Friday, April 24, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

மனித உரிமைப் போராளி பாலகோபால் மறைந்தார்.

இனியொரு... by இனியொரு...
10/09/2009
in இன்றைய செய்திகள்
0 0
5
Home இன்றைய செய்திகள்

palagolal

வாழ்நாள் முழுவதும் மனித உரிமைக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட ‘மனித உரிமைப் போராளி‘ டாக்டர் .கே.பாலகோபால் (வயது: 52) நேற்று (08.10.2009), ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு மனைவி, ஒரு மகன் உள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஈடு செய்ய முடியாத இழப்பு இது. மனித உரிமைத் தளத்தில் போராடிக் கொண்டிருப்பவர்களுக்கு அவர் ஒரு சிறந்த வழிகாட்டி.கணிதத்தில் முனைவர் பட்டம் பெற்ற பாலகோபால், ஐதராபத்திலுள்ள கக்காடியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றிவர். நக்சல்பாரி அரசியல் மீது ஏற்பட்ட ஈர்ப்புக் காரணமாக அவர் தன் வேலையை உதறிவிட்டு, மனித உரிமைக் களத்தில் இறங்கியவர்.காவல் மரணங்கள், போலி மோதல், மரண தணடனை ஒழிப்பு ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்திப் போராடியவர். ‘ஆந்திரபிரதேச சிவில் உரிமைக் குழு‘ என்ற அமைப்பில் பணியாற்றியவர். நக்சலைட் அமைப்புடன் முரண்பாடு ஏற்பட்டு, தனியாக ‘மனித உரிமை அமைப்பு‘ நிறுவி செயல்பட்டவர்.80-களில் ஆந்திர போலீசார் முன்னின்று நடத்திய ‘பிரஜா பந்து‘ என்று அமைப்பினரால் கடத்தப்பட்டவர். இவரைக் கடத்தி வைத்துக் கொண்டு நக்சலைட் அமைப்பினர் பிடியில் இருந்த இரண்டு போலீசாரை விடுவிக்க ‘பிரஜா பந்து‘ அமைப்பினர் கோரிக்கை வைத்தனர். பின்னர் நக்சலைட்கள் இரண்டு போலீசாரையும் விடுவித்த பின்னர் விடுவிக்கப்பட்டவர்.போலி மோதல் குறித்து ஆந்திர உயர்நீதிமன்றத்தில் வாதாடி, போலி மோதல் நடந்தால் இந்திய தண்டனைச் சட்டம் 302 பிரிவின்கீழ் போலீசார் மீது வழக்குப் பதிய வேண்டும் என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை பெற்றுத் தந்தவர். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கறிஞராக ஆந்திர உயர்நீதிமன்றத்தில் பணியாற்றி வந்தவர்.தலை சிறந்த எழுத்தாளர். தொடர்ந்து EPW இதழில் எழுதி வந்தவர். அவரது எழுத்தில் நேர்மையும், கறாரான பார்வையும் வெளிப்படும். சில ஆண்டுகளுக்கு முன் அவரை நேர்காணல் கண்டது நெகிழ்வான அனுபவம்.1993 முதல் அவரோடு நான் நெருக்கமான உறவுக் கொண்டவன். 1996-இல் போலீசாரின் அச்சுறுத்தல் நிறைந்த சூழலில் அந்திராவின் நக்சலைட்கள் ஆதிக்கம் நிறைந்த நான்கு மாவட்டங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, போலி மோதல் குறித்து ஆய்வு மேற்கொண்டது மறக்க முடியாதது. 1998-இல் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 26 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்ட போது, அதை எதிர்த்து முதலில் குரல் கொடுத்தவர்.ஒரிசா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் கிறித்துவர்கள் மீது நடந்த தாக்குதல் குறித்த உண்மை அறியும் குழுவில் இடம்பெற்று அவ்ரோடு பணியாற்றினேன். அதுதான் அவரை கடைசியாக பார்த்தது. கடந்த ஆகஸ்ட் 7-ந் தேதி முஸ்லீம் இடஒதுக்கீடு குறித்து அவரிடம் விரிவாக தொலைபேசியில் உரையாடியதுதான் கடைசி பேச்சு.அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கல். இன்னும் விரிவாக பாலகோபால் பற்றி எழுத உள்ளேன். இந்தப் பதிவையும் கூட அழுகையை அடக்கிக் கொண்டுதான் எழுதினேன்.http://kosukumaran.blogspot.com/

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

இலங்கை செல்லும் குழு : டீ.ஆர் பாலு தலைமை

Comments 5

  1. sugunadiwakar says:
    17 years ago

    மதுரையில் தலித் தோழமை மய்யம் ஏற்பாடு செய்த கூட்டங்களில் தோழர்.பாலகோபாலின் உரைகளைக் கேட்டிருக்கிறேன். அவரது மரணம் மனித உரிமை செயற்பாட்டாளார்களுக்கு இழப்புதான்.

  2. Guru.Radhakrishn an,Nellikuppam--607105 --Cuddalore Districy says:
    17 years ago

    The information about Dr.Balagopal’s death yesterday reached me today morning though my friend.My hearty condolances io the grieved family of veteran humanrightist leader.

  3. ஜமாலன் says:
    17 years ago

    மாபெரும் மனித உரிமை போராளியான பாலகோபால் மரணம் ஈட செய்ய முடியாத இழப்பாகும். அவரது மனித உரிமை போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதே அவருக்கு நாம் செய்யும் சரியான அஞ்சலியாக இருக்கும்.

  4. தமிழவன் says:
    17 years ago

    ஆந்திர அரசபயங்கரவாதிகளின் சிம்மசொப்பனம் அன்புத் தோழர்.முனைவர் பாலகோபால் அவர்கள். ஆந்திரம் மட்டுமல்லாது இந்தியா முழுமைக்குமான அரசுகள் அப்பாவி மக்கள் மீது ஏவிவிடப்படும் மனித உரிமை மீறல்கள், அரசுகளின் அத்துமீறல்களை அம்பலப்படுத்தியதில் தோழருக்கு பெருபம்பங்குண்டு. மேலும் தோழர் சுகுமாரன் குறிப்பிட்டவாறு. இந்தியத் தண்டனைச் சட்டம் 320ன் மிக முக்கிய போராளி என்பதில் அய்யமில்லை. இத்தகு மிக முக்கிய மனித உரிமைப் போராளிகளை நாம் இழப்பது எமக்கு மட்டுமல்ல இந்திய சமூகங்களில் தம் இருத்தலுக்காகவும், சுயநிர்ணய உரிமைக்காகவும் போராடும் சாமானிய மக்களினதும் பேரிழப்பே. தோழரை இழந்துவாடும் குடும்பத்தாருக்கும், உடன் பணியாற்றிய சக மனித உரிமை ஆர்வலர்களுக்கும், போராளிகளுக்கும் எமது ஆழ்ந்த இரங்களும், தோழருக்கு எமது வீர வணக்கங்களும்.

  5. டி.அருள் எழிலன். says:
    17 years ago

    பாலகோபால் மாதிரியான மனித உரிமைப் போராளிகள் அருகி வருகிறார்கள். மனிதாபினாமமுள்ள மனிதர். அவர் மிகச்சிறந்த கணித மேதை என்று நண்பரொருவர் இன்று காலை பகிர்ந்து கொண்டார். அவருக்கு நாம் வணக்கம் செலுத்துவோம்.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 
Loading Comments...