விடுதலைப்புலிகள் மீதான தடையை மத்திய அரசு மேலும் 2 ஆண்டுகளுக்கு நீடித்தது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் வைகோ ஆஜராகி வாதாட முடியாது என்று கோர்ட் கூறியுள்ளது.
விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு எதிரான தடையை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீடித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்து இருந்தது.
இந்த உத்தரவுக்கு தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் நியமித்த சிறப்பு தீர்ப்பாயம் விசாரித்து வருகிறது.
நீதிபதி விக்ரம்ஜித் ஜெயின் தலைமையில் நடைபெற்ற இந்த விசாரணையின்போது விடுதலைப்புலிகள் இயக்கத்தின் சார்பில், அதன் அனுதாபி என்ற முறையில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ ஆஜராகி வாதாடினார்.
வைகோ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் சார்பில் ஆஜராகவில்லை என்றும், அந்த இயக்கத்தின் உறுப்பினர் அல்ல என்பதால் இந்த வழக்கில் ஆஜராக முடியாது என்றும், மத்திய அரசு மற்றும் தமிழக அரசின் சார்பில் ஆஜரான வக்கீல்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் வக்கீல் ஒருவர் மூலம் வைகோ தனது வாதத்தை எடுத்துக்கூறலாம் என்று நீதிபதி அனுமதி அளித்தார்.
அதைத் தொடர்ந்து வாதாடிய வைகோ, விடுதலைப்புலிகளுக்கு தடையை நீடிக்கக்கூடாது என்று கேட்டுக்கொண்டார். இரு தரப்பு விவாதத்தையும் கேட்ட நீதிபதி விக்ரம்ஜித்சென், வைகோ ஆஜராகி வாதாட அனுமதி மறுத்து தீர்ப்பு கூறினார்.
விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையவரோ, உறுப்பினரோ அல்லது அதன் நிர்வாகிகளில் ஒருவரோதான் சட்டப்படி இந்த வழக்கில் ஆஜராக முடியும் என்று தனது உத்தரவில் குறிப்பிட்ட நீதிபதி, வைகோவின் கோரிக்கையை நிராகரித்தார்.








அட அந்த நீதிபதியென்று சொல்லுகின்றவருக்கு கைக்குள் ஏதாவது வைத்தால் எல்லாம் சரியாகப்போகின்றது, இதுஎல்லாம் இந்தியாவில் சாதாரணம்.
வைகோ அவர்கள் நீதிபதியாகி, விடுதலைப்புலிகளுக்கு தடையை நீடிக்கக்கூடாது என்று வேறொருவர் வாதாடினால் அந்த வேறொருவர் வாதாடவும் அனுமதி மறுத்தே தீர்ப்பு கூறப்படும். இன்றைய இந்திய அரசியல் கோரமுகம் கொண்டது. அதன் அரசியல் மரபு மாற்றமடைவதும் கடினம். இதனை வைகோ அவர்களே முன்னொருதடவை சிறப்பாக வெளிப்படுத்தினார். அகோரமாக எறிக்கும் வெய்யிலின் உக்கிரத்தை தாங்கமுடியாத நிலை ஏற்பட்டபோது தவளையும் பாம்பின் நிழலையே பாதுகாப்பிற்கு தேடியது. இதன் வழிதான் திருமா கருனாவை தேடிநிற்பதும், முத்துக்குமாரனின் இறுதி ஊர்வல செய்திகளும்.
புலிகள் நடாத்தும் ஈழப் போராட்டம் ஒன்றும் பயங்கரவாத யுத்தமில்லை
என்றும், தமிழர்கள் சுயநிர்ணய உருமைகளுக்கு உரித்துடையவர்கள் என்று
சமீபத்தில் நியூசிலாந்தின் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஈழப்போராட்டத்தை முன்னெடுக்க நியூசிலாந்தின் உச்ச நீதிமன்றத்தின்
தீர்ப்பே போதும் :சென்ற மாதம் .தமிழ் ஈழ விடுதலை புலிகள் மீது உள்ள தடையை நீடிக்கும் விவகாரத்தில்
தில்லியில் 21-0-2010 அன்று நடந்த விசாரனையில் திரு வைகோ அவர்கள்
கலந்து கொண்டார், (நன்றி) ஆனால், விடுதலை
புலிகளின் பிரதிநிதி மட்டுமே விடுதலை புலிகளுக்கு சார்பாக ஆஜராக
முடியும் என்று நீதிமன்றம் தெரிவித்து விட்டது, முதலில் ஒரு வக்கீல்
மூலமாக ஆஜராக வேண்டும் என்றும் நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது, ஆனால்
திரு வைகோ அவர்கள் தானே ஆஜராக அனுமதி கோரினார், அரசு வக்கீல் ஆட்சேபனை
தெரிவித்து பிறகு அது மறுக்கப்பட்டது. பின்பு, விசாரனை அக்டோபர் 5 ஆம்
தேதி சென்னையில் நடக்கும் என்று ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஐயா, எனக்கு ஒரு சந்தேகம், தமிழ் ஈழ விடுதலை புலிகள் இயக்கம்
இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கம், அவர்களின் உறுப்பினர்கள் எவறேனும்
இங்கு வந்தால், உடனே கைது செய்யப்படுவார்கள், அப்படி இருக்கையில்,
நீதி மன்றம் சொல்வது போல் தமிழ் ஈழ விடுதலை புலிகளின் சார்பாக அவர்களின்
பிரதிநிதி/கள் எப்படி ஆஜராக முடியும்.
ஆகவே, உச்ச நீதி மன்றம் சென்று இதற்கு ஒரு தீர்வு கான வேண்டும்.
அக்டோபர் 5 ஆம் தேதி சென்னையில் நடக்கும் விசாரனைக்கு உச்ச நீதி
மன்றத்தில் தடை பெற்ற பின்பு மேலே கூறியவற்றிற்க்கு விளக்கம் அறிவது
நல்லது.
பின்பு, வைகோ அவர்களும், ஒரு வக்கீலுடன், அக்டோபர் 5 ஆம் தேதி சென்னையில்
நடக்கும் விசாரனையில் ஆஜராகமாறு வேண்டிக் கொள்கிறேன்