Monday, April 27, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

பிரெட் ஹாலிடே : கலாச்சார அரசியல் குறிப்பேடு-யமுனா ராஜேந்திரன்

இனியொரு... by இனியொரு...
06/20/2010
in பிரதான பதிவுகள் | Principle posts, அரசியல்
0 0
9
Home பிரதான பதிவுகள் | Principle posts

 

 பிரெட் ஹாலிடே கடந்த ஏப்ரல் 26 ஆம் திகதி தனது 68 வது வயதில் புற்றுநோயினால் மரணமுற்றிருக்கிறார். மூன்றாம் உலகின் புரட்சிகள் குறித்தும் மத்தியக் கிழக்கு மார்க்சிய இயக்கங்கள் குறித்தும் அதிகமும் எழுதியவர் ஹாலிடே. இலண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்சில் பேராசிரியராகப் பணியாற்றிய ஹாலிடே மத்தியக் கிழக்கின் முதல் கம்யூனிச நாடான தெற்கு யேமானில் தங்கியிருந்து அந்த அரசுக்கு ஆதரவராக ஒரு முழ நூலையும் எழுதி வெளியிட்டவர்.

 இலத்தீனமெரிக்க ஆப்ரிக்கப் தேசிய விடுதலைப் போராட்டங்களின் ஆதரவாளர். இந்த நாடுகளுக்கு நேரடியாகச் சென்று கட்டுரைகளை எழுதியவர். ஐரோப்பிய விமர்சன மார்க்சிய கோட்பாட்டிதழான நியூ லெப்ட ரிவியுவின் ஆசிரியர் குழவில் எண்பதுகளில் பங்குபற்றியவர். எழுபதுகளில் ஈரானியப் புரட்சியின் ஆரம்ப காலங்களில் மிகுந்த உற்சாகம் பெற்று அங்கு சென்ற அவர் பின்னாளில் அப்புரட்சி இஸ்லாமிய மதவாதிகளால் கைப்பற்றப்பட்டு இடதுசாரிகளை வேட்டையாடத் துவங்கியதைக் கண்ணுற்று, அரசியல் இஸ்லாம் என்பது திட்டவட்டமாக இடதுசாரி எதிர்ப்பும் சீரழிவுத்தன்மையும் கொண்டது என்பதனைத் திட்டவட்டமாக அறிவித்தவர்.

 சோவியத் யூனியனின் வீழ்ச்சி, ஸத்தாம் குசைனுக்கு எதிரான அமெரிக்க மேற்கத்திய அரசுகளின் முதலாவது இரண்டாவது வளைகுடாப் போர், செப்டம்பர் 11 தாக்குதல் போன்றவற்றின் பின் தனது இடதுசாரிக் கடந்த காலத்தை உதறியவர் எனவே இவரை இன்று நாம் மதிப்பிட முடியும். மத்தியக் கிழக்கு அரசியலும் அரசியல் இஸ்லாமும் குறித்த அனுபவத்திலிருந்து அவரது அரசியல் நிலைபாடுகள் எழுகிறது. ஆப்கானிஸ்தானில் சோவியத் யூனியன் தலையீட்டை ஆதரித்தது போலவே பிற்பாடு அமெரிக்கத் தலையீட்டையும் அவர் ஆதரித்தார். யுகோஸ்லாவியா, ஈராக் போன்றவற்றிலும் அமெரிக்கத் தலையீட்டை ஆதரித்தார். கெடுபிடிப் போர் காலகட்டத்தின் இறுதியில் அமெரிக்க மேற்கத்திய தலையீடுகளுக்கு வரலாற்றில் முற்போக்கான பாத்திரம் இருக்கிறது எனக் கருதியவர் அவர்.

 மூன்றாம் உலகின் அல்லது ஸத்தாம் குசைன் போன்ற மத்தியக் கிழக்கின் கொடுங்கோலர்களுக்கு எதிராக – இனக்கொலை புரிபவர்களுக்கு எதிராக – அமெரிக்க மேற்கத்தியத் தலையீடுகள் சாதகமானவை எனக் கருதியவர். தலையீடுகளை அரசியல் ரீதியில் ஆதரித்தாலும் கூட பிற்பாடு ஆப்கானிலும் ஈராக்கிலும் பிரச்சினைகளை அமெரிக்காவும் ஐரோப்பாவும் கையாளும் நடைமுறைகளை இவர் விமர்சித்தார்.

 வரலாற்றில் மூன்று விடயங்கள் வராலற்றின் குப்பைக் கூடைக்குப் போகவேண்டும் என இவர் எழுதினார். முதலாவது சோவியத் யூனியன் திட்டம், இரண்டாவது உலகை ஆதிக்கம் செலுத்தும் அமெரிக்கத் திட்டம், மூன்றாவதாகவும் இறுதியாகவும், முந்தைய இடதுசாரி அரசியலில் இருந்து எந்தப் பாடங்களையும் கற்காத முதலாளித்துவ எதிர்ப்பு இயக்கம் எனப்பெறும் ஆன்டி காபிடலிஸ்ட் இயக்கத்தின் அரசியல் என இவர் எழுதினார்.

 யுகோஸ்லாவியத் தலையீட்டையும் ஈராக் தலையீட்டையும் ஆதரித்ததன் வழி தனது கடந்தகால இடதுசாரி நிலைபாட்டிலிருந்து இவர் முற்றிலும் முறித்துக் கொண்டார் என்றே சொல்ல வேண்டும். தனது இறுதிக் காலங்களில் உரிமை அரசியலில் இவர் அதிகமும் ஆர்வம் காட்டினார். மூன்றாம் உலகின் கொடுங்கோலர்கள் தமது தேசிய இறையாண்மை எனும் கோஷத்தின் கீழ் பிறரின் உரிமைகளை நிராகரிப்பதைச் சுட்டிக் காட்டிய இவர், இத்தகைய கொடுங்கோலர்களுக்கு எதிராக அமெரிக்க ஐரோப்பியத் தலையீட்டை ஆதரித்தார்.

 அமெரிக்காவினதும் ஐரோப்பாவினதும் தலையீட்டுக்கான நோக்கங்கள் எத்தகையதாக இருந்தாலும், அந்தத் தலையீடு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நன்மை தருமானால் அந்தத் தலையீட்டை ஆதரிக்க வேண்டும் என்றார் அவர். மனித உரிமைகள், ஜனநாயக உரிமைகள், சிறுபான்மையினர் உரிமைகள் போன்ற விடயங்களில் மார்க்சியர்கள் அக்கறை செலுத்தாதது மட்டுமல்ல அதற்கு எதிராகவும் வரலாறு நெடுகிலும் அவர்கள் செயல்பட்டு வந்திருக்கிறார்கள் எனவும் கடுமையான நிலைபாடுகளை அவர் எடுத்தார்.

 இவரது எழுத்துக்களை ஒரு வரலாற்று மாணவனாக நான் தொடர்ந்து வாசித்து வந்திருக்கிறேன். அரசியல் இஸ்லாம் எனும் சீரழிந்த சமூகத் திட்டம் பற்றிய இவரது கருத்துக்கள் பெரும்பாலும் எகிப்திய மார்க்சியரான சமீர் அமினுடன் உடன்படுவதை என்னால் காணக் கூடியதாக இருந்தது. அவரது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து அவரை ஏகாதிபத்திய ஆதரவாளராக எளிமைப்படுத்திக் கொச்சைப்படுத்திவிட முடியாது.

 இலங்கைப் பிரச்சினை என்று எடுத்துக் கொண்டாலும் கூட தமிழர்களின் உரிமையை உலகின் மாரக்சிய அரசுகள் நிராகரித்திருக்கின்றன. தேசிய இறையாண்மை எனும் பெயரிலும் ஏகாதிபத்திய எதிர்ப்பு எனும் வகையிலும் பெரும்பான்மை இனவாத எதேச்சாதிகாரம் தலையெடுக்க முடியும் என்பதனை அவைகள் அறியவில்லை. இதற்கான காரணம் உரிமை அரசியல் குறித்த பரிமாணங்களில் வைதீக மார்க்சியர்கள் அதிகமும் அக்கறை கொள்ளவில்லை என்றே சொல்ல வேண்டும்.

 உரிமை அரசியலும் மூன்றாம் உலக அரசுத் தலைவர்களதும் கொடுங்கோன்மையும் குறித்த சரியான அறிவுறுத்தலையே பிரெட் ஹாலிடே கொண்டிருந்தார் எனவே சொல்லத் தோண்றுகிறது.  உலகப் புரட்சிகள் குறித்த அவரது நேரடி அனுபவமும், உலகின் பணிரெண்டு மொழிகளில் ஆளுமை கொண்டிருந்த அவரது மகத்தான ஆகிருதியும் நாம் தலைவணங்கி ஏற்கத் தக்கது. அவரைத் தொடர்ந்து பயில்வதன் மூலம் அவரை நாம் கடந்து சொல்ல முடியும்.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

இலங்கை அகதி என்பதால் உயர் கல்வி மறுக்கப்படும் சோகம்!

Comments 9

  1. JAMES FRIEDRICH says:
    16 years ago

    /அமெரிக்கத் தலையீட்டை ஆதரித்தார். கெடுபிடிப் போர் காலகட்டத்தின் இறுதியில் அமெரிக்க மேற்கத்திய தலையீடுகளுக்கு வரலாற்றில் முற்போக்கான பாத்திரம் இருக்கிறது எனக் கருதியவர் அவர்./ –இவரின் இந்த முடிவு பாசிட்டிவ் ஆனதே.அம்ரிக்க-நிக்ஸன் காலத்தில்,சீனாவை ஆதரித்தது,சோவியத் யூனியனின் தெற்காசிய செல்வாக்கை கட்டுப் படுத்தவே!.அதனால்தான் அமெரிக்கா,பங்களாதேஷ்(1971) யுத்தத்தில்,இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்த்தானை ஆதரித்தது.இதன் தொடர்ச்சியாகவே “ரொனால் ரீகன் காலத்தில்”,இந்தியவுக்கு எதிராக குறிப்பிடத்தக்க வெளியுறவு கொள்கை வகுக்கப்பட்டது.இதர்கு எதிராகவே “இந்திரா காந்தியின்” நேரடி செல்வாக்கில்,இந்திய உளவு நிறுவனமான “ரா” அதிகாரிகளின் செல்வாக்கு இந்திய அரசியலில் பெரும் செல்வாக்கு கருக்கொண்டது(அவர்களின் வருமானத்திற்கு பிரத்தியேக நிறுவனங்கள் உருவாகின).இது காலனித்துவத்திற்கு எதிரான இந்திய(இந்து) தேசிய உணர்விலிருந்து வேறுபடுத்தி பார்க்க வேண்டும்!.
    தற்போது ஆப்கானிஸ்தானில் கருக்கொண்டிருக்கும் “புதிய ஒழுங்கு நிலையில்”,அமெரிக்க- இந்திய உறவு ஏற்ப்பட்டுள்ளது.இது உலக மயமாக்கலின் ஒரு அங்கம்!.அமெரிக்க – ஐரோப்பிய சிந்தனைகள் வள்ர்ந்திருக்கின்றன.இதற்கு எதிராக மார்க்ஸிய பண்டிதர்களின் வழியில் முட்டி மோதுவது அறிவீனம்!.
    “நீங்கள் குறிப்பிடும் உரிமைப் போர்” என்னவென்று எனக்கு தெரியவில்லை!.
    சட்டீஸ்கர் மநில பழங்குடியினரின் உரிமைப் போரா?,ஆப்கானிஸ்தான் மக்களின் உரிமைப் போரா?.
    உலகில் உள்ள “இயற்கை கனிம வளங்கள்,தொழிற்சாலை-உற்பத்தி நிறுவனங்களின் கட்டுப்பாட்டிற்குள் வரவேண்டும் என்பதில்,அமெரிக்க – ஐரோப்பிய – சீன – இந்திய அரசாங்கங்கள் உறுதியாக உள்ளதுபோல் தெரிகிறது.நியூ அமெரிக்கன் செஞ்சுரி – வோர்ல்ட் அன்டர் ஒன் ஃடிரி(சீனா)- இந்துத்துவம் போன்றவை இதற்கு ஆதரவாக உள்ளது பாஸிட்டிவா?.அப்படியன்றால் பூர்வீக பழங்குடியினரின் நலன்கள் இதில் உள்ளடக்கப்படுமா?.அல்லது…அவர்கள் தங்களுக்குள் “விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொண்டு” இதனுடன் சேர்ந்தியங்க தயாராக வேண்டுமா?….வினவுவோம்!…”Power is the ultimate aphrodisiac”.—Henry Kissinger

    • xxx says:
      16 years ago

      மேலும் கொஞ்சம் “துட்டுக்கு இரண்டு கொட்டைப்பாக்கு”.

      • JAMES FRIEDRICH says:
        16 years ago

        “நியூ அமெரிக்கன் செஞ்சுரி” என்ற அமெரிக்க வெளியிறவுக் கொள்கை,ஜார்ஜ் புஷ் – சீனியர்-ஜூனியர் காலத்தில்,உருவாகிய போது,”ட்ராட்கியிஸம்” என்ற சொல் வருகிறது.இதை தப்பும்,தவறுமாக நடைமுறப்ப்டுத்தியது அமெரிக்க உளவு நிறுவனமான,”சி.ஐ.ஏ”.இதைதான்,”XXX” இலங்கைத்,இயல்பான “யு.என்.பி” ஆதரவு தளத்தை “XXX” பிரதிபலிக்கிறார் போலுள்ளது.”ட்ராட்கியிஸவதிகளான” ஜே.வி.பி. யை இலங்கைத் தமிழர்கள் (இடதுசாரிகள்?) உட்பட ஆதரித்ததாக வரலாறு கிடையாது!.பிரபாகரனை பிரேமதாசாவுடன் சேர்த்தவர்களும் இவர்களே.பிரேமதாசாதான் ஜே.வி.பி. யை அழித்தார்!.யு.என்.பி. யுடன் சேர்ந்து,பிரபாகரனை பேச்சு வார்த்தைக்கு உட்ப்படுத்தி,பலவீனப்படுத்தி,முள்ளியவய்க்காலில் அழித்ததும் இவர்களே.தற்போது கே.பி. யின் செம்மொழி? ஆதரவு அறிக்கை இதையே காட்டுகிறது.பனிப்போரின் இந்த கொள்கைக்கு எதிரானதுதான்,”ரா” வின் நடவடிக்கை.ஜே.வி.பி.யில் மீது 1970… போருக்கும்,முள்ளியவாய்க்கால் போருக்கும்,”ரா” வை குறைகூறினால்,அரசியல் நியாயம் உள்ளது ஆனால் “இந்திய எதிர்ப்புணர்வு” என்ற போர்வையில்,இலங்கைத்தமிழர்களின் பிரத்தியேக,”தமிழக எதிர்ப்புணர்வாக” மாற்றுவதுதான் வேதனை!.

    • xxx says:
      16 years ago

      மூர்க்கனும் முதலையும் கொண்டது விடா.

      • THAMILMARAN says:
        16 years ago

        XXX தங்கள் அழ்கான தமிழை ரசித்தோம் உண்மையை உரைத்தீர்க்ள்.

  2. கோசலன் says:
    16 years ago

    Fபிரெட் ஹாலிடே சாமுவேல் ஹன்ரிங்டனின் நாகரீகங்களின் மோதுகையை இன்னொரு தடவை அதன் செயற்பாட்டுத் தளத்தில் நியாயப்படுத்தியவர். செப்/11 தாக்குதலின் பின்னர் உலகை மாற்றிய இரண்டு மணித்தியாலங்கள் என்ற நூலின் மூலம் ஏகாதிபத்தியக் கலாச்சாரத்தின் இஸ்லாமியக் கலாச்சாரத்துடனான மோதுகை என வர்ணித்தவர். பிரஞ்சு 1 தொலைக்காட்சியில் பிபிடியியுடனான நேர்காணலில் அல்ஜீரியாவில் பிரஞ்சு ஆக்கிரமிப்புத் தொடர்ந்திருக்க வேண்டும் என்று அதிரடியாகக் கூறியவர். ஹன்டிங்டனின் கருத்துக்கள் நவீன ஹிட்லரிசம் போன்றது. ஹாலிடேயை கற்றுக்கொள்வதை விட அவர்கள் போன்றவர்களை அம்பலப்படுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும்.

  3. xxx says:
    16 years ago

    ஹலிடேயின் இடதுசாரி அரசியலின் அடிப்படை ட்ரொட்ஸ்கியம் என்பது ஈழத் தமிழர் நினைவுகூரத் தக்கது.

    ஒருவரைக் கடந்து செல்வதற்காக அவரைக் கற்பது அவர் முன்னுதாரணமாக வாழ்ந்திருந்தாலே பரிந்துரைக்கத் தக்கது.
    அல்லாவிடின் கடப்பதற்காகப் படிக்க வேண்டியோரின் பட்டியல்களைப் பார்க்கவே நமக்கு நேரம் பற்றாமலிருக்கும். இந்த மனிதர் ஏன் இப்படிச் சீரழிந்தார் எனக் கற்பது நல்ல இடதுசாரிகட்குப் பயனளிக்கும்.

  4. K.R.அதியமான் says:
    16 years ago

    ////மனித உரிமைகள், ஜனநாயக உரிமைகள், சிறுபான்மையினர் உரிமைகள் போன்ற விடயங்களில் மார்க்சியர்கள் அக்கறை செலுத்தாதது மட்டுமல்ல அதற்கு எதிராகவும் வரலாறு நெடுகிலும் அவர்கள் செயல்பட்டு வந்திருக்கிறார்கள் எனவும் கடுமையான நிலைபாடுகளை அவர் எடுத்தார்./////

    மனித உரிமைகளை, ஜனனாயக உரிமைகளை, சிறுபான்மையினரின் உரிமைகளை மீறாமல், மார்க்சிய கொள்கைகளை அமலாக்க முடியவே முடியாது என்பதே அடிப்படை உண்மை. வரலாறு சொல்லும் பாடம் அது. அந்த சித்தாந்தமே அதற்க்குதான் வழிவகுக்கும்.

    ////இந்த மனிதர் ஏன் இப்படிச் சீரழிந்தார் எனக் கற்பது நல்ல இடதுசாரிகட்குப் பயனளிக்கும்./////

    சீரழிந்தார் என்பது உங்களின் கோணம். ‘தெளிந்துவிட்டார்’ என்றும் சொல்லலாம். Disillusionment leads to clear picture of reality.

  5. யோகன் says:
    16 years ago

    இளவரசனும் ,இளவரசியும் சந்தோசமாக வாழ்ந்தார்கள்.

    சுபம்

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
 

Loading Comments...