Sunday, April 26, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

பேரினவாத்தை ஆதரிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கறைபடிந்த தேர்தல் அறிக்கை

இனியொரு... by இனியொரு...
12/30/2014
in இன்றைய செய்திகள்
0 0
6
Home இன்றைய செய்திகள்
அறிக்கையை வெளியிட்ட ஊடக ஒன்றுகூடலில்
அறிக்கையை வெளியிட்ட ஊடக ஒன்றுகூடலில்..

வாக்குப் பொறுக்கும் கட்சிகளில் ஒன்றான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிரிசேனவிற்கு ஆதரவு வழங்குவதாகத் தெரிவித்துள்ளது. வாக்குக் கட்சிகள் அனைத்தும் தமக்குத் தேவையான நியாயங்களை முன்வைத்து மக்களை மந்தைகளாக்கி வருகின்றன. இடதுசாரிக் கட்சிகள் என்று அழைத்துக்கொள்ளும் கட்சிகள் சிலவற்றிற்கு திடீரென சிறுபான்மைத் தேசிய இனங்கள் மீதான பற்று ஏற்பட்டிருந்தாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் போன்ற அவமனானகரமான தேர்தல் அறிக்கையை வெளியிடவில்லை. உள்ளூர் வாக்களார்களையும் மீறி தமது ஏகாதிபத்திய எஜமானர்களின் நலன்களைப் பிரதிபலிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அறிக்கை மற்றொரு வலராற்றுக் கறை.

சாராம்சத்தில் சுய நிர்ணைய உரிமையை நிராகரித்தும், இலங்கையில் இதுவரை நிலவிவந்த ஒற்றையாட்சி முறையிலான தரகு முதலாளித்துவ ஜனநாயகத்தை மீளமைக்கும் நோக்குடனும் தேர்தலில் மைத்திரிபால சிரிசேனவை ஆதரிப்பதாகக் கூறியுள்ளது.

பின் காலனியக் காலம் முழுவதும் நிலவிவந்த சிறுபான்மைத் தேசிய இனங்களையும் சிங்கள உழைக்கும் மக்களையும் ஒடுக்கும் பிரித்தானியர்கள் ஒட்டிவத்த தரகு முதலாளித்துவ ஜனநாயகத்தை மீள்மைக்கப் போவதாகக் கூறியுள்ளது. கடந்த காலம் முழுவதும் ஜனநாயகம் என்ற பெயரில் நடைமுறைப்படுத்தப்பட்ட பேரினவாதத்தை ஏற்றுக் கொண்டு ஒற்றை ஆட்சிக்குள் மக்களை வாழ நிர்பந்தித்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி போன்ற தமிழர்களின் பேரால் அரசியல் பிழைப்பு நடத்தும் கட்சிகள் தமது எஜமானர்களின் நலன்களை மட்டுமே கோரிக்கைகளாக முன்வைக்கும் அடிமைகள். கடந்த தேர்தலில் இனப்படுகொலையில் நேரடியாகப் பங்காற்றிய சரத் பொன்சேகாவை ஆதரித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இத் தேர்தலிலிம் தம்மைப் பேரினவாதிகளின் அடியாட்களாகவும் சிங்கள உழைக்கும் மக்களின் எதிரிகளாகவும் அறிவித்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வரலாற்றுக் கறைபடிந்த அறிக்கை:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்ற இரு பிரதான வேட்பாளர்களின் நிலைப்பாடுகளையும், பிரகடனங்களையும் கூர்ந்து கவனித்து வந்ததோடு,

இலங்கையிலுள்ள தமிழ் மக்களின் அரசியல் தலைமைத்துவம் என்ற வகையில் தமிழ் பேசும் மக்களின், குறிப்பாக வடக்குக் கிழக்கிலுள்ள தமிழ் பேசும் மக்களின் கருத்துக்களையும் மனதில் கொண்டு, வரலாற்று முக்கியத்துவம் மிக்க இந்த ஜனாதிபதித் தேர்தலில் அந்த மக்களையும் மற்றைய பிரஜைகளையும் சரியாக வழிநடத்தும் பொறுப்பு எம்மிடமுள்ளது.

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் ஜனநாயகமும், சட்டமும் ஒழுங்கும் முன்னெப்போதும் இல்லாத வகையில் சீரழிக்கப்பட்டுள்ளன. இதனால் நம் நாட்டிற்கு ஏற்பட்டுள்ள பாரதூரமான விளைவுகள் பின்வருமாறு:

1. நாடு சர்வாதிகார ஆட்சியை நோக்கிச் செல்கின்றது. நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி, அரசின் அனைத்து அதிகாரங்களையும் தன் கையில் வைத்திருக்கும் சர்வாதிகாரியாக மாறிவருகின்றார். அத்தோடு தான் நினைத்தபடி சட்டத்திருத்தங்களைச் செய்து மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதியாக முயல்வதானது இந்த அரசின் சர்வாதிகாரப் போக்கைத் தெளிவாகக் காட்டுகின்றது.

2. நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையினால் நீதித்துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக உச்ச நீதிமன்றமும், மேன்முறையீட்டு நீதிமன்றமும் சுதந்திரமாகச் செயற்படமுடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது.

பிரதம நீதியரசருக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட குற்றப்பிரேரணை தொடக்கம் இந்த ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான முறையற்ற சட்டத்திருத்தங்கள் வரை அனைத்து நிகழ்வுகளும் நீதித்துறையின் வீழ்ச்சியையே காட்டுகின்றன.

த.தே.கூ. பாராளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் 18வது சட்டத் திருத்தத்துக்கு எதிராகவும், பிரதம நீதியரசருக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட குற்றப்பிரேரணைக்கு எதிராகவும் தொடர்ந்து குரல்கொடுத்து வந்ததையிட்டு பெருமைகொள்கின்றது. அன்று 18வது சட்டத்திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்துத் தவறு செய்தவர்களுக்கு தமது தவறை திருத்திக் கொள்வதற்கான ஒரு அரிய வாய்ப்பை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் வழங்குகின்றது.

3. ராஜபக்ஷ அரசால் நமது பாராளுமன்றம் மதிப்பிழந்துள்ளது. பணத்தைக் காட்டி எதிர்க்கட்சி உறுப்பினர்களைத் தன்பக்கம் இழுத்து, மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைப் பெற்று, அதனைப் பயன்படுத்தி நாட்டிற்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய அரசியலமைப்புச் சட்டத்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன் விளைவாக இன்று எமது பாராளுமன்றம் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியின் கைபொம்மையாக மாறிக்கிடக்கின்றது.

4. அரச நிர்வாகத்தின் முக்கிய பதவிகளுக்கு சுயாதீன நியமனங்களை, நேர்மையாகச் செய்வதற்கு ஏதுவாக வடிவமைக்கப்பட்டிருந்த அரசியலமைப்பின் 17வது சட்டத்தை மாற்றியதன் மூலம் உச்ச நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம், நீதிச்சேவை ஆணைக்குழு, தேர்தல் ஆணையம், அரசசேவை ஆணைக்குழு, மனித உரிமைகள் ஆணைக்குழு, இலஞ்ச ஊழல் ஆணைக்குழு, சட்டமா அதிபர் மற்றும் கணக்காய்வாளர் நாயகம் போன்ற உயர்பதவிகளுக்கு தாம் விரும்பியவர்களை நியமிக்கும் சர்வாதிகாரத்தை இந்த ஜனாதிபதி பெற்றுள்ளார். இது நாட்டிற்கும், நீதித்துறைக்கும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

5. நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியின் எதேச்சதிகாரமானது சுதந்தர ஊடகங்களுக்கும், சிவில் அமைப்புகளுக்கும், தகவல் பரிமாறும் சுதந்திரத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

ராஜபக்ஷவின் சர்வாதிகாரப் போக்கானது ஜனநாயகத்தை நலிவுறச் செய்து நாட்டை மிக மோசமான நிலைக்குக் கொண்டு செல்லும் என்பதே த.தே.கூ. வின் துல்லியமான கருத்தாகும்.

ராஜபக்ஷ அரசு எப்பொழுதும் தமிழ்பேசும் மக்களுக்கு பாதகமாகவே செயற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் தமிழர் பிரச்சினைகளுக்கு பிளவுபடாத இலங்கைக்குள் நேர்மையானதும், நியாயமானதும், நடைமுறைச் சாத்தியமானதும், நீடித்து நிலைக்கக்கூடியதுமான ஒரு அரசியல் தீர்வினைக் காண த.தே.கூ. அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவருகின்றது.

அத்தீர்வு பற்றிய எமது நிலைப்பாட்டை எழுத்து மூலமும், வாய்மொழி மூலமும் நாம் பகிரங்கமாக நாட்டுக்குத் தெரியப்படுத்திவந்துள்ளோம். யுத்தத்திற்குப் பின்னர் ராஜபக்ஷ அரசானது தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வினைப் பெற்றுத்தர முயலாது காலத்தை வீணடிக்கும் கபடத்தனமான செயல்களையே செய்துவந்துள்ளது.

யுத்தம் காரணமாக வடக்குக் கிழக்கில் இடம்பெயர்ந்த இலட்சக்கணக்கான தமிழ்பேசும் மக்கள் இன்னும் மீளக் குடியமர்த்தப்படவில்லை. வீடுகளோ, வாழ்வாதாரங்களோ, பெற்றுக் கொடுக்கப்படவில்லை. அதற்குப் பதிலாக வடக்குக் கிழக்கில் ஆயிரக்கணக்கான ஏக்கர் தனியார் காணிகளை ராஜபக்ஷ அரசு ஆக்கிரமித்துள்ளது.

உச்ச நீதிமன்றம் மற்றும் பாராளுமன்றத்திற்குக் கொடுத்த வாக்குறுதிகளைப் பொருட்படுத்தாது ராஜபக்ஷ அரசு இப்பொழுது நாட்டின் ஏனைய பகுதிகளிலும் கண்டபடி காணிகளைச் சுவீகரித்து வருகின்றது.

பாதைகளையும், பாலங்களையும் கட்ட கண்மூடித்தனமாகச் செலவிடப்பட்ட பெரும்தொகைக் கடன் பணம், வரி என்ற பெயரில் பொதுமக்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது.

யுத்தம் முடிந்து நீண்டகாலமாகியும் வடக்குக் கிழக்கில் உள்ள தமிழ்பேசும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த இந்த ராஜபக்ஷ அரசு உருப்படியான எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.

இன்றும் வடக்குக் கிழக்கில் உள்ள தமிழ்பேசும் மக்கள் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகின்றனர். அவர்களுக்கு தகுந்த வாழ்வாதாரமோ, வீடுகளோ இல்லை. போதுமான உணவோ, சுய மரியாதையோ, பாதுகாப்போ இன்றி அவர்கள் வாழ்ந்துவருகின்றனர். குறிப்பாகப் பெண்களும், பிள்ளைகளும் பாலியல் பலாத்காரங்களுக்கு உள்ளாகின்றனர்.

யுத்தத்தால் இறந்தவர்களுக்கும், காயப்பட்டவர்களுக்கும், காணாமல் போனவர்களுக்கும் தடுப்பில் உள்ளவர்களுக்கும் எவ்வித இழப்பீடும் நீதியும் இன்னும் கிடைக்கவில்லை. ராஜபக்ஷ அரசு தமிழ்பேசும் மக்களுக்கு மோசமான துன்பங்களையும், துயரங்களையும் மட்டுமே வழங்கியுள்ளது.

இனங்களுக்கிடையில் நல்லுறவை ஏற்படுத்துவதற்குப் பதிலாக சிறுபான்மை மக்கள் மீதும் அவர்களின் வணக்கஸ்தலங்கள்மீது தாக்குதல் நடத்த தீவிரவாதக் குழுக்களுக்கு இடமளித்தது. அத்தோடு நில்லாமல் தாம் அரங்கேற்றிய இன, மத வன்செயல் தாக்குதல்களுக்கு நியாயம் கற்பிக்கவும் முயன்றது.

இத்தகைய ஒரு சூழ்நிலையில்தான் தற்போதைய ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையை ஒழித்து, 18வது திருத்தத்தை நீக்கி, சுயாதீன ஆணைக்குழுக்கள் மற்றும் சட்டம் ஒழுங்கை மீண்டும் நிலைநிறுத்தும் உன்னத நோக்கோடு களம் இறங்கியுள்ள பொது எதிரணி வேட்பாளரை நாம் வரவேற்கின்றோம்.

பல்லின மக்கள் வாழும் நம் நாட்டில், அனைத்து இன மக்களும் ஒற்றுமையாய், சமத்துவமாய், சுய கௌரவத்துடன் வாழ ஆரோக்கியமான ஒரு ஜனநாயக ஆட்சி ஏற்படுத்தப்படுவதற்கு சகல இன மக்களுடனும் முறையாக ஆட்சி அதிகாரங்கள் பகிரப்படவேண்டும் என்பது த.தே.கூ. வின் கருத்தாகும்.

எனவே சர்வாதிகாரத்திலிருந்து நமது நாட்டையும், ஜனநாயகத்தையும் காப்பாற்றுவதற்காகவும்,நமது உன்னத விழுமியங்களான சமத்துவம், நீதி, தன்மானம், சுதந்திரம் என்பவற்றை மீளப் பெறுவதற்காகவும் நாம் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ராஜபக்ஷ அரசை நிச்சயம் தோற்கடிக்க வேண்டும்.

இதற்காக அனைத்துப் பிரஜைகளும் குறிப்பாகத் தமிழ்பேசும் மக்களும் தமது வாக்குகளை அன்னப் பறவைச் சின்னத்தில் போட்டியிடும் பொது எதிரணி வேட்பாளர் மைத்ரிபால சிறிசேனவுக்கு வழங்குமாறு அன்புடன் வேண்டுகின்றோம். என குறிப்பிடப்பட்டுள்ளது.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post
உறிஞ்சப்படும் மலையகமக்களினது இரத்தமும், மலையக மக்களுடைய எதிர்காலமும் : செங்கோடன்

உறிஞ்சப்படும் மலையகமக்களினது இரத்தமும், மலையக மக்களுடைய எதிர்காலமும் : செங்கோடன்

Comments 6

  1. sumerian says:
    11 years ago

    இன்றைய கேள்வி மகிந்தவா அல்லது மைத்திரியா என்பதே. இதில் த.தே.கூ முடிவு மிகச் சரியானது. அதுவே தமிழர்களில் மிகப்பெரும்பான்மையோரின் விருப்பமும். எதையும் விமர்சிக்கும்போது அதற்கான தீர்வினையும் முன்வைக்கவேண்டும். தை 8 இல் இந்த முடிவு சரியா என தீர்ப்பு வரும். வழக்கம் போல தை 10 இல் இனியொருவில் வாக்குப்பொறுக்கி அரசியல் எனச்சாடி கட்டுரைகள் வரும். ஆனால் அதற்கான மாற்று எங்குமே நடைமுறைப்படுத்தப்படவில்லை.

    • தமிழ் மூடன் says:
      11 years ago

       த.தே.கூ எந்தவிதமான முடிவு எடுத்தாலும் 90% தமிழர்கள் மகிந்தவிற்கு எதிராக.. சுய விருப்புடன் வாக்களிப்பார்கள்….  த.தே.கூ வெளிப்படையாக.. நிபந்தனைகளின்றி  மைத்திரிக்கு மண்டியிட வேண்டுமா???
      த.தே.கூ முடிவினால் மகிந்தவிற்கு சில சிங்கள பௌத்த அடிப்படை வாதிகளின் வாக்குகள் கூடுதலாகக் கிடைக்கலாம் !!!!  த.தே.கூ ன் முடிவு மகிந்தவின் பிரசாரத்துக்கு உதவும்

      • a voter says:
        11 years ago

        ததேகூ ஒன்றும் மண்டியிட்டு “தாருங்கள் ” என்று கேட்கவில்லை. 
        இன்று எந்தவொரு ஜனநாயகப்போராட்டமாயினும் நடத்தமுடியாத சூழல் உள்ளது.  அதனை மாற்றவேண்டிய தேவை இருக்கிறது. அதனையே ததேகூ செய்கிறது.  
        மாறாக மைத்திரி தான் “நல்லாட்சிக்காக எனக்கு ஆதரவளியுங்கள்” என்று கேட்டார்.

  2. தமிழ் மூடன் says:
    11 years ago

    இது சம்பந்தனின் நன்றிக் கடன்
    சந்திரிக்காவின் ஆட்சியல் பவள் கவச வாகனங்களிலும் உலங்கு வானுர்திகளிலும் 300 படையினரின் பாதுகாப்புடன் உல்லாசமாக சந்திரிக்காவின் நேரடி பாதுகாப்புடன் சுகபோகத்தை அனுபவித்த சம்மந்தன் திருகோணமலையில் அண்று சந்திரிக்காவிடம் கேட்டது ஒரு சாராயபார் லைசென்ஸ் மட்டும்தான். புலிகளிடம் இருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ள என்று கூறி சம்மந்தன் சந்திரிக்காவிடம் பெற்ற சலுகைகள் விபரிக்க முடியாதவை. 
    நன்றி: http://www.tamilnewsweb.com/

  3. Kumar says:
    11 years ago

    ரணிலிடம் ஏமாறிய புலிகள் மகிந்தவை தீா்க்கதாிசி என்று கூறி மக்களை வாக்களிக்க வற்புறுத்தினாா்கள் இப்போது அதன் பலனை பந்தி பந்தியாக எழுதுகிறோம் இப்போது மைத்திாியை இட்டு கனவு காணத்தொடங்குவோம் ஏற்கனவே படையை குறைக்கவோ தீா்வு வழங்கவோ தயாாில்லை என்று கூறிவருவதாக செய்தி.

  4. bala says:
    11 years ago

    சம்மந்தர் அவர்களின் பாராளுமன்றத்திற்கு உலகத்தில் மதிப்பில்லாமல் போவதால்தான் அதனது மதிப்பை கூட்டத்தான் மைத்திரிக்கான ஆதரவை கேட்கிறார் இத்தெரிவு சனாதிபதியும் அவரது குடும்பமும் அடிக்கும் கொள்ளையில் தமக்கு பங்கு தரவில்லை அதனால் மைதிரி தலைமையில் கொள்ளையில் தமக்கான பங்கை தீர்மானித்தபின்னே தமிழ் மக்களிடம் வாக்குப் பிச்சை கேட்கிறார்

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...