Monday, April 27, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

புலிகளின் பலமான பகுதிகளுக்குள் இலங்கை இராணுவம் ஊடுருவி பிரபாகரனைக் கொன்றது – நோர்வே : இன்னமும் மாவீரர் இல்லை

இனியொரு... by இனியொரு...
11/13/2011
in இன்றைய செய்திகள்
0 0
13
Home இன்றைய செய்திகள்

அரச படைகள் தமிழீழ விடுதலைப் புலிகளின் பலமான பகுதிகளுக்குள் ஊடுருவி அவ்வியக்கத்தின் தலைவர் பிரபாகரன், ஏனைய தலைவர்களான சூசை, பொட்டு அம்மான் ஆகியோரையும் கொலைசெய்ததாக நோர்வே அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க துருப்புக்கள் தமிழீழ விடுதலைப்புலிகளின் பலமான இடங்களுக்கு சென்று தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், கடற்புலி தலைவர் சூசை, புலனாய்வு பொறுப்பாளர் பொட்டு அம்மான் ஆகியோரை கொன்றதாகவும் நோர்வேயின் அறிக்கை கூறுகிறது.
எனினும் இறுதிக்கட்ட போரின் போது இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ளும் நோக்கில் பேசப்பட்ட விடயங்கள் குறித்து தகவல்கள் தெரியவில்லை என்று நோர்வேயின் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
2009 ஆம் ஆண்டு இலங்கை இராணுவம் கிளிநொச்சியை கைப்பற்றிய பின்னர், வன்னியை இராணுவம் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் என்று நோர்வே எண்ணியது. ஆயினும் தமிழீழ விடுதலைப்புலிகளின் தாக்குதல் உத்திகள் குறித்த எதிர்ப்பார்ப்பையும் நோர்வே நிராகரிக்கவில்லை.
பிரபாகரன், உயிருடன் இருந்தால், தமிழீழ விடுதலைப்புலிகள், வன்னிக்காட்டுக்குள் சென்று கெரில்லா தாக்குதல்களை நடத்தலாம் என்றும் நோர்வே எதிர்ப்பார்த்தது.
இதுவரை காலமும் மரணித்துப் போன தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் நினைவு கூருவதாகக் கூறி புலம் பெயர் நாடுகளில் கொண்டாடப்படவிருக்கும் மாவீரர் தின விழா குறித்த் இரு பிரிவுகளிடையே சர்ச்சைகள் தொடர்கின்றன. அவ்வியக்கத்தின் தலைவர் பிரபாகரன் இன்னமும் மாவீரர்களில் ஒருவராக அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

போர்க் குற்றவாளிகளைத் தண்டிக்கப் போவதாகப் போர்க் குற்றவாளி அறிவிப்பு

Comments 13

  1. MMAHENDRAN says:
    14 years ago

    THJALAIVAN VARUVAAN. AVARIN JATHAKAPADY MARANAM ILLAI. ITHAI ADITHU KOOROOVEN. M.MAHENDRAN.CANADA.

    • tamilan says:
      14 years ago

      தலைவன் இர்ருக்கிரான் இருகிரான் வருவான் காஙிரஷ் கட்ஷி தோட்ரவுடன்

  2. anpu says:
    14 years ago

    ஏன் இவ்வலவு அவசரம் தலைவர மாவீரர் ஆக்க?

  3. Mahendra says:
    14 years ago

    தலைவனை மாவீரர் ஆக்கிவிட்டால், தலைவனோடிருந்து தலைவனுக்கு குழிபறித்து இன்று தலைவர்களாகி தரணியெங்கும் தமிழரை சுரண்டுபவர்கள், நிர்ப்பயமின்றி தலை நிமிர்த்தி தலைமைதாங்க முடியுமல்லவா! எத்தனை தலைவர்கள் தோன்றினாலும் போற்றிக்கொண்டாடும் ஒரே இனம் தமிழினம்தான். சுடர்விடும் அறிவுடன் உலகில் பிறந்தவர்கள். உண்மையான ஜனநாயகவாதிகள். எல்லோரும் இந்நாட்டு மன்னர்களே என்பதை செயலிலே நிரூபித்து வருபவர்கள். இதுபற்றிக் குறிப்பிட நோர்வே அரசு வெளியிட்ட அறிக்கை தவறிவிட்டதோ?….

  4. veeran says:
    14 years ago

    தலைவன் வருவான் , மிகுதி இருக்கும் தமிழர்களுக்கும் குழி பறிக்க

  5. Mahendra says:
    14 years ago

    புதிய பாதைகளை உருவாக்க முயலும்போது தடைகளும், சிரமங்களும் ஏற்படுவது இயல்பானது. புதிய பாதைகளில் பூச்சி, புழுக்கள், பாம்பு, தேள், நட்டுவக்காலி என பல விஷ ஜந்துக்களும் தோன்றி அபாயங்களை ஏற்படுத்தி தங்கள் வீரத்தையும் காட்ட முற்படும். அவற்றை விலக்கியோ, அழித்தோ கடந்து செல்லவேண்டியது தவிர்க்கமுடியாது.

    • chandran.raja says:
      14 years ago

      விடுதலைக்கு போராடபுறப்பட்ட தமிழ்மக்கள் பூச்சி புழுக்கள் பாம்பு தேள் நட்டுவக்காலி போன்றவற்றை பிரபாகரன் வடிவிலும் புலிமைப்பிலும் கண்டு விட்டார்கள். இனி அவர்களுக்கு புதிய தத்துவம் ஏதுவுமே தேவையில்லை. அவர்களுக்கு தேவையானது பொய்பிரச்சாரங்கள் புலம்பெயர் தமிழர்களின் அறிவுரையில் இருந்து விடுபட்டு சுயமான கூடிவாழும் அரசியல் வழியைத் தேடுவதே!.

      இனிக்காலங்களில் உங்கள் ஆலோசணைகளை சுருக்கி மடக்கி வைத்துக் கொள்ளுங்கள். அவர்களின் வழிக்கே அவர்களை விட்டுவிடுங்கள். இதுவே நீங்கள் அவர்களுக்கு செய்யும் பெறுமதியான அரசியல் கடமையாகும்.

  6. நிர்மலன் says:
    14 years ago

    டக்ளசின் உன்னத வழிகாட்டலிலும் யோகேஸ்வரி (யாழ்மேயர்) தலைமையிலும் விபச்சாரி விடுதிகள் போதைவஸ்து விற்பனை நிலையங்கள் என வழிகாட்டுவீர்களா!

    • chandran.raja says:
      14 years ago

      நிர்மலனின் அறிவில் அமெரிக்காவில் ஐரோப்பாவில் உள்ள விபச்சார விடுதிகளுக்கும் அந்த நாட்டு அரசியல் தலைவர்களும் மேயர்களுமே பொறுப்பேற்க வேண்டுமென கருதுகிறார்.

      யதார்தமோ! வேலையில்லா திண்டாட்டம் மணத்தியாலக் கணக்கில் ஆயிரக்கணக்கில் வீதிக்கிறங்கி வாழ்வு தேடுவது வறுமைகாரணமென்பதை நிர்மலன் மறுக்கிறார்.
      பாலுணர்வு என்பதே மனிதனுக்குரிய அடிபடைதேவை என்பதை விட உயிரினங்களும் இதற்கு விதிவிலக்கல்ல. இதுவொரு பாரதூரமான விபரிப்பது குறிப்பாக பாலுணர்வில் சுகந்திர போக்கை கடைப்பிடிக்க அறிவை வளர்த்துக் கொள்ள
      முடியாத மூன்றாம் உலகநாடுகளே!

      விபச்சாரம் எங்கும் பணத்திற்காகவே நடைபெறுகிறது. இது வறுமையின் பிரதிபலிப்பே! வறுமை ஒழியும் போதும் விபச்சாரமும் ஒழிந்து போகும்.

      விபச்சாரத்திற்கெதிரான போராட்டம் முதாலித்துவதிற் கெதிரான போராட்டம்.இதை புரிந்து கொள்வதற்கு கொஞ்சமாவது வர்க்கயுணர்வு இருந்தாக வேண்டும்.
      இலங்கை வரலாற்றில் உள்நாட்டுயுத்தம் முடிவுக்கு வந்ததே நல்ல சமிகை. இதற்கு டக்கிளஸ்சும் மகிந்தமாவும் தமது ஒத்துழைப்பை மிகையாக வழங்கியிருகிறார்கள். அந்தவகையில் அந்தவகையில் அவர்களுக்கு மனப்பூர்வமான
      நன்றியைக் கூறிக்குகொண்டு இவர்களையும் தாண்டி வரலாறு முன்செல்கிறது. அதற்கான தேடலை நடத்துவதே இன்றுள்ள முற்போக்கு எண்ணம் கொண்டவர்களின் கடமை ஆகும். மூன்றாவது வழி உண்டு என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும்

      • நிர்மலன் says:
        14 years ago

        அமெரிக்கா ஐரோப்பாவில் விபச்சாரத்தை ஒரு தொழிலாக ஏற்று அதற்கு சட்டபூர்வ அந்தஸ்தை கொடுத்துள்ளனர். ஆனால் சிறிலங்காவில் விபச்சாரம் தண்டணைக்குரியது இருந்தும் யாழில் ஈபிடிபி உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் மற்றும் சிறிலங்கா புலானய்வாளர்கள் விடுதி அமைதி அதை நடத்துகிறார்கள் அதற்கு யாழ் மாநகரசபை கண்டும் காணாது அனுமதியளிக்கிறது.
        விபச்சாரம் ஒரு முதலாளித்துவத்தின் அங்கமென்றால் இதை செய்யும் ஈபிடிபியின் தீவிர ஆதரவாளரான தாங்கள் மார்க்சிசம் பேசுவது அப்பட்டமான மோசடியே. பேச்சுக்கு எதிராக உங்கள் நடத்தை முரணாக இருப்பது கேவலமாக தெரியவில்லை. அது சரி தங்களின் முதலீட்டில் யாழில் எத்தனை விடுதியுண்டு!

        • chandran.raja says:
          14 years ago

          அன்ரன் பாலசிங்கத்தின் கும்பல் மாக்ஸியத்தை பற்றி “சோஸலிசத்தின் விடிவு நோக்கி” என்ன கூறியிருக்கிறார் என்பதை நிர்மலன் தெளிவு படுத்த வேண்டும். உண்மையில் யாழ்மேட்டுக் குடிக்கும் சோசலிஸத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. யாழ்ழில் சோசலிசத்துக்கு குரல் எழுப்புபவர்கள் யாழ்பாணத் தழிழர்களால் அடக்கியொடுக்கப் பட்ட தமிழராகவே இருப்பர்.
          உங்கள் மேட்டுக்குடி புராணங்களை உங்கள் ஒத்தவர்களுடன் ஓதிப் பயனடையுங்கள்…?.

          • நிர்மலன் says:
            14 years ago

            இப்ப என்ன சொல்கிறீர்கள் ஈபிடிபி கிரிமினல் கும்பல் யாழில் செய்வது சோசலிச புரட்சியா!

  7. Mahendra says:
    14 years ago

    மிருகங்கள் கூட மறைவில் வெளிப்படுத்த முயலும் பாலுணர்வை வெளிச்சம்போட்டு நடாத்த ஒரு அறிவிலிகூட முயலமாட்டான். வறுமையின் பிரதிபலிப்பு விபச்சாரமா?……. இப்படி சிந்திப்பவர்கள் தங்களுடைய தாய், மனைவி, சகோதரிகள், பெண்பிள்ளைகளை ஒருகணம் நினைத்தும் பார்த்திருப்பார்களா?….

    அமெரிக்க ஜனாதிபதி கிளின்ரனுடன் விபச்சாரம் செய்த மோனிகா ரொட்டிக்கு வழியற்றவளா?…

    நித்தியானந்தாவுடன் விபச்சாரம் செய்த ரஞ்சிதா சோற்றுக்கு வழியற்றவளா?…

    பாலுணர்வில் சுதந்திர போக்கை கடைப்பிடிக்க அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டுமாம்!!… அந்த அறிவைக்கொண்டு முதல் இரவை முதல் பகலாக்கி நாற்சந்தியில் நடாத்திவிடலாமே!!!… அறிவு எப்படியெல்லாம் அற்பர்களால் அலங்கோலப்படுகிறது என்பதற்கு இதைவிட வேறு ஆதாரங்கள் தேவையில்லை. அதற்குள் தொழிலாளி வர்க்கப் போராட்டத்தையும் இணைத்து அடா டா டா!!!!… என்னே அறிவு.

    காட்டிக்கொடுத்து, பிணம்புணரும் படைத்தலைவன் கால் நக்கும் குத்தியன்களுக்கு வக்காலத்து வாங்கும் இவர்களைப் போன்றோர், கூட்டிக்கொடுப்பார்கள் என்பதிலும் எள்ளளவும் சந்தேகமில்லை!.

    இவற்றுக்கெல்லாம் அடிப்படைக் காரணங்கள் எங்கள் சமூக ஒழுக்கக்கேடே தவிர வேறொன்றுமில்லை. கண்ணன் என்னும் கடவுள் கோபியருடன் நடாத்திய விபச்சாரத்தை புனித புராணம்
    என்றும், அறுபதாயிரம் பெண்களுடன் மனைவி என்ற பெயரில் விபச்சாரம் நடாத்தியதை புனித இதிகாசம் என்றும் தமிழனுக்குப் பாடம்சொல்லி தலைமுறைகளாக ஊட்டிவந்ததன் பெறுபேறுகள்தான் இவை. தவிர அவை சில தமிழர்களின் அறிவை சுடர்விட்டுப் பிரகாசிக்கவும் வைத்துள்ளது.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...