Thursday, April 23, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

முள்ளிவாய்க்காலிற்குக் கொள்ளி வைத்தவர்கள் யார்? : கீர்த்தி

இனியொரு... by இனியொரு...
05/18/2010
in பிரதான பதிவுகள் | Principle posts, அரசியல்
0 0
30
Home பிரதான பதிவுகள் | Principle posts

கீர்த்தி அனுப்பியிருந்த இந்தக் கட்டுரை இனியொருவின் கருத்தல்ல. இங்கு கூறப்பட்ட சம்பங்களிற்கும் கருத்துகளுக்கும் நாம் பொறுப்பாளிகளுமல்ல. எது எவ்வாறாயினும் ஏதோ ஒரு புள்ளியில் புலம் பெயர் தமிழர்களாயினும் புலத்தில் வாழும் தமிழர்களாயினும் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். எதிர்காலம் இலங்கையில் மக்கள் யுத்தமொன்றை உருவாகுமானால் அங்கு மக்கள் விடுதலை பெற வாய்புண்டு. விடுதலைக்காகவே பங்களித்த மக்கள் தன்னம்பிக்கை இழத்தலாகாது என்ற வகையில் இக்கட்டுரை ஒரு உரையாடல் வெளியை உருவாக்குமானால் மகிழ்ச்சியடைவோம். –இனியொரு

மூன்று தசாப்த கால போராட்டம் முள்ளிவாய்க்காலில் முற்றுப்பெற்றது நம்புதற்கரிய இழப்பொன்று. எனினும் அந்த உண்மையின் முதலாம் வருட நினைவுதினம் இன்றாகும்.

ஓரிரண்டு தசாப்த காலங்களாக உலகின் பார்வை தென்னாசியா மீது திருப்பி வைத்திருந்தவர்கள் புலிகள் என்பதையும், அதன் தலைவர் பிரபாகரன் ஒரு ஆளுமை நிறைந்த மனிதராக அப்பொழுதில் பார்க்கப்பட்டார் என்பதும் எதிரிகள் கூட ஏற்கிற ஒரு யதார்த்தம்.

அவ்வாறான நிலையிலிருந்த விடுதலைப்புலிகள் இன்று வட-கிழக்குப் பிரதேசங்களில் முற்றாக இல்லை என்பதோடு, அடுத்த தலைமைக்கான ஒருவரை விட்டுவைக்காது முற்றாக எல்லாருமே அழிந்து போனார்கள் என்பது ஏற்பதற்கு சற்றுக்கடினமான உண்மை.

புலிகளின் தலைவர் பிரபாகரன் உட்பட அனைத்துத் தளபதிகளுமே ஏதோ ஒரு நம்பிக்கையின் பிரகாரமே முள்ளிவாய்க்காலில் இறுதிவரை நின்றார்கள். உயிரைக் கொடுத்துப்போராடினார்கள். ஆனால் அவர்களின் மரணத்தில் மகிழ்பவர்களாய் அவர்களிற்கு இறுதிவரை நம்பிக்கை கொடுத்துக் கொண்டிருந்த புலம்பெயர்ந்த புலிகள் இன்று மாறிவிட்டார்கள்.

ஏனென்றால் பிரபாகரனும் அவரது படைக்கட்டுமானமும் நினைவு கொள்ளப்பட வேண்டியவர்கள் என்பதை அவர்களின் வாரிசுகளாக அறிவித்து ஐரோப்பாவில் பதுங்கியிருப்பவகேளே மறைக்கிற ஒரு கொடிய நேரப் பதிவு இது. தங்களது தலைவன் என்றல்ல ஒரு சிறந்த போராளியென்றாவது அல்லது கொண்ட கொள்கைக்காக உயிர் மாண்ட ஒரு மனிதன் என்ற மரியாதைக்காவது கௌரவிக்கப்பட வேண்டிய புலிகளின் தலைவர் பிரபாகரனின் மரணம் இன்று திட்டமிட்டு மறைக்கப்படுகின்றது.

வெளிநாடுகளிலுள்ள அவரது வழிவந்த தொண்டர்களாலேயே பிரபாகரனின் மரணமும், பிரபாகரனியமும் அவமானப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. நேர்மை, நீதி, தார்மீகம் அற்ற ஒரு குழுமமாக எதிராளிகளால் வர்ணிக்கப்பட்ட புலிகள் அவ்வாறானவர்களல்ல என்ற நிலைப்பாட்டில் இருந்த பல தமிழர்களையும் மாற வைக்கிற அளவிற்கு இவர்களது இப்போதைய உள்ளக மோதல்கள் வியாபித்திருக்கின்றன.

எந்த ஒரு போரிலும் வன்மமாகப் போராடும் விடுதலைப்புலிகள் இந்த ஈழப்போர் நான்கில் செய்மதித் தொலைபேசியூடாகக் கதைத்தபடி, தங்களின் புலம்பெயர்ந்த தொடர்புகளின் அறிவுறுத்தல்களின் படி போராடினார்கள். அதுவே அவர்களின் முடிவுரையெழுதலாகவும் அமைந்து விட்டது.

இந்தத் தொலைபேசிப் பரிவர்த்தனைகள் மேற்குலக நாடுகளின் பேரிலான கற்பனாவாதத்தை விடுதலைப்புலிகள் மத்தியில் விதைத்து விட்டதோடு தங்களது புலம்பெயர்ந்த தொடர்புகள் மந்திரத்தால் மாங்காய் வீழ்த்தும் வல்லமை படைத்தவர்கள் என்ற எண்ணத்தையும் வலுவாக களத்திலிருந்த புலிகளிற்கு ஏற்படுத்தியிருந்தது.

லண்டனில் ஒரு லட்சம் பேர் திரண்டனர். ஜேர்மனியில் 50 ஆயிரம் பேர் திரண்டனர், ரொறன்டோவில் 1 லட்சத்து ஐம்பதினாயிரம் திரண்டனர். லண்டனில் மெற்றோ போக்குவரத்து ஸ்தம்பிக்கப்பட்டது. ஜேர்மனியில் சுரங்கப்பாதைப் போக்குவரத்துத் தடைப்பட்டது. ரொறன்ரோவில் ஹைவே மறிக்கப்பட்டது போன்ற கூப்பாடுகள் வன்னியில் பேரதிர்வை ஏற்படுத்தியிருந்தன.

ஆனால் உண்மை யாதெனில் மேற்குலக நாடுகளின் புலிகளின் வழிநடத்துனர்களின் செயற்பாடுகள் அந்த அரசாங்கங்கள், எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்களிடைய தமிழர்கள் பிரச்சினை தொடர்பாக இருந்த ஆதரவைக் குறைத்து அவர்களை தமிழர் விவகாரங்களிலிருந்து தனிமைப்பட வைத்தது.

இதற்கும் மேலாக ஊடக ஆதிக்கத்தைக் கொண்டிருந்த புலிகள் உண்மைகளை மறைத்து மாயை நிலையிலே புலம்பெயர்ந்த மக்களை வைத்திருந்தார். ஆயுதங்கள் தீர்ந்து போன நிலையிலும், பிரதேச கட்டுப்பாடு முறியடிக்கப்பட்ட நிலையிலும் வன்னித்தலைமை சொன்ன செய்திகளை புலம்பெயர் புலிகள் மக்களிடம் நேர்மையாகச் சொல்லவில்லை. முடிவு கடலை நோக்கிக் கண்ணெறிந்தபடியே செய்மதித் தொலைதொடர்பில் புலம்பெயர்ந்த தமது தொடர்புகளுடன் உரையாடிய படியே அங்கிருந்தவர்கள் புலிகளின் தலைமை களமாடி மடிந்தார்கள்.

களத்தின் உண்மை நிலையை புலத்திற்கு உரைக்காத புலிகளின் வெளிநாட்டுத் தொடர்பாளார்கள் களத்தையும் புலத்தையும் மாயையில் வைத்திருந்ததே இந்தப் போராட்டத்தின் இழப்பிற்கான முழுமுதற்காரணம். புலிகளின் பலம் தொடர்பான அதீத கற்பனையை விதைத்து விட்ட இவர்கள், 15,000 புலிகள் தாக்குதலிற்காக காட்டிற்குள் காத்திருக்கிறார்கள் என்ற செய்தியை மே மாதம் பரப்பி விட்டு விடுதலைப்புலிகள் தொடர்பான பாரிய எதிர்பார்ப்பொன்றை புலம்பெயர்ந்த மக்கள் மத்தியில் ஏற்படுத்தினார்கள்.

இதனால் அவர்கள் பெற்ற நன்மை எதுவெனில் இறுதிநேரத்தில் கூட சேர்க்கப்பட்ட பெருமளவு நிதியேயாகும். இதுவே இன்றைக்கும் பிரபாகரன் இருக்கிறார். காட்டிற்குள் எங்கள் படையணிகள் இருக்கின்றன என்ற பொய்களை புலம்பெயர்ந்த புலிகள் பரப்புவதற்குக் காரணமாகும்.

காட்டிற்குள் ஒரு புலிகூட இல்லை. இருந்தவர்களையும் இவர்கள் அரசாங்கத்தின் கூலிகள் அவர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டாம் எனக் கூறி அந்நியப்படுத்தி விட்டார்கள். சிறீலங்கா கூறுவது போல ஒரு புலிகூட அங்கே இல்லை. எனவே இவர்கள் இனிப் போராளிகள் என்ற வரையறைக்குள் அடக்குவதற்கான தகுதியை ஒரு சிறு அளவு கூட கொண்டிராத ஒரு கூட்டமாக மாறி விட்டார்கள்.

கவனிக்க ஊடகதர்மம் பற்ற இரவுபகலாக அழுது வடிக்கும் தமிழ்நெற், பதிவு, சங்கதி போன்ற இணையத்தளங்கள் இன்றுவரை மக்களிற்கு உண்மையை மறைக்கும் தளங்களாகவே செயற்படுகின்றன. இன்றைய காலகட்டத்தில் முழு நிதிச் செயற்பாட்டையும் கைக்குள் வைத்திருக்கிற தமிழ்நெற் இணையத்தளத்தின் பொறுப்பாளர் நோர்வே ஜெயா புலிகளின் சம்பளப்பட்டியலிலுள்ள ஒரு ஊழியர் என்பதும், தொடர்ந்து சம்பளம் கிடைக்க வேண்டும் என்பதுமே பிரபாகரனின் மரணத்தை இன்றுவரை அவர் மறைப்பதற்குக் காரணமாகும்.

உண்மையை மறைப்பவன் விடுதலைப்போராளியல்ல. புலிகளால் ஊதியத்திற்கு ஊதியத்திற்குப் பணியில் அமர்த்தப்பட்டவர்கள் தங்களது வாழ்வாதாரத்திற்கான வழியாக புலிகள் இன்னமும் இருக்கிறார்கள். பிரபாகரன் இருக்கிறார் என்ற பொய்யின் மூலம் பணம் பார்க்கலாம் என்ற நம்பிக்கையில் மக்களை உணர்ச்சி அரசியலில் வைத்திருக்கிறார்கள்.

புலத்திற்கும் களத்திற்குமான புரிந்துணர்வின்மையானனது கட்டுவதற்குக் கந்தல் துணி கூடக் கிடைக்காத ஒரு தருணத்தில், கந்தல் துணி போதும் என களம் தவிக்க, கந்தல் துணி வேண்டாம் பட்டுத்துணி வேண்டும் என புலம் அடாவடித்தனம் பண்ணியதே இந்த முள்ளவாய்க்கால் துன்பத்திற்கான அடிப்படை.
ஆயுதக்கப்பல்களை எதிர்பார்த்துக் காத்திருந்த புலிகளின் கப்பற்போக்குவரத்திற்கு இடையூறு விளைவிப்பதற்காகவே வணக்காமண் என்ற கப்பலை அனுப்பி, சிறீலங்காக் கடற்படையின் பாதுகாப்பு வலயத்தை மேலும் பலமாக்கிய புலம்பெயர்ந்த புலிகளின் மதிநுட்பத்தை வர்ணிப்பதற்கு வார்த்தைகளேயில்லை.
இனிக்கப்பல்கள் வருவதற்கே வாய்ப்பில்லை என்றவுடன் சிறீலங்காக் கடற்படையின் தாக்குதலிற்கு உள்ளான கப்பல்கள் போக மீதி இருந்தவை ஆழ் கடலில் தமது ஆயுதங்களைக் கொட்ட பிரபாகரன் உத்தரவிடுகிற அளவிற்கு அவரது வெளிநாட்டுச் செயற்பாட்டுப்பிரிவினரின் செயற்பாடுகளின் பின்னடைவு இருந்தது.

கஸ்ரோ குழுமம் என்ற இந்தக் குழுவின் பேச்சை தீவிரமாக நம்பிய பிரபாகரன் அதுவரை தொடர்பாளராக இருந்த கே.பி. என்பவரை ஓரங்கட்டி விட்டு கஸ்ரோ சார் அணியிடம் வெளிநாட்டுப் பொறுப்புக்களை ஒப்படைக்கிறார்.

புலம்பெயர்ந்த நாடுகள் பற்றிய அல்லது புலிகளின் சர்வதேச வலைப்பின்னல் பற்றிய எந்தவொரு அறிவோ அனுபவமோ இல்லாதவர்களை இவற்றைக் கவனிக்குமாறு அனுப்பபட்டதால் அவர்கள் வெளிநாடுகளிலுள்ள கஸ்ரோவிற்கு ஆதரவானவர்கள் பேச்சைக் கேட்பதைத் தவிர வேறெதையும் செய்ய முடியவில்லை. இதுவே இவர்களின் தோல்வி முகமாயிற்று.

இவர்களின் தொடர் தோல்விகளைப் பிரபாகரன் கிரகித்த போது போர் முடிவுறும் நிலையை அடைந்திருந்தது. 2009ம் ஆண்டுத் தொடக்கத்தில் கே.பியுடன் மீண்டும் உறவைப் புதுப்பித்து பழைய நிலையையடை பிரபாகரன் விரும்பினாலும் அதற்கான காலம் பிரபாகனிற்குப் போதாமலிருந்தது.

எனினும் மே மாதம் 8ம் திகதி விடுதலைப் போராட்டத்தின் தோல்விக்கான முழுப்பழியும் கஸ்ரோ குழுமத்தின் மீதே பிரபாகரனால் சுமத்தப்பட கஸ்ரோ நஞ்சருந்தித் தற்கொலை செய்து கொள்கிறார். இது கஸ்ரோவின் வெளிநாட்டுத் தொடர்பாளர்களிற்குத் தெரியாமலே நடக்கிறது. பிரபாகரனால் போராட்டத்தின் இறுதியில் துரோகிகளாக அறிவிக்கப்பட்ட குழுமம் கஸ்ரோ குழுமம் என்பது மிக முக்கியமான ஒரு நிகழ்வாகும்.

இவ்வாறு கஸ்ரோ இறந்ததே தெரியாமல் இருந்த கஸ்ரோவின் வெளிநாட்டுத் தலைமைத் தொடர்பாளர் நெடியவன் மே 14ம் தேதி திருமதி அடேல் பாலசிங்கத்தைத் தொடர்பு கொண்டு தனக்கும் கஸ்ரோவிற்கும் கடந்த பல நாட்களாகத் தொடர்பு இல்லையென்ற தனது கவலையை வெளியிடுகிறார். அவ்வளவிற்கு அந்தக் குழுவினர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தாலும் அவர்கள் ஐரோப்பிய. வுட அமெரிக்க நாடுகளில் நிதி சேகரிப்பை மட்டும் நிறுத்தவேயில்லை.
மறுபுறத்தே கே.பி.யினுடான தளபதி சூசை மற்றும் கஸ்ரோவின் அடுத்த நிலைப் பொறுப்பாளராக இருந்த திலீபன் ஆகியோர் தொடர்பாடல்கள் மற்றும் அவசர வேண்டுகோள்களையும் ஓலிவடிவப் பேட்டிகளையும் புலம்பெயர்ந்த தமிழ் மக்களிற்கு முன்வைக்கின்றனர். இது தமது நிலைமையில் ஏதோ ஒரு மாற்றம் வந்துவிட்டது என்பதை புலம்பெயர்ந்த கஸ்ரோவின் “முன்னைநாள்” தொடர்புகளிற்கு காட்டி நிற்கிறது. எனவே அவர்கள் மௌனமாக கே.பி. செய்வதைப் பார்த்தவாறு தமது நாட்களை ஓட்டுகின்றனர்.

குறிப்பாக கடந்த வருட ஆரம்பத்தில் இருந்து கே.பி.யினால் பரிமாறப்பட்ட முக்கிய தகவல்களை பிரபாகரனிடம் பகிர்வதற்கான தொடர்பாளரான வேல் என்ற இடைநிலைத் தளபதிக்கு பிரபாகரனிடம் நேரடியாகத் தகவல்களைப் பரிமாறாமல் தங்களின் ஊடகவே அதனை செய்த கஸ்ரோ பிரிவின் செயற்பாடே பிரபாகரனை அதியுச்ச கோபத்திற்கு இறுதிநாட்களில் ஆட்படுத்தியிருந்தது. இவ்வாறான செயற்பாடுகளே அவர்களை துரோகிகள் என அறிவிப்பதற்கு பிரபாகரனை இட்டுச் சென்றது.

மே 17ம் திகதி போராட்டம் முடிவிற்கு வந்ததையடுத்து தம்மை சுதாகரித்துக் கொண்ட வெளிநாடுகளிலிருந்த கஸ்ரோ குழுமம் தலைமையைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து கஸ்ரோவின் தலைமைத் தொடர்பாளராக நோர்வேயிலிருந்த நெடியவனைத் தங்களது தலைவராகப் பிரகடனப்படுத்தி கே.பி.யை ஓரங்கட்டுகிறது.

நெடியவன் என்பவர் ஒரு ஆளுமை நிறைந்த புலியல்ல. வெளிநாடுகளிலிருந்து சென்றவர்களிற்கு வழித்துணையாக வன்னிக்குள் அவர்கள் பார்க்க வேண்டிய இடங்களிற்கு அழைத்துச் செல்வதே அவரது தொழில். ஆவ்வாறு அவர் கூட்டிச் சென்ற ஒரு நோர்வேயில் வதியும் தமிழ் மாணவி இவரோடு காதல்வயப்பட்டதால், கஸ்ரோவின் அனுமதியோடு அவரை மனமுடித்து நோர்வேயில் வதியும்  ஒரு புலி.

இவ்வாறு மணமுடித்து வெளிநாடு சென்றவரை கஸ்ரோ தனது நம்பிக்கைக்குரிய தொடர்பாளாக வைத்திருந்ததால் ஏற்பட்டதே அவர் இன்று புலிகளின் தலைவராக்கப்பட்ட அவமானம். ஆனால் உண்மை யாதெனில் இன்று வெளிநாடுகளில் தேங்கிக்கிடக்கும் புலிகளின் சொத்துக்களைப் வசப்படுத்திக் கொள்ளவும், புலிகளின் ஊழியர்களின் சம்பளங்கள் தொடர்ச்சியாகச் செல்லவுமே இவரைத் தலைவராக புலம்பெயர்ந்த புலிகளின் நெருங்கிய ஆதரவாளர்கள் கொண்டாடுகிறார்கள்.

மறுபுறத்தே காலம் தனது பக்கமில்லையென்றதை பிரபாகரன் உணர்ந்த போது அவரது செல்வங்களான சாள்ஸ் அன்ரணியும், துவாரகாவும் களப்பலியாகியிருந்தனர். சயனைட் வில்லை பலவந்தமாகப் நம்பிக்கைக்குரியவர்களால் பறிக்கப்பட்ட பிரபாகரனைக் காப்பாற்றுவதற்கான கடைசி முயற்சியை பொட்டம்மான் தலைமையிலானவர்கள் 15ம் தேதி மேற்கொண்டார்கள்.

முதலாவது பாதுகாப்பு வலயம் உடைக்கப்பட்டு சென்ற கரும்புலிகள் தலைமையிலான அணியினால் இரண்டாவது பாதுகாப்பு வலயத்தை உடைக்க முடியவில்லை. இத்தாக்குதலில் பொட்டம்மானும் உயிரிழக்கிறார். பிரபாகரன் மீண்டும் முள்ளிவாய்க்காலிற்குள் முடங்குகிறார். முள்ளிவாய்க்காலின் வட முனையில் பிரபாகரனும், தென்முனையில் சூசையும் சமரில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போதே தளபதி சூசை மற்றும் வெளியகத் தொடர்பாளர் திலீபன் ஆகியோரிடமிருந்து புலம்பெயர்ந்த தமிழர்களிற்கான இறுதி அழைப்பு வந்தது.

இறுதிக் கணம் நெருங்கிவிட்டதை அறிவித்த சூசை கே.பி.யுடன் நேரடித் தொடர்பிலிருந்த அடுத்த சில மணித்துளிகளில் அந்தச் செய்தியைப் பகிர்ந்து கொள்கிறார். முள்ளிவாய்க்காலின் வட முனையில் ஏதோ வாயு அடித்து விட்டான் போலிருக்கிறது. ஆட்கள் சுருண்டு விழுகிறார்கள் என. உடனே கே.பி.

படைகளையும் அரசாங்கதையும் திசை திருப்ப ஒரு அறிக்கை வெளியிடுகிறார். பிரபாகரனும் 2000 போராளிகளும் பாதுகாப்பாக வேறொரு இடத்தில் இருப்பதாக. இது அந்த இடத்தில் பிரபாகரன் இல்லை என்று நம்ப வைப்பதற்காக

ஆனால் அடுத்த சில நொடிகளில் தொடர்பு கொண்ட சூசை தலைவர் வீரச்சாவு என்று தெரிவித்துவிட்டு வடமுனையினால் படைகள் தங்களை நோக்கி வருவதையும் அடுத்த அரை மணித்துளியில் தொடர்பு கொள்ளாவிட்டால் தானும் இல்லையென்று கருதுங்கள் என்று கூறி விட்டு தொலைபேசித் தொடர்பைத் துண்டித்துக் கொள்கிறார். கூடவே மதிவதனி பிரபாகரன் மற்றும் பாலச்சந்திரன் என பிரபாகரனின் சந்ததியே நேர்மையாக போரில் மடிகிறது.

கே.பி.க்கு அதன் பின்பு சூசையிடமிருந்து தொலைபேசித் தொடர்பு மீண்டும் வரவேயில்லை. சூசை மார்பில் குண்டேந்தியபடி வீரச்சாவடைந்த படம் இலங்கை இராணுவத்தால் பதிவேற்றப்படுகிறது. 37 வருட தமிழீழ விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் முழுதாக முற்றுப் பெற்றது.

ஆனால் இப்போது தப்பி சிறையிருக்கும் விடுதலைப்புலிகளில் வெளியுறவுத் தொடர்பாளர் திலீபன், வேல் மற்றும் தொலைதொடர்புப் பரிவர்த்தனைப் பொறுப்பாளர்கள்; புனர்வாழ்வு பெற்று மீண்டு வந்தால் அவர்களால் சிறிலங்கா அரசிற்கு இணையாக யுத்தக்குற்றவாளிகள் ஆக்கப்படப்போவது கஸ்ரோவின் வெளிநாட்டுத் தொடர்பாளர்களும். ஓவ்வொரு நாடுகளிலும் தமிழ் மக்களைப் பொய் கூறி ஏமாற்றிய புலிகளின் முகவர்களுமேயாகும்.

போராட்டத்தின் முற்றுப் பெறுதலோடு தாயகத்தில் எஞ்சியிருந்த புலிகளின் கிழக்கு மாகாணத் தளபதி தயாமோகன் உள்ளிட்ட பலர், செஞ்சோலைப் பொறுப்பாளர் ஜனனி உள்ளிட்ட பலரையும் இலங்கையிலிருந்து மீட்டெடுத்த கே.பி. செய்த ஒரு செயல் அவரது முடிவிற்குக் காரணமாயிற்று. நெடியவன் அல்ல புலிகளின் தலைவர். தானே புலிகளின் தலைவர் என கே.பி. அறிவித்த மூன்றாம் நாளே சிறீலங்காவின் புலனாய்வுப் பிரிவால் கைதியாக்கப்படுகிறார்.

இதுநாள் வரையும் கைது செய்யப்பட முடியாதவராக இருந்த ஒருவர் கைதியாக்கப்படுகிறார். போராட்டத்தின் அடுத்த கட்டத்திற்குள் புகுவதாக புலம்பெயர் புலிகள் அறிவிக்கிறார்கள். தாங்கள் இன்னமும் ஆயுதப் போராட்டத்தில் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் நெடியவனே தங்களின் தலைவர் என்றும் அறிவிக்கின்றனர்.

இப்போது விளங்குகிறதா என்ன நடந்தது என்று? புலிகளின் உள்ளிருந்து அறுக்கும் பகை நீண்ட காலமாகவே இருந்து வந்திருக்கிறது. இப்போது அதற்கு உதாரணம் நோர்வேயில் கலவியல் வாழ்வில் ஈடுபட்டிருக்கும் நெடியவன் என்கிற பேரின்பநாயகம் சிவபரன் என்கிற ஒரு சிறு பையன்.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

ஈழத்திற்கு காஷ்மீர் போல சுயாட்சி வேண்டுமாம்- ராமதாஸ் கருத்து.

Comments 30

  1. cande says:
    16 years ago

    i want to add this to my facebook . can u add a link pls 

  2. ethayam says:
    16 years ago

    பிரபாகரன் சரணடையவில்லை என்றா கீர்த்தி சொல்ல வருகின்றார்.?பிரபாகரன் சரணடைந்ததை மூடி மறைப்பதால் தமது போராட்டத்திற்கு என்ன நடந்தது ஏன் அது தோற்றுப் போயிற்று அந்தப் போரின் சதிகாரர்கள் யார் என்ற எதுவுமே தெரியாது சுற்றி சுற்றி ஒரே விதமாக நாடு கடந்த அரசு, வட்டுக் கோட்டை, வடம்பிடி கரம் கொடு மோசடிக்காரர்களிடம் தேக்கமைடைவதில் தமிழ் சமூகத்திற்கு என்ன லாபம்?

  3. mathan says:
    16 years ago

    கேபி இப்போது யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மாணவர்களைக் கூட கோதபாய உடன் சேர்ந்து சந்தித்து இருக்கிறான். சினமன் விடுதியில் உல்லாசமாய் வாள்கிறான். என்னையா புலுடா விடுரீங்க… புண்ணாக்குகளே!

  4. Vani says:
    16 years ago

    During the height of the pogrom in 1983 Indira Gandhi called TULF leader Amirthalingham and asked him whether to send in the Indian troops to save the Tamils. Mr Amirthalingham said ‘No’. One expalanation is that one of his sons was in custody in Ceylon and JR would have given orders to kill him if India went in. Is KP now in that situation?

  5. sivakumar says:
    16 years ago

    மணிவண்ணன் என்ற கஸ்ரோ சர்வதேசப் பொருப்பாளர் மட்டுமே. அவருக்கு எந்தத் தகவல்களும் தெரியாது. பொட்டம்மான் இந்திய அரசாங்கத்தின் பாதுகாப்பில் இருப்பது பற்றி கீர்த்தி என்ன சொல்கிறார்?

    • JAMES FRIEDRICH says:
      16 years ago

      அப்படி போடு அ(றி)ரிவாளை!. “மாவிலாறு” தொடக்கம்,இலங்கை – இந்திய கட்டுப்பாட்டில்,எல்லாமே “கனகச்சிதமாக” சொல்லிவைத்தால் போல் நடந்தேறியது!.எந்த ஒரு ஆயுதப் போராட்டத்திலும்,”சிகிரிப்ட் எழுதி” இயக்கியது போல்,நடத்தப்பட்டதாக வரலாறு இல்லை!.”வாதம் எழுதுவது போல”,”தமிழ் சமூக அமைப்பு” பொதுநல இலட்சியங்களில்” தவறவிட்டாலும்,”சுயநல காரியங்களில்” தவறவிடும் அமைப்பாக இல்லை!.விடுதலைப் புலிகள்,மற்றவர்கள் அழிந்தாலும், தாங்கள் தப்பிவிடுவோம் என்று “ரிஸ்க்” எடுத்தே,பல கொலைகளை செய்திருந்தார்கள்,அப்படியிருக்கும் போது,இப்படிப்பட்ட முடிவுகள்,நம்பமுடியாமலிருக்கிறது.பிரபாகரனை தவிர மேலே குறிப்பிடும் பல முக்கிய உறுப்பினர்கள் சரணடைந்தேயிருந்தனர்.பிறகுதான் என்ன ஆயிற்றென்று தெரியவில்லை!.அதாவது,கடைசிவரை இவர்கள் அனைவரும் பல நட்களாக(மாதங்களாக?),ஒருவித கட்டுப்பாட்டுக்குள் வத்திருக்கப் பட்டிருக்கின்றனர்!.

      • வாதம் says:
        16 years ago

        சீன,இந்திய பொருளாதார வளர்ச்சியைக் கண்டு,அவர்களுக்குள் முரணை உருவாக்கி,சின்னாபின்னப்படுத்த, மேற்கு எழுதிக் கொள்ளும் வசன அமைப்பு சூழல்தான் இலங்கை என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

        ஈரான்,ஈராக்,குவைற் போன்ற நாடுகளை முறையே சீனா,இந்தியா,இலங்கை நாடுகளால் பிரதியீடு செய்து பாருங்கள்.வரலாறு சிறிய மாற்றங்களுடன் மீள்பதியப்படப்போகிறது.

        சரியாக ஒரு வருடம் காத்திருந்து,’கட்டளை வந்தது சுட்டேன்’ என விளம்புவது ஈழ முனைப்பை தொய்ய விடாத வசன அமைப்பு வரலாறு.

        எ

        ழுதி வாழா வாழ்க்கை கழுதை புரண்ட களம் என்பது பழமொழி மட்டுமல்ல,பலேமொழி.

  6. kovinthan says:
    16 years ago

    பிரபாவும்;பொட்டரும் ஒருபோதும் சரணடையவோ பிடிபடவோ இல்லை. பொட்டர் உயிருடன் இருந்தால் அரசாங்கம் சொல்லவேண்டிய தயக்கம் என்ன? உண்மையில் அரசின் பிடியில் உள்ள ராம் போன்றவர்களையே அரசாங்கம் தங்களிடம் இல்லையென சொல்லும் அரசாங்கம் அதுபோன்று பொட்டர் தங்களிடம் இல்லாமலே தங்களிடம் இருப்பதாக சொல்லக்கூடிய உச்ச ராசதந்திரத்தில் சிறிலங்கா புலனாய்வு ஈடுபட்டுவருகிறது என்பதை கடந்த ஒரு வருடகாலத்தில் காணமுடிந்துள்ளது.இருக்கிறார் – இல்லை அல்லது தெரியாது என்ற சொல்லாடலின் பின்னுள்ள சிங்கள அரசின் தந்திரம் விளங்கிக்கொண்டால் மாத்திரமே உண்மைகளை பகுத்தறிய முடியும்.

    எல்லோரிடமும் ஒரு கேள்வி பிரபாகரனை எரித்து அஸ்தியை கரைத்துவிட்டோம் என்பதற்கு சாட்சியம் யாரிடமாவது உள்ளதா? சிலகாலத்தின் பின்னர் பிரபாகரனின் உடலை காட்டினால் என்ன செய்வீர்கள்? சிறிலங்கா ஒரு இறைமையுள்ள நாடு அது எதுவும் செயும் எப்ப்டியும் சொல்லும்.

  7. Jey says:
    16 years ago

    This article is showing the stupidsm. But don’t think tamils are stupid, Any one who read this article can understand everything without any explanation. This is just a fake impression to tamil peoples.

    • Dharshan says:
      16 years ago

      Yeah, stupid writer !

      Next time think about the readers.. not the one who is paying you !
      Even a child can identify the fake and real !

      retarded article and writer !

  8. PIRAGANAN says:
    16 years ago

    நாம் எத்தனை முறை விழினும் வீறுகொண்டு எழுவோம்..

    தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்…

  9. ranjani says:
    16 years ago

    கீர்த்தியிடம் சில கேள்விகள்:
    1. கே.பி அரச கையாளாக மாறிவிட்டாரா?
    2. பொட்டம்மான் எங்கே?
    3. பேபி சுப்பிரமணியம் எங்கே?
    4.நெடியவன் அரச கையாளா?
    5. உருத்திரகுமார் அரச கையாளா?
    6. வெளிநாடுகளில் எவளவு புலிப் பணம் இருந்தது, அவை இப்பொ எங்கே, யார் கையில்?
    7. கேணல் ராம் எங்கே?

  10. santhan says:
    16 years ago

    //நாம் எத்தனை முறை விழினும் வீறுகொண்டு எழுவோம்..// எழுங்கள் எழுங்கள் யாரும் தடுக்கவில்லை. ஆனால் முள்ளிவாய்க்காலில் தமிழ்மக்களை வீழ்த்தியது போல் விழுத்தி எழும்பாதீர்கள். சீ.. வெட்கமாயில்லை!!

  11. ethayam says:
    16 years ago

    உலகமே சேர்ந்து எம்மை அழித்து விட்டது எனறு புலித்தரப்பு புலம்பிக் கொண்டிருக்கிறது. எந்த உலகத்.தை நம்பி நாடு கடந்த அரசை நிர்மாணிக்கிறார்கள்? அதே உலகத்தைத்தானே தங்களை அங்கீகரிக்கும்படி கேட்கப் போகின்றார்கள்?

    ”
    பிரபாவும்;பொட்டரும் ஒருபோதும் சரணடையவோ பிடிபடவோ இல்லை”

    அவர்கள் இனி இருந்துதான் என்ன செய்யப் போகின்றார்கள?

  12. எல்லாளன் says:
    16 years ago

    இதை ஏன் இவ்வளவு காலமும் எழுதவில்லை என்பதே முதல் சந்தேகம் ?

    கஸ்ரோ இறுதி யுத்தத்தில் களப்பலியாகி விட்டார் , கேபி கைதியா இல்லை துரோகியா தெரியாது ?

    கேபி, கஸ்ரோ குழு குடும்ப மோதலின் ஒருபக்கச் சார்பான கேபி புராணமே

    இதன் பிண்ணனியில் ஒருவரை ஒருவர் துரோகியாகச் சித்தரித்து வருகின்றார்கள் ஆனால் இதில் யாருடையது உண்மை அல்லது இரண்டும் கதையா ?

    கேபி -கஸ்ரோ குடும்ப மோதலே இப்போது நடைபெறுகின்றது அது தமிழ்த்தேசிய உணர்வாகச் சித்தரிக்கப்படுகின்றது அவ்வளவே

    உண்மையில் என்ன நடந்தது என்பதை யாரும் ஒப்புவிக்க முடியவில்லை ஆதாரமும் யாரிடமும் இல்லை ஆனால் புலம் பெயர்ந்த புலி அமைப்புக்களில் ஒழிவு மறைவு பல இருக்கின்றன
    அவை ஒரு போதும் பகிரங்கமாக அறிவிக்கப்படுவதில்லை காலம் காலமாக நடந்து வந்த ஒன்று

    ஆனால் இப்போது ஈழத்தில் புலிகளின் பிரசன்னம் இல்லாத போதும் அவை தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது

    இவர்கள் யாரிடமும் தமிழ்மக்கள் பற்றியோ அல்லது சித்திரவதை படும் புலிகள் பற்றியோ எந்த அக்கறையுமில்லை

    நேற்று கனடியத் துரோக வானொலியில் கேபி பேட்டி கொடுத்திருக்கின்றார் ???

    ஆனால் உண்மையிலே கே.பி யா ? அல்லது மிமிக்கிரியா ? விபரம் அறிந்தவர்கள் விவாதியுங்கள்

  13. selva says:
    16 years ago

    நெடியவனை துரோகியாக்கி கே பியையும் அவரோட சேர்ந்துள்ள உருத்திர குமாரனையும் தாங்கிப்பிடிக்க கீர்த்தி ஆலவட்டம் பிடிக்கறேர் என்பதை புரியாத *** இல்லை தமிழர்கள். முதல்ல கே பி யோ நெடியவனோ புலிக்கெண்டு சேர்த்த காசை அங்க மிஞ்சிக்கிடக்கிற சனத்தட்ட குடுங்கபாப்பம். நெடியவன் மக்களின்ர காசில வட்டுக்கோட்ட எண்டு 80 லட்சம் டொலர்கள பாழாக்கினேர் இப்ப புலம் பெயர்த தமிழழம் எண்டு உருத்திர குமார் எத்தின லெச்சத்த கொட்டுறேரோ தெரியேல்ல. இதுக்குள்ள வேற மெம்பர்கள் சபையில கலந்துகொள்ள ஓசி பிரயாணம் செய்யப்போயினம். ஊரவன் காசுதானே நல்லா செய்யுங்கோ. அது மட்டுமல்ல அரசியல் அறிவே இல்லாம மக்கள பாதாளத்துக்குள்ள தள்ளிப்போட்டு 80 ஆயிரம் இளைஞர்களையும் கொண்டு போட்டு சரணடைந்த பிரபாகரன் வீரச்சாவடைஞசதெண்ட புலடா வேற. சூசைக்கு தலைசாய்கிறன் கடைசிவரை போராடி செத்தான். இனியும் உங்கட அரசியல் மொக்குத்தனத்த மூட்ட கட்டிவைச்சுப்போட்டு சும்மா இருங்க கீர்த்தியண்ணா. மக்கள் தங்கடபாட்ட தாங்களே பாத்துக்கொள்ளுவினம்.

    • thurai says:
      16 years ago

      யார் எதனை எழுதினாலும் புலிகள் இலங்கையில் ஒழிக்கப்பட்டு விட்டார்கள். புலம்பெயர்நாடுகளில் தமிழீழ வர்த்தக் குடும்பம் ஒருபோது ஒழியாது.
      ஒருவரும்
      அவர்களை ஒழிப்பதற்கு முன்வரமாட்டார்கள். காரணம் புலம் பெயர் தமிழர்களையே பண்ப் பசியாறும் புலிகள்தான் இவர்கள். இவர்கள் இதற்காகவே புலிகொடியுடன் அமெரிக்காவில்
      நாடுகடந்த அரசை ஆரம்பித்திருக்கின்றார்கள். புலிக்கொடியை விட்டால் புலி ஆதரவாளர்களிடம்
      பண்ம் பிடுங்க முடியாது. எந்த வித அரசியல் வெற்ரியும் இல்லாவிடினும், ஈழ்த்தமிழர்களிற்கு தீமையே
      நேரிடினும் புலிகள் வெளிநாடுகளில் வாழ வேண்டும். இதுவே புலிகளின் நோக்கம்.
      துரை

  14. santhan says:
    16 years ago

    நட்போடு துரை,
    உங்களுக்கு என்ன பிரச்சனை என்று தெரியவில்லை! புலிகள் புலிகள் என்று பயம்காட்டியே தமிழர் உரிமையை விற்பதற்கு எம்மையும் கூட்டுக்கு அழைக்காதீர்கள். திருந்திக் கொள்ளுங்கள். புலிகளின் தவறுகளை விமர்சியுங்கள். தவறுகள் இல்லாமல் இனி எப்படிப் போராட முடியும் எனக் கற்றுக்கொள்ளுங்கள். இதுதான் தேவை.

    • thurai says:
      16 years ago

      புலிகள் பயங்கரவாதிகள் உலக்த்தின் தீர்ப்பு.இது. இதனை ஏற்காத தமிழன் தமிழர்களில் அக்கறை
      கொண்டவ்ர்களா அல்லது புலிகளில் அக்கறை கொண்டவர்களா? புலிகள் இலங்கையில்
      எதுவுமே
      சிங்கள்வர்களிற்கு எதிராக் செய்ய முடியாது. இதுவரை புலிகள் செய்த போரட்டம்
      எந்த் வகையில் எவ்வளவு தூரம் ஈழத்தமிழர்களை விடுதலைக்கான் வழியைக் காட்டியுள்ளது.
      இன்னமும் புலிகள் ஈழ்த்தமிழர்களிற்குத் தேவையா? புலியின் பின்னணியில் தமிழர்களை
      அழிக்கும் சக்திகழும் த்மிழர் நலன்ளில் அக்கறையற்ரோருமே செயற்படுகின்றனர்.

      முதலில் தமிழர் தவறாக சுயநலம் கொண்ட புலிகளினால் வழிநடத்தப்படுவது தடுக்கப்ப்ட வேண்டும்.
      துரை

  15. ethayam says:
    16 years ago

    பதினேழாவது வயதில் மக்களின்
    புரட்சியாளன்..

    ஐம்பதாவது வயதில் கிட்லரின் விரிவாளன்..
    நீ பிரிந்து போனது
    எனக்கெந்த மகிழவையும் தரவில்லை..
    சுதந்திரம் கிடைத்த உணர்வைவிட..
    துவண்டு போன மனதில்
    நம்பிக்கை கொன்டு
    கை தூக்கி நின்றது..
    முகங்களின் சலனமற்ற சந்தோசம்..
    கண்கழில் மலர்ந்த கண்ணீர் பளிங்குகளாய்
    விழிகளெல்லாம் நனைந்தன..
    வார்த்தைகள் கொதிப்பற்ற மகிழ்வாய்
    எல்லாம் கிடைத்த உணர்வு..
    எத்தனையே நாள் நெஞ்சுக் குழிக்குள்ளே..
    நிஜங்களைத் தொலைத்துவிட்ட
    நினைவுப் போராட்டம்..
    எத்தனைநாள்கள் விடை தெரியாமல்
    கலைந்து போன கனவுகள்..

    விடியலை நோக்கி
    நின்ற ஏக்கம்..
    இருண்ட என் இனத்தால்
    உருவான கனவுகள்..
    உணர்வறிய கதிர்களாய்
    உடைந்து எறிந்த நினைவுள்..

    பயம் என்ற வார்த்தையை
    வீரத்திற்குள் புதைத்து விட்டு..
    மண் மீது காதலால் தாகம்
    என்ற வேகத்தால் வந்த
    எத்தனை பூக்கள் விரியமுன்
    விதைக்கப்பட்டது உன் கரங்களால்..

    கண்ணியமிக்க தோழர்களை
    கண்ணி வைத்து பிடித்திழுத்து
    கதற கதற தீயில் எரித்த வரலாறு..

    தரம்கெட்ட உன்செயல்கல் தலைசுமந்த – நீ
    தள்ளாடி நடந்து தட்டேந்த வைத்த
    உன் சிந்தனை- உனை
    தள்ளாடியில் தான்டவம் ஆடவைத்தது

    உனக்கு இரங்கல் உரைவைக்க
    எவன் வருவான் என்றெண்ணி
    நிலவுகாத்த கிளிபோல்
    அன்று இன்று நாளை என்று
    இரவ பகலாய் காத்து கிடக்கின்ற
    –உன் விழுதுகள்..
    கண்ணீரில் நனைந்து
    உன் கல்லறைக்கு கோட்டைக்கட்ட
    நான் கோமாளியும் இல்லை
    அங்கு மௌனவிப்பவர்கள்
    புரட்சிகர சிந்தனையாளர்கள்..

    எங்களுக்குள் இடைவெளிகள் அதிகம்
    என்றாலும்
    உன் கல்லறையில்
    நாம் பூ வைக்க வேண்டும்
    நீ வீரன் என்பதற்காக அல்ல
    நாம் வாழ்வதற்காக -நீ
    வீழ்ந்தாய்..!!

    மழை முடிந்த மாலைகளில்
    இப்போதும் காண்கிறேன்இ
    தனியாய் சிறகடிக்கும்
    வண்ணத்துப்பூச்சியை..!!!!!
    -சன்
    –
    அதிரடி.கொம்

  16. பரமா says:
    16 years ago

    //களத்தின் உண்மை நிலையை புலத்திற்கு உரைக்காத புலிகளின் வெளிநாட்டுத் தொடர்பாளார்கள் களத்தையும் புலத்தையும் மாயையில் வைத்திருந்ததே இந்தப் போராட்டத்தின் இழப்பிற்கான முழுமுதற்காரணம். புலிகளின் பலம் தொடர்பான அதீத கற்பனையை விதைத்து விட்ட இவர்கள், 15,000 புலிகள் தாக்குதலிற்காக காட்டிற்குள் காத்திருக்கிறார்கள் என்ற செய்தியை மே மாதம் பரப்பி விட்டு விடுதலைப்புலிகள் தொடர்பான பாரிய எதிர்பார்ப்பொன்றை புலம்பெயர்ந்த மக்கள் மத்தியில் ஏற்படுத்தினார்கள்.//

    இப்படி எல்லாம் எழுதி யாருக்கு என்ன லாபம்? எதை நியாயப்படுத்துவது? நிலவரம் ஒளிப்பதிவு ஈழக்கிழவன் ஒளிப்பதிவு என்னும் பல ஒளிப்பதிவுகள் ஊடாக அதீதமான பலம் எங்களிடம் இருக்கின்றது என்று வன்னியில் இருந்து சொல்லிக்கொண்டிருந்ததை மறுக்க முடியுமா? ஆறு வருடமாக சண்டையை காணாது முறுக்றேறியிருந்த படையணிகள் சாதிக்கப்போவதாக பிரமையை ஏற்படுத்தியது என்ன? சாள்ஸ் அன்ரனி படையணி சாதிக்கப்போதாக நம்பிக்கை வளர்த்தது என்ன? மக்கள் இடப்பெயர்வு எல்லாம் பிரசவத்திற்கான வலி என்று புதுவை கவிதையூடு நம்பிக்கை தந்தது என்ன? ஏ9 ல் ஏற எலிவாகனன் விடமாட்டான் என்று முறுகண்டியானை முன்வைத்தும் நம்பிக்கை கொடுத்தாரே ! முடிவுக்கு சற்று நாட்கள் முன்னர் வரை புலிகளின் குரல் இஸ்ரேலின் யுத்தகளத்தைப் பற்றி விபரித்து தாமும் அப்படி ஒன்றை செய்யப்போவதாக சொன்னர்கள். பலவீனமாக இருக்கின்றோம் என்பதை நன்கறிந்தும் புலத்து மக்களுக்கு அதீதமான நம்பிக்கையை எந்த அடிப்படையில் கொடுத்தார்கள்? இவற்றை எல்லாம் வெளிநாட்டுத் தொடர்பாளர்களின் தலையில் போட்டு எதை நியாயப்படுத்தி எதைச் சாதிக்கப்போகின்றீர்கள்?

    //இப்போது விளங்குகிறதா என்ன நடந்தது என்று? புலிகளின் உள்ளிருந்து அறுக்கும் பகை நீண்ட காலமாகவே இருந்து வந்திருக்கிறது. இப்போது அதற்கு உதாரணம் நோர்வேயில் கலவியல் வாழ்வில் ஈடுபட்டிருக்கும் நெடியவன் என்கிற பேரின்பநாயகம் சிவபரன் என்கிற ஒரு சிறு பையன்.//

    தோல்வி என்பது எப்போதோ ஆரம்பித்து விட்டது. முள்ளிவாய்க்கால் முடிவு நாள் அவ்வளவுதான். இந்த போராட்டத்துள் எத்தனையோ அற்புதமான மனிதர்கள் இறந்து போனார்கள். என்றைக்கு பொட்டனின் கையில் புலநாய்வு என்னும் அதிகாரம் போனதோ அன்றே தோல்வியின் ஆரம்ப நாள். முள்ளிவாய்க்கால் முடிவு நாள். இயக்கத்தின் அதிகாரத்தை கைப்பற்ற பொட்டன் எடுத்த நடவடிக்கைகள் அதற்கு தலமையின் தலையாட்டல் எல்லாம் தான் அழிவு. மாத்தையாவின் பிரச்சனையை கையாழும் பெறுப்பு பொட்டனுக்கு வந்ததும் தலமைக்கு நிகராக அதிகாரத்தை விரும்பிய பொட்டன் முதலில் மன்னர் மாவட்டத் தளபதிகளை உள்ள தூக்கிப்போட்டு தனது விழையாட்டை ஆரம்பிதான். பின்னர் படிப்படியாக பெரிய தலைகள் எல்லாத்தையும் உள்ள தூக்கிப்போட்டு வெருட்டினான். பால்ராஜ் யெயம் தீபன் லோரன்ஸ் என்று இறுதிவரை சண்டையில் நின்றவர்கள் எல்லாரும் பொட்டனின் சிறைக்குள் இருந்தவர்களே ! கருணாவில் கைவைத்தது பிசகிக்கொண்டது. கொழும்பில் இருந்து கிளம்பிய மிக விமானங்கள் ஒரு வட்டம் கூட அடிக்காமல் தமிழ்ச்செல்வனின் தலையில் குண்டை போட்டதும் துல்லியமான தகவல் அடிப்படையிலேயே. தலையாய உள்ளறுப்புகள் எல்லாம் போக நெடியவனின் உள்ளறுப்பு என்ன பெரியவிடயம்? தோல்வி எதிர்பார்த்த ஒன்றுதான் ஆனால் தலைவர் பொட்டன் போன்றவர்களின் சித்திரவதைகளையும் அவமானங்களையும் கடந்து இனவிடுதலைக்காக இறுதிவரை போராடி
    மடிந்தவர்கள் ஆயிரமாயிரம் போராளிகள். எமது இனத்தை ஒடுக்குவது உள்ளகமாக சாதியம் மையவாதம் பிரதேசவாதம் போன்ற விடயங்கள் வெளியில் சிங்கள ஒடுக்குமுறை. இந்த இருவிதமான அம்சங்களுக்கு புலித்தலமையும் விதிவிலக்கில்லை. புலிக்குள் மையவாத அடயாளமாக பொட்டன் இருந்தான். அதற்கு தலை தலையாட்டியது. ஆரம்பத்தில் மன்னார் மாவட்ட தளபதிகள் பின்னர் வன்னி மாவட்டம் இறுதியில் கிழக்கு மாவட்டம் என பொட்டன் நெருக்கடியை கொண்டுவந்ததும் அறிவிலும் திறனிலும் தானே முதன்மை என அறிவுசர் மமதை கொண்டதும் என எல்லாம் மையவாத விழைவுகள் தான். இஸ்லாமியத் தமிழர்கள் மீதான நடவடிக்கையும் இதன் விழைவுதான். பானையில் உள்ளது தான் அகப்பையில் வரும். இந்த இனம் எப்படியோ அப்படித்தான் அதன் அனைத்தச் செயற்பாடும் அமையும். அமைந்தது. இதற்கு போராட்ட முயற்சியும் விதிவிலக்கில்லை. நெடியவனையும் காஸ்ரோவையும் அல்லது பிரபாவையும் பொட்டனையும் திட்டியோ குற்றம் சுமத்தியோ எந்தப் பயனும் இல்லை. பொட்டனின் கையில் என்று இங்கே சுட்டிக்காட்டியது தனியே பொட்டனை மட்டும் இல்லை மாறாக மையவாதத்தையும் என்பதை கவனிக்கவும். ஆறுமுக நாவலர் சாதிய வெறிகொண்டவர் என்று சாதியப் பிரச்சனையை அவர்தலையில் கட்ட முடியாது மாறாக சமூகத்தின் சாதிய ஒடுக்கு முறைக்கு அவர் காலத்தின் அடயாளமாக இருக்கின்றார். வினை விழையும் பூமியில் தினையை எக்காலத்திலும் அறுவடை செய்ய முடியாது.

    • thurai says:
      16 years ago

      //மடிந்தவர்கள் ஆயிரமாயிரம் போராளிகள். எமது இனத்தை ஒடுக்குவது உள்ளகமாக சாதியம் மையவாதம் பிரதேசவாதம் போன்ற விடயங்கள் வெளியில் சிங்கள ஒடுக்குமுறை//பரமா

      இந்த உண்மையை தமிழர்கள் அறிந்து திருந்தாதவரை ஈழ்த்தமிழரை கடவுளாலும்
      காப்பாற்ர முடியாது. துரை

  17. eelavan says:
    16 years ago

    i am shame to be a tamil,fighting each other all the time,how many lifes gone now still fighting eachothers look at your faces in the mirror all full of blood,you can eazly see these articles all still thinking to pay back each others,what a shame,thuo thamila,

  18. JAMES FRIEDRICH says:
    16 years ago

    ஐயோ பரமா!,விஷயத்திற்கு “கரைட்டாக” வந்துவிட்டீர்கள்!.”எமது இனத்தை ஒடுக்குவது உள்ளகமாக சாதியம் மையவாதம் பிரதேசவாதம் போன்ற விடயங்கள் வெளியில் சிங்கள ஒடுக்குமுறை. இந்த இருவிதமான அம்சங்களுக்கு புலித்தலமையும் விதிவிலக்கில்லை. புலிக்குள் மையவாத அடயாளமாக பொட்டன் இருந்தான். அதற்கு தலை தலையாட்டியது. ஆரம்பத்தில் மன்னார் மாவட்ட தளபதிகள் பின்னர் வன்னி மாவட்டம் இறுதியில் கிழக்கு மாவட்டம் என பொட்டன் நெருக்கடியை கொண்டுவந்ததும் அறிவிலும் திறனிலும் தானே முதன்மை என அறிவுசர் மமதை கொண்டதும் என எல்லாம் மையவாத விழைவுகள் தான். இஸ்லாமியத் தமிழர்கள் மீதான நடவடிக்கையும் இதன் விழைவுதான். பானையில் உள்ளது தான் அகப்பையில் வரும். இந்த இனம் எப்படியோ அப்படித்தான் அதன் அனைத்தச் செயற்பாடும் அமையும். அமைந்தது. இதற்கு போராட்ட முயற்சியும் விதிவிலக்கில்லை. நெடியவனையும் காஸ்ரோவையும் அல்லது பிரபாவையும் பொட்டனையும் திட்டியோ குற்றம் சுமத்தியோ எந்தப் பயனும் இல்லை. பொட்டனின் கையில் என்று இங்கே சுட்டிக்காட்டியது தனியே பொட்டனை மட்டும் இல்லை மாறாக மையவாதத்தையும் என்பதை கவனிக்கவும். ஆறுமுக நாவலர் சாதிய வெறிகொண்டவர் என்று சாதியப் பிரச்சனையை அவர்தலையில் கட்ட முடியாது மாறாக சமூகத்தின் சாதிய ஒடுக்கு முறைக்கு அவர் காலத்தின் அடயாளமாக இருக்கின்றார். வினை விழையும் பூமியில் தினையை எக்காலத்திலும் அறுவடை செய்ய முடியாது.”— இதற்கு தலையாட்டிய பிரபாகரன் ஒரு முட்டாள்!.ஆனால் அவரை குறை சொல்ல முடியாது.ஆம் அகப்பையில் அவரும் அடக்கம்.இந்திய(தமிழக) அரசியல் வாதிகளும் கிரிமினல்கள்தான்,ஆனால் பயந்து,பயந்து கரைட்டாக தப்பித்து விடுகிறார்கள்.ஆனால் தமிழ்த்தேசியத்தின்? மீது அதீத நமபிக்கை வைத்த இலங்கைத் தமிழ் கிரிமினல்கள்(தேசியம் என்ப்து ஒரு அவசியமான பேய்,அதை நிலை நிறுத்த பாடுபடும் அதிகார விரும்பிகள் அனைவரும் உலகம்முழுக்க கிரிமினல்கள்தான்),அதற்கான “சமூக கண்ணோட்டம் கொண்டிருக்க வில்லை”,இந்தியாவில் இதை வித்தியாசமான கலாச்சாரம் பாதுகாப்பு கொடுக்கிறது!.காலனித்துவாதிகள் “கட்டிவிட்ட தலைப்பாகைதான்” இவர்களின் அதீத தன்னம்பிக்கைக்கு காரணம்,பொட்டனின் தேசியம் இங்கேதான் காலாவாதியாகிறது,இந்த “அதீத நம்பிக்கைக்கு” தலையாட்டி,தன்னுடைய புறச்சூழலான,”கடத்தல் கிரிமினாலிட்டியை” நம்பி,அதை தமிழ்தேசியமாகவும்(திராவிட இயக்கங்களின் புருடா),சோழ,புலிக்கொடி,கட்டபொம்மன் வசனாமாகவும்,உருட்டி,பிரட்டி உலாவந்த பிரபாகரன் ஒரு முட்டாளே!.

    • thurai says:
      16 years ago

      பிரபாகரன் முட்டாளாக இருந்ததில் தப்பில்லை. அது சரிதிரத்தில் ஒரு பகுதியாகிவிட்டது.
      ஆனால் புலிகளின் விளம்பரங்களால் ஈர்க்கப்பட புலத்துத் தமிழர்கள் முட்டாள் பரம்பரையாகவே
      மாறிவிட்டார்கள். இதுவே ஈழ்த்தமிழ்ருக்கு நடந்த் பேரழிவு.

      துரை

    • xxx says:
      16 years ago

      இது முன்னர் எழுதி வந்த அதே JAMES FRIEDRICH தானா?
      நடை மிக வேறுபடுகிறது.

  19. முட்டாள் says:
    16 years ago

    பேரறிவாளர்களே நீவிர் எல்லோரும் நீடூழி வாழ்க.

    • arivu says:
      16 years ago

      Very Good! Then need of the hour is just LISTENING!!!

  20. ethayam says:
    16 years ago

    வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிழையான இராணுவ தந்திரோபாயங்களே தமிழீழ விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்கு காரணம் என சிங்கப்பூரின் நாங்யாங் பல்கலைக்கழத்தின் சர்வதேச பயங்கரவாதம் தொடர்பான பேராசிரியர் ரொஹான் குணரட்ன தெரிவித்துள்ளார். பிரபாரன் மிகச் சிறந்த யுத்த தந்திரோபயங்களைப் பயன்படுத்திய சிறந்த இராணுவத் தலைவராக உள்நாட்டு வெளிநாட்டு ஆய்வாளர்கள் கருதிய போதிலும்இ உண்மை நிலைமை முற்றிலும் மாறுப்பட்டதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இறுதியில் பிரபாகரனின் யுத்த தந்திரோபாயங்கள் மாபெரும் தோல்வியை தழுவியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கெரில்லா போராட்ட முறைமையிலிருந்துஇ மரபு ரீதியான ஆயுத போராட்டக் குழுவாக மாற்றமடைந்தமை பிரபாகரன் இழைத்த மாபெரும் தவறு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். புலிகள் கெரில்லா தாக்குதல் முறைமையை பின்பற்றியிருந்தால் இலங்கைப் படையினரால் ஒருபோதும் யுத்த ரீதியாக தோற்கடித்திருக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கத்தின் மரபு ரீதியான படையைப் போன்றே புலிகளின் படை பலத்தையும் அதிகரிக்கும் நோக்கில் மேற்கொள்ள்ளப்பட்ட பலவந்த ஆட்சேர்ப்பு புலிகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.எவ்வித பயிற்சியுமன்ற பொதுமக்களை யுத்த களத்தில் ஈடுபடுத்தியதாகவும்இ இதனால் தோல்விகள் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 60 வீதமான உறுப்பினர்கள் பலவந்தமான முறையில் புலிகளினால் இணைத்துக் கொள்ளப்பட்டவர்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆயுத பலம் காணப்பட்ட அளவிற்கு இறுதி நேரத்தில் புலிகளிடம் ஆள் பலம் இருக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இராணுவ படை தொடர்பில் பிரபாகரன் குறைவாக கணித்து வைத்திருந்தமைஇ அரச படையினர் வெற்றியீட்ட வழிகோலியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். புலிகளின் தத்துவாசிரியரான அன்ரன் பாலசிங்கத்தின் மறைவின் பின்னர்இ யதார்த்தபூர்வமான ஆலோசனைகளை பிரபாகரனுக்கு எவரும் வழங்கவில்லை என தெரிவித்துள்ளார். இந்தியா அல்லது மேற்குலக நாடுகள் தலையீடு செய்யும் என பிரபாகரன் இறுதித் தருணம் வரையில் நம்பியிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.ஹிட்லரின் மறைவின் பின்னர் நாசி கட்சிக்கு நேர்ந்த நிலையே புலிகளுக்கு நேர்ந்துள்ளதாக பேராசிரியர் குணரட்ன தெரிவித்துள்ளார்..! இத ற்குதான் சொல்வது மக்களை மதிக்கணும் நம்ப வேண்டும் என்று. அதைவிட்டு விட்டு நெடியவன் கேபி காஸ்ரோ இவர்ககளா தமிழ் மக்களின் காவலர்கள்.

    • xxx says:
      16 years ago

      ரொஹான் குணரத்னவின் அரசியல் பற்றிக் கொஞ்சம் கவனிக்க வேண்டும். மிகவும் எகாதியபத்தியச் சார்பான பேரினவாதநிலைப்பாடு அவரது.
      முன்னர் ஜே.வி.பி. பற்றிய அவரது நூலையும் தமிழ்ப் போராளி இயக்கங்கள் பற்றிய நூலையும் படித்தோர் அவரது “ஆராய்ச்சிகளின்” பின்னால் உள்ளநோக்கங்களை அறிவர்.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...