எல்லா வளங்களையும் கொண்ட் எந்தக் குறையுமற்ற மண்ணில் சுரண்டிக் கொழுக்க அன்னியர்கள் வந்திறங்கிய முதலாம் நாளிலிருந்து மனிதப் பிணங்களை மட்டுமே பார்க்கிறோம். தேசிய இனப் பிரச்சனையை இலங்கையில் திட்டமிட்டுத் தோற்றுவித்த அன்னியர்கள் பெருந்தேசிய வாதத்தைத் தோற்றுவித்தனர். அதற்கு எதிரான தேசிய விடுதலைப் போராட்டத்தை குறும் தேசிய வாதமாக மாற்றிச் சிதைத்தனர்.
பெருந்தேசிய வாத அரசு வன்னியில் இனப்படுகொலை நடத்த அனைத்து வலுவையும் வழங்கினர். இறுதியில் அது இனப்படுகொலை அல்ல போர் விதிமுறைகள் மீறப்பட்டதால் போர்க்குற்றம் என்றனர். பேரினவாதிகள் போராளிகளைச் சிறையில் போட்டு சித்திரவதை செய்தனர். விடுதலைக்காகப் போராட மக்கள் மீதிருந்த பற்றினால் இராணுவப் பயிற்சியெடுத்துக் கொண்டவர்களை பாலியல் வதைகளுக்கு உட்படுத்தியது. சிறைகளை மனிதக் கசாப்புக்கடைகளக்கியது இலங்கை அரச பாசிசம்.
ஏகதிபத்திய நாடுகளின் ஆசியோடு மகிந்த ராஜபக்ச போன்ற கிரிமினல்கள் தமது ஆட்சியை தங்குதடையின்றி நடத்தினர்.
சித்திரவதைகளால் சிதைக்கப்பட்ட போராளிகள் புனவாழ்வு வழங்கப்பட்டவர்கள் என்று மகிந்த பாசிசம் பொய் கூறியது. கைதுசெய்யப்பட்ட பலர் எங்கிருக்கிறார்கள் என்பதே தெரியாத நிலையில் போராளிகளைத் தண்டிக்காமல் விட்டது தவறு என்று இலங்கையில் போர்க்குற்ற ஆய்வு நடத்ததும் அமரிக்க அடியாள் ஸ்ரிபன் ராப் கூறியுள்ளார்.
மகிந்த ராஜபக்சவின் அரசாங்கம், விடுதலைப் புலிகளின் போரில் ஈடுபட்ட முன்னாள் உறுப்பினர்களை தண்டிக்காமல் அவர்களுக்கு புனர்வாழ்வளித்தமை ஏற்புடையதல்ல என்று ராப், இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுடன் கடந்த 6 ம் திகதி நடத்திய சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் அரசை அமரிக்கா அறுபது ஆண்டுகளாகத் தண்டிக்கப் போவதாக நாடகம் நடத்தி வருகிறது.
“விடுதலைக்காகப் போராட மக்கள் மீதிருந்த பற்றினால் இராணுவப் பயிற்சியெடுத்துக் கொண்டவர்களை பாலியல் வதைகளுக்கு உட்படுத்தியது. சிறைகளை மனிதக் கசாப்புக்கடைகளக்கியது இலங்கை அரச பாசிசம்.”
இதைத்தான் புலிகளும் ஏனைய இயக்கங்களுக்கு செய்தனர். அது திரும்ப புலிகளை அடித்துள்ளது. ஆனால் ஒரு விசயம் புலிகள் தாக்கும் போது ஏனைய இயக்கங்களின் முகாம்கள் மக்கள் மத்தியில் தான் இருந்தன. ஆனால் அவர்கள் அந்த மக்களை பணயக்கைதிகளாக வைத்திருக்கவில்லை. ஏனென்றால் அவர்களுக்கு தெரியும், புலிகள் அந்த மக்களையும் கொன்றுவிடுவார்கள் என்பது. புலிகளிடம் சரணடைந்த அந்த இளைஞர், யுவதிகளில் எத்தனை பேர் உயிருடன் விடுதலை செய்யப்பட்டார்கள். புலிகளினால் கொண்டு செல்லப்ப்பட்டவர்களில் எத்தனை பேர் எப்போது இறந்தார்கள் என்பது அவர்களது குடும்பத்தினருக்கு தெரியாததால் கிரியைகள் கூட செய்யமுடியாது தவிக்கின்றார்கள். புலிகள் மட்டுமல்ல ஏனைய இயக்கங்களும் பல கொலைகளை செய்திருக்கின்றார்கள். ஆகவே அனைவரும் விசாரித்து தண்டிக்கப்பட வேண்டியவர்களே. தமிழர்களும் எதனையோ பேரை உயிருடன் எரித்துள்ளார்கள். சந்தியில் வைத்து கொன்றுள்ளார்கள். குழுவாக வைத்துக் கொன்றுள்ளார்கள். இராணுவத்தினர் மட்டுமல்ல. ஆகவே ராப் கூறியதில் எந்தத் தப்பும் இல்லை. உங்களுக்கு மட்டும் தண்டனை இல்லை. குற்றம் செய்த தமிழர்களுக்கும் தண் டனை காத்திருக்கிறது என்பதை கோத்தபாயவுக்கு தெரிவித்திருக்கின்றார்.
1973. A Britisher had written a book that Sri Lanka is divided nation. Dr. Navaratna Bandara did not want me to read that then when he was also not a doctorate. Industrial revolution hit Europe first. The most developed continent. Only they got engaged in colonialism. English know that better than others,