பிரித்தானிய ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பித்த ஒரு வாரத்தின் பின்னர் பிரபல பிரித்தானியப் பாடகரான பற்றிக் மோரிசி பிரித்தானிய ஒலிம்பிக் ஹிட்லரின் நாசி காலத்தைத் தனக்கு நினைவூட்டுவதாகக் குற்றம் சுமத்தி அறிக்கை வெளியிட்ட்டுள்ளார்.
பிரித்தானிய முழுவதும் பிபிசி போன்ற பிரச்சார ஊடகங்களும் அரச அறிக்கைகளும் நாஸி காலத்தைய விளையாட்டுப் போட்டிகளின் உணர்வுகளை நினைவூட்டுவதாக பிரித்தானிய ஜனநாயக முற்போக்கு சக்திகளும் இடது சாரி அமைப்புக்களைச் சார்ந்தோரும் கருத்துக் கொண்டிருந்த நிலையில் பற்றிக் மொரிசி அதனை வெளிப்படையாகக் கூறியுள்ளார்.
பிரித்தானிய ஊடகங்கள் குறிப்பாக தேசிய ஊடகமான பி.பி.சி சீன விளையாட்டு வீரார்கள் வெற்றிபெறும் சந்தர்ப்பங்களை முழுமையாக இருட்டடிப்புச் செய்வதும், ஏனைய நாடுகளின் வெற்றிகளை சந்தேகம் கொள்வது போன்ற தோற்றத்தை உருவாக்குவதும் நாஸி உணர்வைத் தோற்றுவிப்பதில் பெரும் பங்கு வகித்திருந்தது.
திடீரென லண்டன் செல்வம் கொழிக்கும் நாடாக உலகத்திற்கும் பிரித்தானிய மக்களுக்கும் விளம்பரப்படுத்தப்படும் அதே வேளை பொருளாதாரப் பேரழிவினாலும் சிக்கனக் குறைப்புகளாலும் லண்டனுக்கு வெளியே மக்கள் வாழ்விழந்து கொண்டிருக்கின்றனர் என அவர் தனது கடிததில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.








சாதாரணமக்களிடம் இருந்த விளையாட்டுப்போட்டிகளை பிடுங்கி, தங்களின் போட்டிக்கான விளையாட்டாக மாற்றி கண்டுதிளைக்கின்றனர்.
American Republican Presidential Candidate Mitt Romney came there to talk about security. He was trying to remind the 1972 Munich Olympics.