Saturday, June 13, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

பிரபாகரன் இலங்கைப் படைகளால் கொல்லப்பட்டமை குறித்து சனல் 4 ஆவணப்படத்தில்

இனியொரு... by இனியொரு...
03/12/2012
in இன்றைய செய்திகள்
0 0
39
Home இன்றைய செய்திகள்

இலங்கை அரச படையினரால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு எதிரான இறுதி யுத்தத்தில் போர்க் குற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன என்பதற்கு ஆதாரமாக சனல் 4 புதிய வீடியோ ஒன்றை உருவாக்கி உள்ளது.
இதன் பெயர் இலங்கையின் கொலைக்களம் – தண்டனைக்கு உட்படுத்தப்படாத போர்க் குற்றங்கள் என்பது. 60 நிமிட வீடியோ ஆவணம். இங்கிலாந்து கிறிக்கெற் அணி இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டு வருவதற்கு முதல் நாள் திரையிடப்பட உள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புதல்வர் பாலச்சந்திரன், சிவிலியன்கள் உட்பட ஏராளமானோர் அரச படையினரால் படுகொலை செய்யப்பட்டு இருக்கின்றனர் என்பதற்கு முன்பு வெளிவந்து இராத வீடியோ ஆதாரங்கள் இப்படத்தில் காண்பிக்கப்படுகின்றன.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இலங்கை அரச படையினரால் படுகொலை செய்யப்பட்டு உள்ளார் என்பதை உறுதிப்படுத்தி உள்ளது பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி.
புலி சார் அரசியல் வியாபாரிகள் தமிழ் நாட்டிலும் புலம்பெயர் நாடுகளிலும் பிரபாகரன் உயிரோடு வாழ்கிறார் என்று இதுவரை நடத்திய நாடகம் இந்த ஆவணப்படத்தின் பின்னர்முடிவிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

தொடரும் இனச் சுத்திகரிப்பு : லண்டனில் சர்வதேச அமைப்புக்களின் ஒன்றுகூடல்

Comments 39

  1. veeran says:
    14 years ago

    சரண் அடைந்த பின்பு தான் கொல்லப்பட்டாரா?

    • ராகவன் says:
      14 years ago

      பார்த்தால் அப்படித்தான் தெரிகிறது. தலைக் காயத்தை கவனிக்கவும். யுத்தத்தில் ஏற்பபட்ட காயமல்ல அது. அருகேயிருந்து தலையில் கொத்தியிருக்கிறார்கள்

      • thols says:
        14 years ago

        I think you deserve a PhD in Forensic Criminology from Havard I would say ! What a brain you have !

        • ராகவன் says:
          14 years ago

          ஐயா அறிவாளி,

          நீங்கள் எழுதும் பல்கலைக்கழகத்தின் பெயருக்கு சரியான ஸ்பெல்லிங்கை முதல் தெரிந்து கொள்ளுங்கள். மீதியை அப்புறம் பார்க்கலாம்

          • thols says:
            14 years ago

            I didn’t know that you are the official spell checker here. Microsoft may have a better job for you. Tell me one thing, why is that you don’t get to see any of these socialists who have gone out of SL living in other socialist countries but the West. Is it because of the Whiskey ( is it Whisky Dr. Spell Checker ) and the chicken you get with the dole money? If you even open your mouth in those socialist countries uncle Putin will have sent Siberia ( is the spelling correct Saamiyow ? ) Do I hate my iPhone ?

          • veeran says:
            14 years ago

            இவருக்கு  தொல் என்ற பெயரை விட லொள் என்ற் பெயர் பொருத்தம்

      • thamizhan says:
        14 years ago

        தேசியத் தலைவர் வீரமரணம் அடைந்து விட்டார் . ஆனால் அவெர் எப்படி மரணம் அடைந்தார் என்பதுதான் பலரது கேள்வி. தலைவரைப் பிடிக்காதவர்கள்; தமிழரது விடுதலையை எதிர்ப்பவர்கள், ராகவன், சந்திரன் ராஜா, வீரன் போன்ற்வர்கள் ; தலைவரது மரணத்தை தமக்குப் பிடித்த மாதிரி கனவுகண்டு சுய இன்பம் காணுகிறார்கள் அவ்வளவே. தேசியத் தலைவர் அவெர்கள் ,மே 17 ஆம் திகதி அன்றே , அவெரது விருப்பத்துக்குரிய மெய்ப்பாதுகாவலராலாயே மிக அருகினில் வைத்து சுடப்பட்டு, அவெரது மரணம் உறுதிபடுத்தப் படுகிறது.அதன் பின்பு அந்த மெய்ப்பாதுகாவல்ர் தன்னைதானெ சுட்டு வீரமரணம் அடைகிறார்.அவெரது சகோதர்கள் சுவிஸில் இருக்கிறார்கள். அவெர்களுக்கு மே 17 ஆம் திகதி ஜர்ப்பியநேரப் படி மதியம் 1 மணிக்கு இக்தகவல் அறிவிக்கப்படுகிறது. அன்றைக்கு அந்த சுவிஸில் அந்த மரணவீட்டுக்குப் போனவர்களில் யாராவது ஒருத்தர் இங்கு இருக்கிறீர்களா? நான் போனேன். அப்போதேநாங்கள் அங்கு பேசிகொண்ட ஒரு விடயம். தலைவரின் பாதுகாவலர் மரணம் அடைந்து விட்டார்,நிச்சயம் தலைவருக்கு எதோநடக்கப் போகிறது, அல்லதுநடந்து விட்டது. தலைவரைநாடு தாண்டி , கடல் தாண்டி கோடிக்கணக்கான மக்கள் நேசிக்கிறார்கள்: அதனால் அவெர் மரணம் அடைந்து விட்டார் என்பதை ஏற்க மறுக்கிறார்கள்: அவெர்களைநாம் யாரும் வற்புறுத்த விரும்பவில்லை. காலம் வரும் போது அவெர்கள் உணர்ந்து கொள் வார்கள்: அதாவது நடேசன் ஜயா , புலிதேவன் சரண் அடந்து சில மணித்தியாலங்களிலேயே கொல்லப் படுகிறார்கள்: தலைவர் எப்ப்போதுமே சொல்வார் சிங்களவனைநான் எப்பொதுமேநம்ப மாட்டென். இதன் பிறகும் அவர் சிங்களவனிடம் சரண் அடைவார் என்று சொனால்சுத்த பைத்தியக்காரத்தனம். சனல் 4 நாளை வெளியிடும் வீடியோவில் , தள்பதி ரமேசைப் போல பிடித்து வைத்து விசாரித்து அடித்துக் கொல்லும் வீடியோவை வெளியிட்டால்,நானும் ராகவன் , வீரன் , சந்திரன் போல் இன்றில் இருந்து புலிகளின் எதிரியாய், துரோகியாய் மாறிவிடுகிறேன். அப்படி இல்லை என்றால் இவெர்கள் எல்லாம் என்ன சொல்லப் போகிறார்களோ தெரியாது. கொண்ட கொள்கைக்கு ஆகாவே போராடுதல், இல்லையேல் உயிரை விடுதல், இதுதான் தமிழனின் வீரம், இதுவே புலிகளினது , தலைவரினதும் கொள்கை. தலைவருக்கு உயிர் மேல் ஆசை இருந்தால், அவெர், அவெரிடமிருந்த விமானத்தில் ஏறி ஓடி இருப்பார்.

        • chandran.raja says:
          14 years ago

          காளியாத்தா! இதுவெல்லாம் உண்மையா?.

          சிலையென நினைத்திருந்தேன். தெய்வம் இன்று என்னுடன் நேரிடையாகவே கதைத்துவிட்டது. நம்புறோம் காளியாத்தா!.

          • thamizhan says:
            14 years ago

            டில்லிக்கு ராஜா ஆனாலும் பாட்டி சொல்லைத் தட்டதேஎ 🙂 மன்னிகணும் சந்திரனுக்கு கூஜா ஆனாலும் தமிழன் சொல்லைத் தட்டாதே 😛 இனியாவது வைக்கோல் மேல் கிடப்பதை விட்டு , நியத்திற்கு வரவும் உறவே

        • a voter says:
          14 years ago

          அப்போ தலைவர் உயிருடன் இல்லையா? வைகோ மற்றமாதிரிச் சொல்லுகிறாரே

        • veeran says:
          14 years ago

          பிரபாகரனின் மரணம் எப்படி?

          இந்நிலையில் பிரபாகரனின் மரணம் குறித்து வேறு சில தகவல்களும் வெளியாகியுள்ளன. அவற்றின் படி, இறுதிக்கட்டத்தில், சில மேற்குலக நாடுகள், ஐ.நா., மற்றும் இந்தியா ஆகியவற்றின் ஆலோசனைப் படி பிரபாகரனும், விடுதலைப் புலிகளின் மூத்த தலைவர்களும் குடும்பத்துடன் சரண் அடையும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பிரபாகரனும் அதற்கு ஒப்புக் கொண்டு, ஐ.நா., வின் மீட்பு வாகனம் ஒன்றிற்காக காத்திருக்கிறார். ஆனால் நடந்தது வேறு. அதற்குப் பின் பிரபாகரன் அவரது குடும்பத்துடன் இலங்கை ராணுவத்தின் பிடியில் சில நாட்கள் இருந்திருக்கிறார். அதன் பின் இறுதியாக நந்திக் கடல் பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளார் என அத்தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது மரணத்திற்கு முன்பே அவரது மூத்த மகன் சார்லஸ் ஆன்டனி மற்றும் இளைய மகன் பாலச்சந்திரன் ஆகியோர் கொல்லப்பட்டிருக்க வேண்டும் எனவும் அத்தகவல்கள் கூறுகின்றன. எனினும் இவை எதுவும் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. பிரபாகரன் எவ்விதம் மரணம் அடைந்தார் என்பதற்கான விடையும், சேனல் 4 செய்தி நிறுவனம் வெளியிடும் புதிய வீடியோ தொகுப்பில் இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் பெரிய அளவில் நிலவுகிறது.

          • thamizhan says:
            14 years ago

            வெத்து வீரன் , பருத்தித்துறை ஊராம் , பவளக்கொடி பேராம் என்ற பாட்டுபடித்திருக்கிறீரோ( பள்ளிக்கூடப்பக்கம் தலை வைத்டகு உண்டா 🙂 ) கடைசியில பவளக்கொடிக்குநடந்த கதைதான் உமக்குக்ம் , பகல் கனவு கண்டது காணும் , போய் மகிந்த அன் கோ க்கு காவடி எடும். சனல் 4 இல் ல் உண்மையில்நடந்தால் தானே சனல் 4 காட்டுவதற்கு.

          • veeran says:
            14 years ago

            அட ராத்திரியில் கண்விழித்து பின்னோட்டம் எழுதுகின்றீர், இரவு 01 44,

          • chandran.raja says:
            14 years ago

            சணல் நான்கு காட்டுவது தமிழன் பொல்லுக் கொடுத்து அப்பாவித்தமிழனுக்கு அடிவாங்கிக் கொடுத்த கதை. அதுபோக அவர்கள் தங்களுடை தேவைக்காக கதைவிடுகிறார்.நீங்கள் தமிழன் இனி உங்களுடைய தேவைக்காக சிந்திக்க வேண்டும். எப்படி சிந்திகப் போகிறீர்ளோ தெரியாது. இன்னெமொரு முறை பொல்லுக் குடுத்து மன்னார் பக்கமாக பாதை காட்டாமல் இருந்தால் சரி.

  2. Unmai Tamilan says:
    14 years ago

    தமிழரின் திரண்ட பலத்தை சிதைப்பதற்கு மகிந்தவின் கைக்கூலிகள் சதி!! சனல்4 இன் புதிய போர்குற்ற ஆவணப்படத்தின் மூலம் அரங்கேற்ற முயற்சி!! உலகத் தமிழர்களே எச்சரிக்கை!!!

    அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும். இது பழமொழி. ஆனால் எவ்வளவு முயன்றாலும் தமிழர்களின் போராடும் வலுவை மழுங்கடிக்க முடியாது மகிந்த கும்பல் தவியாயத் தவித்து வருகின்றது.

    அதன் அடிப்படையில் பல்வேறு சதி முயற்சிகளை அரங்கேற்றிய மகிந்த கும்பல் எம்மவர்களையே அதற்குப் பயன்படுத்தவும் துணிந்தது. மகிந்த வீசும் எலும்புத் துண்டுகளிற்காக இனத்தை காட்டிக்கொடுக்க சிலர் துணைபோனாலும் உலகத் தமிழர்களது உறுதிப்பாட்டை தகர்க்க முடியவில்லை என்பதுதான் உண்மை.

    அதனால்தான் புதிய புதிய வழிகளில் தமிழர்களின் ஒருங்கிணைவை தடுப்பதற்கு முயற்சித்து வருகின்றான் கொலைவெறியன் மகிந்த ராசபக்சே. பல்வேறு பிளவுகள் குழப்பங்கள் சதிகள் கழுத்தறுப்புகள் குத்துவெட்டுகள் என அரங்கேற்றப்பட்டு புலம்பெயர் தமிழர் தலைமையினை கேள்விக்குரியதாக்கி
    தனது திட்டத்தை அரங்கேற்ற முயன்ற மகிந்தவிற்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது.

    முள்ளிவாய்காலில் அரங்கேற்றப்பட்ட மானுடத்திற்கு எதிரான இனப்படுகொலைக்கு காரணமான மகிந்த கும்பலை போர்குற்றவாளியாக அறிவித்து தண்டனை வாங்கும்வரை ஓயாது இந்தப்படை என புலம்பெயர் தேசங்களில் பல்வேறுபட்ட போராட்டங்களை நடாத்தி சிங்கள ஆட்சிக்கு பெரும் சவாலாக விளங்கும் எம்மவர்களை மீண்டும் மூலையில் முடக்க போட்ட திட்டம் தொடர்பாக எமக்கு தகவல்கள் கிடைத்திருந்தன.

    அந்த சதித் திட்டம் தொடர்பாக நாம் அறிய முற்பட்டபோது நம்பகமான இந்தத் தகவல்கள் கிடைக்கப்பெற்றன. சில தினங்களில் சனல் 4 ஒளிபரப்ப உள்ள புதிய போர்குற்ற ஆதாரங்கள் அடங்கிய ஆவணப்படத்தை வெளியிட உள்ள தகவல் எல்லோரும் அறிந்ததாகும்.

    இதற்குள்தான் அந்த சதி முயற்சியின் கரு உறங்கிக் கிடப்பதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழர்களது நீதி தேடிய நெடிய பயணத்தில் எதிர்பாராது வந்திணைந்த பிரித்தானியாவை தளமாக கொண்டு இயங்கிவரும் சனல் 4 தொலைக்காட்சியும் ஒன்றாகும்.

    சிறிலங்காவின் கொலைக் களங்கள் என்ற ஆவணப்படத்தின் மூலமாக சிங்களப்படைகள் ஈழமண்ணில் அரங்கேற்றிய போர்குற்றங்கள் மனித உரிமை மீறல்கள் தொடர்பான புகைப்பட கானொளி ஆதாரங்களை வெளியிட்டு தமிழர்களது விடுதலைப் போராட்டத்திற்கு பெரும் பலம் சேர்த்ததுடன் சிங்களத்திற்கு பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்தியிருந்தது சனல்4 தொலைக்காட்சி.

    தற்போது அதனையே எமக்கெதிரான உளவியல் போரிற்கு பயன்படுத்த முற்பட்டுள்ளார்கள் மகிந்தவின் கைக்கூலிகள். சிறிலங்கா அரசபடைகளின் போர்குற்ற ஆதாரங்களை சமர்பிப்பவர்கள் போன்று சனல்4 தொலைக்காட்சி வட்டாரத்திற்குள் ஊடுருவிய இந்த புல்லுருவிகள் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் கொல்லப்பட்டதற்கான ஆதாரங்கள் என சில புகைப்பட காணொளித் தரவுகளை தயார்செய்து வழங்கியுள்ளனர்.

    இன்னும் சில தினங்களில் சனல்4 தொலைக்காட்சியால் ஒளிபரப்பப்பட உள்ள புதிய போர்குற்ற ஆதாரங்களை உள்ளடக்கிய ஆவணப்படத்தில் இந்த விடையங்களையும் சேர்த்து ஒளிபரப்ப உள்ளதே இந்த சதித்திட்டமாகும்.

    இதன் மூலம் தலைவர் இருக்கிறாரா இல்லையா என்ற ஆராச்சியை விட்டுவிட்டு தமிழின விடுதலைக்காக நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை உணர்ந்து அதற்காக களமாடிவரும் எம்மவர்களது உளவுரனை சிதைத்து மூலையில் முடக்குவதே இந்த சதித்திட்டத்தின் பின்னணியில் இருக்கும் மகிந்தவின் திட்டமாகும்.

    இதற்கு சனல்4 எப்படி உடன்பட்டது என்ற சந்தேகம் எழுவதற்கு முன்னர் எல்லாவற்றையும் ஆதாரத்துடன் வெளியிடும் சனல்4 சொல்லும் இந்த விடையமும் உண்மையாகத்தான் இருக்கும் என்ற நிலைக்கு உலகத்தமிழர்களது இயல்பாகவே வந்துவிடுவார்கள்.

    மீண்டும் 20-05-2009ற்கு தமிழர்களை அழைத்துச் செல்லவே சிங்களம் திட்டமிடுகின்றது. அதாவது உலகத் தமிழர்களது ஆன்மாவில் இடிபோல் வந்திறங்கிய அந்த செய்தி சிங்களத்தால் வெளியிட்ட நாள்தான் அந்நாளாகும். இதனை எப்படி மறக்க முடியும்.

    சிறிலங்காவின் கொலைக்களங்கள் ஆவணப்படத்தை வெளியிட்டதன் பின்னர் சனல்4 தொலைகக்காட்சி மீது சிங்களத் தரப்பால் சுமத்தப்பட்ட புலிகளிடம் பணத்தை பெற்றுக் கொண்டுதான் சிறிலங்கா அரசுக்கு எதிராக இதனை வெளியிட்டுள்ளது என்ற குற்றச்சாட்டை பொய்யாக்குவதற்கு இதனை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்த சனல்4 தொலைக்காட்சியினர் நினைத்திருக்கலாம்.

    தங்களை நடுநிலையான ஊடகம் எனக் காட்டிக் கொள்வதற்காக சனல்4 தொலைக்காட்சி மகிந்த கைக்கூலிகளால் வழங்கப்பட்டுள்ள இந்த புகைப்பட காணொளி தரவுகளையும் சேர்த்து ஒளிபரப்புவதற்கு முடிவெடுத்திருக்கலாம்.

    சனல்4 தொலைக்காட்சியுடன் தொடர்பில் உள்ளவர்களிடம் இது தொடர்பாக விசாரித்த போது இதில் உண்மை இருப்பதை ஒத்துக்கொண்டுள்ளனர். தாமும் இந்த புகைப்பட காணொளி ஆதாரங்கள் போலியானவை என்பதை உறுதிப்படுத்தி வெளியாவதை தடுப்பதற்கு முயற்சித்து வருவதாகவும் தெரிவித்தார்கள்.

    இது தொடர்பாக பேசுவதற்கு சனல்4 தொலைக்காட்சி நிர்வாகத்தில் தொடர்பில் இருந்தவர்களது தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களை தொடர்பு கொள்வதற்கு கடுமையான முயற்சி எடுத்துக் கொண்டிருப்பதாகவும் ஈழதேசம் இணையத்திடம் தெரிவித்துள்ளார்கள்.

    சிலநாட்களில் ஒளிபரப்பாவதற்கு காத்திருக்கம் குறித்த ஆவணப்படத் தொகுப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்து விட்டதாகவும் அடுத்த கட்டம் ஒளிபரப்புவதற்கு தயார்நிலையில் வைக்கப்பட்டிருப்பதாகவும் இது தொடர்பாக தகவல்களை பரிமாறிக் கொண்ட இன்நொரு தரப்பினர் தெரிவித்துள்ளார்கள்.

    எது எப்படியோ…! தலைவர் தொடர்பாக காட்சிகள் போலியானவை என உறுதிப்படுத்தி ஒளிபரப்பில் இருந்து நீக்குவதற்கு கடுமையான முயற்சிகள் எடுக்கப்பட்டுவருகின்றன. இது வெற்றியளித்தால் தேவையற்ற குழப்பங்களை தவிர்க்க முடியும். இல்லாவிட்டால் அவர்கள் திட்டமிட்டது போன்று ஒளிபரப்பாகும்.

    எது எவ்வாறு அமைந்தாலும் நாம் எமக்கான இலட்சியப்பயணத்தில் உறுதியோடு பயனிப்போம். யாரும் வீண் குழப்பம் அடைய வேண்டாம் என்றும் மற்றவர்களையும் குழப்பத்திற்கு ஆளாக்க வேண்டாம் என்று ஈழதேசம் இணையத்தளம் உரிமையோடு கேட்டுக் கொள்கின்றது.

    “ஈழதேசம் இணையம் அது ஈழம் அமைக்கப் பயணம்”

    • ராகவன் says:
      14 years ago

      மக்கள் இறந்தார்கள்.. தளபதிகள் கொல்லப்பட்டனர்.. .. தாய் தந்தை கைதாகிறார்கள்.. மகன் மரணம்..  இந்தாள் பிரபாகரன் மட்டும் எல்லாவற்றையும் அம்போ என்று விட்டுவிட்டு தான் மட்டும் உயிர்தப்பி ஓடிப்போய் எங்கே பதுங்கி இருக்காம்?

  3. saran says:
    14 years ago

    தமில் யினா தலைவர் சாகவில்லை

    • ராகவன் says:
      14 years ago

      அவர் நெடுமாறன் வீட்டு திண்ணையில் இருக்கிறார்

  4. S.G.Ragavan says:
    14 years ago

    உண்மைத்தமிழன் , ஈழதேசம் இணையம் இரண்டு பேருமே பிரபாகரனை வருவாய் பொருளாக கருதுகிறார்கள், இல்லையேல் மூன்றாம்
    தரப்பொன்றின் வருவாயில் வாயையும் வயிற்றையும் நிரப்புகிறார்கள் என்பதை சாமானியர்கள் அனைவரும் அறிய முடியும்.
    இவர்களுடன் சேர்ந்து அதிர்வு இணையமும் அதனையே செய்கின்றது. பிரபாகரன் கொல்லப்படவில்லை என கதைகளை
    உலாவவிடுவதில் இலங்கை இந்திய புலனாய்வு நிறுவனக்களுக்கும் அதனுடன் இணைந்து செயல் படுபவர்களுக்கே நன்மை உண்டு, யாரும் என்ன நன்மைகள் எனக் கேட்டால் பதில் தரமுடியும். இருப்பினும் சாதாரண சுய புத்தியுடன் செயல் படும் எவருக்கும் பிரபாகரனின்
    மரணத்தை மறைப்பதில் அல்லது அது குறித்த ஐயத்தை தமிழ் மக்கள் மீது விதைப்பதால் யார் கூடுதல் நன்மையை பெறுவார்கள் தெரியும்.

  5. viyasan says:
    14 years ago

    நானும் போராளி தான். தலைவரு பேரைப் பாவித்து சோறு சாப்பிடும் கூட்டம் இன்னும் தலைவர் சாகவில்லை என்று அஞ்சலி கூடநடத்தாமல் வயிறு வளக்கிறது. எனக்கு குமட்டிக்கொண்டு வருகிரது.

    • tholkapiyan says:
      14 years ago

      குமட்டினா போயி சத்தி எடுடா மவனே ? அவன்ட சாவுல உங்களுக்கு ஏன்டா இந்த இன்பம்.

      • ராகவன் says:
        14 years ago

        இது சுத்தமாக நெய்யில் தயாரிக்கப்பட்ட புலி.. அதே பேச்சு இருக்கிறது!

  6. Kumar says:
    14 years ago

    ஆக சனல் 4 வெளியிடவிருக்கும் தொகுப்பின் மூலம் பிரபாகரனின் மரணத்தை நம்பமுடியாமல் தவித்திருக்கும் ஆன்மாக்களுக்கு விடுதலை கிடைக்கப்போவதை இந்த வியாபாரிகளால் பொறுக்கமுடியவில்லை,சிங்கள பேரினவாதத்தின் கொலைக்குற்றங்களை சனல்4 வெளியிட்டபோது மகிழ்ந்தவா்கள் இப்போது காட்டப்போவதை பொய் என்று நிரூபிக்க முனைவதையிட்டு வெட்கப்படுவதா வேதனைப்படுவதா.பிரபாகரன் இறந்தது உண்மை அந்த உண்மையான விடயத்தையே சனல்4 வெளியிடப்போகின்றது இதில் இனி மார்பில் அடித்துகதறுவதற்கு எதுவுமில்லை என்றே நான் கருதுகிறேன்.

    • tholkapiyan says:
      14 years ago

      உதுல உனக்கேன்டாப்பா மகிழ்ச்சி. துன்பம் நேர்கயில் யாழ் எடுத்து நீ எனக்கு இன்பம் சேர்க்க மாட்டாயா ?

      • chandran.raja says:
        14 years ago

        துன்பம் நேர்கையில் (மக்களுக்கு) சயினட் எடுத்து உயிரை மாய்காமல் இருந்தனையோ?. அறுதாலி பெற்ற பிள்ளைகள் தானே அழியட்டும் என்று காத்திருந்தாயோ??. இப்படி பார்க்கும் போது புலத்தில் அவசரநிதி சேர்த்து மக்கள்கடை வைத்தவர்களும் கள்ளக்கிறடிட் காட்யடித்து மில்லினர்கள் ஆனாவர்கள் மகா உத்தமர்கள் போலவே தெரிகிறது இந்த தே.தலைவரையும் விட. இவர்களே நாளைய அலிபாபாக்கள். இன்று “நாடுகடந்ததமிழீழம்” மட்டும் தான். இவர்களே ஒட்டுமொத்த இலங்கையும் அமெரிக்க-ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களுக்கு விலைபேசி விற்றுவிட்டார்கள். தே.தலைவர் விட்ட தொட்டகுறைகளை இவர்கள் இட்டு நிரப்புவார்கள்.

        • thols says:
          14 years ago

          எகாதிபத்தியகாரனோட ஊருல இருந்து விசுக்கியும் உறிஞிட்டு சயிட்டிஸ்க்கு சிக்குனும் சாப்பிட்டு சோஸலிசம் பேசுறாங்கடாப்பா சில பொறம்போக்குகள்

          • ராகவன் says:
            14 years ago

            விசுக்கி இல்லாத ஊரில இருந்து பேசிற புத்திசாலிகளை நம்புங்கப்பா

  7. .வரதன் { கஸ்ட்ரோ } says:
    14 years ago

    தமிழன் சொன்நாள் நாம்ப மாட்டிங்க சனல் 4 வ தான் நம்புவிங்களா

  8. மகேன் மாசில் says:
    14 years ago

    விடுதலை புலிகளின் கொள்கைபடி சரண்டைந்தவர்கள் துரோகிகள் எனவே அவர்கள் அடைந்தது வீரச்சாவு அல்ல. பிரபாகரன் மாவீரர் தினத்தில் வீரவணக்கம் செலுத்த தகுதியற்றவர் என்ற வகையில் அவருக்கு இதுவரையில் வணக்கம் செலுத்தாமையிட்டு யாரும் கவலைபடப்போவதில்லை. ஒருவேளை அதையும் மீறி 48 மணித்தியாலயத்தில் கொல்லப்பட்ட பிரபாகரனுக்கு வண்க்கம் செலுத்துவதற்காக இப்போதும் சித்திரவதைபடும் பொட்டு துரோகியாக்கபடலாம்.

  9. veeran says:
    14 years ago

    அவர் கொல்லப்பட்டார் என்று 2009 மே 19 ம் திகதியே தெரியும். பின்பு சனல் 4 சொன்னால் என்ன சொல்லாவிட்டால் என்ன,

  10. Ulakathamilar says:
    14 years ago

    பிரபாகரன் உயிருடன் இல்லை என்று சொல்பவர்கள் அனைவரும் தமிழ் இனத்தின் துரோகிகள். வருமானத்தை கெடுப்பவர்கள்.
    எத்தனை பேரடா கிளம்பி இருக்கிறியள். அந்தாள் எப்பவோ போட்டுது. நீங்கள் எனனண்டா அவர் வந்து விளையாட்டு காட்டுவார் என்கிறீர்கள்.
    மானம் கெளரவம் ரோசம் பணம் போனறவற்றிற்காக புத்தி இலலா தமிழரை பேக்காட்டி வாழுறதை விட பிசசை எடுக்கலாம.

  11. AAT says:
    14 years ago

    விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள் அனைவரும் இராணுவத்திடம் சரணடைந்த பின்பே கொல்லப்பட்டார்கள்.  பிரபாகரன் இராணுவத்திடம் சரணடைந்து அதன் பின் இராணுவ மரியாதைகளுடன் தங்க வைக்கப்பட்டிருந்த காலகட்டத்தில் தான் அவர் பாதுகாப்பாக வெளியேறி விட்டதாக புலிகள் நம்பிக் கொண்டிருந்தனர். 
    பிரபாகரனை சரணடைய வைப்பதற்கான தூண்டுதலை இந்திய மத்திய அரசின் சார்பிலும் ஐ.நா. வின் சார்பில் விஜய் நம்பியாரும் கொடுத்திருந்தனர். விஜய் நம்பியாருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கதைத்த பின் தான் பிரபாகரன் இராணுவத்திடம் சரணடைந்திருந்தார்.
    அதன் பின் இராணுவ மரியாதைகளுடன் அவர் கொழும்புக்கு கொண்டு வரப்பட்டார். அங்கு வைத்தே அவர் தனது மகன் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சரணடைவதற்கான உத்தரவை வழங்கினார். அப்பாவியான பிரபாகரனை வைத்தே ஏனையோர் சரணடைவதற்கான உத்தரவை சவேந்திர சில்வா அன்ட் கோ வழங்கியது. அதில் சரண் அடைந்தவர்களே கொல்லப்பட்டனர். அவர்கள் கொல்லப்பட்டதை இராணுவம் பிரபாகரனுக்கு மறைத்தது. 
    சவேந்திர சில்வா அதன் போது பக்கத்தில் இருந்தார். எனவே அவரிடம் முக்கிய தலைவர்களை சரணடையுமாறு கோரப்பட்டதுடன் அதற்காக அடுத்த சில விநாடிகளில் அவர் உடனடியாக முள்ளிவாய்க்காலுக்கு அனுப்பப்பட்டார்.
    பிரபாகரனின் செய்மதித் தொலைபேசி இன்னும் இராணுவத்தின் வசம் தான் உள்ளது. அதன் கடைசி அழைப்பு விபரங்களை பெற முடியுமாயின் இவை அனைத்தையும் நிரூபிக்கலாம்.
    பிரபாகரன் சரணடைந்த சில மணி நேரங்களில் இராணுவத்திடம் துவாரகா மற்றும் மதிவதனி, பாலச்சந்திரன் ஆகியோர் மே 17ம் திகதியே கொல்லப்பட்டு விட்டனர். 
    ஆனால் அவர்கள் சரணடைந்த விடயத்தை மறைத்த இராணுவம் அவர்கள் கண்ணிவெடியில் சிக்குண்டு இறந்ததாக அவரிடம் தெரிவித்து விடயத்தை மறைத்தது. அத்துடன் சார்ள்சும் சேர்த்தே கொல்லப்பட்டிருந்தார்.
    அதனை வைத்தே தன் பிள்ளைகள் இரண்டு பேரையும் நாட்டுக்காக தியாகம் செய்ததாக பிரபாகரன்  தனது முக்கிய தளபதிகளிடம் தெரிவித்திருந்தார்.
    பாலசந்திரன் நிலத்தில் தூக்கி அடிக்கப்பட்டு குற்றுயிரும் குலை உயிருமாக இருந்த சந்தர்ப்பத்திலும் மிருகத்தனமாக அந்த சின்னஞ்சிறு சிறுவன் துப்பாக்கியால் சுடப்பட்டான்.
    சார்ள்ஸ் இராணுவத்திடம் சரணடைந்த பின் உடனடியாக புகைப்படம் எடுக்கப்பட்டார். அவர் பாதுகாப்பாக இருப்பதாக விஜய் நம்பியாருக்குக் காட்டப்பட வேண்டும் என்றவுடன் அவர் சிரித்தவாறு புகைப்படத்துக்கு போஸ் கொடுத்தார். அதன் பின் அவர் கொல்லப்பட்டார். 
    இராணுவத்திடம் இருக்கும் சார்ள்சின் புகைப்படத்தில் அவர் அணிந்திருக்கும் அதே சட்டையுடன் சடலமாக அவர் இருப்பதே அதற்கான சாட்சியாகும்.
    இந்த கொடூரம் எனக்கு எப்படி தெரியும் என்பதை ஒரு நாள் நான் சொல்ல வாய்ப்புக்கள் வரும். பிரபாகரனை நம்புகின்றவன் நான் இல்லை. ஆனால் மற்றவர்களை காப்பாற்றும் நல்ல நோக்கத்துடனே தான் பிரபாகரன் சரணடைந்தார் என்பது எனக்கு தெரியும். மற்ற தலைவர்களையும் குடும்பம், சுற்றத்தவர் களை காப்பாற்றவே அவர் இதை செய்தார். இலங்கை ராணுவம் அவரை நயவஞ்சக தனமாக கொன்று விட்டது. இது பலருக்கு தெரியும். தமிழ் நாட்டில் இருக்கும் சிலரும், புலம் பெயர் நாட்டில் இருக்கும் பலரும் பிரபாகரனை சரணடையுமாறு தூண்டினர். அவர்கள் இலங்கை அரசுடன் நேரடியாகவும் மேசைக்கு கீழும் செயல்பட்டனர். பிரபாகரனால் கொடுக்கப்பட்ட பணத்தை சுருட்டிக்கொண்டு ஓடுவதே அவர்களின் தேவையாக இருந்தது. காலம் அனுமதித்தால் இன்னும் சில உண்மைகளை எழுதுவேன்.

    • chandran.raja says:
      14 years ago

      நீங்கள் சொல்வதில் பெருமளவு உண்மையிருக்கிறது. மறுக்கவில்லை.ஆனால் மற்றவர்களை காப்பாற்றும் நல்ல நோக்கத்திற்காக தான் பிரபாகரன் சரணடைந்தாகச் சொல்லுகிறீர்கள். இந்த மற்றவர்கள் என்பது யார்? தனது குடும்பமா? தனது தளபதிகளா?? அல்லது வன்னி விவசாயிகளா???…

      2009 மேமாதம் 15-16 திகதியளவில் புலிகள் அதிகாரம் செலுத்தும் இடம் 300 சதுரமீற்றர் அளவுக்கு குறிவிட்டது. மிகுதி எல்லாவற்றை புலிகள் இழந்துவிட்டார்கள். மற்றவர்களின் நன்மைக்காக சரண்யடைந்தார் என்றால்! நிச்சயம் அதில் அப்பாவிவன்னி மக்கள் அடங்கமாட்டார்கள்.

    • thamizhan says:
      14 years ago

      ஏ ரி ரி உமது கட்டுரையின் முடிவில் ” யாவும் கற்பனையெ ” என்று போட மறந்துவிட்டீரா :)- காலம் அனுமதித்தால் சில உண்மைகளை எழுதுவேன் என்கிறீர், அது காலம் ஆ , அல்லது காலன் ஆ :)- ஏன் இப்பொழுது உம்மை யார் கடத்தி வைத்து இருக்கிறார்கள். ஒரு வேளை கற்பனையை கடன் வேண்டநேரகாலம் தேவையோ? இந்தச் சம்பவங்களை சொல்ல ஒருநாள் எனக்கு வாய்ப்பு வரும் என் கிறீர், இதைவிட வேறு என்ன கற்பனைச் சம்பவத்தை சொல்லப் போகிறீர்.இப்பொது உம்மை யார் தடுத்தார்கள்? இவ்வள்வும் தெரிந்த உமக்கு ஏன் சில விடயங்கள் சரியாகத் தெரியாமல் போய் விட்டது. தலைவரின் துணைவியார் மே மாதம் 13 ஆம் திகதி செல் விழுந்து இறந்துவிட்டாரே.. இது தெரியாதா ,,அல்லது துவாரகா மே மாதம் 15 ஆம் திகதி முள்ளிவாய்க்காலின் ஒரு பகுதியில்நடந்த ஊடறுப்புத்தாக்குதலில் வீரமரணம் அடைந்து விட்டாரே… பாவம் இது ஏன் உமக்கு தெரியவில்லை, அதன் பின்பு மே 17 ஆம் திகதி தலைவரின் மகன்நந்திகடலின் ஊடாக ஊடறுப்புத்தாக்குதல் நடத்தி மறுகரை நோக்கி தரை இறங்கும் முயற்சி தோல்வி அடந்து அவெர்களது உடல்கள் இராணுவத்தால் கைப்பற்றப்படுகிறது.அதுவே பின்பு இராணுவத்தால் காட்சிக்கும் வைக்கப் படுகிறது. ஏதோ சண்டையைநின்று வழிநடத்தியவர் போலா பீலா விடாதேயும்.தலைவர் இறந்த உடலைக் கைப்பற்றிய சிங்கள்ம் தமக்கு ஏற்றவாறு அவெரது உடலைப் பயன்படுத்தி இருக்கிறது. அவ்வளவே.ஒரு காலகட்டத்தில் தலைவர் தான் இறந்தாலும் தனது உடல் இராணுவத்தால் கைப்பற்றக்கூடாது என்ற கொள்கையை கொண்டு இருந்தார். ஆனால் முள்ளிவாய்க்காலில் அந்த முடிவை அவர் எடுக்கவில்லை. காரணம் அவெரது உடல் இறந்தும் கிடைக்காமால் போய் இருந்தால் இன்றும் சரணடைந்த சுமார் 12 ஆயிரம் போராளிகள் விடுதலை அடந்து இருக்க மாட்டார்கள். தமிழர்கள் இடத்தில் இன்றும் ராணுவம் பிரபாகரனைத் தேடிக்கொண் டே இருக்கும் , அதாவது இன்னு மோசமாக தமிழை இராணுவம் துன்புறுத்திக்கொண்டே இருந்திருக்கும். சர்வதேசமும் சிங்கள்ம் மீது எந்தவிதமானநடவடிக்கைகளையும்நிச்சயம் எடுத்திருக்கமாட்டாது. முகாமில் இருந்த லட்சக்கணக்காக மக்களும் விடுதலை அடைந்து இருக்க மாட்டார்கள்: தலைவரைத் தேடித் தேடியே சிங்களம் தமிழரை இன்னும் இன்னும் கொடுமைப்படுத்தி இருக்கும். இன்று ஜெனிவாவில் கூட இப்படி ஒரு பிரேரணை நிச்சயம் வந்திருக்கது. முதலில் பிரபாகரன் மீது போர்க்குற்ற விசாரணைநடத்த வேண்டும் என்று உலகமும், சிறிலங்காவும் தேடிக்கொண்டே இருந்திருக்கும். இவ்வளவு பிரச்சனைகளுக்கும் ஒரே ஒரு முற்றுப்புள்ளி வைக்கவே தேசியத் தலைவர் , தான் வீரமரணம் அடந்த பிறகும் தனது உடல் எரிக்கவோ, புதைக்கவோ படக் கூடாது என்று உறுதிபடத் தெரிவித்து விட்டார். அவெரது அருகினில் புலிகளதும், சிங்களதும் தேசிய அடையாள அட்டைகள் , மற்றும் அவர் எப்போதும் வைத்திருக்கும் கைத்துப்பாக்கி என்று தன்னை அடையாளப்படுத்தும் அனைத்தையும் அவர்விட்டு வைத்து இருந்தார்.

      • மகேன் மாசில் says:
        14 years ago

        என்னே தீர்க்க தரிசன்ம் அப்படியே புல்லரித்து போய்விட்டது. தமிழன் தமிழந்தான்.

    • மகேன் மாசில் says:
      14 years ago

      கிளிநொச்சி வீழ்ச்சியின்போது சரணடைந்திருந்தால் மக்களை காப்பாற்ற என்று நம்பலாம் மே 16 அந்த பகுதியில் யார் இருந்தார்கள். 300 என்ற ஆங்கிலப்படத்தில் வருவதுபோல் அனைவரும் சாகவே விரும்பியிருக்கின்றனர். அப்படத்தினை தமிழில் டப் செய்து அனைத்து போராளிகளையும் பார்க்கும்படி கட்டளை இடப்பட்டது. எப்படிபட்ட ஒரு மாங்காய் மடையனை நம்பி எமது போராட்டம் சென்றிருக்கிறது.

    • PULI THEVAN says:
      14 years ago

      The two photographs of Charles Anthony released by the Sri Lankan government (one showing him dead, and one showing him alive) are wearing the exact same clothes. In the living photo he is wearing the same shirt that he was killed in. It appears they took this photo after he was arrested, just before executing him. Please see the photos below:

      Please note that there has never been a recent photo available with the Sri Lankan government showing Charles Anthony until the day they recovered his dead body. What is the chance of this? In all of the other reports they released over the last several weeks they have been showing very old photos of him in LTTE uniform, which were clearly taken several years ago. But the day they find his dead body (with a bullet wound directly in the head), they also release a new photo of him which perfectly matches his present looks, and is wearing the exact same clothes as when he was killed. The hair and mustache is even cut to the exact same size and shape. It is clear this photo was taken just hours before he was cruelly executed by the Sri Lankan army with a shot to his head.

      PLEASE CLICK THE LINK BELOW TO SEE THOSE PICTURES

      http://puligal.blogspot.com/2009_05_01_archive.html

  12. alagu says:
    14 years ago

    பிரபாகரன் சரண்டைந்திருப்பார் என  நான்  நம்பவில்லை.  பழகியவர்களுக்கு தெரியும் அப்பாவியான முட்டாள். பயந்த சுபாவம் உடையவர். யாரையும் நம்புவதில்லை. சந்த்தேகம்  வந்தாதல்  போட்டுத் தள்ளுவார். அவரை  சுத்தி இருந்தவர்கள்  அவரை  தலைவனாக்கி  அழகுபாத்து  நன்றாக சம்பாதித்து கொண்டார்கள். கடைசியில் காட்டி கொடுத்துவிட்டு  தலைவர் இருகிரார் எங்கிறார்கள்.  அவ்வளவுதான். முழு தமிழ்  இனத்தையே ஆட்டிப்படைக்கும் இவர்கள்  தெருவுக்கு வர வேண்டும்.

  13.   நக்கீரர் says:
    14 years ago

    ஆயிரக்கணக்கில் கொன்றால் அவன் பாசிஸ்ட்(மகா கொலைகாரன்) ஆனால் லட்சக்கணக்கானவர்களை கொன்று குவித்தால் கொள்கைக்காரன். ஆகா இதுவல்லவா நியாயம்?

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Loading Comments...