விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனது என்று தோன்றுகிற சடலத்தை இலங்கை தொலைக்காட்சி ஒளிபரப்பியுள்ளது.
அந்த வீடியோவில், பிரபாகரனது முகச் சாயலுடன் காணப்படும், கெரில்லாக்களின் உடையணிந்த சடலம் ஒன்று காணப்பட்டது. அதன் தலைப்பகுதி ஒரு துணியால் மறைக்கப்பட்டிருந்தது. ஒருவேளை அந்தப் பகுதியில் காயத்தை மறைப்பதற்காக அது இருக்கலாம்.
அந்த சடலத்தின் மரபணுச் சோதனைகள் அது பிரபாகரன்தான் என்பதை உறுதி செய்ததாக இலங்கை இராணுவம் கூறுகிறது.
அவர் நேற்று கொல்லப்பட்டார் என்று இலங்கை அரசாங்க ஊடகங்கள் கூறியதற்கு மாறாக, அவரது சடலம் இன்றுதான் மீட்கப்பட்டது என்று இலங்கை இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
அதேவேளை, பிரபாகரனது உடலை தான் பார்த்து, அதனை அடையாளம் கண்டதாக, அவரது பழைய சகாவும், தற்போதைய அமைச்சருமான, கருணா என்று அழைக்கப்படும், விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.








பி.பி.சி. சரியாகத்தான் சொல்லியிருக்கு> அவசரத்திற்கு தொலைக்காட்சிக்காக பிரபாகரன் மாதிரி ஒருதலை (முகமூடி) செய்திருக்கின்றார்கள்! இந்துக்கோவில்களில் சூரன்போர் பார்த்தமாதிரி இருக்கு! இதைத்தான் கருணா அம்மானும் அடையாளம் காட்டினாரோ? கருணா பிரபாகரனைப் பார்தது கனகாலம்: பிணக்குவியலில் பார்த்ததெல்லாம் பிரபாகரனாய்த் தெரிந்திருக்கும்!
பிரபாகரன் கொல்லப்பட்டாரா தப்பிவிட்டாரா என்னவோ ஆனால் காட்டப்பட்டது அவரது உடலல்ல. பிரபாகரன் உயிருடன் இல்லை என்பதை அவரது உடலைக் காட்டி உலகை ஏமாற்ற வேண்டிய தேவை இலங்கை அரசிற்கு இருக்கிறது.(-ஏனென விரித்தால் கட்டுரையாகிவிடும்.) அதற்காக முட்டாள்தனமான திருகுதாளம் செய்ததால் விழி பிதுங்கி நிற்கிறது. செய்ததைத் திருந்ததச் செய்திருக்கலாம்.
பல கேள்விகள் இவர்களை முழி பிதுங்க வைத்திருக்கின்றன.
பிணத்தின் பாகத்தை 48 மணிகளின் பின் இலகுவாக திருப்பலாமா?
படத்தை மெல்லசைவில் பார்தால் முகமூடி விலகுவது தெரியும்!
அப்போதுதான் சவரம் செய்துவிட்டு சாக வந்தாரா?
நாங்களே அடையாள அட்டையை விட்டு திரிகையில் ஒரு தலவைன் அதுவும் போராட்ட களத்தில்- செத்தால் யாரென இலகுவில் கண்டுபிடித்து விடுவார்கள் என்றிருக்கும் நிலையில் அடையாள அட்டையை அதுவும் புலிகளின் அடையாள அட்டையை வைத்தருப்பாரா?
பிரபாகரனின் கண்மூடிய படம் கிடைக்காதததால் கண் திறந்தபடி உடலைக் காட்டிப் தவறைப் பிடி டகொடுக்கலாமா?
முன்பு உங்களைப் போன்றவர்கள் தான் பொய்யான தகவல்களை பரப்பி வந்தீர்கள் பிரபாகரன் குடும்பம் வெளி நாட்டில் சந்தோசமாக வாழ்கிறார்கள் என்று, இப்பொழுது உங்களுக்கு சந்தோசம் தானே. இனி நீங்களும் உங்களைப் போன்ற புலி எதிர்ப்பாளர்களும் தான் தமிழ் மக்களை காப்பாற்ற வேண்டும்.