Tuesday, April 28, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

புதிய ஜனநாயக மார்க்சிய லெனினியக் கட்சி – வட பிராந்திய மாநாடு : தோழர் செந்தில்வேல் சிறப்புரை

இனியொரு... by இனியொரு...
02/28/2011
in பிரதான பதிவுகள் | Principle posts, அரசியல்
0 0
45
Home பிரதான பதிவுகள் | Principle posts

புதிய – ஜனநாயக மாக்சிச – லெனினிசக் கட்சியின்
5வது வடபிராந்திய மாநாட்டில்
பொதுச் செயலாளார் சி.கா.செந்திவேல் ஆற்றிய சிறப்புரை.

 

யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு இருபது மாதங்களுக்கு மேலாகியும் அக் கொடிய யுத்தத்திற்குக் காரணமாக நீடித்து வந்த தேசிய இனப் பிரச்சினைக்கு மகிந்த சிந்தனை அரசாங்கத்தினால் தீர்வு எதனையும் முன்வைக்க இயலவில்லை. ஆதற்கான அடிப்படைக் காரணம் பேரினவாத முதலாளித்துவ ஆளும் வர்க்க நிலைப்பாடேயாகும். இதன் மூலம் இன முரண்பாடும் இன ஒடுக்கு முறையும் நீடித்துச் செல்கின்றன. அதனால் இலங்கை அரசியலில் தேசிய இனப் பிரச்சினை என்பது இன்றும் பிரதான இடத்தில் இருந்து வருகின்ற அரசியல் யதார்த்தத்தை ஜனநாயக மறுப்பு, சலுகைகள், அபிவிருத்திகள் போன்றவற்றால் மூடி மறைத்து விட முடியாது.

அதனாலேயே ஜக்கியப்பட்ட இலங்கைக்குள் சுய நிர்ணய உரிமை அடிப்படையிலான சுயாட்சி மூலமாக நியாயமான அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என எமது புதிய – ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி வற்புறுத்தி வருகின்றது.

இவ்வாறு புதிய – ஜனநாயக மாக்சிச – லெனினிசக் கட்சியின் ஜந்தாவது வடபிராந்திய மாநாடு கடந்த 26.02.2011அன்று யாழ்ப்பாணத்தில் இடம் பெற்ற போது அதில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றிய கட்சியின் பொதுச் செயலாளார் சி.கா.செந்திவேல் கூறினார். ஜந்து பேர் கொண்ட தலைமைக் குழுவின் தலைமையில் நடைபெற்ற முழு நாள் மாநாட்டில் செந்திவேல் தொடர்ந்து உரையாற்றும் போது கூறியதாவது.

யுத்தத்தின் கொடூரத்தாலும் போரட்டத்தின் தவறான கொள்கை வழிமுறைகளாலும் தமிழ் மக்கள் வரலாறு காணாத பேரவலங்களையும் பேரழிவுகளையுமே அனுபவித்துக் கொண்டனர். இதற்கான முழுப் பொறுப்பையும் தெற்கின் பேரினவாத முதலானித்துவ ஆளும் வர்க்கத்தினரும் வடக்கின் தமிழ்த் தேசியவாதம் பேசிவந்த குறுந்தேசியவாதிகளும் ஏற்றுக் கொள்ள வோண்டும். ஒரு நாட்டிற்கான தேசியத்தையாயினும் அல்லது ஒரு இனத்திற்கான தேசியத்தையாயினும் இரண்டு தளங்களில் நின்று முன்னெடுக்க முடியும். ஓன்று முற்போக்கான தேசியம் இரண்டாவது பிற்போக்கான தேசியம். சுதந்திரத்திற்கு முன்பிருந்தே பேசப்பட்டுவந்த நாட்டுத் தேசியம் பிற்போக்குத் தளத்தில் பேரினவாதமாகவே வளர்த்து முன்னெடுக்கப்பட்டது. அவ்வாறே தமிழ் இனத் தேசியம் என்பதும் பிற்போக்குத் தளத்தில் நின்று குறுந் தேசியவாதமாக முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளது. இவற்றால் சிங்கள ஆளும் வர்க்க சக்திகளும் தமிழ் மேட்டுக்குடி ஆதிக்க அரசியல் சக்திகளுமே பயன்கள் பெற்று வந்தன.
2
ஆனால் அவலங்களையும் இழப்புக்களையும் சாதாரண உழைக்கும் தமிழ் மக்களே அனுபவிக்க வேண்டியவர்களாக ஆனார்கள்.

ஆதாலால் இனிமேலும் தமிழ்த் தேசியம் என்பதனை வாக்குகள் பெறுவதற்கு வெறும் உணர்ச்சிக் குரியதாகக் கொண்டு பழைய செக்கிழுத்த பாதையில் பிற்போக்கான தமிழ்க் குறுந்தேசிய வாதமாக முன்னெடுத்துச் செல்லும் இரத்தக் கறை படிந்த கொள்கைகளை தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும்.

தமிழ்த் தேசிய ஆதிக்க அரசியல் போக்கை இளம் தலைமுறையினர் இனம் கன்டு முற்போக்கான தமிழ்த் தேசியத்தை கைப்பிடிக்க முன்வர வேண்டும். தமிழ்த் தலைமைகள் அந்நிய ஏகாதிபத்திய சக்கிகளுக்கும் பிராந்திய மேலாதிக்க சக்திகளுக்கும் அடிபணிந்து சென்றதன் விளைவை இறுதி யுத்த காலகட்டத்தில் தமிழ் மக்கள் இரத்தம் பெருகி உயிழ்கள் இழந்த போது அனுபவித்துக் கொண்டனர். இத்தனைக்குப் பின்பும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இந்தியாவையும் அமெரிக்காவையும் அடிமை விசுவாசத்துடன் அரசியல் தீர்வுக்காகக் காத்திருப்பது தமிழ் மக்களை மீண்டும் தமது பிற்போக்கான தமிழ்க் குறுந்தேசிய வாதப் பாதையில் ஏமாற்றி அழைத்துச் செல்வதற்கேயாகும்.

தமிழ்த் தேசியம் என்பதனை உரத்துக் கூவிக் கொண்டு கடந்த நூற்றாண்டில் தமிழ்த் தலைமைகள் யாவும் முன்னெடுத்த கொள்கைகளும் போராட்ட வழிமுறைகளும் முற்று முழுதான தோல்விகளையே கண்டு வந்துள்ளன. இன்று அவற்றை வேறுவேறு பெயர்களில் முன்னெடுக்கவே அத்தலைமைகள் முன் நிற்கின்றன. வாக்குகள் பெறுவதற்காகத் தமிழ்த் தேசியவாத அரசியலை மீண்டும் தூசு தட்டி மக்கள் முன்வைக்கின்றனர். இவர்களில் சிலர் முற்றிலும் அடிபணிந்த அரசியலை ;விழுந்தாலும் மீசையில் மண் படவில்லை’ என்ற தோறணையில் முன்னெடுக்கின்றனர். மற்றும் சிலர் ‘நாடுகடந்த தமிழீழ அரசு’ என்பதனை நம்பி ‘அவலை நினைத்து உரலை இடிப்பது’ போன்று அரசியல் செய்ய முன்நிற்கின்றனர். ஆனால் தமிழ் மக்கள் பட்டது போதும் என்ற நிலையில் அரசியல் மௌனத்தில் உறைந்து காணப்படுகின்றனர்.

இதற்கு ஜனநாயக மறுப்பும் இயல்பு வாழ்வுச் சிதைப்பும், அரசியல் தீர்வு முன்வைக்காமையும் அடக்கு முறை அச்சம் பீதி என்பன மட்டும் காரணமல்ல. தமிழ்த் தேசியவாதம் பேசி தமிழீழத்தை அடைய நின்ற அனைத்துத் தலைமைகளின் மீதான அரசியல் விரக்தியும் வெறுப்புமே காரணமாகும்.

இந்நிலையில் தமிழ் மக்களுக்கு முன்னால் உள்ள ஒரே அரசியல் மார்க்கம் வெகுஜனப் போராட்டப் பாதையாக மட்டுமே எஞ்சி நிற்கிறது. நமக்கான கொள்கை நிகழ்ச்சி நிரலை நாமே தயாரிப்போம். நாமே அணி திரள்வோம். ஏமக்கான தலைமையை நாமே உருவாக்குவோம். அத்தகைய கொள்கையானது கடந்தகாலப் பட்டறிவில் இருந்து முற்றிலும் ஏகப் பெரும்பான்மையான உழைக்கும் தமிழ் மக்களின் நலன்களுக்கானதாக இருப்பதை உறுதி செய்து கொள்வோம். தமிழ் மக்கள் மத்தியில் காணப்படும் சாதிய ஏற்றத் தாழ்வுகள், சமூக நீதி மறுப்புக்கள் பெண்கள் மீதான ஒடுக்குதல்கள், மற்றும் பாரபட்சங்களை அகற்றக் கூடிய ஒரு பொது வேலைத்திட்டத்தின் அடிப்படையில் பரந்துபட்ட மக்களை ஜக்கியப் படுத்துவோம். அந்திய சக்திகள் மீதான அடிமை விசுவாசத்தைத் தகர்த்தெறிவோம்.

குறுகிய இனவாதத்தைக் கைவிட்டு சிங்கள உழைக்கும் வர்க்க மக்களோடு இணைந்து நிற்போம். ஒடுக்கப்படும் தமிழ்த் தேசிய இனத்தின் உரிமைகள் பற்றி சிங்கள மக்களுக்கு எடுத்துரைத்து அவர்களையும் எமது வெகுஜனப் போராட்டபபாதையில் ஜக்கியமுறச் செய்வோம்.

இதுவே தமிழ்மக்களின் முன்னால் உள்ள சரியான அரசியல் தெரிவாக இருக்க முடியும்.

இதுவரை தமிழ் மக்கள் மத்தியில் மூன்று கட்டங்களாகளில் முன்னெடுக்கப் பட்டு வந்த கொள்ளைகள் வழிமுறைகள் தோல்வியடைந்து அழிவுகள் எஞ்சியுள்ள சூழலில் மேற் கூறியவற்றின் அடிப்படையில் நான்காவது போராட்ட முனை திறக்கப்படுவது மட்டுமே சரியானதாக உறுதியானதாக தூர நோக்குடையதாக அமைய முடியும். துமிழ் மக்கள் மத்தியில் இத்தகை புதிய மாற்று அரசியல் கொள்கையும் நடைமுறை வழி முறைகளும் சிந்திக்கப்படாது விட்டால் விடுதலைக்கான மார்க்கம் ஏதுவும் திறக்கப்பட முடியாததாகும்.

எனவே எமது கட்சி தனது சொந்த கொள்கை நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்கும் அதே வேளை முற்போக்கான தமிழ்த் தேசியம் என்பது குறுந்தமிழ்த் தேசியவாதத்தை நிராகரித்து முகிழ்த்தெழுமானால் அவற்றுடன் ஒரு பொது வேலைத்திட்டத்தின் அடிப்படையில் இணைந்து செயல்படவும் தயாராக இருக்கிறது என்பதையும் இப் பிராந்திய மாநாட்டின் ஊடாக வெளிப்படுத்தி நிற்கின்றது என்றம் பொதுச் செயலாளார் சி.கா.செந்திவேல் கூறினார்.

இப்பிhந்திய மாநாட்டில் வடமாகாணத்தின் ஜந்து மாவட்டங்களில் இருந்தும் பிரதிநிதிகள் வருகை தந்திருந்தனர். மாநாட்டிற்கான அறிக்கையை வடபிரந்திய செயலாளார் கா.கதிர்காமநாதன் முன்வைத்தார். ஆறிக்கை விவாதத்தில் மாநாட்டுப் பிரதிநிகள் கலந்து கொண்டு விரிவான கருத்துக்களை முன்வைத்தனர். ஆத்துடன் மாநாடு பதின்மூன்று திர்மானங்களை நிறைவோற்றிக் கொண்டது. க.தணிகாசலம், சோ. தேவராஜா ஆகியோர் ஆரம்ப உரை சிறப்புரை ஆற்றினர். மறைந்த கட்சி உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்;டதுடன் மூத்த தோழர்கள் மூவர் மாநாட்டில் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

கா. கதிர்காமநாதன் வடபிராந்தியப் பணிமனை
வட பிரந்திய செயலாளார். 405, ஸ்ரான்லி வீதி,
யாழ்ப்பாணம்.
புதிய – ஜனநாயக மாக்சிச – லெனினிசக் கட்சியின்
வடபிராந்திய மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.

1) யுத்தம் முடிவடைந்து இரண்டாவது ஆண்டை நெருங்கியபோதும் அந்த அவலங்கள் தாக்கங்களிலிருந்து மக்கள் முற்றாக மீளவில்லை. இந்நிலையில் இன இனமுரண்பாடும் ஒடுக்குமுறையும்; நீடிக்கின்றன. எனவே தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை காலத்தை நீட்டாது முன்வைப்பதை வற்புறுத்துகிறோம். அத்தகைய தீர்வு சுயநிர்ணய உரிமை அடிப்படையில், ஜக்கியப்பட்ட இலங்கையில் பூரண சுயாட்சி உடையதாக அமைய வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

2) மீள் குடியேற்றம், புனரமைப்பு புனர்வாழ்வு என்பன வெறும் பெயரளவில் அன்றி மக்கள் தமது சொந்த வாழ்விடங்களில் எவ்வித தலையீடும் அச்சுறுத்தலும் நெருக்கடிகளும் இன்றி சுதந்திரமாகவும், இயல்பாகவும் வாழ்வதற்கு ஏற்ப இயல்புச் சூழலை விரைவாக ஏற்படுத்த வேண்டும்.

3) வலி வடக்கிலும் ஏனைய பிரதேசங்களிலும் இருந்து வரும் உயர்பாதுகாப்பு வலயபகுதிகளில் மீள் குடியேற்றம் துரிதப்படுத்தப்பட வேண்டும்.

4) அவசரகாலச் சட்டம் உடனடியாக நீக்கப்படுவதுடன் பயங்கரவாதத் தடைச் சட்டம் அகற்றப்பட வேண்டும்.

5) ஆரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்படுவதுடன் காணாமற்போனோர் பற்றிய விபரங்கள் வெளியிடப்பட வேண்டும்.

6) இனம் தெரியாதோர் என்னும் பெயரில் முன்னெடுக்கப்பட்டு வரும் கொலைகள் கொள்ளைகள் ஆட்கடத்தல்கள் நிறுத்தப்படுவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படுவதுடன் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.

7) ஜனநாயகம், இயல்பு வாழ்வு என்பன மீண்டும் தோற்றுவிக்கப்பட வேண்டும். முழுமையான சிவில் நிர்வாகம் நடைமுறைப் படுத்தப்பட வேண்டும்.

8) அடிப்படை ஜனநாயக – மனித உரிமைகள், தொழிற்சங்க உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும், ஊடக, கருத்துச் சுதந்திரம் நிலை நிறுத்தப்பட வேண்டும்.

9) பொருட்களின் விலையுயர்வு தடுத்து நிறுத்தப்படுவதுடன் வாழ்க்கைச் செலவின் உயர்வு கட்டுப்படுத்தப்பட வேண்டும். இதற்கு ஏற்ப சம்பள உயர்வு சகல தரப்பினருக்கும் வழங்கப்பட வேண்டும்.

10) விவாசயிகள் அன்றாடத் தொழிலளர்கள் மீனவர்கள் தத்தமது தொழில்களை சுதந்திரமாகவும் அச்சமின்றியும் முன்னெடுப்பதற்கு ஏற்ற இயல்புச் சூழல் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

11) ஏகாதிபத்திய உலகமய திறந்த பொருளாதாரத்தின் விளைபயனான நுகர்வுக் காலாசாரத்தின் நச்சுத்தனமான பாதிப்புக்களுக்கு எதிராக மக்களை விழிப்படையச் செய்து அணிதிரட்ட வேண்டும்.

12) இலங்கையின் இறைமைக்கும், இனங்களின் ஜக்கியத்துக்கும் வேட்டு வைத்துவரும் அமெரிக்க ஏகாதிபத்திய, இந்திய பிராந்திய மேலாதிக்க வல்லரசுகளின் ஊடுருவல்களுக்கு எதிராக மக்களை விழிப்படையச் செய்யவேண்டும்.

13) இலங்கையின் சிங்கள, தமிழ், முஸ்லிம், மலையக உழகை;கும் வர்க்கத்தின் நலன்களுக்கான அடிப்படைக் கோரிக்கைகளை முன்வைத்து வெகுஜனப் போராட்ட மார்க்கத்தில் அணிதிரட்டி ஜக்கியம், சமத்துவம், சுதந்திரம், சுபீட்சமுள்ள புதிய இலங்கையைக் கட்டி எழுப்புவோம்.

14) உலகின் அடக்கி ஒடுக்கபட்ட நாடுகளினதும் மக்களினதும் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போரட்டங்களுடன் ஒன்றிணைந்து முன்செல்வோம்.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

தமிழக மீனவர்களுக்கு துப்பாக்கி வழங்கு! HRPC வழக்கு!!

Comments 45

  1. அரிச்சந்திரன் says:
    15 years ago

    நல்ல விடயங்கள் வாழ்த்துக்கள்.
    நிலா நிலா ஓடி வா
    நில்லாமல் ஓடி வா
    மலைமேல் ஏறி வா
    மல்லிகைப்பூ கொண்டு வா.

    • Kingsley Gomezz says:
      15 years ago

      நடு வீட்டடில் வை நல்ல துதி செய்
      நல்லூர் கந்தன்தலையில் நெய் ஊற்றி தேர்இழுத்து சாதி பிரிவினை வளர்த்து பிரதேச வாதம் பேசி 100 வருட பழமை வாதத்துள் விடுதலை தேடி நாசமாய் பொன சமூகம் நக்கலுக்கும் நைய்யாண்டிக்கம் என்றால் ஏது குறை
      வாழ்க தமிழ்

  2. Thalai says:
    15 years ago

    யாரிந்த அரிச்சந்திரன்? செந்தில்வேல் கட்சியினர் நடத்திய கூட்டம் எங்கு நடந்தத்து என எனக்கு தெரியாது. தெரிந்திருந்தாலும் போயிருக்க மாட்டேன். அவ்வளவு பயம். யாழ்ப்பாணத்தில் யார் எங்கு வேண்டுமானாலும் எப்படியும் கொலைசெய்யப்படலாம். இப்படியான சூழலில் அரசுக்கு எதிரான கருத்துக்களுடன் செந்தில் வேல் இப்படி ஒரு கூட்டத்தை நடத்தி முடித்திருப்பது சமூகத்தின் மேல் அவருக்குள்ள பற்றை காட்டுகிறது. இலங்கையில் பெரும் சிங்கள கட்சிகளுடன் கூட்டுச் சேராமல் அரசியல் பேசினால் வாழ்க்கை முழுவதும் பயந்துதான் வாழ வேண்டும். அப்படி இருக்க இவர்கள் யாருக்கும் சோரம் போகமல் இவற்றை செய்வது மாபெரும் சாதனை. ஓடி ஒளித்து சரணடைந்த பிரபாகனை தேசியத் தலைவர் என்றால் மரணபயத்தின் மத்தியில் துணிந்து அரசியல் பேசும் ஒரே நபர் செந்தில் வேல் சர்வதேசியத் தலைவர் என்று சொல்லலாம்.

    • vanniyan says:
      15 years ago

      தல போல வருமா 🙂 .அடேங்கப்பா , இராவணன் போல இவருக்கும் 10 தலை போல. அதுதான் தேசியத் தலைவர் ஓடி ஒளிச்ச இடத்தை,20 கண் கொண்டு தேடிக் கண்டுபிடித்து, சவீந்திர சில்வாவிடம் காட்டிக்கொடுத்தவர் போல. எப்படி தல எப்படி 🙂 இப்டி எல்லாம் உங்களாலே முடிகிறது. வட்டுவாகல் பாலத்துக்கு பக்கமுள்ள தென்னமரத்தில் ஏறி இருந்து எல்லாத்தையும் கவனிச்சு இருக்குறிங்க போல..உண்மையா , அப்படியா தல ?

    • chandran.raja says:
      15 years ago

      இலக்கண ரீதியாக யான் ஆங்கிலத்தை புரிந்து கொள்ளமாட்டேன். உங்களை தலை என்று வாசிப்பதா? தாளை என்று புரிந்துகொள்வதா? என்பது சங்கடமாகவோ இருக்கிறது. சரி; அது எப்படியாவது இருந்து விட்டு போகட்டும். முப்பது பொண்னான வருடகாலங்கள் மண்னாகி போனது பலநுhறு அரிச்சந்திரன் களாலயே என்கிற உண்மையை புரிந்துகொள்ளுங்கள். ஏழைப்பிள்ளைகளுக்கு சயினட்டும் ஏழைப்பிள்பிள்ளைகளின் தமிழ்சமூகத்தை மேய்பவர்களுக்கு வெள்ளைக் கொடிகலாச்சாரத்தை ஏற்படுத்தியவர்கள் இந்த அரிச்சந்திரன்கள் தான். அதைத் தான் நாம் இங்கு புரிந்து கொள்ளவேண்டும். மத்தாப்பு ஒளிகாட்டி தமது வாழ்வை பெருக்கிகொண்டவர்களும் இவர்ககளே தான். இவர்கள் சுயமாக தமது இருப்பிடத்தை காலிசெய்வார்கள் என்பது சந்தேகமாகவே இருக்கிறது.

      இவர்களை இல்லாது ஒழித்து சுத்தப்படுத்துவது ஆயுதங்களைப் பாவிப்பது இடதுசாரி தத்துவத்தில் எங்குதேடியும் காணமுடியாது. இந்த அரிச்சந்திர மகாராஜாக்களின் கருத்துக்களையும்-ஆட்சிகளை ஒழிப்பதற்கு இலங்கை தழுவிய ரீதியில் தொழிலாளர் அமைப்பு தோன்றட்டும். அதில் தோழர்செந்தில்வேல் உரிய பீடத்தை சுவீகரித்துக் கொள்வார். காகம் திட்டி மாடு சாகுமா?. இனிவரும் காலங்களில் திட்டுவதை விட வேறு எந்த நற்பழக்கத்தையும் சமூகத்திற்காக கொண்டிருக்க மாட்டார்கள் இப்பேர்பட்ட பேர்வழிகள்

      • Seziyam says:
        15 years ago

        You been polite to us Chanthiran and your kindness rewarded.your medal on post,

    • sundaram sekar says:
      15 years ago

      என்னசுகம்… என்னசுகம் …!!!
      கனவில் நினைவில் வந்துபோகும் சுகம்…??

      • sundaram sekar says:
        15 years ago

        அது thalai யின் பாடல் – சுந்தரம் சேகர்

  3. விளைக்குட்டி says:
    15 years ago

    அரிச்சந்திரன், வன்னியன் என்ற இரு புலிவால்கள் இங்கு தங்களிற்கு தெரிந்ததை ஊளையிடுகின்றனர். இவர்ளிற்கு தெரிந்ததெல்லாம் தலைவர் வாழ்க என்ற ஊளை தான். மக்கள், மார்க்சிசம், கருத்து, அறிவு என்பதெல்லாம் இவர்ளின் கற்பனைக்கும் எட்டாத விசயங்கள். தமிழ்நாட்டு ரஜனி ரசிகனிற்கு இருக்கும் அறிவு கூட இவர்ளிற்கு கிடையாது. வலதுசாரி. இடதுசாரி என்றால் என்ன என்பதை இவர்கள் முதலில் யாரிடமாவது கேட்டு தெரிந்து கொண்டு பிறகு அரசியலில் அ,ஆ கதைக்க வரலாம்.

  4. அரிச்சந்திரன் says:
    15 years ago

    விளைக்குட்டி சார், புலிகள் நரிகளல்ல ஊளையிடுவதற்கு. தங்களின் காமடி Supper. நரி வாலாய் இருப்பதை விட புலி வாலாய் இருப்பது மேன்மைதானே ஐயா.
    மக்கள் மக்கள் என்றும்,
    மார்க்சிசம் லெனினிசியமென்றும்,
    செப்பித்திரிவாரடி கிளியே வாய்ச்சொல்லில் வீரரடி
    கருத்து கருத்து என்றும்,
    அறிவு தனக்கேயுண்டென்றும்
    பீற்றித்திரிவாரடி கிளியே வாய்ச்சொல்லின் வீணரடி

    chandran.raja, தங்களை சந்திரன் ராஜா என்று அழைப்பது சரியா? அல்லது சாந்திரான் ரஜ என்று என்று அழைப்பது சரியா? அல்லது வேறு மாதிரி அழைக்கவேண்டுமா? புரியவில்லை. அது இருக்கட்டும் தாங்கள், பொன்னான முப்பது வருடங்களில் முக்கி முக்கி முத்தி கண்டது என்ன? என்பதை முடக்கும் இடக்கும் இல்லாமல் சொல்ல முடியுமா? ஏட்டைத் தவிர ரோட்டுக்கு வந்து மக்கள் நலன் ஏதாவது செய்ததுண்டா? அல்லது கோட்டுக்கு சென்றாவது நாட்டுக்கு நன்மை ஏதும் தந்தீர்களா? இல்லையே! அதனால்தான் என்போன்றவர்களுக்கு உங்களின் கருத்துக்கு கடுப்பு வருகிறது. கலர் சட்டை அணிந்து மேதைகளின் புத்தகத்தை சுமந்து புளுகு மட்டும் விட்டுக்கொண்டிருந்தால் போதுமா? காவியம் படைக்க. சவுக்கு கம்பம் ஏறியவன் சறுக்கிக்கித்தான் கிடக்கின்றான் மீண்டும் சாதனை தொடர்வான்.

    தத்துவங்களை எவரும் குறை சொல்ல முடியாது ஆனால், அதனை தத்தெடுக்கும் தலைமகன்களின் நடைமுறை தாவல்களும் ஒழுங்கமைக்கப்பட்ட தழுவல்களுமே அவர்களின் பின்னால் மக்களை அணிவகுக்கச்செய்யும். மாறாக, ஆராவாரமான கூச்சல்களும் கூத்துகளும் குடிகளுக்கு எப்போதும் குறைதீர்க்கப்போவதில்லை. எதற்கும் செயல் வேண்டும். இது இல்லாவிடின் நீங்கள் எந்த பீடத்தையோ அல்லது மடாலயத்தையோ பிடிக்கவும் முடியாது பிடுங்கவும் முடியாது மக்கள் வழியில். எதற்கும் பீடத்தை சுவீகரிப்பதற்குரிய முயற்சியை கைவிடாதீர்கள் அதற்குத்தானே இந்தப்பாடு.

    இடதுசாரி தத்துவத்தில் ஆயுதம் இருக்குதோ இல்லையோ அது ஒரு பக்கம் இருக்கட்டும் இடது சாரிகளிடம் சாரி சாரியாக ஆயுதம் நிறையவே இருக்கு chandran.raja, காகம் உட்கார பனம் பழம் விழுமென காலத்தை கரைக்க வேண்டாம். வினை செய் விளை கொய்.

    • mayavi says:
      15 years ago

      veerappuligal singaththin kugaikkul sallabithtukkondirukkum poluthu neengalum nanum vilaikkuttiyum chandiran rajawum kolakolaym munthirikka nariye nariye suththi wa kolaiyadichchawan enga erukkan kugaiyil erukkan kanduppidi enru wilaiyadikkondiruppadu joke o joke

    • mayavi says:
      15 years ago

      புலி ரட்சகர்கள் நரி வால் பூட்டிக் கொண்டு சிங்கக் குகைக்குள் சல்லாபித்துக் கொண்டு இருக்கும் போது அரிச்சந்திரா ஏனைய்யா மார்க்சியர்களை மட்டும் விமர்சித்து திரிகின்ராய்
      குலை குலையாம் முந்திரிக்காய் நரியே நரியே சுத்தி வா கொல்லையடிச்சவன் எங்க இரக்கான் குகைக்குல் இருக்கான் கண்டுப்பிடி நீங்கள் புலிகளா நரிகளா?

  5. விளைக்குட்டி says:
    15 years ago

    மக்களுக்கு எதாவது செய்யுங்கள் என்று புலிவால்கள் கேட்கின்றன. தங்களைப் போல 40000 மக்களை துப்பாக்கி முனையிலே அடக்கி வைத்து இலங்கை அரசிற்கு பலி கொடுத்ததை சொல்கிறார்களா?

    • THAMILMARAN says:
      15 years ago

      பாகிஸ்தானிடம் நாம் தோற்றீருக்கக் கூடாது ஆனால் தொற்றூப் போனோமே?முடியவில்லை சார் என்னால் சரியாக தூங்கவே முடியவில்லை.இது இலங்கைக்காக உலகக் கோப்பை நாம் விட்டு விடக் கூடாது.

  6. veeran says:
    15 years ago

       மகிந்த சிந்தனை அரசாங்கத்தினால் தீர்வு எதனையும் முன்வைக்க இயலவில்லை., quote from comrade senthivel

       well this partey too preferd Rajapakse to power by asking Tamils to boycott 2005 presidential election, then y now complain about Rajapakse, 

  7. அரிச்சந்திரன் says:
    15 years ago

    மார்க்சிச புரட்சிகர் பெயர் தொங்கும் மண் குதிரை மாயாவி,
    மாயங்கள் வேண்டாம்
    காயங்கள் ஆற
    நியாயங்கள் செய்
    கோழியே கூவாதே
    போலியே பாயாதே
    வேலியே வேண்டும்.
    என்பதே என் குரல்
    இப்போது புரிகிறதா? நான் யாரென்று.

    விளைக்குட்டி சார், ஊத்தைகள் நிறைந்த பற்களை தூரிகை கொண்டு துலக்கினால் வருவது சுத்தம். மாறாக, அதனைத் தோண்டித் தோண்டி உங்கள் மூக்கின் மேல் நீங்களே தடவுவதால் பெறுகின்றீர்கள் நாத்தம். தூரிகையை மாற்றுங்கள் நாளிகை கடந்தும் ஒன்றையே பாவித்து பாவித்து வருகின்றீர்கள்.

    • mayavi says:
      15 years ago

      அரிமாமா டி ராஜேந்தர் பானியில் வாழ்கத்தமிழ்
      மார்க்சிச புரட்சிகர் பெயர் தொங்கும் மண் குதிரை மாயாவிஇ
      புலி வால் தொங்கி
      மாண்ட கதை சொல்லவா
      முள்ளி வாய்கால் கண்டு
      தோற்றகதை சொல்லவா
      முற்கம்பிக்குள் வாழும் கதை சொல்லவா
      வந்து சற்று எம்மை பார்த்து விட்டு போகும் படி சொல்லவா
      செந்தில் வந்து பார்த்து சென்றார்
      ஏனய்யா நீர் வரவில்லை
      வாய்ச் சொல் வீரர் யாரய்யா
      மகிந்தையின் அடக்கு முறக்குள் இருந்து பேசுவது வீரம்
      செத்த புலி தோல் போர்த்திய நரியாய் வாழ்வதைவி

  8. விளைக்குட்டி says:
    15 years ago

    அரிச்சந்திரன். புலிகள் மக்களை பலி கொடுததவர்கள்.
    புலிகள் பிள்ளைபிடிகாரர்கள்.
    புலிகள் கொலைகாரர்கள். புலிகளிற்கும் அறிவிற்கும் காததூரம்.நீங்கள் என்ன எழுதுகிறீர்கள் என்று உங்களிற்காவது விளங்குகிறதா? புலிகளிற்கும், புலிவால்களிற்கும் அறிவு இருக்கும் என்று எதிர்பார்க்க கூடாது. செந்தில்வேலின் கட்டுரை எல்லாம் அறிவுள்ளவர்களிற்கு ,உங்கடை ஆட்கள் லங்காசிறியிலே நடிகையளின் ரசிகர்மன்றம் வைத்திருக்கிறான்கள். அங்கை போய் படம் பாருங்கோ.

    • chandran.raja says:
      15 years ago

      எங்கேயும் போலவே இங்கேயும்.முடிந்தால் தமிழ்மாறனையும் கூட்டிவைத்துகிரிகெட்கொமன் கேட்கலாம். நடிகர்கள் நடிகைகளின் வாழ்க்கை சரித்திரம் எழுதலாம். இலங்கையில் ஈழத்தமிழரின் வாழ்வும் வயிறும் வேறானவையாக இருந்தவர்களாக இருந்தவர்கள் இல்லையே!. நீங்கள். புலிகள் மூன்றுலட்சம் மக்களை தமதுபாதுகாப்புக்காக பிடித்துவைத்திருந்தபோது….. நீங்கள் என்னசெய்தீர்கள்? மக்களை விடுவிக்கச்சொல்லி எங்கேயாவது போராட்டம் நடத்தினீர்களா? நடத்திய பேராட்டம் முழுக்க புலிகளையும் பிரபாகரனையும் காப்பாற்றுவதற்கு தானே! கடும்குளிரில் பிள்ளைகுட்டிகளுடன் லட்சக்கணக்கில் லண்டன்மாநகரில் போனதும் மக்டொனாஸ் உண்ணாவிதரம் இருந்ததும் எதற்காக?தமிழ்மக்களுக்கா? புலிகளுக்கா? இதேநேரத்தில் புலம்பெயர் சிங்களமக்கள் அவுஸ்ரேலியாவில் புலிக்கொடிகளை பறித்தெறிந்து “பிரபாகரனே மக்களைவிடுவீ” என்று வெறுப்புணர்வை வெளிப்படுத்தியது இது இலங்கையில் வர்க்கபோராட்டத்திற்கு முதல் அடிக்கபட்ட வெற்றிமணியென ஏன்? உங்கள் மந்தக் காதுகளுக்கு கேட்க மறுக்கின்றன. புலம்பெயர்தமிழர்களின் கருத்துக்கள் லும்பன்பாட்டாளிகளின் கருத்துக்கே சொந்தமானவை.இப்படியான காரணங்களுக்காகவே என்றுமே தமிழ்சமூகத்தை விட சிங்களசமூகம் புரட்சிகர அடையாளகளுடன் உரியகாலத்தில் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள்; இனியும் வெளிப்படும். இன்றே கண்முன்னால் தெரிகிறதே ஏகாதிபத்தியமுகாமில் இருந்து நாடுகடந்ததமிழீழம் என குரல் எழுப்புவதில் இருந்தே தெரியவில்லையா?. எம்மினதில் புரட்சிகர எண்ணம் உள்ளவர்கள் வர்க்கயுணர்வாளர் இல்லையென்று சொல்வதிற்கு இல்லை. இருந்தார்கள். அவர்களை தமிழ்யினத்திற்கு புலம்பெயர்தமிழர்களின் பணப்பலத்தால் அழிக்கபட்டார்கள் என்பது தான் கவலைதரும் மற்றுமொரு மறக்கமுடியாத உண்மை.நாளைஏகாதிபத்தியங்கள் கிழக்காசியாவில்-இலங்கையில் ஒருதாக்குதலை நடத்தவதற்கு கூரியவாள் நாடுகடந்ததமிழீழத்தை போல் வேறு ஒரு கருவியை இந்த ஒடுக்குமுறையாளர்கள் தேடியும் கண்டுகொள்ள முடியாது. இலங்கைத் தொழிலாளர்களே! வரலாற்று ரீதியாக பாட்டாளிமக்களுக்கு அறிவுரை கூறவும் முதாலித்துவதிற்கு மரணஅடிகொடுக்க இருப்பது சர்வதேசசம்பந்த குழுவால் தலைமைதாங்க படுகிற ஒரேயொரு கட்சி நான்காம் அகிலம்மட்டுமே! அதில் உங்களை இணைத்துக்கொள்ளுங்கள்.

    • Seziyam says:
      15 years ago

      I understand what you were said but what I do not understand what you got in your mind,

      • chandran.raja says:
        15 years ago

        இலங்கைதழுவிய ரீதியில் தொழிலாளர் அமைப்புகளை ஏற்படுத்துவதும் அதை சர்வதேச தொழிலாளர் கட்சியுடன் இணைப்பதைத் தவிர எனக்கு வேறு எந்த நோக்கமும் இல்லை. உங்கள் சந்தேகங்களை தமிழில் வழங்கினால் மட்டுமே என்னால் பதில் கூறமுடியும்.இல்லையேல்…www.wsws.org.

    • sundaram sekar says:
      15 years ago

      “செந்தில்வேலின்கட்டுரை எல்லாம் அறிவுள்ளவர்களிற்கு ”

  9. அரிச்சந்திரன் says:
    15 years ago

    விளைக்குட்டி சார், நீங்கள பூக்கின்ற பனைகள் புலிகள் கல்லெறிபடும் காய்க்கின்ற பனைகள். உங்களை, நடிகர் செந்திலின் வாழைப்பழ காமடி போலவே என் போன்றவர்கள் நோக்குகின்றறனர்.

  10. விளைக்குட்டி says:
    15 years ago

    உங்களைப் போன்றவர்கள் என்றால் யார்?
    நாட்டில் இருக்கும் போது தானும் பெண்ட்டாட்டியுமாக சுயநலமாக இருந்து விட்டு இங்கே வந்த பிறகு பொலிஸ்காரன் அடிக்க மாட்டான் எண்ட படியால் புலிக்கொடியை பிடிச்சுக் கொண்டு தலைவர் வாழ்க எண்டு கத்த மட்டும் தெரிந்த ஆட்டுமந்தை கூட்டம்.
    தங்களுடைய பிள்ளைகளுடன் வெளிநாடுகளில் வாழ்ந்து கொண்டு வன்னிபிள்ளைகளை புலிகள் பிடித்ததை பற்றி மூச்சு விடாத மனச்சாட்சி இல்லாத நரிக்கூட்டம்.

    செந்தில்வேலின் பேச்சில் ஒரு வரியாவது உமக்கு விளங்குதா?
    அரசியல்கட்டுரைக்கு பின்னோட்டம் எழுத வேண்டும் என்றால் அரசியல் எள்ளளவு எண்டாலும் தெரிய வேணும். நீர் குமுதம், அம்புலிமாமாவிற்கு முயற்சி பண்ணிப் பாரும்.

    • sundaram sekar says:
      15 years ago

      “அரசியல்கட்டுரைக்கு பின்னோட்டம் எழுத வேண்டும் என்றால்”

      மகன்… முதலில் தமிழைப் படியுங்கள். பின்னோட்டம் இல்லைப் பிள்ளை – அது
      பின்னூட்டம்.

  11. veeran says:
    15 years ago

    சபாஸ் சரியான் போட்டிநடக்கட்டும்

  12. அரிச்சந்திரன் says:
    15 years ago

    விளைக்குட்டி சார், நாட்டில் இருக்கும் போது நீங்களும் உங்கள் பொண்டாட்டியும் மக்கள் நலம் செய்து கின்னஸ் சாதனை புரிந்தீர்களோ? ஆட்டு மந்தைகள் ரோட்டுக்கு வந்ததே பெரிய விடயம் தான் ஐயா. ஆற்றங்கரை ஆமைகளால் சூரியனை ஆ..வெனப்பார்த்து, கற்பனை வளர்த்து கொட்டாவி விட மட்டுமே முடியும்.

    அரசியல் அறிவுப் புளுகுகளை அடக்கி வாசியுங்கள் அண்ணாத்தே. அரசியல் கட்டுரையையும் அம்புலிமாமாவையும் தொடுப்பதன் மூலம் தெரிகிறது உங்கள் அரசியலின் சீத்துவம். போதும் வாயைக்குடுத்து எதை எதையோ புண்னாக்க வேண்டாம் தோழரே.

  13. விளைக்குட்டி says:
    15 years ago

    வாயை குடுக்க வேணாம் என்கிறீரே? இது வரை எதையாவது அறிவுபூர்வமாக எழுதியிருக்கிறீரா. எதாவது ஒரு போராட்டத்தை பற்றி 5 வரி எழுதும் பார்ப்போம்.
    வேண்டாம் 5 வரி எல்லாம் உமக்கு கஸ்டம். ஒரு வரி எழுதினாலே போதும்.
    மாவீரரே, தலைவரை கும்பிட்டு விட்டு அ. ஆ எழுத தொடங்கும்.

    • sundaram sekar says:
      15 years ago

      “எதாவது ஒரு போராட்டத்தை பற்றி 5 வரி எழுதும் பார்ப்போம்.
      வேண்டாம் 5 வரி எல்லாம் உமக்கு கஸ்டம். ஒரு வரி எழுதினாலே போதும்.”

      வேண்டாம் மகன்…இப்படி தலை வீங்கிக் கதைக்கவேண்டாம்.
      இப்படியெல்லாம் கதைச்சுத்தான் ‘நம்மட சிவப்பு’ மங்கினது.

  14. அரிச்சந்திரன் says:
    15 years ago

    விளைக்குட்டி சார், கூரையேறி கோழி பிடிக்க தெரியாத நீங்கள் வானமேறி வைகுந்தம் போறதெப்படி என்று வகுப்பெடுக்கக் கூடாது. நாலு பொத்தகம் மேய்து விட்டால் நாடு காக்கும் போராட்டம் பற்றி பட்டம் பெற்ற பன்னாடை நினைப்பை விடுங்கள். நிச்சயமாக, இன்றும் என்றும் மாவீரர் வாழ்க தலைவர் வாழ்க என்றே சொல்வோம். அவர்களைப்பற்றி கதைப்பதற்கு இங்கு எவருக்குமே அருகதையில்லை. நீங்களும் செய்து காட்டுங்கள் வாழ்த்துகின்றோம் ஏட்டிலே மட்டும் படம் காட்டாதீர்கள். போராட்டம் பற்றி ஒரு வரி என்ன ஓராயிரம் வரியும் தர முடியும். ஆனால், வரும் ஆனா வராது.

  15. விளைக்குட்டி says:
    15 years ago

    தலைவர் ஏன் பிள்ளைகளைப் பிடித்தார்?
    தலைவர் ஏன் மக்களை துப்பாக்கி முனையிலே அடக்கி வைத்து இலங்கை ராணுவத்திற்கு பலி கொடுத்தார்?
    உமக்கு மனச்சாட்சி, நேர்மை ஏண்டு ஏதாவது இருந்தால் கேள்விகளிற்கு பதில் சொல்லும்.

  16. அரிச்சந்திரன் says:
    15 years ago

    தன் நாட்டின் எதிர் காலத்துக்காக நாகரீகமடைந்த, ஜனநாயகம் பேசுகின்ற நாடுகளில் கூட கட்டாய இராணுவப்பயிற்சி உண்டு என்பதை அறிவீரோ? மடுவில் இருந்து மாத்தளன் வரைக்கும் மக்கள் புலிகளின் பின்னாளையே வந்தார்கள். வன்னி மக்களின் 75 வீதமானவர்கள் அப்போராளிகளின் பெற்றோர்கள் சகோதரர்கள் உறவினர்கள் அப்படியானவர்களை அவர்கள் துப்பாக்கி முனையில் அடக்கிவைக்க வேண்டிய அவசியமுமில்லை. அதேவேளையில், முள்ளிவாய்க்கால் பகுதியில் மக்கள் விரோத சம்பவங்கள் நடந்ததென்பதும் உண்மைதான். அது எதனால் என்பது தொடர்பில் சரியான உண்மைகளைக்கண்டறிந்த பின்பே அதில் எவரையும் உறுதியாக குற்றப்படுத்த முடியும்.

    56, 77, 83 போன்ற ஆண்டுகளில் தமிழ் மக்களின் உயிர்களை சிங்கள இராணுவமும் சிங்களப் பேரினவாதிகளும் பலியெடுத்த போது எந்தத்தலைவன் அவர்களை அடக்கி அவர்களிடம் பலி கொடுத்திருந்தான்? பேரினவாத சிங்களவனின் முதன்மையான நிகழ்ச்சி நிரல் தமிழின அழிப்பும் அவர்களின் மண்பறிப்பு என்பதுதான் அது நடக்கின்றது அவ்வளவுதான். புலிகள் அவற்றை நிறுத்த எந்த நாதாரியும் செய்யாத தியாகங்கள் எல்லாம் செய்துள்ளார்கள். போர் விதிப்படி போர் நடந்திருந்தால் புலிகளை எவனாலும் ஆட்ட முடிந்திருக்காது. எதனால் தோற்றார்களோ அதனால் வெல்வதற்கு மீண்டும் புலி மனிதர்கள் வருவார்கள். வாழ்க மாவீரர்கள் வாழ்க தலைவர்.

    • mayavi says:
      15 years ago

      கீச்சு மாச்சு தம்பளம்
      கீயா மாயா தம்பளம்
      மாச்ச மாச்ச தம்பளம்
      மாயா மாயா தம்பளம்

  17. விளைக்குட்டி says:
    15 years ago

    இப்ப தான் விசயத்திற்கு வந்திருக்கிறீர். ஜனநாயகநாடு என்று எதாவது இருக்கிறதா? வன்னியிலே இவ்வளவு சனம் சாகும் போது பேசாமல் இருந்தவர்கள் லிபியாவிலே துள்ளி குதிக்கிறார்களே, இவங்களா ஜனநாயகநாடுகள். ஆனால் இவங்கள் தான் உங்கடை நாடு கடந்த நண்பர்கள். மற்றது இவங்கள் ராணுவபயிற்சி வைச்சி இருக்கிறாங்கள் எண்டதற்காக உம்மடை தலவர் நாட்டை விட்டு ஓடி வராத ஏழைப்பிள்ளைகளை பிடித்ததை நியாயப்படுத்தலாமா?
    சிங்கள பாசிச அரசு மக்களின் எதிரி அவனிற்கு கொல்லுறது தான் தொழில். அதுக்காக நாங்களும் பிடிச்சு வைச்சு கொல்ல கொடுப்போம் எண்டு அரிச்சந்திரன் எண்டு பேர் வைச்சிருக்கிற நீர் சொல்லுறது தகுமா?
    அனால் உம்மடை நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு.

  18. யோகன் says:
    15 years ago

    சங்கமாடிய தமிழ் என பேசிய
    தம்பிமார் எல்லாம் கடல் கடந்தனர்.
    தப்பி பறந்தவர் ….
    தம்பியும் வா என அழைத்தனர்.

    அப்பு ஆச்சி கவனம் கவனம் என்றனர்..
    தாய் மண் பற்றி எரிகையில்
    தப்பிப் பறந்தவர்
    நாய்ச் சாதி …

    – புதுவை இரத்தினதுரை

  19. விளைக்குட்டி says:
    15 years ago

    நான் தலை வீங்கி எல்லாம் கதைக்கவில்லை. நான் இங்கே அறிவு என்று குறிப்பிட்டது மக்களை பற்றிய அறிவு. போராட்டஙகளை பற்றிய அறிவு. சமுகம் பற்றிய அறிவு. கொலைகாரர்களை ஆதரித்துக் கொண்டு செந்தில்வேல் போன்றவர்களின் அரசியலை நக்கல் பண்ணுபவர்களை நோக்கி வந்த கோபம்.
    நம்மட சிவப்பு என்கிறீரே, செந்தில்வேல் போன்றவர்களை இந்த பிள்ளைபிடிகாரர்களின் வாலுகள் நக்கல் பண்ணும் போது உம்மடை சிவப்பு எங்கை போனது?

    • siva says:
      15 years ago

      ண்ணா, விழை, உங்க நோயாளித் தலைவர் தானே ணா உருத்திராச்சம் உருட்டி விளையாட்றத நக்கல் பண்ணினாரு ணா, கொஞ்சம் பாத்து.. பா…த்து…

  20. அரிச்சந்திரன் says:
    15 years ago

    விளைக்குட்டி சார்,
    ஜனநாயகம் நாடுகள் என்று எந்த நாட்டையும் நான் குறிப்பிடவில்லை அப்படி குறிப்பிடவும் மாட்டேன். ஜனநாயகம் பேசுகின்ற நாடுகள் என்றே குறிப்பிட்டுள்ளேன். அதாவது, ஒப்புக்கு ஜனநாயகம் பேசுகின்ற நாடுகள் என்பதே அதன் பொருள். அதை முதலில் விளங்கிக்கொள்ளுங்கள்.

    தலைவர் பிரபாகரன் தமிழ் மக்களிம் நலனை முன் நிறுத்திய அடிப்படையில் எந்த நாட்டையும் இலகுவாக நம்பக்கூடியவர் அல்ல உங்களைப்போன்றவர்கள் அவரை அமெரிக்காவின் கையாள் அல்லது அதன் சார்பான ஆள் என நம்பலாம் விமர்சனம் செய்யலாம் அது அவரவர் அறிவைப்பொறுத்தது. உண்மையில் அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளுக்கு பெரும் தலைவலியாக இருந்தவர்களில் தலைவர் பிரபாகரனும் ஒருவர். எங்கள் தலைவன் மக்கள் நலனும் அவர்களின் எதிர்காலமுமே முதன்மையானது என்ற எண்ணம் மட்டும் கொண்டவன். அதனாலேயே இன்றுவரையும் தன் தலையில் துன்பத்தையும் வேதனையையும் மட்டும் சுமந்துகொண்டிருக்கின்றான்.

    ஜெயசிக்குறு இராணுவநடவடிக்கையில் சிங்கள இராணுவம் நேரடியாக அமெரிக்கப்படைகளின் பயிற்சியுடனும் ஆதரவுடனும் விஞ்ஞானகுளத்தில் களமாடித்தோற்றன என்பதனையும், ஆனையிறவு படைத்தளப் பாதுகாப்பில் அமெரிக்கப்படைகளின் நேரடியான தலையீடுகள் இருந்தும் அதனையும் புலிகள் முறியடித்து வென்றனர் என்பதையும் விளங்கிக்கொள்ளுங்கள். அத்தோடு, சதி ரீதியான எண்ணங்களுடனேயே புலிகளுடன் அமெரிக்கவும் அதன் நேச அணிகளும் இன்றுவரை இருந்து வருகின்றன என்பதையும் புரிந்துகொள்ளுங்கள். இதுவெல்லாம் புலிகளுக்கு புரியாது தெரியாது என்று மட்டும் நினைக்காதீர்கள்.

    செந்தில்வேலின் முயற்சிகளை நான் பாராட்டுகின்றேன் ஆனால், பேச்சு கலந்துரையாடல் ஒன்றுகூடல் போன்றவற்றுடன் மட்டும் அவரின் செயற்பாடுகள் மட்டுப்படுத்தப்படுவதையே நான் எதிர்க்கின்றேன். அதனால் தான் ஏட்டுச்சுரக்காய் கறிக்குதவாது என்று அலட்டுகின்றேன். அதனாலேயே, செயல் வெண்டும் செயல் வெண்டும் என ஒவ்வொருமுறையும் கத்துகின்றேன்.

    • THAMILMARAN says:
      15 years ago

      அரிச்சந்திரா நல்ல மனசப்பா உங்களூக்கு ஆனால் புலிகளீன் விடை பிழைத்த கணக்குத்தான் எது என விளக்க முடியுமா?

    • Ananth says:
      15 years ago

      செயல் வேண்டும் செயல் வேண்டுமென ஒவ்வொரு முறையும் கத்துகிறேன்-அ.சந்தரன்
      ஆனால் நீங்கள் மீண்டும் புலி மனிதர்கள் வருவார்கள் வாழ்க மாவீரர்கள் வாழ்க தலைவர்
      என்றல்லவா கத்திக்கொண்டிருக்கிறீர்! ஏட்டுச்சுரக்காய் கறிக்குதவாது என்றும் அலட்டுகிறீர்கள். இது யாருக்குப் பொருந்துமோ?

  21. chandran.raja says:
    15 years ago

    வேலுப்புள்ளை பிரபாகரன் என்கிற திருஞானசம்பந்தர் இலங்கையில் பால்குடித்தது புலம்பெயர்தமிழர் செய்த பாக்கியமே!. இதே பாக்கியத்தை நெடியவன் தொடர்ந்து வழங்குவார் என நினைக்கிறேன். இருந்தாலும் மறைந்துபோன ஞானசம்பந்தரைப் போல் வருமா?. முயற்சி எடுங்கள் அரிச்சந்திரா! . எவ்வளவுத்துக்கு ரிறீல் விடுடமுடியுமோ அப்படியே விட்டுக்கொண்டிருங்க! இதுவும் ஒருவழி பொழுதுபோக்கு ஆனால் வாழ்கையோடு போராடுகிற ஈழமக்களுக்கு உரியதல்ல.

  22. விளைக்குட்டி says:
    15 years ago

    எனக்கு யாரும் தலைவன் இல்லை.

  23. அரிச்சந்திரன் says:
    15 years ago

    chandran.raja, நீங்கள் 30 வருசமாக ரீல் விட்டுக்கொண்டே இருக்கின்றீர்கள். நாங்கள் 3 வருசத்துக்காவது ரீல் விடக்கூடாதா? ஆனால், ஒன்று எங்களுடைய ரீல் எல்லாம் நிச்சயம் திரில் ஆகும் என்பதுதான் உண்மை. அது இருக்கட்டும் அண்ணாச்சி, நீங்கள் எதற்கெடுத்தாலும் யாழ்ப்பாண மேட்டுக்குடி யாழ்ப்பாண மேட்டுக்குடி என கைகாட்டும் போதெல்லாம் உங்களையே நீங்கள் நான் மோட்டுக்குடி மோட்டுக்குடி என நிலைநாட்டுவதைப்போல் உள்ளது. முதலில் அந்த மனப்பான்மையை விட்டுத்தொலையுங்கள்.

    THAMILMARAN, எல்லா வினாக்களுக்கும் உடனடியாக பதில் கிடைத்து விடுவதில்லை ஆனால், நிச்சமாகக்கிடைக்கும். ஒரு பரீட்சையில் தவறு என்பது தேர்வு எழுதும் ஆட்களால் மட்டுமல்ல அதைத் திருத்தும் நபர்களாலும் விடப்படுவதுண்டு. உண்மைகள் என்றும் உறங்கிவிடுவதில்லை. மௌனம் கலையும் போது அம்மணம் தெரிய வரும்.

    Ananth, செயல் வேண்டும் செயல் வேண்டுமென நான் கத்துவது போராட்டம், புரட்சி, புது வழி என காலம் காலமாக புளுகுக்கதைகளை மட்டும் அவிழ்த்துவிட்டுக்கொண்டிருக்கும் மனிதர்களை நோக்கியே. நீங்கள் எழுதியது போதும் ஒன்று கூடி கலந்துரையாடியது போதும் உங்கள் எண்ணங்களுடனும் திட்டங்களுடனும் செயற்படுத்தும் இடத்துக்குப் செல்லுங்கள் என்பதுதான் என்னுடைய ஓலம். மாவீரர்கள் வாழ்க தலைவர் வாழ்க என்று நாங்கள் என்றும் கூவிக்கொண்டே இருப்போம் தவறோ சரியோ அவர்கள் செயல் வீரர்கள் என்பதை மட்டும் உணருங்கள். பீத் தமிழன் என்ற பெயரை கொட்டி என்று கூற வைத்த மானத்தமிழர்கள் அவர்கள்.

    விளைக்குட்டி சார், உங்கள் நிலை பெருமையில்லை. அது தனியன் காட்டெருமையின் நிலை.

    • Ananth says:
      15 years ago

      அரிச்சந்திரன் நீங்கள் எந்ததச் செயற்திட்டங்களை செயற்படுத்துவதற்காக கூவிக்கொண்டிருக்கிறீர்கள்?

  24. chandran.raja says:
    15 years ago

    இவ்வளவுகாலமும் அப்பாவிமக்களின் அழிவில் “திறில்” காட்டியது போதாதா? இனியென்ன திறில் வேண்டியிருக்கிறது.அவர்களை அமைதியான வாழ்கைக்கு திரும்பிவிட்டார்கள். அவர்கள் வாழ்க்கையில் புகுந்து அமைதியை கெடுக்காதீர்கள்.
    மேட்டுக்குடிக்கு அர்த்தம் தங்களால் புரிந்துகொள்ள முடியாமையாலே இவ்வளவு வில்லங்கள் என்பதை அறிவேன். ஜெமினிந்தார் பண்ணையர் நாட்டாமையார் ஊருக்கு பெரியவர் என்றுறெல்லாம் கேள்விப்பட்டிருப்பீர்களே! சாட்சாட் அவர்களே தான். அவர்கள்தான் மேட்டுகுடி. இவர்கள் நினைப்பது. தங்களுக்காக மக்கள் வாழவேண்டும் என்பது. இதையே மேட்டுகுடிசிந்தனை என்பது. இந்தகாலம் சக்கரம் திசைமாறியல்வா சுத்துகிறது.நிலப்பிரத்துவம் மூச்சைவிட்டு நீண்டகாலமாகி விட்டதல்லாவா….! இனி மக்கள்தங்கள் நலனுக்காக தாங்களே அரசை உருவாக்கிற காலங்கள் அல்லவா? இன்னும் விளக்கமாக சொல்வதானால் உற்பத்தியை ஒழுங்கு படுத்துவதும் கட்டுப்படுத்துவதும் தொழிலாளிவர்க்கம் அல்லவா? கொஞ்சம் கஷ்ரமாகத்தான் இருக்கும். முயற்ச்சி செய்யுங்கள். மக்களுக்கு சேவையாற்ற வேண்டுமென்றால் புரிந்துகொள்வது எதிலும் கஷ்ரமிருக்காது அரி.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...