வெளிநாட்டு சக்திகள் மகிந்த ராஜபக்ஷவை பதவியில் இருந்து அகற்றும் நிலை உருவானால், நாட்டின் அப்பாவி மக்கள் பாதிக்கப்பட நேரிடும் எனவும் இதனால் அதற்கு முன்னர் உள்நாட்டு சக்திகள் அவரை பதவியில் இருந்து அகற்ற வேண்டும் என நவசமசமாஜ கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்தார்.
இன்றைய அரசாங்கத்தை பாதுகாப்பது என்பது நிறைவேற்று அதிகாரத்திற்கும் அப்பால் சென்ற பாசிசவாதம் உருவாக இடமளிப்பதாகும். ராவணா பலய, பொதுபல சேனா போன்ற அமைப்புகளை வீதியில் இறக்கி அரசாங்கம் தனது தேவையை நிறைவேற்றி வருகிறது.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சியை ஒழிக்க இனவாதமற்ற பொது வேட்பாளரை தேடுவது சிரமமானது. நம்பிக்கை வைக்கக் கூடிய தலைவர் ரணில் விக்ரமசிங்க எனவும் விக்ரமபாகு கூறியுள்ளார்.
அதேவேளை 88ம், 89ம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட கொலைகளுக்கு ஜே.வி.பி மன்னிப்பு கோருவது கேலிக்குரியது. அவர்கள் கொண்டிருந்த தவறான கொள்கை தொடர்பிலேயே ஜே.வி.பியினர் மன்னிப்பு கோர வேண்டும்.
இவ்வாறு விக்ரமபாகு கருணாரத்ன தேரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்ச என்ற பேரினவாதிக்குப் பதிலாக மற்றொரு பேரினவாதியான ரனில் விக்ரமசிங்கவைப் பதவியிலமர்த்த முற்படும் விக்ரமபாகு கருணரத்ன மக்களிடம் மன்னிப்புக்கோரும் நிலை உருவாக வேண்டும்.
மகிந்தாவை பதவியில் இருந்து அகற்றி சர்வதேச நகர்வை திசைமாற்ற சிங்கள தேசம் எதிர்பார்க்கும் இதே வேளை தமிழர்கள் எதற்காக போராடுகின்றார்கள் சிங்கள தேசத்தின் நிலைப்பாட்டடில் ஆட்சி மாற்றங்கள் பயன் அளித்திருந்தால் சர்வதேசத்தின் தலையீடானது சிங்கள தேசத்தின் நகர்வே அதனை தேடிக்கொள்ளும் போது அதற்காக சிங்கள தேசம்மாற வேண்டும் என்பது சந்தற்பத்தை பயன்படுத்தவே அன்றி தமிழர்களின் நலன்களுக்காக யாரும் இதுவரை குரல் கொடுக்கவில்லை. என்பதற்காகவே சர்வதேசத்தின் தலையீடு இல்லாமல் இனி தமிழர்களின் பிரச்சனை தீர்கப்பட முடியாது.
காரணம் இந்தியா அவசரம் காட்டும் அளவிற்கு இதுவரை நகராததே இத்தனைக்கும் காரணம். அதனைப்போல் போர் முடிவிற்கு வந்து ஐந்து வருடங்கள் கடந்துள்ள நிலையில் இராணுவக் கட்டுப்பாடட்டில் வளர்கப்படும் இனவாதமானது எதிர்காலத்தை பாதுகாப்பதற்கு அல்ல என்பதனை உணர்ந்து கொண்டால் தமிழர்களினது உரிமை தமிழர்களுக்கு கையளிகப்படும் பட்சத்தில் சிங்கள தேசம் தம்மைதாம் அழிக்கும் நிலை உருவாகி இருப்பது அவரவர் அறியாமை . தமிழர்கள் இலங்கை இந்தியா சர்வதேசம் என தமது கோரிக்கைகளை முன்வைத்தபோது தமிழர்களை பயங்கரவாதம் ஆக்கி இந்திய அரசியல் வெற்றி தோல்விகளை நிர்ணயிக்கும் அளவிற்கும் சர்வதேச அரசியல் நிலை வரைக்கும் உலகத்தமிழினம் முன்னேறுவதற்கு சிங்கள தேசமே காரணமாக இருந்துள்ளது. தமிழர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும். சிங்கள தேசம் இனவாதத்தை வளர்க்க வேண்டும் என்ற பிரிவினை ஆனது சிங்கக்கொடி ஏற்றிய போதே நிர்ணயிக்கப்பட்டுள்ளது அதனால் சிங்கள தேசம் சிங்கக்கொடி அகற்ற முன்வராதவரை தமிழர்கள் தமது உரிமைக்காக போராடுவது யதார்தம். அதற்கான பதிலை இலங்கை அரசாங்கம் தேட வேண்டியது காலத்தின் கட்டாயம் வரலாற்றுக்கடமை . என்பதே கால யதார்தத்தின் நகர்வு . அதற்கான மிகப்பெரும் கடமை பாரத தேசத்திற்கு உள்ளது . பாரதத்தின் படி முறையானது 13வது திருத்தச்சட்டம் ஆரம்பத்தின் நகர்வு அதனை கையாள சிங்கள தேசம் எடுகப்படும் முடிவே எதிர்காலம் எது என்பதனை தீர்மானிக்கும். அதனால் இலங்கையில் ஈழத்தமிழர்கள் சம உரிமை பெற்று வாழ வேண்டும் என்பதற்கு இனி எந்த நாடும் மாற்றுக்கருத்து தெரிவிக்க முடியாது.