இலங்கையில் விடுதலைப்புலிகள் அப்பாவி பொதுமக்களை கொல்வதை, பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் டேவிட் மிலிபாண்ட் அவர்கள் கவனப்பிசகாக ஊக்குவிப்பதாக இலங்கை அரசாங்க மூத்த அதிகாரி ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இலங்கை அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு வலயப் பகுதியில் நடத்தப்பட்ட கடுமையான எறிகணைத் தாக்குதலில் கிட்டத்தட்ட 400 பொதுமக்கள் கொல்லப்பட்டதோடு, ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்ததாக அந்தப் பகுதியில் உள்ள மருத்துவர் ஒருவர் தெரிவித்திருந்தார்.
இந்த எறிகணைகள் அரசாங்க கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் இருந்து வந்தவை போன்று தென்படுகின்றன.
ஆனால், இந்த பாதிப்புக்கள் விடுதலைப்புலிகளால் ஏற்படுத்தப்பட்டவை என்றும், அவர்களை டேவிட் மிலிபாண்ட் அவர்கள் ஊக்குவிக்கிறார் என்றும், பிபிசிக்கு வழங்கிய செவ்வி ஒன்றில், இலங்கை ஜனாதிபதியின் நிரந்தரச் செயலாளரான பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
விடுதலைப்புலிகள் சரணடைய வேண்டுமா என்ற கேள்விக்கு நழுவலாக பதிலளிப்பதன் மூலம் அவர் விடுதலைப்புலிகளை ஊக்குவிக்கிறார் என்று ரஜீவ விஜேசிங்க குற்றஞ்சாட்டியுள்ளார்.
இருண்டவன் கண்ணுக்கு மருண்டதெல்லாம் பேயாய்தெரியும்! இந்நிலையிலேயே மகிந்த-கோத்தபாயா பேரினவாதம் உள்ளது!