மாலத் தீவில் 30 ஆண்டு கால சர்வாதிகார ஆட்சிக்குப் பின்னர் பாராளுமன்றத் தேர்தல் ஊடாக அதிகாரத்திற்கு வந்த அதிபர் மொஹமட் நசீட் திட்டமிடப்பட்ட இராணுவ – போலிஸ் சதி ஒன்றின் மூலம் பதவி துறந்தார். இலங்கையில் கல்விகற்ற நஷீத் இன் குடும்பத்தினர் இலங்கையில் தஞ்சமடைந்துள்ளனர். முன்னைய சர்வாதிகார ஆட்சிக்கு ஆதரவாக செயற்பட்ட நீதிபதி ஒருவரைக் கைது செய்ய உத்தரவிட்டதைத் வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்ட போலீசார், சர்வாதிகார ஆட்சிக்கு ஆதரவான சிலரை இணைத்துக்கொண்டு மாலைதீவு தலை நலரில் நடத்திய வன்முறையைத் தொடர்ந்து முகமது நஷீர் தனது பதிவை இராஜினாமா செய்தார். இதனையடுத்து, மாலத்தீவின் புதிய அதிபராக முகமது வாஹீத் பதவியேற்றார். துப்பாக்கி முனையில், தனது அதிபர் பதவி பறிக்கப்பட்டதாக நஷீர் கூறினார்.
மாலத்தீவில் விரைவில் அமைதி திரும்ப 2 மாதத்தில் மறு தேர்தல் நடத்த வேண்டும் என்று முன்னாள் அதிபர் நசீத் கோரிக்கை விடுத்துள்ளார்.
சர்வாதிகாரிகளின் ஆதரவு பெற்ற புதிய அரசு இதனை நிராகரித்துள்ளது. முகமது நஷீத் மற்றும் முன்னாள் பாதுகாப்பு துறை அமைச்சர் ஆகியோருக்கு எதிராக குற்றவியல் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. இந்த தகவலை மாலத்தீவு குடியரசு கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் ஆதம் காபூர் தெரிவித்தார். எனினும் இது குறித்து எந்த உத்தரவும் இது வரை கிடைக்கப்பெறவில்லை என மாலத்தீவு தலைமை போலீஸ் அதிகாரி அப்துல்லா ரியாஸ் தெரிவித்தார்.
நஷீத் பதவி விலகியதை தொடர்ந்து மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். கிளர்ச்சியை கட்டுப்படுத்த புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அதிபர் முகமது வாஹித் ஹசன், உள்துறை மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சர்களை நியமித்துள்ளார். தலைநகர் மாலேயில் ஆயிரத்திற்கும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த மோதலில் 3 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் கூறப்பட்டது. இதுவரை சுமார் 20 போலீஸ் நிலையங்கள், அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்கள் தாக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் முகமது ஷமீல் தெரிவித்தார்.








‘ஆசிய-பசுபிக் பிராந்தியத்தில் எமது கழுகுப்பார்வை குவிக்கப்படுகிறது’ என்று அண்மையில் பராக் ஒபாமா கூறிய விடயம் நினைவிற்கு வருகிறது.
முஸ்லிம்நாடுகலில் குடியரசுநடப்பது கடினம் தான்.
சர்வ்வாதிகாரம்/ரானுவ ஆட்சி தான் பெரும்பாலும். பாகிச்தானிலும், ஆப்ரிகநாடுகலிலும் எத்தனை .முறை பார்த்துவிட்டோம்?