Sunday, April 26, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

‘மதமாற்றம் தவறல்ல’ :சாராவை விடுவிக்கக் கோரும் மனித உரிமை அமைப்புகள்.

இனியொரு... by இனியொரு...
03/27/2010
in இன்றைய செய்திகள்
0 0
9
Home இன்றைய செய்திகள்

பௌத்தத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறி பௌத்தத்துக்கு எதிராக நூல்கள் எழுதினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கைப் பெண்ணை விடுவிக்குமாறு பஹ்ரேன் நாட்டு மனித உரிமை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக கல்ப் டெய்லி நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

சாரா மலனி பெரேரா என்ற சிங்களப் பெண் தனது இளவயது முதல் பஹ்ரேனில் வசித்து வந்தவராவார். இஸ்லாத்தை தழுவிக்கொண்ட சாரா, தான் அந்த மதத்தை நேசிப்பதற்கான காரணத்தை விளக்கியும் மதங்களை ஒப்பிட்டும் இரு நூல்கள் எழுதியுள்ளார்.

இந்நிலையில் விடுமுறைக்காக இலங்கை வந்தபோது அவர் கைது செய்யப்பட்டதாக பி.பி.சி. செய்திச் சேவை தெரிவித்தது.

சாராவை விடுதலை செய்வதற்கு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக பஹ்ரேன் மனித உரிமைகள் சங்கத்தின் செயலாளர் நாயகம் டாக்டர் அப்துல்லா அல் டீரசி தெரிவித்துள்ளார்.

“சாரா மலனி பெரேரா அவரது சொந்த விருப்பின் பேரிலேயே இஸ்லாம் மதத்துக்கு மாறியுள்ளார். அவரை யாரும் பலவந்தப்படுத்தவில்லை. அவர் எழுதிய நூல்களில் பௌத்த மதத்துக்கு எதிரான கருத்துகள் இருப்பதாக நான் நினைக்கவில்லை.

இலங்கை அதிகாரிகள் அவரை விடுதலை செய்து பஹ்ரேனுக்கு அனுப்ப வேண்டும். பஹ்ரேனில் அவர் நீண்டகாலம் வசித்தவர். அவருக்கு இது சொந்த நாட்டைப் போன்றது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

1999 ஆம் ஆண்டு சாரா இஸ்லாம் மதத்துக்கு மாறினார். அவரைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினரும் இஸ்லாம் மதத்தை தழுவிக் கொண்டதாக பஹ்ரேனின் கல்ப் டெய்லி நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

‘இருளிலிருந்து வெளிச்சத்துக்கு’ என்ற நூலும் கௌதம புத்தரின் உண்மையான போதனைகள் மற்றும் கேள்வி-பதில் அடங்கியதாக மற்றுமொரு நூலினையும் அவர் வெளியிட்டுள்ளார். அவற்றை இலங்கையிலிருந்து பஹ்ரேனுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தபோதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதேவேளை, பஹ்ரேனின் பல்வேறு மனித உரிமை அமைப்புக்களும் சாராவுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

மாணவன் சடலமாக மீட்பு:சம்பவத்தின் பின்னணியில் அரசுடன் சேர்ந்தியங்கும் தமிழ்க் ஆதரவுக்குழு?

Comments 9

  1. Siva kuna says:
    16 years ago

    இலங்கை முழுமையான பெளத்த நாடாக மாற வேண்டும் என்பது மகிந்த சிந்தனையின் முழுமையான நோக்கம். அதன் அடிப்படையிலேயே சிறுபான்மையினரின் வழிபாட்டுச் சுதந்திரங்களின் மீது சிங்கள அரசு துணிந்து கை வைக்கின்றது.வடக்கு கிழக்குப் பகுதிகள் திட்டமிட்டு பெளத்த சிங்கள மயப்படுத்தப் படுகின்றன. இதற்கு டக்ளஸ் கருணா போன்ற நக்கி வாழும் பிராணிகளும் துணை போகின்றன.மதமாற்ற்ம் என்பது ஒவ்வொருவரது மன மாற்றமே. அந்தச்சுதந்திரத்தில் கைவைப்பதன் மூலம் இந்துத்துவ இஸ்லாமியப் பயங்கரவாதிகளுக்கு ஒப்பானதாக பெளத்த பயங்கரவாதத்தினை கட்டியெழுப்ப மகிந்தவும் அவரது காவல் நாய்களும் முனைந்துள்ளனர்.

  2. kazeeb says:
    16 years ago

    பயங்கரவாதிகளான புலிகள் தங்களின் ஈழத்தில் மற்ற மதத்தினர் இருக்கக் கூடாது என்பதற்காக இஸ்லாமியர்களின் வழிபாட்டுத் தலங்களை தகர்த்தார்கள் அது பாஸிஸம் இல்லையா? அப்பொழுது இதை நீங்கள் கேட்டிருந்தால் புலிகள் உங்களை உயிருடன் விட்டிருப்பார்களா? உங்களவன் செய்தால் ஒரு நியாயம் சிங்களவன் செய்தால் ஒரு நியாயம்.

    • Soorya says:
      16 years ago

      புலிகள் ஒருபோதும் மத விடயங்களில் தலையிட்டதில்லை. இந்து சமயத்தைத் தவிர வேறு மத வழிபாட்டைத் தடை செய்ததுமில்லை. இஸ்லாமியருக்குள் இருந்த காட்டிக் கொடுப்போரை அகற்ற புலிகளுக்கு வேறு வழி இருக்கவில்லை. இது தான் உண்மை.

    • Garammasala says:
      16 years ago

      தமிழருக்குள் இருந்த காட்டிக் கொடுப்போரை அகற்றவும் அதே நடை முறையைப் பயன் படுத்தியிருக்கலாமே?

      முஸ்லிம்களை விரட்டியது தவறென்று புலிகளே ஏற்றுக்கெண்டபிறகும் சில புலி வால்கள் அதே பழைய பொய்களைச் சொல்லிக்கொண்டே இருக்கின்றன.
      Fபாசிசச் சிந்தனை என்பது குறுகிய தேசியவாததின் சிறிய ஒருநீட்சி தான்.

      முஸ்லிம்களின் படுகொலைகளில் புலிகளின் பங்கின் அளவுக்கு இல்லாவிடினும் பிற தமிழ் அமைப்புக்கட்கும் பாரிய பங்குண்டு.

      புலிகள் சில இடங்களில் சாதியத்தைக் கூடத் தடை செய்ய்யவில்லை. ஏனென்றால் சாதியம் இந்து மதத்தின் பிரிக்க முடியாத பகுதி என்று அவர்கள் நினைத்திருக்கலாம்.

      • Soorya says:
        16 years ago

        நடந்த்ததைச் சொன்னால் புலிவால், பாசிசம் என்ற எடுத்தவாக்கான குற்றச்சாட்டைத்தவிர வேறொன்றும் எழுத்தத் தெரியாதா? முன்னுக்குப்பின் முரண்பாடாக மாத்திரம் எழுத்தெரியுமோ? புலிகள் உயர் சாதி பார்தோருக்கு கடும் தண்டனை கொடுத்தது தெரியாதுபோல் ஒருபுறம், மறுபுறம் புலிகளின் சிந்தனையெல்லாம் அறிந்தவராக இவர் இருக்கிறாராம். உண்மையை எழுதுவோரல்லாம் புலிவால் அல்ல. புலி புலி என்றே பயம் காட்டியது போதும்!

        • kampan says:
          16 years ago

          எங்கட திலீபனை தல உண்னா விரதத்திற்கு அனுப்பினதே பெரிய பிழை ஏன் சூசையை அனுப்பேல்ல சொல்லுங்கோ சூரியா.

          • Soorya says:
            16 years ago

            தகுதி உள்ளவனைத் தெரிந்து எடுப்பதில்தான் இருக்கிறது தல இன் ஆளுமை!

      • Garammasala says:
        16 years ago

        போராடினது செத்தது எல்லாம் தாழ்த்தப் பட்ட வறுமைப்ப்பட்ட சனம். தண்டனை கொடுத்த புலிகள் வடமராட்சியிலை எத்தனை கோவில்களில் தீண்டாமையை விட்டு வைத்தார்கள் என்று விசாரித்தால் விளங்கும்.

        இடுகையில் முன்னுக்குப் பின் முரணாக என்ன சொல்லப்பட்டது?

        அகதி முகாம்களில் தீண்டாமை கடைப்பிடிக்கப்பட்டதே! அதுவும் தீண்டாமையைப் புலிகள் ஒழித்ததாலா?

  3. saravanan says:
    16 years ago

    செருப்புக்கடையும் ,டெய்லர் கடயும், கொத்துரொட்டிக்கடையும் போட்டு வாழ்ந்த அப்பாவி முஸ்லீமை புலிகள் வெளீயேற்றீயது பெரிய குற்றம்..பாவம் சோனகர்.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...