இலங்கை அரசிற்கு எதிரான போர்க்குற்ற விசாரணைக்கு இந்தியா எதிரான நிலைப்பாட்டையே கடைப்பிடிக்கின்றது என்றும், இலங்கைக்கு தனது முழு ஆதரவையும் வழங்குகிறது என்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இலங்கையில் நடைபெற்ர போர்க்குற்றங்களில் இந்திய அரசு நேரடியாகவோ மறைமுகமாகவோ பங்களித்திருப்பதான தகவல்கள் வெளிவரும் நிலையில் இலங்கை அரச அமைச்சரின் கூற்று கவனத்தில் கொள்ளத்தக்கது.
இந்திய ஆதரவு இலங்கைக்கு பெரும் பலத்தை அளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த மே மாதம் 16ம் திகதி இலங்கை இந்திய அமைச்சர்களுக்கு இடையில் நடைபெற்ற சந்திப்பினைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கை தொடர்பில் ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க இன்று பாராளுமன்றில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.







