தமிழ்ப் பேசும் மக்களின் சுயநிர்ணைய உரிமைக்கான போராட்டம் இலங்கை அரச பாசிஸ்டுக்களால் முற்றாகத் துடைத்தெறியப்பட்ட பின்னர், உளவாளிகளும் வியாபாரிகளும், கொள்ளைக்காரர்களும் அதனை முழுமையாகக் கையகப்படுத்திக்கொண்டார்கள். இந்தப் பிழைப்புவாதிகள் மக்களின் அவலங்களை விலைப் பொருளாக்கிச் சுருட்டிய பணத்தில் தமக்கெனத் தனியார் படைப்பிரிவுகளைக்கூட உருவாக்கிக் கொண்டனர். தேசியம் என்ற பெயரில் மாபியாக் குழுக்கள் போன்று புலம்பெயர் நாடுகளில் செயற்பட்டுவரும் இக்கும்பல்களின் பின்புலத்தில், ஈழப் போராட்டத்தைச் சிறுகச்சிறுக அழித்து இனப்படுகொலை வரை நடத்திச்சென்ற இலங்கை இந்திய ஐரோப்பிய உளவு நிறுவனங்கள் தங்கு தடையின்றிச் செயற்படுகின்றன.
மக்களின் அவலங்களைப்பற்றிப் பேசுவதும், பிரிந்து செல்லும் உரிமைக்கான போராட்டத்தை முன்னெடுப்பதும் இலங்கையில் எவ்வளவு ஆபத்தான பணி என்பது வெளிப்படையான உண்மை. புலம்பெயர் நாடுகளிலும் மக்களை ஏமாற்றிப் பணம்பறித்த மாபியாக் கும்பல்களிடமிருந்து அதே வகையான ஆபத்து காத்திருக்கிறது என்பதை நிராகரிக்க முடியாது.
இலங்கையின் எல்லைக்குள்ளேயே காணப்படாத வங்கதேசக் காடுகளில் மட்டுமே வாழும் புலிச்சின்னத்திற்காக கோட்ப்படுகளற்ற கும்பல்கள் மோதிக்கொள்வது அவமானகரமானது.
வங்க தேச புலிச் சின்னம் பொறிக்கப்பட்ட கொடியை முன்வைத்து எழுந்த சச்சரவு இன்று அறிக்கப் போராக மட்டுமே வெளிப்படுகிறது எனினும் இதன் பின்புலத்தில் பெரும் திருட்டு வர்த்தகக் கும்பல்களின் தலையீடுகள்ன் காணப்படுகின்றன.
பிரித்தானியத் தமிழர் பேரவை(BTF) நடத்திய முள்ளிவாய்க்கால் நினைவு நாளில் வங்க தேசப் புலிச்சின்னம் பொறிக்கப்பட்ட கொடி தொடர்பாக எழுந்த சர்ச்சையின் பின்னர் தமிழர் ஒருங்கிணைபுக் குழு (TCC) வெளியிட்டுள்ள அறிக்கை:
‘அன்பான தமிழ் உறவுகளே.
தனிப்பட்ட யாரையாவது குறை கூறின் அது அவரவர் பிரச்சனையென விட்டுவிடலாம். அவரவர் தமது தர்மத்திற்கேற்ப முடிவையுமெடுக்கலாம். ஆனால் ஒரு அமைப்பைச் சார்ந்தோரெனத் தேர்ந்து குறை கூறின் பதிலளிக்கவேண்டிய நிலையும் பொறுப்பும் அந்த அமைப்பிற்குளது. அந்தவொரு காரணத்தினாலேயே இதனை எழுதுகின்றோம். ஆனால், பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல்.
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு (TCC) ஈழத் தமிழரின் தாயகம், தேசியம், தன்னாட்சி என்பவற்றையே தம்மூச்சாகக் கொண்டுள்ள மக்கள் அணி. தமிழீழத் தேசியக்கொடி எமது தேசியச் சின்னங்களில் உன்னத இடத்தை வகிக்கும் ஒன்று. எமது மாவீரர்களின் தியாகத்தினாலே உரமேற்றப்பட்டு வருவது. தேசியத்தலைவரினாலே பூசிக்கப்படுவது. 2009 இலே உலக நாடுகளின் நாடாளுமன்றங்களின் முன்னாலே 73 நாட்கள் வரையிலே கவனயீர்ப்பு நிகழ்த்திய வேளையிலே – குறிப்பாகப் பிரித்தானியா போன்ற நாடுகளிலே – இக்கொடியைக் காவற்றுறையினர் எதிர்த்தனர். எமது உறவுகள் அதனைக் கைகளிலே ஏந்துவதற்காகப் பொலிசாரினாலே தாக்கப்பட்டனர். சிறை பிடிக்கப்பட்டனர். வழக்குத் தாக்கலும் செய்யப்பட்டனர். ஆனால், பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடியினையும் தமிழீழத் தேசியக் கொடியினையும் வேறுபடுத்துவதெவ்வாறெனவறிந்த காவற்றுறை எமது தேசியக் கொடிக்கு அனுமதி அளித்தது. நாம் மண்டபங்களினுள்ளேயும் அம்பலத்திலேயும் எமது தேசியம் சார்ந்த நிகழ்ச்சிகளிலே தேசியக் கொடி ஏற்றுவதை வழக்கமாகக் கொண்டுள்ளோம். காவற்றுறையினர் சூழ்ந்துநிற்கப் பிரித்தானிய முன்னணி அரசியற்கட்சி நாடாளுமன்றவுறுப்பினர்களும் எம்மோடிணைந்து மரியாதை செய்ய எமது தேசியக் கொடி உரிய முறையிலே ஏற்றப்படுவதை யாவருமறிவீர். எமது இளைஞரும் யுவதியரும் பல்கலைக்கழகங்களினுள்ளேயும் அவ்வாறே ஏற்றினர்.
முள்ளிவாய்க்காலிலே ஆயிரமாயிரமாய் எமது மக்களும் மாவீரர்களும் தம்மை இக்கொடியின் விடுதலைக்காகவே ஈந்தனர். அவ்வாறான முள்ளிவாய்க்கால் நிகழ்வின் நினைவெழுச்சியின் போது அக்கொடி ஏற்றப்படுவதை எதிர்பார்க்கும் எந்த ஒருவரையும் பிழையானவரென்று யாருங் கருத முடியாது.
இம்முறை நிகழ்ச்சியிலேயும் எமது தேசியக்கொடி ஏற்றப்படமாட்டாது என்ற முடிவிலே பிரித்தானியத் தமிழர் பேரவை (BTF) உள்ளதாக நாம் அறிந்தோம். எமது ஒருங்கிணைப்பாளர் தொலைபேசி மூலமாகத் தொடர்பு கொண்டபோதும் அவ்வாறே கூறப்பட்டு அவர்கள் அறிக்கையிலுள்ளவாறே நியாயங்களும் எடுத்துரைக்கப்பட்டன.
பி. த. பேரவையின் மூவருக்கும் எமக்கும் இடையிலே 21.04.2014 அன்று முள்ளிவாய்க்கால் மே 18 நிகழ்ச்சி பற்றிய கூட்டம் நடைபெற்றது. அதிலேயும் தேசியக் கொடியின் முக்கியத்துவம் பற்றிக் காரசாரமான வாதம் நடைபெற்றது. எமக்கு அனுமதி தரும் அதே பொலிசார் அவர்களுக்கு அனுமதி மறுப்பது விந்தையாகவுள்ளது என்பதையும் அவ்வாறான தன்மையை நாம் ஒன்றாகச் சென்று அவர்களிடம் நியாயம் கேட்கவேண்டுமென்றும் அவர்களுக்கு எம்மாலே எடுத்துக் கூறப்பட்டது. தொடங்கிய நிலையிலேயே கூட்டம் முடிவடைந்தது. தாம் பி. த. பேரவையின் செயற்குழுவிலே இதுபற்றிக் கதைப்பதாகக் கூறிச் சென்றனர். பின்னர் எவ்வித மாற்றமுமில்லாத முடிவையே அறிவித்தனர்.
பொதுமக்கள் மனநிலையை நன்கறிந்த த. ஒ. குழுவின் ஒருங்கிணைப்பாளர் பி. த. பேரவையின் பொறுப்பாளர்களுடன் தொலைபேசிமூலமாக இதுபற்றி மீண்டும் பேசியுள்ளார். இறுதியாக மே 16 வெள்ளியன்றும் பி. த. பே. யின் பொறுப்பாளரோடு நிலைமைகளை விரிவாகக் கதைத்துள்ளார். 17ம் திகதி சனியன்று நண்பகல் வரையிலும் இதுபற்றிய ஏற்ற முடிவை எதிர்பார்த்திருந்தோம். எந்நிலையிலும் அவர்கள் தம்முடிவிலே உறுதியாகவிருந்தனர்.
பி. த. பேரவையினரின் ஊடக நிகழ்ச்சிகளின் மூலமாக யாவற்றையுமறிந்த இளைஞர்கள் மிகவும் கவலையடைந்தனர். உண்மை நிலையை அறிய எம்மை நாடினர். யாவும் பி. த. பே. இன் முடிவேயென்பதை அறிந்த அவர்களிலே சிலர் தாமும் அவர்களோடு பேசிப் பார்த்தனர். தம்மை ஏற்ற விடுமாறும் பாதகமான விளைவுகளுக்குத் தாமே பொறுப்பாகுவாரெனவும் கேட்டனர் எனக் கேள்வியுறுகின்றோம். எதுவும் பலனளிக்கவில்லை. ஈற்றிலே விரக்தியுற்ற பொதுமக்கள் தாமே முன்வந்து கொடியேற்ற எண்ணினர்.
மே 18 ஞாயிறன்று இலண்டன் ரவல்கர் சதுக்கத்திலே மக்கள் கூடினர். எமது எல்லா நிகழ்ச்சிகளுக்கும் வழமையாக வருவது போலவே பொதுமக்கள் பலரும் – அதிலும் குறிப்பாக இளைஞர்கள் – கைகளிலே கொடியேந்தியே வந்தனர். கொடியை ஏற்ற வேண்டுமெனக் குரலெழுப்பி வேண்டினர். அப்போது எமது நிர்வாகப் பொறுப்பாளரும் வேறு சிலரும் பி. த. பே. பொறுப்பாளருக்கு நிலைமையை விளங்கவைத்து ஒத்துப் போகும்படி அறிவுரையும் கூறினர். ஆனால் அவர்கள் மறுத்தனர்.
கூடியிருந்த பொதுமக்கள் 45 நிமிடங்கள் வரையிலே மிகமுயன்றனர். ஒருபுறம் கொடியேற்றுவதற்குரிய ஒழுங்குகளையும் செய்தனர். கொடியை ஏற்ற முறையிலே ஏற்ற வேண்டுமென்பது அவர்களின் ஆதங்கம். ஏற்றவேண்டிய முறையை நன்கு அறிந்தவர்கள் த. ஒ. குழுவினரென்பதை அம்மக்களறிவர். அதனாலே உதவி கோரினர். அவர்களின் நியாயமான ஆதங்கத்தை உணர்ந்தவரும் கொடியேற்றும் முறையை அறிந்தவருமான சிலர் அவர்களுக்குச் சரியான முறையைக் காட்டினர். கொடி பொதுமக்களாலே ஏற்றப்பட்டு நிகழ்ச்சியின் நிறைவுவரை பறந்தது.
இதுவே நிகழ்ந்தவை. உள்ளத்திலே நிறைந்தவை இரண்டு – ஒன்று பி. த. பே. இன் நிலை – அடுத்தது இளைஞரின் தேசியம் சார்ந்த செயற்பாடு.
தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர் தேசியம் சார்ந்த எந்த நிகழ்ச்சிiயும் ஊக்குவிப்பர் என்பதையும் தேசியக் கொடி ஏற்றுவதற்கான பூரண ஒத்துழைப்பை எந்நேரத்திலும் எவருக்கும் வழங்குவதைத் தமது தார்மீகக் கடமைகளிலே ஒன்றாகக் கொண்டவரென்பதையும் இத்தால் உறுதி செய்கின்றோம்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.’
இவ்வேளையில் 2010 ஆம் ஆண்டு சுஜீத் என்பவர் போரின் பின்னான அவலங்கள் தொடர்பாக நெறிப்படுத்திய குறும்படம் கவனத்தில் கொள்ளத்தக்கது.
உங்களை இங்கு கொடியேற்ற அனுமதித்தவர்கள் ஏன் நெடியவனுக்கு வலைவீசுகிறார்கள்?
நெடியவனுக்கு ஏன் வலை வீச வேண்டும் ?
ஐரோப்பிய நாடொன்றில் வசித்து வரும் அவர் என்ன ஒளித்தா இருக்கிறார் ?
இந்தக்கொடியின் கீழ்தான் இளைஞா்களும் யுவதிகளும் இரத்தம் சிந்தினாா்கள் ஆனால் அவா்கள் சிந்திய இரத்தம் இந்தக் கொடிக்காகவல்ல தாங்கள் நேசித்த மக்களுக்காக கொடிகளை மாற்றுவது ஒன்றும் பொியவிடயம் இல்லை அத்தோடு தமிழா்களுக்கு சம்பந்தமில்லாத ஒரு மிருகத்தை நமதென்று கொண்டாடுவதும் அா்த்தமற்ற ஒன்று எல்லாவற்றுக்கும் மேலாக இந்தக்கொடியால் சா்வதேசம் நம்மை ஏற்றுக்கொள்கின்றதோ இல்லையோ தமிழா்கள் இதன்கீழ் இணைவது சாத்தியமற்ற ஒன்று.
அதுசரி, நீங்கள் ஏன் தமி இன அழிப்புச் செய்த சீனா பற்றி கதைக்காது, 2009 போரின் இறுதிக்காலத்தில் போரை நிறுத்தச் சொன்ன அமெரிக்கா, ஐரோப்பா, போர் முடிந்தபின் ஐநாமஉ பேரவையில் மனித உரிமை மீறலுக்கு நடவடிக்கை எடுப்போரை சாடி எதிரிகளாக காட்ட முயற்சிக்கின்றீர்கள். நோக்கம் என்ன?
இராஜ்பக்சவின் குடும்பம்,இலங்கைஅரசு,தமிழக அரசியல்வாதிகள்,இந்திய அரசு ,மேற்குலகநாடுகள் இவர்களையெல்லாம் குற்ரம் சாட்டாத தமிழ்
அமைப்புக்கள் ஒன்றுமே இல்லை. ஆனால் இந்த தமிழ் அமைப்புகளின்
பின்னணியில் எத்தனையோ தமிழ் கொடியவர்கள் வாழ்கின்றார்கள்.
இவர்களை யார் என்று கண்டு பிடிக்க முடியாத அளவிற்கு
படித்த, கல்வியில் மேன்மைபடைத்த இலங்கைத்தமிழர்கள் செயற்படுகின்றார்கள்.
அது சரிதான். 2009 இன் பின் பலரது உண்மை முகங்களும் கொஞ்சம் கொஞ்சமாக தெரியவருகிறது. சாதாரண மக்களுக்கு மிகவும் தாமதித்தே தெரியவருகிறது. ஆனால் எமது போராட்டத்தில் அக்கறையுடன் செயல்படுபவர்களுக்கு இது உடனுக்குடன் தெரியவந்து, அவர்களால் எதோ விதத்தில் முறியடிக்கப்படுகிறது. இது மக்களை எட்டுவதில்லை. அதனால் மக்களுக்கு இவர்களது திருகு தாளங்கள் தெரிய வருவதில்லை.
இதற்கு முக்கிய காரணம் மக்களும் போராட்டத்தில் அக்கறையின்றி இருப்பதுதான். அது இப்படியான குளறுபடி செய்யும் நயவஞ்சகர்களுக்கு வாய்ப்பாக அமைந்து விடுகிறது. மக்கள் தமது எதிர்ப்பை உடனுக்குடன் இவர்களுக்கு காட்டினால் தான் இவர்கள் பயப்படுவார்கள்.
2009 இன் முன் இயக்கம் இருந்த வேளையில் எல்லோரும் பயபக்தியுடன் நடந்து கொண்டார்கள். தற்போது மக்கள் மட்டுமே இவர்களை கட்டுப்படுத்த முடியும். உண்மையில் சொல்லப்போனால் சிங்களவர்கள் எமது மக்களை விட நாட்டுப்பற்றும் புத்திசாலித்தனமும் உடையவர்கள் போலும் என தோன்றுகிறது.
##இராஜ்பக்சவின் குடும்பம்,இலங்கைஅரசு,தமிழக அரசியல்வாதிகள்,இந்திய அரசு ,மேற்குலகநாடுகள் இவர்களையெல்லாம் குற்ரம் சாட்டாத தமிழ்
அமைப்புக்கள் ஒன்றுமே இல்லை. #
அந்த தமிழ் அமைப்புகளில் இனி ஒருவும் உண்டுதானே ?
என்ன ஒரு வித்தியாசம், முன்னவர்கள் சீனாவையும் ரஷ்யாவையும் சேர்த்தே திட்டுவார்கள் . இனி ஒரு அதை பற்றி மட்டும் பேசாமல் அமுக்கி வாசிக்கும்..
இனியொரு ஓர் ஊடகம் அவர்களின் பெயரால் பண வசூலிப்போ
அல்லது தமிழர்களை துரோகிப்பட்டம் சூட்டி கொலைகள் செய்வதோ
இல்லை. தமிழரிடம் பணமும் பிடுங்க வேண்டும், அதற்கு தடையாக
இருப்போரை உண்மைகளை கூறுவோரை துரோகியாக்கி கொலைசெய்யவேண்டும், தமிழர்களை பலிகொடுத்து விளம்பரம் செய்ய வேண்டும் இதுவே தமிழீழ போராட்டமாக கருதியவைகளே பெரும்பாலான புலம்பெயர் தமிழ் அமைப்புகள்.
இனியொருவில் வெளியான அளவிற்கு ரஷ்யா சீனா போன்ற மாபியா அரசுகள் பற்றிய கட்டுரைகளும் ஆக்கங்களும் வேறு எந்த ஊடகங்களிலும் வெளியாகவில்லை. லாலா என்பவர் எப்படிப் பொய்சொல்லி திசைதிருப்புகிறவர் என்பதை நான் முன்னரே அவரது லைக்கா ஆதரவு ஆக்கங்களில் சொல்லியிருக்கிறேன். அதன் பின்பும் இனியொரு அவரது பொய்களை வெளியிட்டதால் நான் எழுதுவதை நிறுத்திவிட்டேன் இதோ இன்னும் ஒரு பொய்…
மன்னன் @
## தமிழரிடம் பணமும் பிடுங்க வேண்டும், அதற்கு தடையாக
இருப்போரை உண்மைகளை கூறுவோரை துரோகியாக்கி கொலைசெய்யவேண்டும், ##
இப்போது புலம்பெயர் அரசியலிலும் சரி , அமைப்புகளிலும் சரி வழக்கம்போல் துரோகி பட்டம் கொடுப்பது இருந்து வருகிறது . அதற்கு இனி ஒருவும் விதி விலக்கல்ல .
இன்னும் சொல்லப்போனால் மற்றைய அமைப்புகளை விட இனி ஒருதான் அதிகமாக துரோகி பட்ட சான்றிதழை இலவசமாக வழங்கி வருகிறது .
மேலும் இன்றுள்ள சூழ்னிலையில் துரோகி பட்டம் சூட்டப்படுகிறதே தவிர கொலைகள்நடைபெறவில்லை .
மாற்று அரசியல் பேசுவோருக்கு எந்னேரமும் சிந்தையில் ரத்தம் , துரோகம் , பாஸிசம் , வெட்டு , குத்து , கொலை என்றுதான் இருக்கும்போலை..
சிந்தையில் இவைகள் வெறுப்பாக இருக்கின்றனவே தவிர செயலாக்க வேண்டுமென்ற ஆவலில்லை. 2009 மேக்குப்பின் தமிழரைத்தமிழரால்
துரோகியாக்கி கொலை செய்வது அற்றுப் போய்விட்டதென்றே கூறலாம்.
மாற்று அரசியல்காரர் எதிர்பார்த்தும் அதுவேயாகும். ஆனால் ஒரே கொடியை இதுவரை தூக்கி பிடித்து வளர்ந்தவர்கள் தமிழரின் அழிவினைக்கண்டுகூட திருந்தாமல் தமக்குள்ளேயே ஒற்ருமையின்றி
அடிபடுகின்றனர். இவரகளைநம்பித்தானே 30 வருடமாக உலகத்தமிழர்
தமிழீழம் பிறக்கும் நாளைக் காத்திருந்தனர்.
##. ஆனால் ஒரே கொடியை இதுவரை தூக்கி பிடித்து வளர்ந்தவர்கள் தமிழரின் அழிவினைக்கண்டுகூட திருந்தாமல் தமக்குள்ளேயே ஒற்ருமையின்றி
அடிபடுகின்றனர். #
அதனால்தான் அந்த கொடியை தூக்கி பிடித்தால் மேற்குலக எஜமானர்களுக்கு கோபம் வந்து விடும் , போராட்டத்துக்கு பின்னடைவு ஏற்பட்டுவிடுமென செப்பி வைத்தீர்களா ?
நினைத்தவுடன் வர்க்கப்போராளியாகவும் ,நினைத்தவுடன் மேற்குலக எசமானர்களின் எடுபிடியாகவும் மாற உங்களைப்போன்றவர்களால்தான் முடியும்.
ரி சி சி ஸ்கொலன்ட் யார்ட் உடனும் பி ரி எப் கோம் ஒப்பிஸ் உடனும் வேலை செய்கிறார்கள். இது எல்லோருக்கும் தெரிந்தத ஒன்று. இப்ப இவர்கள் பின்னால் இருந்தே சண்டைய தூண்டிவிடுகிறாங்கள். தங்களின் தேவைக்காக பாவித்த காலம் முடிஞ்சதால் இப்ப அழிப்பு தொடங்கிவிட்டது.
கந்தையா ராஜமனோகரனை பினாமியாக வைத்து மாவீரர்தினத்தை கைப்பற்றி பிசினசை கைக்குள் போட்டுக்கொண்ட ரிசிசி இல் சிலர் முள்ளி வாய்க்கால் நினைவேந்தலையும் கைப்பற்ற வெளிக்கிட்டது தான் இந்த சண்டை. ராஜமனோகரனையும் இப்ப்ப அவுட்டாக்கி விட்டு பிரிஎப் ஐ கைப்பற்றி மகிந்தவின் திட்டத்துக்கு ஏற்ப அழிக்க வெளிக்கிடும் இவர்களுக்கு கொடி பிரச்சனை இல்லை; அதிலும் இப்ப இருப்பவர்களுள் ரவி மட்டும் தான் இயக்கத்தில் இருந்தவர் என்பதால் பிரிஎப் ரவியை அவுட்டாக நினைக்கிறார்கள். இவர்களின் தாகம் புலம்பெயர் காசு.
## இவர்களின் தாகம் புலம்பெயர் காசு.
2009 ஆம் ஆண்டுக்கு முன்னர்தான் மக்களிடம் பணம் சேர்த்தார்கள்.
இப்பவுமா ?
சொல்லவேயில்லை …