ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் போர்க்குற்ற விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டுமென்று அமெரிக்காவை சர்வதேச மன்னிப்புச்சபை வலியுறுத்தியிருப்பது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஜனாதிபதியின் ஊடக பணிப்பாளர் , பேச்சாளருமான பந்துல ஜயசேகர, “இது முக்கியத்துவ மற்றதும் குழப்பத்தை தோற்றுவிப்பதுமானதொன்று’ என்று குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவுக்கு தனிப்பட்ட பயணத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி சிலநாட்களில் இலங்கைக்கு திரும்பி விடுவார் என்று அததெரண இணையத்தளத்துக்கு பந்துல ஜயசேகர தெரிவித்துள்ளார்.
மனித உரிமை மீறல்கள் தொடர்பாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்படும் இராணுவத்தின் பிரதம தளபதியாக இருக்கும் ஜனாதிபதி ராஜபக்ஷவிடம் சர்வதேச சட்டத்தின் பிரகாரம் விசாரணை செய்வதற்கான கடப்பாடு அமெரிக்காவுக்கு இருப்பதாக சர்வதேச மன்னிப்புச் சபை விடுத்திருந்த அறிக்கையில் தெரிவித்திருந்தது.







