Thursday, May 14, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

“நேபாளத்தில் புதிய அரசொன்றை அமைப்பதற்கான சதித்திட்டத்திற்காக கேவலமான செயலில் இந்தியா”: பிரசண்டா

இனியொரு... by இனியொரு...
05/11/2009
in இன்றைய செய்திகள்
0 0
1
Home இன்றைய செய்திகள்

நேபாளத்தில் புதிய அரசொன்றை அமைப்பதற்கான சதித்திட்டத்திற்காக நேபாளத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களை வாங்கியும் விற்றும் மிகக் கேவலமான செயலில் இந்தியா ஈடுபட்டுள்ளதாக பதவி விலகியுள்ள முன்னாள் பிரதமர் பிரசண்டா கடுமையாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
நேபாள இராணுவத் தளபதியை பதவிநீக்கம் செய்வது தொடர்பாக ஜனாதிபதி ராம் பரன் யாதவ்விற்கும் பிரதமர் பிரசண்டாவுக்கும் இடையிலிருந்து வந்த முரண்பாட்டைத் தொடர்ந்து பிரசண்டா பிரதமர் பதவியிலிருந்து விலகினார்.

இராணுவத்தளபதி ஜெனரல் கடாவலை பதவி நீக்கியதாக பிரதமர் பிரசண்டா அறிவித்திருந்த நிலையில் கடாவலுக்கு ஜனாதிபதியால் மீண்டும் பதவி வழங்கப்பட்டதைத் தொடர்ந்தே பிரசண்டா பதவி விலகியிருந்தார்.

இந்நிலையில், புதிய அரசொன்றை அமைப்பதற்கு ஜனாதிபதி ராம் பரன் 5 நாள் காலக்கெடுவையும் விதித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து நேபாளத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்திற்கு இந்தியாவை சாடியுள்ள பிரசண்டா மேலும் தெரிவிக்கையில்;

நேபாள எம்.பி.க்களை வாங்கியும் விற்றும் நேபாளத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சியில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன.

மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகளும் தலைமைத்துவம் வகிப்பதற்கு பொருத்தமற்ற அரசியல் கட்சிகளுமே இவ்வாறான கேவலமான செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளன.

இவ்வாறான கட்சிகள் வெளிநாடுகளின் தந்திரோபாயமான ஆலோசனைகளின்படியே செயற்பட்டு வருகின்றன.

இராணுவத் தளபதியை பதவிநீக்கம் செய்த தினத்தன்று காலை என்னை சந்தித்த அரசியல் கட்சி ஒன்றின் தலைவர் எம்.பி.க்களை வாங்குவதற்கு பலகோடிகளை செலவிட வேண்டியதாக உள்ளதாக தெரிவித்தார்.

அத்துடன், இவ்வாறான சூழ்நிலை அரசியலை அபாயகரமான நிலைக்குள் தள்ளியிருப்பதாகவும் அந்த எம்.பி. என்னிடம் கூறியிருந்தார்.

நேபாள அரசியலில் வெளிநாடுகளின் தலையீட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இராணுவத்தினருக்கு எதிரான சிவில் யுத்தத்திற்குமான ஏவுகணையாகவே தனது இராஜிநாமா அமைந்துள்ளதெனத் தெரிவித்தார்.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

தடைசெய்யப்பட்ட இரசாயணக் குண்டுத் தாக்குதல்களால் பலருக்கு எரிகாயங்கள்:ஏ.எவ்.பி. செய்திச்சேவை.

Comments 1

  1. msri says:
    17 years ago

    எம்மவர் மத்தியில் இப்போதும் இந்தியா பற்றிய ஓர் மாயை உண்டு! அது புண்ணிய பூமி- அரிச்சந்திரன்- புத்தர்- காந்தி அவதரித்த தேசம்! “மிகப்பெரிய ஐனநாயக நாடென்று! இப்பார்வை இன்று தலைகீழாகிவிட்டது! ஓரு காலத்தில் சார் மன்னின் ரசியாவே தேசிய இனங்களின் சிறைக்கூடம்! இது இப்போ இந்தியாவிற்கும் பொருந்தும்! காஐமீர்-நாகலாந்து -மணிப்பூர் மாநிலங்கனள சான்று! இலங்கையும் இந்தியாவின் ஓர் (உத்தியோகப்பற்றற்ற) மாநிலமே! இதைப்போன்றே நேபாளத்திற்கான மேலாதிக்க வேலையையும் முடுக்கி விட்டுள்ளது!

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In