் .
இப்படி போகாத ஊருக்கு வழி சொல்லி உசுப்பேத்தி உசுப்பேத்தித்தானே ஒடம்பே ரண களமாகியிருக்கு .
இப்போது சிங்கள அரசுக்கெதிராக பயந்து , பயந்து ஆர்ப்பாட்டம் செய்யும் இதே முஸ்லிம்கள் அடுத்த ஜெனிவா கூட்ட தொடரின்போது ஜெனிவா தீர்மானத்தை எதிர்த்தும் , தமிழர்களை எதிர்த்தும் சிங்க கொடி ஏந்திய படி போராட்டம்நடத்துவதை பார்க்கத்தான் போகிறீர்கள் .
அப்போது இந்த பீலாவை பார்க்க முடியாது . தமிழர்களுக்கெதிராகவும் , ராஜபக்ஷ அரசுக்காதரவாகவும் யாராவது ஆர்ப்பாட்டம் நடத்தினால் இப்படியானவர்கள் காணாமல் போய் விடுவார்கள்..
ரண களமானதே இணைந்து போராடாத காரணத்தால் தானே!
அந்த இலட்சணம்தான் அடுத்த ஜெனிவா கூட்டத்தொடரின்போது தெரிந்து விடுமே,,
## சிங்கள மக்களையும் பொதுபல சேனாவையும் வேறுபடுத்தக் கற்றுக் கொள்ளுங்கள்.##
பொதுபலசேனாவிலுள்லவர்கள் அனைவரும் பவுத்த சிங்களவர்களாக இருக்கும்போது எப்படி வேறுபடுத்தி பார்க்க முடியும் ?
## உங்களது வாதம் புலிகளைக் காட்டி கொழும்பிலிருந்து தமிழர்களை இரவோடிரவாக வெளியேற்ற முயற்சி செய்த கோத்தபாயவின் செயலையும் நியாயப்படுத்துகிறது.##
சரி கிழக்கில் முஸ்லிம்கள் தமிழர்களை தமது கிராமங்களை விட்டு யாரை காரணம் காட்டி வெளியேற்றினார்கள் ?
அதாவது கொழும்பிலிருந்து தமிழர்களை இரவோடிரவாக வெளியேற்ற முயற்சி செய்த கோத்தபாயவின் செயல் சரி என்கிறீர்களா?
முஸ்லிம்கள் கிழக்கில் தமிழர்களை வெளியேற்றியது கோத்தபாயா வின்நடவடிக்கைக்கு பல பவருடங்கள் முன்பு நடந்தது .
நீங்கள் அந்தநடவடிக்கைகள் சரி என் கிறீர்களா ?
மேலும் கோத்தாவினால் வெளிYஏற்றப்பட்ட தமிழர்கள் பலர் கொழும்பில் மீண்டும் குடியேறியுள்ளனர் .
கிழக்கில் அப்படியா ?
## டக்ளசும் லக்ஷ்மன் கதிர்காமரும் இன்னும் பலரும் தமிழர்களாய் இருப்பதற்காக எல்லாத் தமிழர்களையும் கொல்ல வேண்டுமோ ##
முஸ்லிம் தலைவர்கள் வேறு , முஸ்லிம் மக்கள் வேறு என பிரித்து பார்க்க முடியாது . அந்த மக்கள்தான் அவர்களுக்கு வாக்களித்தார்கள் , தலைவர்களாக்கினார்கள் .
கதிர்காமரை பொறுத்தவரை அவருக்கு தமிழ் மக்கள் ஒரு போதும் வாக்களித்ததில்லை . சிங்கள ஆட்சியாளர்கள் அவரை நியமன எம்பியாக்கி , மந்திரியாக்கி தமக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டார்கள் .
மேலும் கதிர்காமர் முஸ்லிமகளுக்கு எதிராக நடந்து கொண்டதாகநான் கேள்விப்பட்டதில்லை.
முஸ்லிம் அரசியல்வாதிகள் சிங்கள அரசோடு இணைந்து கொண்டு தமிழர்களுக்கு தீங்கிழைத்தைப்போல் , டக்ளஸ் முஸ்லிமகளுக்கு தீங் கிழைக்கவில்லை..
” டக்ளஸ் முஸ்லிமகளுக்கு தீங் கிழைக்கவில்லை..”வ
உங்களை வெளிக்காட்டியதிற்கு நன்றி.
இதில் என்னை என்ன மாதிரியாக வெளிக்காட்டியுள்ளேன் ?
டக்ளஸ் சிங்கள அரசோடு சேர்ந்து கொண்டு தமிழர்களுக்கு தீங்கிழைத்துள்ளார் .
முஸ்லிம்களுக்கல்ல …
வரலாற்றைப்படியுங்கள். ஈபிஆர்எல்எப் முஸ்லீம் களிற்கு எதிரான தாக்குதல்களில் சிலவற்றிற்குக் காரணம். அப்போது அதன் இராணுவத் தளபதி டக்ளஸ் தான்.
டக்ள்ஸ் தமிழர் முஸ்லீம்கள் சிங்களவர் ஆகிய சகலருக்கும் தீங்கு விளைவித்திருக்கிறார்.
வரலாற்றில் அப்படி எங்கும் இல்லை . இந்திய அமைதிப்படை இருந்தபோது அதன் கூலிப்படையாக இயங்கிய ஈபிஆர் எல் f , மற்றும் 3 ஸ்டார் போன்றன முஸ்லிம்களுக்கு எதிராக இயங்கியதுண்டு . ஆனால் அதற்கு சில காலத்திற்கு முன்பே டக்ளஸ் அந்த அமைப்பிலிருந்து விலகி விட்டார் , இந்தியப்படை வட கிழக்கில்நிலை கொண்டிருந்தபோது டக்ளஸ் இலங்கையிலேயே இல்லை ,
தமிழ்நாட்டில்தான் இருந்தார் .
இந்தியப்படை வெளியேறிய பின் புலிகளுக்கும் , பிரேமதாசா அரசிற்கும் மோதல் ஆரம்பமான பின்னரே இலங்கை வந்தார் .
வரலாற்றை நான் படிக்க வேண்டிய தேவையில்லை.நீங்கள்தான் சரியாக , திருத்தமாக படிக்க வேண்டியிருக்கிறது..
உங்களிற்கும் எனக்கும் வேறுபட்ட கருத்துகள் உண்டு. உங்கள் கருத்துகள் இலங்கை அரசுக்கே சாதகமானவை. உங்களுடன் வாதிடுவதில் பலனில்லை. இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்.
நீங்கள் இங்கு தெரிவிக்கும் கருத்துக்கள் இலங்கை அரசுக்கு இத்தனை காலம் ஜல்ரா அடித்த முஸ்லிமக்ளுக்கே சாதகமானவை .
இன்று பவுத்த வெறியர்களிடம் உதை படும்போது பயந்து பயந்து இலங்கை அரசுக்கெதிராக பேசுவீர்கள் .
ஆனால் எத்தனை நாளைக்கு ?
மீண்டும் தலையை சொறிந்து கொண்டு ஆளும் அரசுக்கே ஜால்ரா அடிக்க ஆரம்பித்து விடுவீர்கள் ?
## நீ நடவடிக்கை எடு அதன் பின் நான் நடவடிக்கை எடுப்பேன்” என்ற நிலைப்பாடு உள்ளவர்களிற்கு இப்போது கண்டன அறிக்கை விட அருகதை இல்லை. ##
இணக்கப்பாடென்பது இரு தரப்பிலும் ஏற்படுத்தப்பட வேண்டும் .
ஆனால் இங்கு ஒரு தரப்பு ( முஸ்லிம் ) மற்றைய தரப்பை ( தமிழ்) இணக்கப்பாடென்ற பெயரில் ஒரேயடியாக மொட்டையடிக்கவல்லவா முயற்சிக்கிறது ..
## உங்கட கொம்பு உங்கட தலை.
இங்கு பேசு பொருள் முஸ்லீம்கள் மீதான வன்முறை பற்றிய அறிக்கை. எனது கேள்வி இதை வெளியிட்ட தமிழர் அமைப்புகளின் நேர்மை. ##
நான் தலைப்பின் பேசு பொருளில்தான் பேசினேன் .
நீங்கள்தான் கொம்பு , தலை என்று ஆரம்பித்தீர்கள் . அதற்குத்தான் நான் பதில் வழங்கினேன் .
முஸ்லிம்களின் மீதான தாக்குதலை கண்டித்து தமிழ் அமைப்புகளின் அறிக்கை குறித்த உங்கள் கருத்துக்கு எனது பதில் கருத்தை ஏற்கனவே வழங்கி விட்டேன் . நீங்கள் அதனை சரியாக படிக்கமலேயேதான் பதில் கருத்து வழங்குகிறீர்கள் போலிருக்கிறது. எனது முதலாவது பின்னூட்டத்தை சரியாக வாசிக்கவும்.