கடத்திச் செல்லப்பட்ட முன்னிலை சோசலிசக் கட்சியின் செயற்பாட்டாளரான பிரேம்குமார் குணரத்னம் இன்று (10) முற்பகல் 7.40 இற்கு சிறிலங்கன் விமானச் சேவைக்குச் சொந்தமான UL 314 என்ற விமானத்தில் மலேசியாவின் கோலாலம்பூர் நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரேம்குமார் குணரத்னம் கடந்த செப்டம்பர் மாதம் “நொயேல் முதலிகே” என்ற பெயரில் அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கைக்கு வந்திருந்தார். N1016123 என்ற அவுஸ்திரேலிய கடவுச் சீட்டிலேயே பிரேம்குமார் குணரத்னம் இலங்கைக்குள் பிரவேசித்துள்ளார்.
குமார் குணரத்னத்தை விமானத்தில் அனுப்புவதற்காக அவுஸ்திரேலிய தூதரகத்தின் அதிகாரியொருவரும் கட்டுநாயக்க விமான நிலையத்துக்குச் சென்றிருந்தார்








பிரேம்குமார் குணரத்னம் இலங்கையிலிருந்து வெளியேறினார்??????????????
அமெரிக்கப்பிரஜை ஒருவர், அவுஸ்திரேலியப்பிரஜை ஒருவரை கடத்தி வைத்திருந்தபின்னர், அந்த அமெரிக்கப்பிரஜையானவர் கடத்தப்பட்ட அவுஸ்திரேலியப் பிரஜையை பாதுகாப்புடன் அவுஸ்திரேலியாவிற்கு அனுப்பிவைத்த அதிசயம் அமெரிக்காவில் அல்ல இந்துசமுத்திரப் பிராந்தியத்திலுள்ள சிறீ(சொறி) லங்காவில் நடைபெற்றுள்ளது.
அமெரிக்காவின் செல்வாக்கு பூரியார்கண்ணுமுள.