மே மாதம் 18 ஆம் திகதி 2014 ஆம் ஆண்டு ரபல்கர் சதுக்கத்தில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவு நாள் சர்ச்சைக்குரியதாக மாறியது. நிகழ்வை பிரித்தானிய(த்) தமிழர் பேரவை ஏற்பாடுசெய்திருந்தது. பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டியங்கும் இரண்டு பிரதான தமிழர் அமைப்புக்களான தமிழர் ஒருங்கிணைப்புக் குழு(TCC) மற்றும் பிரித்தானிய(த்) தமிழர் பேரவை(BTF) ஆகியவற்றிற்கு இடையேயான அதிகாரப் போட்டியாக இந்தி நிகழ்வு முடிவடைந்தது. புலி இலச்சனை பொறிக்கப்பட்டு சிவப்பு மற்றும் மஞ்சள் நிறங்களைக்கொண்ட கொடி தமிழர் தேசியக் கொடியென்றும் அதனைத் தவிர்த்து தமிழர்களுடைய அரசியல் நிகழ்வுகள் எதுவும் நடத்தப்பட முடியாது எனவும் பிரித்தானியத் தமிழர் பேரவை இதுவரை காலமும் தனது கருத்தை முன்வைத்து அதற்கு இசைவாக புலம்பெயர் மக்களைத் தமது நிகழ்வுகளை நோக்கி அணிதிரட்டியது.
இறுதியாக நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நிகழ்வு நாளில் குறித்த கொடியைப் பயன்படுத்தக்கூடாது என்று கலந்துகொண்டவர்களை BTF அறிவுறுத்தியிருந்தனர். அங்கு வந்திருந்த சில இளைஞர்கள் கொடியை ஏற்றாமல் நிகழ்வை ஆரம்பிக்க முடியாது எனக் கலகம் செய்ய ஆரம்பித்தனர்.
இன்று பிரித்தானியத் தமிழர் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் இக்கலத்தின் பின்னணியில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவே (TCC) செயற்பட்டதாகத் தெரிவித்துள்ளது.
தமிழ்ப் பேசும் மக்களின் சுயநிர்ணைய உரிமைக்கான போராட்டம் என்பது இலங்கைச் சூழலில் மக்கள் விடுதலையடைவதற்கான இன்றைய தவிர்க்க முடியாத முன் நிபந்தனை. அதற்கான உறுதியான, தத்துவார்த்த அடிப்படையில் புடம்போடப்பட்ட, மக்கள் சார்ந்த அரசியல் வேலைத்திட்டத்தைக் கொண்ட அமைப்பே இன்றை பிரதான தேவை. இலங்கையில் இனப்படுகொலையின் பின்னணியில் செயற்பட்ட நாடுகளையே தாஜா செய்து விடுதலை பெற்றுத் தருகிறோம் என மக்களை ஏமாற்றிய அமைப்புக்களிடம் குறைந்தபட்ச அரசியல் வேலைத்திட்டம் எதுவும் இல்லை.
அவற்றின் தத்துவார்த வழிமுறை என்பது, புலம்பெயர் நாடுகளிலுள்ள சுய நிர்ணைய உரிமைக்கு கோட்பாட்டளவிலேயே எதிரான அரசியல் வாதிகளையும் அரசியல் கட்சிகளையும் நம்புமாறு மக்களைக் கோருவதைத் தவிர வேறு எதுவும் இல்லை.
இலங்கையில் ராஜபக்ச பாசிசத்தின் இருப்பிற்குத் துணைசெல்லும் சமூக அரசியல் சக்திகள் தொடர்பாகவோ, உலக அளவிலான அரசியல் மாற்றங்கள் தொடர்பாகவோ குறைந்தபட்ச அடைப்படைகள் கூட இல்லாமல் வெற்று முழக்கங்களே இவர்களின் அரசியல். முள்ளிவாய்க்கால் தினம், மாவீரர் தினம் போன்ற பெரும் பணச் செலவில் முன்னெடுக்கப்படும் நிகழ்வுகள் நடைபெறும் போது மட்டும் போர்க்குற்றக் காணொளிகளை தவணை முறையில் வெளியிட்டு மக்களை உணர்ச்சிவசப்படுத்தி அணிசேர்த்துக் கொள்வதே இவர்களின் மூலோபாயம்.
ஆக, இருப்பிலுள்ள அரசியலில் எந்த மாற்றத்தையும் கோராத,வெற்று முழக்கங்களை தந்திரோபயமாகவும், தவணை முறையில் உணர்ச்சி வசப்படுத்தலை மூலோபாயமாகவும் கொண்டிருக்கும் இந்த அமைப்புக்களுக்கு கொடி என்பது எரியும் பிரச்சனை!
வடக்குக் கிழக்கு என்ற இராணுவம் விதைக்கப்பட்டுள்ள மயான மண்ணிலிருந்து பிடுங்கியெறியப்பட்டு , புலம்பெயர் நாடுகளில் பணச் சிறைக்குள் பூட்டிவைக்கப்பட்டவர்களே புலம்பெயர் தமிழர்கள். பிறந்த மண்ணின் அசல் வித்துக்கள் போலன்றி அன்னியர்கள் போன்று களியாட்டங்களிலும் கும்மாள்ங்களிலும் ஈடுபடப் பழக்கப்படுத்திக்கொண்டுள்ள இப் புலம்பெயர் சமூகத்தின் அறியாமையைத் தமிழ அமைப்புகள் மாற்ற முற்படவில்லை, மாறாக அதனைப் பயன்படுத்திக்கொண்டன.
ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் அங்கங்கள் போல அவலங்களில் பங்கெடுக்கும் அரசியல் கலாச்சாரத்தை வளர்த்தெடுக்க மறுத்த இந்த அமைப்புக்களும் அழிவுகளில் பங்குவகிதவையே.
கோயில் முதலாளிகளும், கடத்தல் காரர்களும், கட்டியக் காரர்களும், கிரிமினல்களும் கொடியோடு கும்மாளமடிப்பதை போராட்டம் என்றார்கள்.
ஒபாமாவும், தொழில்கட்சியும், ரோரிக் கட்சியும் இலங்கை அரசிற்கு ஆயுதங்களை வழங்கி இனப்படுகொலையையும் இனச்சுத்திகரிப்பையும் துரிதப்படுத்திய போது கேலிக்கிடமான உப அமைப்புக்களை உருவாக்கி மக்களின் பணத்தை நாசப்படுத்தினார்கள். ஒபாமாவிற்கான தமிழர்கள், தொழிற்கட்சிக்கான தமிழர்கள், கொன்சர்வேட்டீவிற்கான தமிழர்கள் என்று பல அமைப்புக்களைத் தோற்றுவித்து கொலைகாரர்களின் பங்காளிகள் ஆனார்கள்.
ஆக, இவர்களுக்கு கொடியையும் பிரபாகரனையும் விட்டால் வேறு வேறு போக்கிடமோ புகலிடமோ கிடையாது.
அதனால் தான் கொடியின் விடிவிற்காக முரண்பட்டுக்கொள்கிறார்கள். உறுதியான தத்துவார்த்த வழிமுறையும், அரசியல் கோட்பாடும், அதற்கான நடைமுறையும் கொண்ட ஒரு கட்சியோ அன்றி அமைப்போ தனக்கான அடையாளமாகக் கொடியை உருவாக்கிக் கொள்வது வழமை. எந்த அடிப்படைகளுமற்ற இயக்கம் கொடியை மட்டுமே தமது ஆதரமாக நம்பியிருக்குமானால் அது கொடிக்கே அவமானம்.
கொடியைப் பயன்படுத்தக்கூடாது என்று பிரித்தானியத் தமிழர் பேரவை ஐந்து வருடங்களுக்குப் பின்னர் முன்வைக்கும் கருத்தின் சாராம்சம் மக்கள் சார்ந்த அரசியலின்பாற்பட்டதல்ல, தாம் சார்ந்த அதிகாரவர்க்கத்தைத் திருப்திப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. அதனை அவர்களே தமது அறிக்கையில் கூறுகின்றனர்.
தோல்விக்கான காரணத்தைக் கண்டறிந்து புதிய மக்கள் சார்ந்த அரசியல் தொடர்பான எந்த அக்கறையுமின்றி கொடிய நிராகரித்தால் தமிழீழக் கனவும் நனவாகிவிடும் என்பது போன்று மக்களை மந்தகளாக்குகின்றனர்.
மறுபுறத்தில் பி.ரி.எப் கொடியை நிராகரித்தமை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவிற்கு கிடைத்த வரப்பிரசாதமாகிவிட்டது! மக்களை உணர்ச்சிவப்படுத்துவதற்குப் பிரபாகரனையும் கொடியையும் சுற்றி கட்டிவைத்திருந்த ஒளிவட்டத்தை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தன்வசமாக்கிக் கொண்டது. இனிமேல் கோட்பாடற்ற அரசியலை முன்னெடுக்க ஒருங்கிணைப்புக் குழு முழு வாய்ப்பையும் பெற்றுக்கொண்டது.
யாராவது அரசியல் திட்டத்தை முன்வைத்தாலோ புதிய வழிமுறைகளைப் பற்றிப் பேசினாலோ ‘தேசியக் கொடியையும்,தேசியத் தலைவரையும் பற்றிப் பேசாமல் அரசியல் பற்றிப் பேசும் துரோகிகள்’ என முழங்குவதற்கு TCC இற்கு முழு உரிமையையும் பிரிஎப் தாரைவார்த்துக் கொடுத்துள்ளது.
இந்த இடைவெளிக்குள் நிலப்பறிப்பு, சூறையாடல், கொலை, சிங்கள பௌத்த மயமாக்கல் போன்ற தனது வழமையான ‘கைங்கரியங்களை’ ராஜபக்ச பாசிசம் தங்குதடையின்றி நடத்தும். கொடியைப்பற்றி இவர்கள் கூச்சலிட்டுக்கொண்டிருக்கும் போதே கோவணத்தையும் களவாடி பல்தேசிய வியாபாரிகளுக்கு மலிவு விலையில் ராஜபக்ச கும்பல் விற்பனை செய்துவிடும்.
தயவுசெய்து உணர்ச்சி வியாபாரத்தைக் கைவிடுங்கள்!பொதுவான அரசியல் திட்டம் குறித்த விவாதத்திற்கு அழைப்பு விடுங்கள்!! தோல்வி குறித்த இதசுத்தியோடு விமர்சனம் செய்துகொள்ளுங்கள்!!! அவற்றிலிருந்து கற்றுக்கொண்டு பொதுவகன அரசியல் கோட்பாட்டை முன்வையுங்கள்!!!! அதனை நோக்கி மக்களை அணிதிரளக் கோருங்கள்…. அதனை நோக்கி மக்களை ஒற்றுமையடைய அறைகூவுங்கள்…. வெற்று அடையாளங்களையும் சுலோகங்களையும் நோக்கி அணிதிரட்டப்படும் மக்கள் கூட்டம் நிலையற்ற உணச்சிமயமான ஒருங்கிணைவு! அரசியல் வழிமுறையையும் அரசியல் கோட்பாட்டையும் நோக்கி அணிதிரட்டப்படும் மக்கள் கூட்டம் உணர்வு பூர்வமான வெற்றிக்கான ஒருங்கிணைப்பு!!
-ரமணா
பிரிதானியத் தமிழர் பேரவையின் அறிக்கை:
முள்ளிவாய்க்கால் பேரவலம் நடந்து ஐந்து ஆண்டுகள் உருண்டோடி விட்டன. ஆனாலும் அன்று அங்கு அல்லல்பட்ட மக்கள் இன்னமும் தாயகத்தில் சொல்லொனாத் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். அவர்களது குரலாக புலம் பெயர் மக்கள் தொடர்ந்தும் போராடி வருகின்றனர்
அதன் தொடர்ச்சியாக கடந்த மே 18 இல் லண்டனில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வு உணர்வு பூர்வமாக நடைபெற்றது. பிரித்தானிய தமிழர் பேரவையை தாம் தடைசெய்வதன் மூலம் பேரவை ஏற்பாடு செய்யும் நிகழ்வுகளில் தமிழ் மக்கள் கலந்து கொள்ள மாட்டார்கள் என்ற இலங்கை அரசின் எண்ணத்தை லண்டன் வாழ் தமிழர்கள் புறந்தள்ளி பல்லாயிரக்கணக்கில் கலந்து கொண்டார்கள். இதன் மூலம்இ பிரித்தானிய தமிழர்கள் தாயக மக்களின் விடுதலைக்காக போராட அன்று போல இன்றும் முன்னிற்பார்கள் என்ற தெளிவான செய்தியை ராஜபக்ச அரசுக்கும் உலகிற்கும் விடுத்திருகின்றார்கள்.
முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னரான புலம் பெயர் போராட்டம் என்னும் அத்தியாயத்தை ஆரம்பித்ததில் பிரித்தானிய தமிழர் பேரவை முக்கிய பங்கினை வகித்திருந்தது என்பது பலரும் அறிந்ததே. தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள்இ வெளியுறவு அமைச்சுஇ பல்வேறு கட்சிகள்இ ஐ நா மனித உரிமைகள் கழகம் போன்றவையுள்ளிட்ட பல்வேறு தளங்களைப் பாவித்து புதுப் பரிமாணத்தில் போராட்டத்தினை வேகமெடுக்க வைத்தோம். வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்புக் கூறல் என்ற விழுமியங்களுடன் மக்கள் பங்குபற்றும் சனநாயக அடிப்படையில் தன்னைப் புதுப்பித்தது. ஆயினும்இ பேரவை ஆரம்பித்த காலம் முதல் அது தாங்கிவரும் வலிகள் ஏராளமானது.
பிரித்தானிய தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நிகழ்வில் பல அசம்பாவிதங்கள் நடந்ததாகவும் இன்னும் ஓரிரு வருடங்களில் பிரித்தானிய தமிழர் பேரவையின் செயற்பாடுகள் அனைத்தும் முடக்கப்படும் எனவும் தனி நபர்களும் ஒரு சில தமிழ் ஊடகங்களும் விஷமப் பிரச்சாரம் செய்கின்றன.
பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் நிகழ்வில் நடந்த சில சம்பவங்களைப் பதிவு செய்வது பேரவையின் கடமை.
நிகழ்வின் ஆரம்பத்தில் பிரித்தானியாவிலுள்ள தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஒரு சில பொறுப்பாளர்களின் வழிநடாத்தலில் ஒருசில இளைஞர்கள் நிகழ்வில் அத்து மீறி நுழைந்தனர். தாம் தேசியக் கொடியினை ஏற்றப்போவதாக கூறி கோஷமிட்டதுடன் பிரித்தானிய தமிழர் பேரவையினர் தேசியத்துக்கு எதிரானவர்கள் என குற்றம் சாட்டினர். தமிழ் மக்கள் மத்தியில் குழப்பத்தையும் பிளவுகளையும் ஏற்படுத்திய இச் சம்பவம் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் அங்கீகாரமின்றி செய்யப்பட்டதாகவே நாம் கருதுகின்றோம். அவ்வாறாயின் இதனைத் தூண்டிய பொறுப்பாளர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பார்கள் என எதிர்பார்க்கின்றோம்.
ஒவ்வொரு நாட்டு மக்களுக்கும்இ குறிப்பாக ஒடுக்குமுறைக்கெதிராக போராடும் இனங்களுக்கு தமது தேசியக் கொடி உன்னதமானது. நாமும் அதற்கு மாறானவர்கள் அல்ல என்பது அனைவருக்கும் தெரிந்த விடயமே.
வல்லரசுகளின் நிகழ்ச்சி நிரல்களுக்குள் விழுந்து விடாமலும் அவர்களின் அழுத்தங்களுக்கு அடிபணிந்துவிடாமலும் எமது பக்க நியாயத்தையும் உண்மையினையும் எடுத்துக்கூறி அவர்களின் ஆதரவினையும் அனுதாபத்தினையும் பெற்றுக்கொள்வதற்குஇ நாம் வாழும் நாடுகளின் சட்டங்கள் மற்றும் சர்வதேச சட்டங்களையும் மதித்து அவற்றுக்கு அமைவாக செயற்படுவது மிகவும் அவசியமானது. கடந்த ஐந்து ஆண்டுகளில் அவ்வாறு செயற்பட்டதன் விளைவாகஇ பிரித்தானிய தமிழர் பேரவை போருக்குப் பின்னரான தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் காத்திரமான பங்களிப்பினை செய்ய முடிந்திருக்கிறது.
தேசியக் கொடி தொடர்பில் காவல் துறை நிலமைகளுகேட்ப வெவ்வேறு விதமாகக் கையாள்கின்றது. நாம் எதிர்காலத்தில் ஆட்சிப்பீடங்கள் மீது அழுத்தங்களை அதிகரிக்கும்போது சட்டத்தினை எம் மீது ஏவி விடவும் தமிழர் பேரவையை தடை செய்யவும் இன்றைய சூழ்நிலையில் இடமுண்டு.
தமிழ்மக்களின் தேசிய கொடியினை ஏற்றக் கூடாது என்ற பிரித்தானிய பொலிசாரின் அறிவுறுத்தல்கள் எமக்குத் தரப்பட்டுள்ளதால்
பிரித்தானியாவின் சட்டங்களுக்கு அமைவாகவே முள்ளிவாய்க்கால் நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டு வருகின்றது.
இதனைஇ பிரித்தானிய தமிழர் பேரவைஇ தமிழ் மக்களின் தேசிய கொடிக்கு எதிரானது என்றும் தமிழ் மக்களின் அடையாளத்தினை இதன் மூலம் பிரித்தானிய தமிழர் பேரவை அழிக்க முற்படுகிறது என்றும்இ ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்குள் தெரிந்து நின்று செற்படும் சிலரும் தெரியாமல் நின்று செயற்படும் சிலரும் விஷமப் பிரசாரம் செய்து வருகிறார்கள்.
உண்மையில்இ எந்த ஒரு அமைப்பினை விடவும் இ பிரித்தானிய தமிழர் பேரவையே தமிழ் மக்களின் தேசிய கொடிக்கு ஒருஅங்கீகாரத்தினை பெற்றுக் கொடுப்பதற்கு உண்மையான கரிசனையுடனும் பற்றுறுதியுடனும் செயற்பட்டிருக்கிறது. எமது தேசிய கொடிக்கு அங்கீகாரத்தை பெற்றுக் கொடுக்கும் பல வேலைகளை அரசியல் ரீதியாகவும் வெகுஜன செயற்பாடுகள் மூலமாகவும் நாம் மேற் கொண்டிருக்கிறோம்.
உதாரணமாகஇ பிரித்தானிய பொலிசாருக்கு இது விடயத்தில் கடந்த பல மாதங்களாக பிரித்தானிய தமிழர் பேரவை தமிழ் மக்களின் தேசிய கொடியினை அங்கீகரிக்குமாறு கோரி அழுத்தங்களை கொடுத்து வருகிறது.
இந்தக் கொடியினை ஏன் பிரித்தானிய பொலிசார் அங்கீகரிக்கவேண்டும் என்று வரலாற்று ரீதியான பல உண்மைகளை கோடிட்டு ஆய்வுக் குறிப்புக்களை பிரித்தானிய தமிழர் பேரவை பொலிஸாருக்கு அனுப்பியிருக்கிறது.
இது தொடர்பில் பிரித்தானியாவில் ஒரு சுயாதீனமான சர்வஜன வாக்கெடுப்பை தமிழ் மக்கள் மத்தியில் நடாத்தி தேசியகொடி மீதான ஒட்டு மொத்த தமிழ் மக்களின் விருப்பத்திணை வெளிப்படுத்துவதற்கும் தயாராக இருப்பதாக பிரித்தானிய தமிழர் பேரவை பொலிஸாருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் தெரிவித்திருக்கிறது. தேசிய கொடி விடயத்தில் பிரித்தானிய பொலிசாருடன் நடைபெற்ற மின்னஞ்சல்இ கடித பரிமாற்றங்கள் மற்றும் தயாரித்து வழங்கப்பட்ட ஆவணங்களையும் மக்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு பிரித்தானிய தமிழர் பேரவை தயாராக இருக்கிறது. இந்த பரிமாற்றங்களை ஊடகங்களில் வெளியிடுவற்கான அனுமதியினை பிரித்தானிய தமிழர் பேரவை பொலிஸாரிடம் கோரி இருக்கிறது. பொலிஸாரிடம் இருந்து அனுமதி கிடைத்ததும் அவை பொது மக்களுடன் பகிரப்படும்.
பிரித்தானிய தமிழர் பேரவை ஆரம்பித்த காலத்திலிருந்து இன்று வரை அதனை புலிகளின் முன்னரங்க அமைப்பு (குசழவெ ழுசபயnளையவழைn) என்று ஸ்ரீலங்கா அரசாங்கம் தொடர்ச்சியாக பரப்புரை செய்து வருகின்றது. தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தினை பயங்கரவாதப் போராட்டமாக ஏனைய நாடுகளை நம்ப வைப்பதில் வெற்றி கொண்ட ஸ்ரீலங்கா அரசின் பரப்புரை இன்றுவரை பல நாடுகளின் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதன் மூலம் தமிழ் மக்களை தொடர்ச்சியாக இன அழிப்புக்கு உட்படுத்துவதனை நியாயப்படுத்தி வருகின்றது. ஆனால் நாங்கள் பொது மக்கள் கொல்லப்பட்டதை பொது மக்களாக நியாயம் கேட்கும் போது சர்வதேச சமூகம் தட்டிக் கழிக்க முடியாத நிலையில் உள்ளது என்பது எமது அனுபவபூர்வமான உண்மை.
2009க்கு முன்னர் நிலப்பரப்பை தமது பூரண கட்டுப்பாட்டில் தக்க வைக்கக் கூடிய பலத்துடன் விடுதலைப் புலிகள் ஒரு நடைமுறை அரசாக செயல்பட்ட போது அப்பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மைக்காகவும் தம் பூகோள நலன் கருதியும் சர்வதேச சக்திகள் தலையிட்டு இரு தரப்பினரோடும் பேச வேண்டிய தேவை இருந்தது.
மே 2009க்குப் பின்னர் வலுச் சமநிலை எமக்குப் பாதகமாக மாறியது. அதன் பின் சிங்கள தேசத்திற்கோ சர்வதேசத்திற்கோ தமிழர் தரப்புடன் பேசியே ஆக வேண்டும் என்பது அவசியமாகப்படவில்லை. எம் மக்கள்இ யாராலும் பாதுகாக்கப்படாத நிலையில் எம் மக்களுக்கு நடந்தஇநடக்கின்ற கொடுமைகளை எடுத்துச் சொல்லி உலக நாடுகளின் கவனத்தினை ஈர்த்து அவர்களைப் பாதுகாக்கக் கூடிய தற்காலிக மற்றும் நிரந்தர நடைமுறைகளை செயல்படுத்த வைக்க வேண்டும் என்று தீர்மானித்தோம்.
படிப்படியாக உலகின் பார்வையில் மாற்றமும் வருகின்றது. இன்றைய நிலையில் எமது உறவுகளை காக்கவேண்டுமாயின் எமக்கு சர்வதேச நாடுகளின் ஆதரவு அவசியமாகின்றது.
இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டே நாம் மிகவும் கவனமாக எமது செயல்பாடுகளை அமைத்து வருகின்றோம். சர்வதேசத்தோடு நாம் அந்நியப்பட்டு நிற்பதா அல்லது சர்வதேசத்திற்கு தமிழின அழிப்பினைச் செய்யும் சிறிலங்காவினை தோலுரித்துக் காட்டி அதனை அன்னியப்படுத்துவதா என்ற தெரிவினை நாம் தீர்மானகரமாக மேற்கொள்ள வேண்டும். அதற்கேற்ற விதத்தில் எம் மூலோபாயங்களையும் செயல்பாடுகளையும் நெறிப்படுத்த வேண்டும்.
இன அழிப்புக்குள்ளான தேசம் என்று பல நாடுகளையும் ஏற்றுக் கொள்ள வைப்போமாயின் ஒரு நாட்டிற்குள்ளேயே சேர்ந்து வாழுங்கள் என்ற அணுகுமுறை மாற்றப்பட்டு எமது அபிலாசைகள் என்ன என்பதனை கருத்தில் எடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்.
எமது போராட்டத்துக்கான அங்கீகாரமே இந்த சந்தர்ப்பத்தில் எமக்கு முக்கியமானது. பிரித்தானிய தமிழர் பேரவையின் மேடையில் பிரித்தானிய பிரதமர் ஏறி எமது சுயநிர்ணய உரிமையை ஏற்றுக் கொள்ள வைக்க வேண்டும்இ அத்தோடு ஐக்கிய நாடுகள் சபை எமது சுயநிர்ணய உரிமையை ஏற்க வைக்க வேண்டும். அதற்காக நாம் தொடர்ந்தும் பாடுபடுவோம். அதற்காக நாம் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும்.
பிரித்தானிய மக்களின் மனத்தினை வெல்வது மிக முக்கியமானது. அதற்கான தளத்தினை உருவாக்குவது தமிழர் பேரவையின் முக்கிய வேலைத்திட்டமாக இருக்கின்றது. கோஷங்களுக்குள் மட்டும் எமது போராட்டம் நின்று விடுதல் ஆகாது. தமிழர்களின் அழியாச் சொத்தான அறிவை ஆயுதமாக பயன்படுத்தி எதிரியை நாம் புறமுதுகிட செய்ய வேண்டும். தமிழ் மக்களுக்குள் மட்டும் இப் போராட்டத்தின் நியாயப்பாடு முடங்கி நிற்கக் கூடாது. நடைமுறையில் செய்து காட்டி முன்னேற வேண்டும் என்பதே எம் அணுகுமுறை.
இந்தப் பாதை தவறென்று யாராவது கருதுவீர்களாயின் விடுதலைக்காக இதனை விட மேலான மூலோபாயத்துடன் வேறொரு வடிவத்தில் செயல்பட்டு விரைவில் உலக அங்கீகாரத்தை எடுத்துத் தருவோம் என்று எமக்கு புதியதோர் பாதையினைக் காட்டுவீர்களானால் அதனை ஆராய்ந்து ஏற்றுக் கொண்டு உங்கள் பாதையில் இணையவும் நாம் தயாராகவுள்ளோம். விடுதலைக்கான உங்கள் பாதையினை மக்களுக்கும் எமக்கும் அறியத் தாருங்கள்.
தமிழீழத்தில் நடைபெற்ற அநீதிகளுக்கு ஓர் சர்வதேச சுயாதீன விசாரணை மூலம் நீதி வழங்க வேண்டும்இ அதற்காக சர்வதேச அரங்கில் பிரித்தானியா எமக்காக குரல் கொடுக்க வேண்டுமென பேரவை கடந்த ஐந்து வருடங்களாக பாடுபட்டு வருகின்றதுஇ அதன் பலனாக இன்று பிரித்தானியா சர்வதேச சுயாதீன விசாரணைக்கு சாதகமாக வெளிப்படையாக குரல் கொடுக்கின்றது.
பிரித்தானிய தமிழர் பேரவையின் செயற்பாடுகளில் இளைஞர்களின் பங்களிப்பு போற்றுதற்குரியது. சர்வதேச அரசியல் நுணுக்கங்களை கற்றறிந்துஇ அதன் போக்கினை அறிந்து எமது போராட்டத்தின் நியாயங்களை சர்வதேச அரங்குகளுக்கு கொண்டு செல்வதில் பிரித்தானிய தமிழர் பேரவையின் இளையோர் ஆற்றும் பணி நம்பிக்கை ஒளியைத் தருகின்றது. இவ்வாறு மேன்மேலும் இளைஞர்களை தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தினை வென்றெடுப்பதற்காக அரசியல் இராஜ தந்திர பணிகளை முன்னெடுப்பதற்கு ஊக்குவிக்க வேண்டும்.
மாறாக போற்றுதற்குரிய பணிகளை ஆற்றக்கூடிய இளையோரில் ஒரு சிலரை தவறாக வழிநடாத்தி அமைப்புக்கள் மீதான போட்டி மனப்பான்மையினயும் காழ்ப்புணர்வுகளையும் தூண்டி அவர்களின் ஆற்றலையும் திறமைகளையும் தவறாக பயன்படுத்த வேண்டாம் எனவும் எமது இனத்துக்கு அவப் பெயரை ஏற்படுத்த வேண்டாமெனவும் முள்ளிவாய்க்கால் நிகழ்வில் இடையூறு ஏற்படுத்த முற்பட்டோர்களுக்கு தமிழர் பேரவை வேண்டுகோள் விடுக்கின்றது.
அதேவேளை தமிழர் பேரவையை இன்னும் சிலகாலத்துக்குள் நிர்மூலமாக்கிவிடுவோம் எனவும் எமக்கு அச்சுறுத்தப்பட்டுள்ளது.
பிரித்தானிய தமிழர் பேரவையை எவ்வாறாயினும் ஒழித்துக்கட்டி விடவேண்டுமென அது தொடங்கிய காலம் தொடக்கம் இலங்கை அரசு பகீரதப்பிரயத்தனம் செய்து வருகின்றது. இலங்கை அரசினதும் மற்றும் பலரினதும் தொடர்ச்சியான கபட நாடகங்களுக்கு மத்தியில் பிரித்தானிய தமிழர் பேரவை மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக நடந்து வருகின்றதுஇ வளர்ந்துவருகின்றது
நடந்தவற்றை உள்ளதை உள்ளபடி பதிவு செய்துவிட்டோம்இ நாம் இழந்த சுதந்திரத்தை மீட்கும் பணிகள் ஆயிரமாயிரமாகக் கிடக்கின்றன. அன்றாடம் எமது உறவுகள் கொல்லப்பட்ட வண்ணம் உள்ளனர். இவ்வாறான சந்தர்ப்பத்தில் எமக்குள் குரோதத்தை வளர்ப்பதும் இளைய சமூகத்தை கூறுபடுத்தி தவறாக வழிநடாத்துவதும் ஒற்றுமையைத் தகர்ப்பதுவும் விடுதலை வேண்டி நிற்பவர்கள் செய்யும் பணியல்ல.
தமிழர் பேரவை தேசியத்தின் பாதையில் தொடர்ந்து பயணிக்கும் எந்த இடர்வரினும் அதனை எதிர் கொள்ளும் பக்குவமும் மனோதிடமும் பிரித்தானிய தமிழர் பேரவைக்கும் எம் மக்களுக்கும் உண்டு.
முள்ளிவாய்க்கால் நினைவென்பது மனித இனத்துக்கு எதிரான ஓர் மாபெரும் அவலத்துக்கான நீதி கேட்கும் நாள். இதற்கு வேறு விதமாக அர்த்தம் ஏதும் கற்பிக்க முடியாது. இந்நிகழ்வை தமிழினம் மட்டும் தனித்து நின்று முன்னெடுக்காமல் எமக்காக குரல் கொடுப்போர் மற்றும் உலகின் சக்தி வாய்ந்த நாடுகள் எனப் பலரும் சேர்ந்து ஒன்றாக அணி திரள்வதே இன்றைய காலத்தின் தேவையாகும்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்!
‘துரோகி’களுக்கு எதிராக வங்காளிப் புலியும் ரஷ்யன் ஏ.கே யும் : சோளன்
“Let your vision be world embracing…” and “Set your faces towards unity, and let the radiance of its light shine upon you.” –Bahá’u’lláh
முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்கும் இலங்கைத்தமிழரின் அழிவிற்கும்
காரணமாக புலம்பெயர் தமிழரின் அமைப்புகழும் இருந்துள்ளன
என்பதனையே இவர்களின் நடத்தைகள் வெளிப்படுத்துகின்றன.
We all are making a big mistake. People back home are still suffering and diaspora tamils are fighting themselves for power. It is shame. Unless all the organisations have an open meeting and discuss the future of tamil politics with good heart, there won’t be any solution to these problem. One day BTF and TCC work together and next day BTF and TGTE work together. What are we all doing here? For what purpose? Any hidden agenda behind this. All because of power. To show off among tamils. People are not interested in this dirty politics anymore.
தமிழீழதேசியக்கொடி என்பது விமர்சனத்துக்கு அப்பாற்பட்டது. இதைவிட தமிழீழதேசியக்கொடியை ஏற்ற கூடாதென எந்த சட்டமும் பிரித்தானியாவில் இல்லை. பிரித்தானியா ஒரு சனநாயகத்தை (தமது நாட்டிலாவது) மதிக்கும் நாடு. எனவே BTF கூறும் காரணங்கள் ஏற்றுக்கொள்ளமுடியாதவை.
BTF இன் இத்தகைய செயல்பாடுகள் இதுதான் முதல் தரம் அல்ல. இரண்டு ஆண்டுகளுக்கு முன் உலகெங்கிருந்தும் தமிழர் பிரதிநிதிகளை கூட்டி வைத்த ஒரு இனஒழிப்பு தொடர்பானகருத்தரங்கில் வந்த, பங்குபற்றும் பிரதிநிதிகளுடன் ஆய்வு செய்யாமல் BTF தம்மால் முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட ஒரு resolution ஐ அவர்கள் மீது திணிக்க அதாவது மகாநாடு கூடியதன் நோக்கம், இனப்படுகொலை செய்யப்பட்டது என கருத்தரங்கில் ஆய்வு செய்து எல்லோரதும் ஒப்புதலுடன் அந்த தீர்மானத்தில் “ஸ்ரீலங்கா இனவொழிப்பு செய்த நாடு” என்பதை நிறைவேற்றல் ஆகும். இதனை செய்யாமல் பதிலாக ஸ்ரீலங்கா போர்குற்றம் செய்துள்ளது என இவர்களால் முன்கொட்டியே தயாரிக்கப்பட்ட தீர்மானத்தில் மகாநாடு கூடமுன்பே எழுதப்பட்டிருன்தது. பின் ஈழத்திலிருந்து வந்திருந்த பிரதிநிதிகளும் தமிழ் நாட்டிலிருந்து வந்திருந்த பிரதிநிதிகளும் வாதிட்டு “ஸ்ரீலங்கா இனப்படுகொலை” புரிந்தது என தீர்மானத்தை வாதிட்டு மாற்றியமைத்தார்கள். இவை போன்ற விடயங்கள் மக்களுக்கு அறிய வருவதில்லை.
இனப்படுகொலை எனக்கூற விருப்பமில்லை. ஏனெனில் அதை இவர்கள் lobby செய்யும் நாடுகள் விரும்பவில்லை.
தற்போது தேசியக்கொடி விருப்பமில்லை. ஏனெனில் எம்மை அழிக்க துணை போனவர்களுக்கு விருப்பமில்லை.
இவ்வமைப்புகளில் உள்ளவர்கள் தமிழ் மக்களுக்காக போராடுவதாயின் முதலில் இவற்றுக்கெதிராக போராட வேண்டும். (இது போராட வேண்டிய விடயம் கூட அல்ல ஏனெனில் சட்டப்படி சனநாயக உரிமைகளின் படி எமது மக்கள் தாம் விரும்பிய கொடிகளை எந்த உரிமையுள்ளது. இவர்கள் எமது மக்கள் படிக்காத முட்டாள்கள் என நினைத்து ஏமாற்றும் கைங்கரியத்திலுள்ளார்கள்.
இதைவிட, இக்கட்டுரையாளர் இதுதான் சமயம் என தமது புலிஎதிர்ப்புவாதத்தை எமது மக்கள் மீது நாசுக்காக படர விட்டுள்ளார். இதில் TCC அல்லது BTF இற்கிடையில் பிரச்சனையில்லை. கருத்தில்தான் பிரச்சனை உள்ளது. இது எமது மக்களுக்கும் இந்த அமைப்புகளுக்குமிடயிலான கருத்துப் பிரச்சனை. புலம் பெயர் தேசத்திலுள்ள அமைப்புகள் ஈழத்தில் மக்கள் செய்த போராட்டத்தையும் போராளிகளது தியாகத்தையும் மனதில் வைத்து எமது இனத்தின் இருப்புக்காக போராட வேண்டும். எமை அழிக்க துணை போனவர்களது கருத்தை கேட்டு அவர்களுக்கு விசுவாசம் காட்டுவதை விடுத்து எமது மக்களுக்கு விசுவாசமாகவும் நேர்மையாகவும் நடக்க வேண்டும். அதனை செய்ய முடியாதவர்கள் அரசியல் செயல்பாடுகளில் இருந்து விலகி இளையவர்களுக்கு வழிவிடுவதே நல்லது.
இந்தியன் ஆமி வெளியேறிய போது போராளிகளோடு கப்பலேறி வந்தவன் எல்லாம் இப்போ புலிக்கொடி பிடிக்க வேண்டும் என்றான். புலிக் கொடியை விமர்சிக்க யாருக்கும் உரிமை இல்லை என்ற உரிமையை உமக்கு யார் கொடுத்தார்? கட்டுரையில் இலங்கை அரசுக்கு எதிராக தானே எழுதபட்டுள்ளது. உங்களது பிழைப்பை கெடுத்தால் புலிஎதிர்ப்பு பிண்ணாக்கு என்று பேச வெளிக்கிடுறுவியள். புலிக்கொடி பிடிக்க வெளிக்கிட்ட ஒவ்வொருத்தனா யாரென்று சொல்லட்டா. ?
சர்வதேசநாடுகளினால் பயங்கரவாதமென இலங்கைத்தமிழரின் உருமைக்கான போராட்டத்தை பிரகடனப்படுத்தவும், தமிழரின் இன்றைய
நிலைமைக்கும் காரணமானது புலிக்கொடியைத்தூக்கிய புலம்பெயர் அமைப்புகளேயாகும். இவர்கள் இதன் மூலம் இலங்கைத்தமிழர்களின்
ஜனநாயக சக்திகளை அழித்தார்கள். அந்த கொடியை தேசியக்கொடியென்பது தமிழர் திரும்பவும் பயங்கரவாதிகளென
உலகிற்கு காட்டி தமிழரின் உருமைக்கான போராட்டத்தை அழிப்பதற்கேயாகும்.
மேற்குலக முதலாளித்துவ நாடுகள் போராடும் இனங்களை நசுக்குபவை , போரடும் எந்த ஒரு இனமும் இத்தைகைய நாடுகளை நம்புவது முட்டாள்தனம் என்று இதுநாள் வரை செப்பி வந்தவர்கள் , இன்று புலிக்கொடியை காண்பித்தால் அந்த நாடுகளின் அதிருப்தியை சம்பாதிக்க வேண்டி வருமென வக்காலத்து வாங்குகிறார்கள் .
இந்த போலி வர்க்க தோழர்களின் முதலாளித்துநாடுகள் மீதான எதிர்ப்பு என்ன மாதிரியானதென்பது இன்று பட்டவர்த்தனமாக அம்பலமாகியுள்ளது..
ஸ்ரீலங்கவினுடைய LLRC அறிக்கையை வைத்து அவர்களே தம்மை தாமே விசாரிக்கலாம் என 3 வருடங்களுக்கு முன்னர் UN தீர்மானம் இயற்றியபோது அதை வரவேற்று அறிக்கை விட்டவர்களும் BTF இனரே என்பதை மறந்து விடமுடியாது. ஆகவே எல்லா அமைப்பினரும் தமது “ராஜதந்திரம்” எனும் வேற்று வார்த்தைகளை கைவிட்டு உண்மையான இதயசுத்தியுடன் கடமையாற்ற வேண்டுமென்பதே மக்களது வேண்டுகோளாகும்.
கொடியா? கணுக்கால் மயிரா? என்ற விவாதம், தொடரும்.
போரில் இறந்தவனுக்கு ஒரு கொடி. அது தேசியக்கொடி என்று சொன்னால் என்ன தவறு?.
பிறகு எது தேசியக்கொடி?
மன்னர் காலக்கொடியில் புலிச் சின்னம் இருந்ததால், அதனை நிராகரிக்க வேண்டுமென யார் சொன்னது தோழர்?.
ஒடுக்குமுறைக்கு எதிரான சின்னமாக எதுவும் இருக்கலாம்.
நந்திக்கொடியை ஏற்றச் சொல்கிறீர்களா?.
உயிர்ப்பூவை உதிர்த்தவர்கள் வணங்கிய கொடியை, நான் ஏற்றுக்கொள்வேன்.
அதில் புலிக்குப் பதிலாக பூனையின் சின்னத்தை போட்டால் மட்டுமே, அதனை ஏற்றுக்கொள்ளும் மனதினை உங்கள் நெஞ்சம் வரித்துக் கொள்ளுமாயின், நான் புலியாகவே இருந்து விட்டுத் தொலைக்கின்றேன்.
BTF வெளியிட்டுள்ள அறிக்கைக்கும் அதனது செயற்பாடுகளுக்குமிடையில் பாரிய முரண்பாடுகள் உள்ளன.
உ+ம்
“ஒவ்வொரு நாட்டு மக்களுக்கும்இ குறிப்பாக ஒடுக்குமுறைக்கெதிராக போராடும் இனங்களுக்கு தமது தேசியக் கொடி உன்னதமானது. நாமும் அதற்கு மாறானவர்கள் அல்ல என்பது அனைவருக்கும் தெரிந்த விடயமே.”
அப்படியாயின் என் தேசியக்கொடியை மக்கள் எந்த தடை செய்ய வேண்டும்?
“நாம் வாழும் நாடுகளின் சட்டங்கள் மற்றும் சர்வதேச சட்டங்களையும் மதித்து அவற்றுக்கு அமைவாக செயற்படுவது மிகவும் அவசியமானது.”
ஒரு மக்கள் கூட்டம் தனது தேசியக்கொடியை எந்த முடியதென்று எந்த நாட்டில் சட்டம் உள்ளது?
“உதாரணமாகஇ பிரித்தானிய பொலிசாருக்கு இது விடயத்தில் கடந்த பல மாதங்களாக பிரித்தானிய தமிழர் பேரவை தமிழ் மக்களின் தேசிய கொடியினை அங்கீகரிக்குமாறு கோரி அழுத்தங்களை கொடுத்து வருகிறது.”
எந்த ஒரு நாட்டிலும் தேசியக்கொடியை அங்கீகரிப்பது பொலிசாரின் வேலையல்ல. அது ஒரு தனி மனித சுதந்திரம். அதை பொலிசார் மீறினால் அதற்கெதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதே அமைப்புகளின் வேலையாக இருக்கே வேண்டுமேயொழிய அவர்களே அதை தடைசெய்வது அவர்களது அறியாமையை குறிக்கிறது.
“பிரித்தானிய தமிழர் பேரவை ஆரம்பித்த காலத்திலிருந்து இன்று வரை அதனை புலிகளின் முன்னரங்க அமைப்பு (குசழவெ ழுசபயnளையவழைn) என்று ஸ்ரீலங்கா அரசாங்கம் தொடர்ச்சியாக பரப்புரை செய்து வருகின்றது.”
இது போல் தான் எரிக் சொல்கேயம் என்பவரும் கூறி வருகிறார். அவரது கொடும்பாவியை அவர் தமிழர்களுக்காதரவாக செயல்பட்டாறேன்று சிங்களவர்கள் எரித்தார்களாம். தற்போது தமிழர்களும் தன்னை எதிர்கிரார்களாம்.
“இதன் மூலம் தமிழ் மக்களை தொடர்ச்சியாக இன அழிப்புக்கு உட்படுத்துவதனை நியாயப்படுத்தி வருகின்றது. ஆனால் நாங்கள் பொது மக்கள் கொல்லப்பட்டதை பொது மக்களாக நியாயம் கேட்கும் போது சர்வதேச சமூகம் தட்டிக் கழிக்க முடியாத நிலையில் உள்ளது என்பது எமது அனுபவபூர்வமான உண்மை.”
அதாவது தேசியக்கொடியை கைவிட்டு போனால்தான் அவர்கள் இனப்படுகொலை நடந்துள்ளது என நம்புவார்களாம். உடனேயே தீர்வும் தந்து விடுவார்களாம்.
“பிரித்தானிய தமிழர் பேரவையை எவ்வாறாயினும் ஒழித்துக்கட்டி விடவேண்டுமென அது தொடங்கிய காலம் தொடக்கம் இலங்கை அரசு பகீரதப்பிரயத்தனம் செய்து வருகின்றது. இலங்கை அரசினதும் மற்றும் பலரினதும் தொடர்ச்சியான கபட நாடகங்களுக்கு மத்தியில் பிரித்தானிய தமிழர் பேரவை மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக நடந்து வருகின்றதுஇ வளர்ந்துவருகின்றது”
இக்கருத்தின்படி தேசியக்கொடியை கைவிட முடியாது என சூளுரைக்கும் மக்களும் இளைஞர்களும் சிங்கள அரசின் ஆட்கள். பொறுப்புள்ள ஒரு அமைப்பு இவ்வாறு அறிக்கை வெளியிடாது.
“இவ்வாறான சந்தர்ப்பத்தில் எமக்குள் குரோதத்தை வளர்ப்பதும் இளைய சமூகத்தை கூறுபடுத்தி தவறாக வழிநடாத்துவதும் ஒற்றுமையைத் தகர்ப்பதுவும் விடுதலை வேண்டி நிற்பவர்கள் செய்யும் பணியல்ல.
” BTF இன் அறிக்கையே குரோதத்தை வளர்பதாகவல்லவா உள்ளது.
“தமிழர் பேரவை தேசியத்தின் பாதையில் தொடர்ந்து பயணிக்கும் எந்த இடர்வரினும் அதனை எதிர் கொள்ளும் பக்குவமும் மனோதிடமும் பிரித்தானிய தமிழர் பேரவைக்கும் எம் மக்களுக்கும் உண்டு.”
தேசியக்கொடியை கைவிட்டுவிட்டு எவ்வாறு தேசியப்பாதையில் தொடர்ந்தும் பயணிக்கும் என்று தெரியவில்லை. தேசிக்கொடியை ஏந்தவே பிரித்தானியாவில் உரிமை இல்லை எனக் கூறிக்கொண்டு…
“இந்நிகழ்வை தமிழினம் மட்டும் தனித்து நின்று முன்னெடுக்காமல் எமக்காக குரல் கொடுப்போர் மற்றும் உலகின் சக்தி வாய்ந்த நாடுகள் எனப் பலரும் சேர்ந்து ஒன்றாக அணி திரள்வதே இன்றைய காலத்தின் தேவையாகும்.”
இவர்கள் கூறும் சக்தி வாய்ந்த நாடுகள் ஒன்றாக சேர்ந்தே எமது மக்களையும் விடுதலை போரையும் அளித்தனர் எனும் உண்மையை விளங்காமல் எவ்வளவு காலம் lobby செய்து பிழைப்பு நடத்துவார்கள்?
கடைசியாக ஒரு கேள்வி அமெரிக்காவிலுள்ள நாடு கடந்த அரசின் பிரதமரே தேசியக்கொடி இல்லாமல் skype இல் உரை நிகழ்த்தமாட்டார். ஆனானப்பட்ட பிரதமரே தேசியக்கொடியை எந்த ஒருபோதும் பின்னிற்பதில்லை. அதுவும் உலக வல்லரசு நாடான அமெரிக்காவிலிருந்துகொண்டு. மேலும் இதிலுள்ள முரண் என்னவென்றால் அப்படிப்பட்ட பிரதமரே london இல் நடைபெற்ற “இனவழிப்பு மீலெழுச்சி நாளில்” BTF இன் ஏற்பாட்டில் skype இல் வந்து துக்கத்துடன் “தேசிய துக்கநாள் ” என்று கூறி விட்டு சென்றுள்ளார்.
என்னாச்சு இந்த தமிழ் இனத்திற்கு??
இரணைமடுக்குளத்திலிருந்து நீரை யாழ்ப்பாணம் கொண்டுசெல்ல வடமகாண அரசு முடிவெடுத்தது ஆனால் அதில் அங்கம் வகிக்கும் சிலரும் வன்னி மக்களும் அதற்கு எதிா்ப்பு தொிவித்தனா் என்று செய்திவந்தது காரணம், குளத்திலுள்ள நீாின் அளவு வன்னி மக்களின் தேவைக்கே போதாது என்பதாகும் அது உண்மையானால் ஏன் வடமகாண சபையினரால் அதை புாிந்துகொள்ளவோ அல்லது நிபுணா்கள் மூலம் அதை உறுதிப்படுத்தவோ முடியவில்லை அத்தோடு பத்திாிகைகளுக்கு செய்தி கொடுப்பதற்கு முன்பு இதை சாதாரணமாக தமக்குள் பேசி தெளிவை பெற்றிருக்க முடியாதா??
அதே விதமாகவே இந்த விடயமும் உள்ளது, புலிக்கொடி புலிகள் இயக்கத்தின் கொடியாகும் தமிழ் இனத்தின் கொடியாக ஏற்றுக்கொள்வதற்கு வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் புலிகள் இயக்கம் இப்போது உலகம் பூராகவும் தடைசெய்யப்பட்டுள்ளதால் இந்தக்கொடியின் பிரசன்னம் விரும்பப்படாத ஒன்றாகவே உள்ளது இதை தவிா்ப்பதால் தமிழா் எதிா்காலத்திற்கு நன்மைகள் நடக்க வாய்ப்புண்டென்றால் அதை இவா்கள் தமக்குள் பேசி இரகசியமாக வைத்திருந்தாலென்ன?? புலிகள்கூட யுத்தநிறுத்த காலத்தில் புலிக்கொடியை தவிா்த்தவா்கள்தானே.
புலிகள் யுத்தநிறுத்த காலத்தில் புலிக்கொடியை தவிர்க்கவில்லை.
வரலாற்றை பிழையாக யாரும் எழுத முற்படவேண்டாம்.
புலிகள் மூவா்ண கொடிகழுடன் திாிந்தகாலம் எது ?இந்திய இராணுவம் இருந்தகாலமா அல்லது யுத்தநிறுத்தகாலமா? அதை நீங்கள் எழுதி உதவிசெய்யலாமே.
இங்கு சாித்திரம் முக்கியம் அல்ல, அவா்களும் அதை ஏதோ ஒரு காரணத்திற்காக தவிா்த்ததுவே முக்கியம்.
நீங்கள் சமாதான காலத்தில் ( கிட்டத்தட்ட 5 வருடங்களுக்கு மேல் ) புலிகள் புலிக்கொடியை தவிர்த்திருந்ததாக உண்மைக்கு மாறான தகவலை வெளியிட்டிருந்தீர்கள் .
அதற்கான பதில் வழங்கப்பட்டிருந்தது .
இபோது இந்திய ராணுவ காலம் அது இதுவென்று பேச்சை மாற்றுகிறீர்கள் .
நேஸறி பிள்ளைகளின் நிலையில் உமது விவாதம்
உள்ளது.
## நேஸறி பிள்ளைகளின் நிலையில் உமது விவாதம்
உள்ளது.##
பொய்யான தகவலை வழங்கி அது சுட்டிக்காட்டபடும்போது வேறு வழியில்லாமல் நேஸறி எல்.கே.ஜி என்று குழந்தைதனமாக எதயாவது சொல்லி சப்பை கட்டு கட்டவேண்டியதுதான் ..
## இங்கு சாித்திரம் முக்கியம் அல்ல ##
சரித்திரம் இங்கு முக்கியமல்ல என்றால் , தாங்கள் மட்டும் ஏன் சரித்திரத்திலிருந்து உதாரணம் காட்டினீர்கள் . அத்ற்கு பதில் தரும்போது சரித்திரத்தைத்தான் குறிப்பிட வேண்டியிருக்கிறது .
உடனே அத்ற்கு பதில் இங்கு சரித்திரம் முக்கியமல்ல என்பதா ?
எந்தக்காலத்திலும் புலிகள் வேறு ஒரு கொடியை பிடி
க்கவில்லை என்று உம்மால் மறுக்கமுடியுமா?
## எந்தக்காலத்திலும் புலிகள் வேறு ஒரு கொடியை பிடி
க்கவில்லை என்று உம்மால் மறுக்கமுடியுமா?##
மற்றவர்களை சரித்திரம் பேசக்கூடாதென்று கூறி விட்டு நீங்கள் இன்னமும் சரித்திரத்திலேதான் நிற்கிறீர்கள்.
மறுக்க முடியும்..
புலிகள் யுத்தநிறுத்த காலத்தின்போதுநடந்த பேச்சு வார்த்தைகளின்போது , பேச்சு வார்க்தை மேடையிலேயே புலிக்கொடியை நாட்டியிருந்தனர் என்பதை குமார் என்பவரது மேலான கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன்.
புலிகள் யுத்தகாலத்திலும், சமாதானப்பேச்சு காலத்திலும்
புலிக்கொடியைத்தான் . பிடித்தார்களதே கொடியையே புலம்பெயர்
நாடுகளிலும் பிடித்தார்கள். அதற்கு தமிழர்கழும் பயந்தார்கள்.
இறுதியில் புலிகளே வெள்ளைக்கொடியைக் காட்டியபின்னர்
அந்த வெள்ளைக்கொடிக்கே இலங்கை அரசும் இராணுவமும்
மதிப்புக் கொடுக்கவில்லையென்பதே இப்போ புலம் பெய்ர் தமிழமைப்புகளின் குற்ரச்சாட்டு. இவ்வளவும் நடந்து முடிந்த பீன்னர்
எதற்காக இன்னமும் இந்த புலிக்கொடி விவகாரம்.
தங்களைக்காக்கவா, தமிழீழவிடுதலைப்புலிகளைக்காக்கவா? பயங்கரவாதத்தைக்காக்கவா? இலங்கைத்தமிழர்களைக்காக்கவா?
## புலம்பெயர்
நாடுகளிலும் பிடித்தார்கள். அதற்கு தமிழர்கழும் பயந்தார்கள்.##
ஒரு வேளை மன்னன் பயந்திருக்கலாம் . அதற்காக தன்னையே ஒட்டு மொத்த தமிழ் மக்களாக அவர் நினைத்துக்கொள்ளக்கூடாது..
சரி ஒரு வாதத்துக்காக ஈழத்தில் புலிகளுக்கு பயந்திருந்தார்கள் என வைத்துக்கொள்வோம் .
மேற்குலகநாடுகளிலுமா மக்கள் பயந்து போய் கிடந்தார்கள் .
ஒரு வேளை மேற்குலகநாடுகளையும் , அடக்குமுறை ரஷ்யா , சீனா போல எனநினைத்துக்கொண்டிருக்கிறாரோ என்னமோ ?
புலிகொடி பிடித்ததனாலும் புலிகளின் செயலாலும்
(பயம்+கரம்) பயங்கரமான அமைப்பாக
உலகநாடுகள் தீர்மனித்திருகும்போது மன்னன்
மட்டுமே பயந்தார் என்பது உலகளாவிய லாலா
வின் அறிவை எடுத்துக்காட்ட்டுகின்றது.
க்ட்ட்ப்://உன்டமில்சொம்.ப்லொக்ச்பொட்.சொ.உக்/2012/10/ப்லொக்-பொச்ட்_30.க்ட்ம்ல்
பிரித்தானியா தமிழர் பேரவை என்ற போர்வையில் இந்திய றோவினர் முன்னெடுக்கும் போர்க்குற்ற விசாரணைக்கான மகாநாடு!
தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினதும்,
பிரித்தானியத் தமிழர் பேரவையினதும்
ஆளுமையற்ற, உறுதியற்ற,துணிவற்ற,
கையாலாகாத,வெகுளிப் பொறுப்பாளர்களின் கோமாளித் தனமான வழிநடத்தல்கள் எமது அமைப்பையும்,தமிழர் அடையாளச் சின்னமான தேசியக் கொடியையும் கள்ளுக்கடை அரசியல் பேசுவோர்கள் எல்லாம் கேவலப்படுத்தி விமர்சிக்கும் நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது.பிரித்தானியாவில் மக்களிடையே மீண்டும் குழப்பங்களை உருவாக்கி,
தேசவிடுதலைக்காய் ஒன்றிணைந்து நின்றோரை செயற்பாடுகளிலிருந்து ஒதுங்கும் நிலைக்கு தள்ளியுள்ளது
இவர்களது கபடத்தனமான திருகுதாளங்கள்.
இதற்கான முழுப்பொறுப்பையும் இவர்களே ஏற்றுக்கொள்ளவேண்டும்.
இதற்குப் பின்னரும் தாமே தமிழ்மக்களின் பிரதிநிதிகள் என தொடர்ந்து கூட்டம் போட்டு பீற்றிக்கொள்வதை தேசியத்தின்பால் அக்கறையுள்ள எவரும்
ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.
.சுழியோடி.
போங்கடா போங்க தமிழன் புத்திக் காரனடா……. 50 இக்கு 50 பது கேட்டான் குடுக்கல , சமஸ்ட்டி கேட்டான் குடுக்கல , ஈழம் கேட்டான் குடுக்கல. ஆயுதம் தூக்கினான் …… விளங்கல….. இப்ப மீண்டும் அரசியல் ஒண்டும் விளங்கல……. விளங்கிற அரசியல் எந்த காலத்தில் தமிழ் தரப்பு செய்தவை? மாதன முத்தாவின் அசல் வாரிசுகள் தமிழர்கள் தான். புலிக்கொடி ஏந்த அடம் பிடிப்போரும் அதை மறுப்போரும் கொண்டிருக்கக் கூடிய குறைந்த பட்ச்ச முற்போக்கு அரசியல் என்ன? பிரச்சினைகள் கருத்துவேறுபாடுகள் ஏற்படுவது வழமை அவற்றை வெற்றி கரமாக கையாண்டு ஒற்றுமையை பலப் படுத்தி குறிக்கோளை வென்று எடுப்பதில் மாதன முத்தாகளின் தலைமைகள் எனச் சொல்லப் படுகின்ற ஜி ஜி , செல்வா, அமுதலிங்கம் , பிரபாகரன், உட்பட இன்றைய சம்பந்தன் வகையறாக்கள் எல்லாம் சமத்தர்கள். முதலில் மதிலை உடைத்தார்கள், கழுதை திருகி பார்த்தார்கள் முடியல…… தலையை வெட்டினார்கள் வரல……. கடைசியாக உடைஞ்ச பானையும் வெட்டிய தலையும் தான் தமிழனின் மிச்சம். நான் கீழ சொல்ல வரும் விடயம் எல்லா தமிழ் ஆயுத, அரசியல் அமைப்புகளுக்கும் பொருந்தும். எனினும் புலிகளே இவற்றில் பிரதான பாத்திரம் ஏற்றதால் புலிகளோடு மாதன முத்தாவை முதலில் பொருத்தி பார்ப்போம்.
தமிழ் மக்களின் விதியை மாற்றி அமைப்பதில் தமக்கு இருக்கக் கூடிய ஆளுமைகளை ஒவ்வொரு இயக்கங்களும் அதன் தலைமைகளும் ஒவ்வொரு மாதன முத்தா திட்டங்களை வைத்திருந்தனர் பிரபாகரனும் அவர் சார் சக்திகளும் தமக்கும் ஒவ்வொரு திட்டத்தை வைத்திருந்தனர் அதில் தமக்கு ஒத்து வராத சகதரப்பினர் தடை செய்யப் பட்டனர் துரோகிகள் என சுட்டு தள்ளப் பட்டனர். போராட்டம் மக்கள் மையப் படுத்தப் படாது 1.7 மில்லியன் தமிழர்கள் தமது தாய் நிலத்தை விட்டு புலம் பெயர கூடிய அத்தனை எது நிலைகளையும் உருவாக்கினர். போருக்கு பொதுமக்களிடம் கட்டாயமாக பணமும் வாங்கி பொருட்களின் விலையையும் கட்டற்ற முறையில் கூட்டிவிற்று மக்களின் உற்பத்தி, வாழ்வாதார திறன் என்பவற்றை சிதைத்து விட்டு அல்லது தமது நடவடிக்கையால் அவைகள் சிதைக்கப் படுகின்றது என்ற அடிப்படை அறிவும் அற்று தமது நடவடிக்கையை தொடர்ந்தனர். இன் நிகழ்வு ராணுவ வன்முறையால் வாடிய மக்களை மேலும் மேலும் வாழ்வாதாரத்தில் கீழ் நிலையை தள்ளியதால் வடக்கு கிழக்கு மாகாணத்தில் இருந்து இடப் பெயர்வை அதிகரித்தது. இன்று வடக்கு கிழக்கில் 1.3 மில்லியன் தமிழர்கள் இருபதாக குறிப்பிடப் படுகிறது இந்த சனச் செறிவு குறைவை காட்டியும் அதனை பயன் படுத்தியும் சிங்கள அரசு வடக்கு கிழக்கில் பாரிய இனச் சிதைப்பை வேக மாக செய்து வருகிறது. புலிகள்பலமாக இருந்த காலத்திலும் இதனையே இலங்கை அரசு செய்து வந்தது இதனை புலிகள் உணராமலே தமது போராட்டத்தையும் தொடர்ந்தே வந்தனர். இது பாருங்கள் மாதன முத்தாவின் கதை போல் அல்லவா உள்ளது.
இதில் தமிழர் தரப்பில் உள்ள அனைவரும் மாதன முத்தாக்களின் பரம்பரையை சேர்ந்தவர்கள் என்று நிரூபித்து கொண்டிருக்கிறார்கள். இரணைமடு குடிநீர் திட்டம், கிழக்கு. யாழ் பல்கலைகழக கல்விமான்களின் நடவடிக்கைகள், வடக்கு மாகாண சபை, கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, இன்னும் பல தமிழ் வகையறாக்களில் மாதன முத்தாவின் வாரிசு மணமே அடிக்கிறது. இதில் புலம் பெயர் அமைப்புகள் விதி விலக்கல்ல.
இங்கு புலிக்கொடி எல்லா இடமும் பிடிக்கப்படவேண்டும் என்பதுதான் இலங்கை அரசின் விருப்பமும், ஏனெனில் அப்படியாயின் எல்லாப் போராட்டங்களையும் புலிச்சாயம் பூசி அதன் நியாயத்தன்மைகளையும் இலகுவாக நிராகரித்துவிடலாம். தமிழர் விரும்பாவிட்டாலும் புலிஅமைப்பும் அதன் இலட்சனையும் பல நாடுகளில் தடைசெய்யப்பட்டுள்ளன. எனவே புலிக்கொடியுடன் போராட்டங்கள் செய்யும்போது வேற்றின மக்கள் அதனை வேறுவிதமாகவே பார்ப்பார்கள். இப்போராட்டங்களில் பங்கேற்கும் வேற்றின அரசியல் பிரமுகர்களிற்கும் இதனால் சங்கடங்கள்.
TCCஎதிர்பிற்கு காரணம் அவர்களது அதிகாரப்போட்டியே. ஏனெனில் மற்றைய பல நாடுகளில் தாமே இதனை நடாத்த இங்கு மட்டும் வேறு ஆட்கள் BTFசெய்வதா என்பதே. இவர்களின் முக்கிய இலக்கே மாவீரர் நாள், மே18 என்பவற்றினை கொண்டாடுவது மட்டுமே. இந்த 5 வருடங்களில் வேறு என்ன செய்தனர். ஒன்று மட்டும் செய்தனர் தம்மைச் சாரந்தோர் தவிர ஏனையோரிற்கு(TNA, BTF, TGA)
துரோகிகள் பட்டமளிப்பு செய்வது.
தேவையில்லாத இடங்களில் குறிப்பாக மனிதவுரிமை சார்பான போராட்டங்களில் புலிக்கொடி தவிர்க்கப்படுவதால் கூடிய நன்மை மக்களிற்கு கிடைக்குமாயின் அதனை செய்தே ஆகவேண்டும். என்ன கொடிபிடித்து போராடுகிறோம் என்பனைவிட அப்போராட்டத்தால் தாயகத்திலுள்ள மக்களிற்கு என்ன நன்மை என்பதே முக்கியம்
“என்ன கொடிபிடித்து போராடுகிறோம் என்பனைவிட அப்போராட்டத்தால் தாயகத்திலுள்ள மக்களிற்கு என்ன நன்மை என்பதே முக்கியம்”
” தமிழர் தரப்பில் உள்ள அனைவரும் மாதன முத்தாக்களின் பரம்பரையை சேர்ந்தவர்கள் என்று நிரூபித்து கொண்டிருக்கிறார்கள். ”
இந்தச் சீலைக் ( அல்லது பிளாஸ்டிக் ) கொடியை இப்படிச் செய்தால் என்ன?
ஒரு பக்கத்தில் சிங்கத்தின் படமுள்ள மறு பக்கத்தில் புலியின் படமுள்ள கொடியொன்றை நம்மால் உருவாக்க முடியுமா …. இதுபோன்ற கொடி க்கு தமிழ் சிங்கள இனவெறி பிடித்த மிருகங்கள் எதிர்ப்பு தெரிவிக்கத் திணறுவார்கள்
மனித நேயமற்ற இந்த மிருகங்களை ஒதுக்குவதற்கு இதைவிடச் சரியான வழி கிடையாது ….
ஆனால் இதை வைத்து பிழைக்கத் தெரிந்தவர்கள் பிழைத்துக் கொள்ளட்டும் …..
என்னிடம் பிழைப்பு நடாத்துவதற்கு இயக்கத்தின் பெயரில் சேர்த்த சொத்துக்கள் எதுவும் இல்லை.அப்படியான நிதி சேகரிப்பில் ஈடுபடவுமில்லை. பின்பு சொத்துக்கணக்கினை தலைவரிடம் மட்டுமே காட்டுவோம் என்று அவற்றினை வைத்துப்பிழைப்பு நடாத்தவும் தெரியவில்லை.
நீங்கள் இப்படி புலம்புவதைப்பார்த்தால் , அவர்களுக்கு அடித்த சான்ஸ்நமக்கு வாய்க்கவில்லையே என வயிறெரிவது போலல்லவா இருக்கிறது ?
இராஜ்பக்ச குடும்பத்திற்கும் பணம் சுருட்டி வாழ்வு
ந்டத்தும் புலிகழும் ஒன்றே என ஏற்றுக்கொண்ட
பெரும்தன்மையை போற்றுவோம்.
ராஜபக்ஷ குடும்பத்தவர்களை பகிரங்கமாக எதிர்ப்பவர்கள திட்டு தீர்த்து ராஜபக்ஷ குடும்பத்துக்கு ராஜ விஸ்வாசமாக இருப்பவர்கள் யாரை எல்லாம் யாரை எல்லாம் திட்டுகிறார்களோ அவர்கள் சரியான பாதையில் செல்வதாக தமிழ் மக்களால் அடையாளப்படுத்தப்படுவார்கள் .
TCC அமைப்பினுள் நேரடியாகவும் 2009 அம ஆண்டின் பின் அந்நிய உளவுத்தறைகளால் உள்நுழைக்கப்பட்டுள்ள இடையூறு விளவிப்பவர்களும் அல்லது வெளியே இருந்து மக்களை குழப்பிவிடுபவர்களும் ஏனைய அமைப்புகளிலுள்ளவர்களை சலுகைகளையும் உறுதிகளையும் கொடுத்து ஏமாற்றி மூளைச்சலவை செய்தும் வைத்துள்ள காலமிது. இதனை வேலையில் தெரியாமல் எதிர்த்து போராடும் TCC உறுப்பினர்களும் தனிப்பட்ட போராட்ட குணமுள்ளவர்களும் மக்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதனால் தான் தற்போதும் விடுதலை நோக்கிய போராட்டம் முன்னோக்கியே நகர்கின்றது…ஒரு சிலர் பதவிகளுக்காகவும் சலுகைகளுக்காகவும் இவமைப்புகளில் இருந்து கொண்டு அந்நிய சக்திகளுக்கு தேவையான விதத்தில் நகர்த்தப்பார்கிரார்கள்…
இவர்கள் பார்பதற்கு எமது மக்களுக்காக போராடுபவர்கள் போல் தான் தெரிவார்கள். ஆனால் முக்கியமான தருணங்களில் கொள்கை சம்பந்தப்பட்ட முக்கியமான விடயங்களில் அந்நியர்களுக்கு தமது விசுவாசத்தை காட்டி தமிழ் மக்களின் கால்களை நாசுக்காக வாரி விடுவார்கள். இதை இவர்கள் நுணுக்கமாக செய்வார்கள். எனவே மக்கள் கண்களில் எண்ணை விட்ட படி மிகவும் அவதானமாக எல்லாவற்றையும் கவனித்து வரவேண்டும். இல்லையேல் இவ்வாறான எம்மிடையே உள்ள நயவஞ்சகர்களை பாவித்தே மெள்ள மெள்ள மக்களுக்குப்புரியாமலேயே அந்நியசக்திகள் எமது மக்களின் விடுதலைப் போராட்டத்தை அழித்து விடுவார்கள்…
இருந்து பாருங்கள் இசைப் பிரியாவின் படத்தோடு கொடியை போடுவார்கள். இனி தலைவரை விட புலியை விட போராட்டத்தை விற்றுப் பிழைப்பு நடத்த சரியான தெரிவு.
## புலிகொடி பிடித்ததனாலும் புலிகளின் செயலாலும்
(பயம்+கரம்) பயங்கரமான அமைப்பாக
உலகநாடுகள் தீர்மனித்திருகும்போது மன்னன்
மட்டுமே பயந்தார் என்பது உலகளாவிய லாலா
வின் அறிவை எடுத்துக்காட்ட்டுகின் ##
நீங்கள் சொல்லும் அந்த பயம் + கரத்தைப்பற்றித்தான் பல உலகளாவிய தலைவர்கள் கை குலுக்கி பேச்சு வார்த்தை ந டத்தினார்கள் என்பது உலகளாவிய அறிவைப்பெற்ற மேதைக்கு தெரியாமல் போய் விட்டது.
அது சரி, நீங்கள் பயந்து போய் கொடியை பிடித்துக்கொண்டு நடையாய் நடந்திருக்கிறீர்கள் போலிருக்கிறது..பாவம் உங்கள் வேதனை உங்களுக்கு நான் அதில் விளையாடக்கூடாதுதான்
கை குலுக்கிய தலைவர்களின் இறுதி முடிவு என்னவாகப் போயிற்று என
உலகத்தலைவர்களோ அல்ல்து புலம்பெயர் தமிழ் அமைப்புகளோ
கவலைப்படாததேனோ?
முதல்ல தமிழ் மக்கள் ஈழத்திலும் சரி புலத்திலும் சரி புலிகளுக்கு பயந்துதான் ஆதரித்தார்கள் , கொடி பிடித்தார்களென கண்டு பிடிப்பொன்றை வெளியிட்டிருந்தீர்கள் .
ஈழத்தில் ஒரு வாதத்துக்காக ஒப்புக்கொள்வோம் , புலத்தில் மேற்குலகநாடுகளிலுமா பயப்படுகிறார்கள் ?. அங்குதான் போலிஸ் சட்டம் , ஒழுங்கு இருக்கிறதே என்று கேட்டதற்கு , சர்வதேச அளவில் உலகளாவிய தலைவர்களே புலிகளுக்கு பயந்து போய்தான் கிடக்கிறார்களென கப்ஸா விட்டீர்கள் .
நீங்கள் சொல்வதுபோல் உலகளாவிய தலைவரகள் அந்த பயம் கர வாதிகளுக்கு பயந்து போயிருந்தாகள் என்றால் , அந்த பயம் கர வாதிகளின் இருப்பிடம் சென்று ஏன் கை குலுக்க வேண்டும் ? தமதுநாடுகளுக்கு வருமாறு என் அழைப்பு விட வேண்டும் ?
ஜனனாயக அரசுகள் ஏன் நீங்கள் சொல்வது போன்ற பயங்கரவாத அமைப்பொன்றுடன் தொடர்புகளை வைத்து குலாவ வேண்டும் ?
புலிகளுக்கு பயந்து போய் கொடியுடன் தெருத்தெருவாக சுற்றியதில் ஏகத்துக்கும் குழம்பி போயிருக்கிறீர்கள் போலிருக்கிறது