புலம்பெயர் நாடுகளிலிருக்கும் சிறிய குழுக்கள் மக்கள் மீது கஜேந்திரகுமார் என்ற தமது முகவர் ஊடாகத் திணிக்க முயன்ற பிழைப்புவாத அரசியல் படுதோல்வியடைந்துள்ளது. பேரினவாதக் கட்சிகளின் அடியாள் அமைப்புப் போன்று செயற்படும் டக்ளஸ் தேவாந்தாவின் கட்சிக்குக் கிடைத்த வாக்குகள் கூட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்ற போலிப் பெயரில் போட்டியிட்ட அகில இலங்கைத் தமிழ் காங்கிரசிற்குக் கிடைக்கவில்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளரான சுமந்திரனை துரோகியாக்கிப் பிரச்சாரம் மேற்கொண்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நூற்றுக்கணக்கான பொதுக்கூட்டங்களை வடக்குக் கிழக்கில் நடத்தியது. இணைய ஊடகங்கள் ஊடாகவும், சமூக வலைத் தளங்கள் ஊடாகவும் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. பிரித்தனியா, கனடா, உட்பட பல நாடுகளில் திரட்டப்பட்ட பெரும் பணச் செலவில் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன.
புலம்பெயர் நாடுகளின் தேசியப் பிழைப்புவாதிகள் தயாரித்த அரசியல் பண்டம் தமிழர்கள் மத்தியில் விற்பனையாகவில்லை.
இந்த நிராகரிப்பு சுயநிர்ணைய உரிமைக்கான போராட்டத்தை மக்கள் நிராகரித்தாகவோ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மக்கள் அங்கீகரித்ததாகவோ பொருள் படாது. பிரபாகரனின் பெயராலும், புலிகளின் பெயராலும் நடத்தப்படும் பிழைப்புவாத அரசியலுக்கு மக்கள் வழங்கிய நெத்தியடி மட்டுமே.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் அது சார்ந்த அதிகாரவர்க்கத்திற்கும் எதிரான அரசியலை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் முன்வைக்க முடியது என்பது நிறுவப்பட்டுள்ளது. அதே வேளை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் புலம்பெயர் பினாமிகளும் சுயநிர்ணைய உரிமக்கான போராட்டத்திலிருந்து ஓய்வு பெற்றுக்கொள்ள வேண்டிய காலம் இப்போது வந்தாகிவிட்டது.
2009 ஆண்டு இத்தாலியில் தோற்றுவிக்கப்பட்ட பணச் செலவற்ற இயக்கம் இத்தாலி(The Five Star Movement zero cost politics Italy) முழுவதையும் இன்று ஆளுமை செய்கிறது. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் அவரின் புலம் பெயர் முதலீட்டாளர்களின் வெற்று முழக்கங்களை நிராகரித்து கடந்த காலப் போராட்டத் தவறுகளிலிருந்து கற்றுக்கொண்டு உலக மக்களின் ஆதரவோடு நடத்தப்படும் புதிய போராட்ட சூழலை தோற்றுவிப்பதற்கான வெளி இன்று தோன்றியுள்ளது. சுயநிர்ணைய உரிமைக்கான போராட்டத்திற்கான அரசியலை முன்வைப்பதற்கான இந்த வெளி இன்று பயன்படுத்தப்பட வேண்டும்.
Now is the time we as Tamils should stay focused. Mr. Ponnampalam is guilty of deceit and deception and trying to confuse the issues for personal gain. He should be kept out of politics at all costs.
In short he tried to reinvent the wheel and came with a hexagon.