Wednesday, June 17, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

பிரபாகரனின் தாயார் திருப்பி அனுப்பப்பட கருணாநிதியே காரணம்- நெடுமாறன் கடும் கண்டனம்.

இனியொரு... by இனியொரு...
04/17/2010
in இன்றைய செய்திகள்
0 0
11
Home இன்றைய செய்திகள்

பக்கவாத நோயால் பாதிக்கப்படுள்ள புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தயார் மேலேஷியாவில் இருந்து சிகிச்சைக்காக சென்னை வந்த போது சென்னை விமானநிலைய அதிகாரிகள் அவரை விமானத்தில் இருந்து கூட இறங்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்பிவிட்டனர். முறையாக ஆறு மாதகால சிகிச்சை பெற்று உடலநலமும் மன நலமும் குன்றிய நிலையில் வந்தவரை இரக்கமற்ற முறையில் நடத்திய சென்னை அதிகாரிகளுக்கு எதிராகவும் இந்திய அரசுக்கு எதிராகவும் மத்திய அரசுக்கு எதிராகவும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாக பழ.நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கை, ’’ பிரபாகரன் அவர்களைப் பெற்ற தாயார் பார்வதி அம்மையார் உடல் நலம் குன்றிய நிலையில் மருத்துவ சிகிட்சைப் பெறுவதற்காக மலேசியாவில் உள்ள இந்திய தூதுவர் அலுவலகத்தில் முறைப்படி விண்ணப்பித்து ஆறு மாத காலத்திற்கு விசா பெற்று இந்தியாவுக்கு இன்று (16#ஏப்ரல்#2010) இரவு 10:45 மணிக்கு விமானத்தில் வந்தார். படுத்தப் படுக்கையில் பயணம் செய்த அவருக்குத் துணையாக ஒரு பெண்ணும் வந்தார். அவர்கள் இருவரும் விமானத்தை விட்டுக் கூட இறங்க அனுமதிக்கப்படாமல் வந்த விமானத்திலேயே திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார்கள். கிட்டத்தட்ட 80 வயதை எட்டிவிட்ட மூதாட்டி அவர். ஏற்கெனவே பக்க வாதத்தினால் பாதிக்கப்பட்டவர். இத்துடன் தனது கணவரை இழந்த பெரும் சோகத்திற்கு ஆளானவர். சிங்களச் சிறையில் கணவரோடு பல மாதங்கள் அடைக்கப்பட்டு பல் வேறு கொடுமைகளுக்கு ஆளாகி உளவியல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டவர். பெரும்பாலான நேரங்களில் சுய நினைவை இழந்த நிலையிலே இருப்பவர். சிகிட்சைக்காக அவர் இங்கு வருவதைத் தடுத்துத் திருப்பி அனுப்பியதைப் போன்ற மனித நேயமற்ற கொடுமை வேறு இருக்க முடியாது. இந்திய அரசு ஆறு மாத காலத்திற்குரிய விசாவை இன்று காலையில்தான் அவருக்குஅளித்துள்ளது. ஆனால் அவர் சென்னையில் வந்து இறங்கியவுடன் இரவோடு இரவாக அவரைத் திருப்பி அனுப்பியதற்கு யார் காரணம்? அவர் வருவதை இந்திய அரசு விரும்பவில்லை என்றுச் சொன்னால் விசா வழங்காமலேயே இருந்திருக்க வேண்டும். காலையில் விசா வழங்கிவிட்டு இரவில் திருப்பி அனுப்புவது என்பது அடாத செயலாகும். மீண்டும் ஒரு நீண்ட பயணத்தை மேற்கொள்ளுவதன் மூலம் அவருக்கு ஏதேனும் நேருமானால் அதற்கு தமிழக முதலமைச்சர் கருணாநிதியும் இந்திய அரசுமே பொறுப்பாவார்கள். அவர்களை வரவேற்று அழைத்துச் செல்ல நானும் வைகோ அவர்களும் சென்றிருந்தோம். அவர் வருகையை நாங்கள் யாருக்கும் தெரிவிக்கவில்லை. அவரது உடல்நலம் மட்டுமே எங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டது. வெளியில் தெரிந்தால் கூட்டம் கூடும். அது அவரது உடல் நலனுக்குக் கேடாக முடியும் என்ற காரணத்தினால் அவர் வருகையை வெளியிடவில்லை.விமான நிலையத்திற்கு வைகோவும் நானும் சென்ற போது நாங்கள் வருவதற்கு முன்பே அங்கு குவிக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான காவல் படையினர் பாய்ந்தோடி வந்து எங்களை வழிமறித்துத் தடுத்தார்கள். விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப்பட்ட எல்லை வரை நாங்கள் செல்வதற்குரிய அனுமதிச் சீட்டுகள் எங்களிடம் இருந்தன. ஆனால் எங்களைப் பிடிவாதமாக அனுமதிக்க மறுத்து பிடித்துத் தள்ளும் அளவிற்கு காவல்துறையினர் அட்டூழியம் புரிந்தனர். தொடர்ந்த தள்ளு முள்ளுக்கு நடுவேதான் நாங்கள் விமான நிலையத்தின் பார்வையாளர் பகுதியையே அடைய முடிந்தது. விமான நிலையத்தில் தனியான பாதுகாப்புப் படையினர் இருக்கிறார்கள். ஆனால் சென்னை புறநகர் காவல்படையினர் அத்து மீறி செயல்பட்டு எங்களைத் தடுத்தார்கள். முதலமைச்சர் கருணாநிதிக்குத் தெரியாமல் இது ஒரு போதும் நடந்திருக்க முடியாது. இந்திய அரசு விசா வழங்கிய பிறகு கருணாநிதியின் வற்புறுத்தலின் பேரிலேயே பார்வதி அம்மையார் திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார். இரக்கமற்ற இந்த கொடிய செயலுக்கு அவரே முழுமையான பொறுப்பாளி ஆவார். உலகத் தமிழர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தேசியத் தலைவரான பிரபாகரன் அவர்களைப் பெற்றெடுத்தத் தாயாரை, தாய் தமிழகத்தை உரிமையோடு நம்பி வந்த தமிழ் மகளை கொஞ்சமும் இரக்கமில்லாமல் விரட்டியடித்த கருணாநிதியை உலகத் தமிழர்கள் ஒரு போதும் மன்னிக்க மாட்டார்கள்.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

மத்திய கேபினெட் அமைச்சர் மு.க அழகிரி மாலத்தீவுகளில் நண்பர்களுடன் உல்லாசம்.

Comments 11

  1. ஹரி says:
    16 years ago

    உலகின் அனைத்து இடங்களிலும் வாழும் தமிழா,

    தமிழ்நாடு உன் வீடல்ல, இங்கு தமிழனாய் வாழ்வது கூட குற்றம். வராதே தமிழகத்திற்கு, வந்து நீயும் மானங்கெட்டு போகாதே. நாங்கள் மட்டும் போதும் மானம், மரியாதை இழந்து சோரம் போய் வாழும் நிலைமை எங்களுக்கு மட்டும் போதும்.

  2. அருள் says:
    16 years ago

    “இந்திய அரசு விசா அனுமதி அளித்திருந்தது. ஆனால் தமிழக அரசின் காவல்துறை திருப்பி அனுப்பியது.”
    இது கருணாநிதியும் சோனியாவும் சேர்ந்து நடத்தும் நாடகம். கருணாநிதியின் நன்றியுணர்சியைக் காட்ட கிடைத்த பகடைக் காயா தேசியத்தலைவரின் தாய். வெட்கக் கேடு. 
    வாழ்க வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு. வாழ்க தி,மு.க அரசின் வீரம்.
    “நெஞ்சில் உரமுமின்றி நேர்மை திரமுமின்றிவஞ்சனை செய்வாரடி கிளியே அவர் வாய் சொல்லில் வீரரடி”

  3. டி.அருள்செழியன் says:
    16 years ago

    தமிழுக்காகவும் தமிழர்களுக்காகவும் வாழ்ந்து வரலாறாகிவிட்ட ஒரே தமிழினத்தலைவர்-மாவீரன் பிராபகரன்.அவரது தாயாரை நெடுமாறனும் வைகோவும்,ரகசியமாக அழைத்துவரச் சென்றது ஏன்..?திருமாவளவன் மருத்துவர் ராமதாஸ் போன்றவர்களையும் உடன் அழைத்துச் சென்றிருக்கலாமே.?திருமாவளவன் பாராளுமன்ற உறுப்பினராக இருப்பதால் விமானநிலையத்தின் உள்ளேவரைப்போய் பிரச்சனை பண்ணியிருப்பாரே.’ஏட்டய்யாகூடவெல்லாம்’ மல்லுக்கு நிற்கிற நிலமையில் இப்ப அவர் இல்லையே.’எங்கே திருமா பேரைத்தட்டிக் கொண்டு போய் விடுவாரோ?’ என்று இவர்கள் இருவரும் செயல்பட்ட மாதிரி தானே இது இருக்கிறது.சரி போகட்டும் மலேசியாவிலிருந்து தலைவரின் தாயாருடன் விமானம் கிளம்பியதும் உடனடியாக இதர தமிழ் அமைப்புகளுக்கும் மீடியாவுக்கும் சொல்லியிருந்தால்கூட டிவி பிளாஷ் செய்திகளைப்பார்த்து விமானத்தளத்திற்கு பெரும் கூட்டம் வந்திருக்குமே.இரவு நேரம் சென்னை விமானநிலையத்தில் படுத்த படுக்கையாய் இருக்கும் தமிழினத்தலைவரின் தாயார் தமிழகத்துக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த நேரத்தில், வெளியே திரண்டிருக்கும் பெரும் கூட்டம் ஆர்பாட்டம் போராட்டம் என்று இறங்கியிருந்தால்,மீடியாக்களின் நேரலைகளில் இதல்லாம் ஒளிபரப்பியிருக்குமே. இது சிலாண்டுகளுக்குமுன்பு கலைஞர் நள்ளிரவில் கைதுசெய்யப்பட்டபோது ஏற்பட்டதுபோன்ற பதட்டத்தையும் அனுதாபத்தையும் தமிழகமெங்கும்(உலகமெங்குமுள்ள தமிழர்களிடமும்).ஏற்படுத்தியிருக்குமே.ஆனல் விஷயத்தை ரகசியமாக வைத்து எல்லாவற்றையும் சொதப்பிவிட்டு இப்போது கூச்சல் போடுவதில் என்ன பயன்.

    நெடுமாறனும் வைகோவும் இன்னும் பலரும் பல்வேறு காரணங்களுக்காக மாவீரன் பிரபாகரனின் மரணத்தையே இன்னும் அங்கீகரிக்காமல் ‘இன்னும் அவர் வருவார் வழிநடத்துவார்’ என்று கதைவிட்டுக் கொண்டிருப்பதை நிறுத்திவிட்டு தலைவரின் மரணத்தை அங்கீகரித்து,அவருக்கு உரிய மரியாதையை செய்லுத்திவிட்டு அவரது கனவை நனவாக்கும் ஈழப்போரை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த முன்வரவேண்டும்.அதுவே ஈழப்போருக்கு இவர்கள் செய்யும் பெரும் உதவியாகும்.அதை விட்டுவிட்டு ‘பிரபாகரன் மீண்டும் வருவார்’ என்பது ஈழப்போராட்டத்தை நீர்த்துப் போகச்செய்துவிடுவதோடு தலைவர் பிராபாகரனுக்கு செய்யும் பெரிய துரோகமாகும்.

  4. Solomon Abdulha says:
    16 years ago

    பெற்ற பிள்ளைகளின் பாவம் சும்மா விடாது ….எத்தனை தாய்மாரின் பத்துவா ..சும்மா போகாது…அதுசரி …பார்வதி என்ற இந்திய அகதி முகாமில் இருந்த இலங்கை பெண் கற்பழிக்கப்பட்டு ,அவமானத்தால் தற்கொலை செய்துகொண்டு கருகிபோனே பொது இந்த தமிழ் வீரர்கள் எங்கே போனார்கள்

  5. thura says:
    16 years ago

    தமிழ் தமிழ் என்று சொல்லி தமிழனையே ஏமார்றுவோர், உலகினை
    ஏமாற்ரமுடியாது.

    கொடூரக்கொலைகாரனை தமிழ் மொழிப்பற்ராளர் என வேசம்போட்டவர்கள், தங்கள்
    அரசியல்

    லாபத்திற்கா தமிழர் தலைவனாக்கினார்கள். இதனால் முள்ளிவாய்க்காலில் தமிழரை
    சிங்கள இராணுவத்திற்கு பலிகொடுத்தாவ்து புலிகளை காக்க முயனறவர்களதான் நெடுமாறனும்
    வைக்கோவும். இப்போ தாயார்மீது பாசம் உள்ளவர்க்ளாக் காட்டி புலத்தில் வாழும்
    புலிகளிடம்
    நன்மதிப்பை எதிர்பார்க்கின்றார்கள்.

    துரை

  6. alex.eravi@gmail.com says:
    16 years ago

    பிரபா தாயார்- கருணாநிதி விளக்கம்:
    விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயார் பா‌ர்வ‌தி அ‌ம்மா‌ள் த‌மிழக‌த்தி‌ல் ‌சி‌கி‌‌ச்சை பெ‌ற ‌விரு‌ம்‌பினா‌ல் அக்கோரிக்கையினை ப‌ரி‌‌‌‌சீலனை செ‌ய்து ம‌‌‌த்‌திய அரசு‌க்கு ப‌‌ரி‌ந்துரை செ‌ய்ய‌ தமது அரசு தயாராக இருக்கிறது என தமிழக முதல்வர் மு. கருணாநிதி தெரிவித்திருக்கிறார்.
    கடந்த வெள்ளியன்றிரவு பார்வதியம்மாள் மலேசியாவில் இருந்து சென்னை வந்தபோது, குடியேற்றத்துறை அதிகாரிகளால் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அவர் மீண்டும் மலேசியாவுக்குத் திருப்பியனுப்பப்பட்ட சம்பவம் குறித்து இன்று தமிழக சட்டமன்றத்தில் எழுப்பப்பட்டது.

    விவாதத்திற்கு பதிலளித்துப் பேசிய முதல்வர் கருணாநிதி, பார்வதியம்மாள் திருப்பி அனுப்பப்பட்டதற்கும் தமிழக அரசுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லையென்றும், அது முழுக்க முழுக்க மத்திய அரசு தொடர்பான பிரச்சினையென்றும் கூறினார்.

    செய்தித் தாள்கள் மூலமாக மறு நாள்தான் தனக்கு முழுவிவரம் கிடைத்ததாகச் சொன்ன அவர், வேறொரு இடத்தில் இரவு 12 மணிக்கு தகவல் கிடைத்ததாகவும், உடனே விமான நிலைய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது அதற்குள் பார்வதியம்மாள் திருப்பி அனுப்பப்பட்டு விட்டதாகத் தனக்கு சொல்லப்பட்டதாகவும் தெரிவித்தார்.

    முதல்வர் கருணாநிதி
    தவிரவும் பிரபாகரனின் பெற்றோர்கள் திருச்சியிலிருந்து இலங்கை திரும்பியிருந்த நிலையில், 2003 ஆம் அண்டு மே மாதத்தில், அப்போதைய அ. இ அதிமுக அரசு, அவர்களுக்கும் தமிழர் தேசிய இயக்கம் உள்ளிட்ட பல அமைப்புக்களுக்கும் இருந்த தொடர்பின் காரணமாக அவர்கள் மீண்டும் இந்தியா வர அனுமதிக்கப்படக்கூடாது என்று கூறி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்ததையும் கருணாநிதி நினைவு கூர்ந்தார்.

    ஆயினுங்கூட பார்வதி அம்மாள் விரும்பினால், அவர் இங்கே சிகிச்சை பெற அனுமதிக்குமாறு மத்திய அரசை கேட்டுக்கொள்ளத் தயார் என்றும் முதல்வர் கூறினார்.

    ஏறத்தாழ அனைத்து கட்சிகளுமே பார்வதியம்மாள் சிகிச்சைக்காக இந்தியா வர அனுமதிக்கப்படவேண்டும் எனக் கோரினர். காங்கிரஸ் சார்பில் பேசியவர்களும் திருப்பி அனுப்பப்பட்டது நியாயம்தான் என வாதிட்டாலும், அவர் இங்கே சிகிச்சை பெறுவதில் தங்களுக்கு ஆட்சேபணை இல்லை என்றனர்.

    இதனிடையே நாடாளுமன்றத்தில் பார்வதிஅம்மாள் திருப்பி அனுப்பப்பட்ட பிரச்சினை திமுகவாலேயே எழுப்பப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன.

    முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பாலு பார்வதி அம்மாள் பிரச்சினை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டுவரப்படவில்லை, தவிரவும் குற்றப் பின்னணி இல்லாத அவருக்கு, மருத்துவ சிகிச்சைக்காக விசா வழங்கப்பட்டும் அவர் திருப்பி அனுப்பப்பட்டது ஏன் என்று வினவினார்.

    2003ல் அன்றைய அ இ அதிமுக அரசு பிரபாகரனின் பெற்றோர் மறுபடி இந்தியா வர அனுமதிக்கப்படக்கூடாது என்று கடிதம் எழுதியது என்றபோது அ இஅதிமுகவினர், அந்நேரத்தில் திமுக மௌனமாயிருந்ததேன் என்று வினவினர். – BBC

    • JAMES FRIEDRICH says:
      16 years ago

      “ருவாண்டா படுகொலைக்கு” /Both Germany (before World War I) and Belgium ruled the area in a colonial capacity. The Germans, like the Belgians before them, theorized that the Tutsi were originally not from sub-Saharan Africa at all. They thought that they had migrated from somewhere else. The German colonial government gave special status to the Tutsi, in part because they believed them to possess racial superiority. The Germans considered the Tutsi more ‘presentable’ compared to the Hutu, whom they viewed as short and homely. As a result, it became colonial policy that only Tutsis could be educated, and only Tutsis could participate in the colonial government. Since the Hutus were in the majority such policies engendered some intense hostility between the groups, who had been peaceful enough with each other before colonization[citation needed]. The situation was exacerbated when the Belgians assumed control following World War I. Recognizing their ignorance of this part of Africa, they sought advice from the Germans, who told them to continue promoting the Tutsis, which they did.
      When the Belgians took over the colony in 1916, they felt that the colony would be better governed if they continued to classify the different races in a hierarchical form. Belgian colonists viewed Africans in general as children who needed to be guided, but noted the Tutsi to be the ruling culture in Rwanda-Burundi. In 1959 Belgium reversed its stance and allowed the majority Hutu to assume control of the government through universal elections.
      / இது காரணம்!.

      இலங்கையின் “முள்ளிய வாய்க்கால் படுகொலைக்கு” /Colonel Henry Steel Olcott (August 2, 1832 – February 17, 1907) was a military officer, journalist, lawyer and the co-founder and first President of the Theosophical Society.

      He was the first well-known person of European ancestry to make a formal conversion to Buddhism. His subsequent actions as president of the Theosophical Society helped create a renaissance in the study of Buddhism. He is still honored in Sri Lanka today for these efforts. He is considered a Buddhist modernist for his efforts in interpreting(சுய திரிபு) Buddhism through a Westernized lens(சமூக கண்ணாடி) .

      Olcott has been called by Sri Lankans “one of the heroes in the struggle of our independence and a pioneer of the present religious, national and cultural revival.” More ardent admirers have claimed that Olcott as a Bodhisattva.
      / இது காரணம்!.

    • Garammasala says:
      16 years ago

      கேள்விகள் எல்லாவற்றுக்குமான சரியான விடை:
      “துட்டுக்கு இரண்டு கொட்டைப் பாக்கு”

  7. xxx says:
    16 years ago

    பார்வதி அம்மாள் அனுமதிக்கப் பட்டாலும் படாவிட்டலும் இதுவரை விடுதலைப் புலிகளைக் காட்டிப் பிழைப்பு நடத்தி வந்த கோபாலசமி,நெடுமாறன், திருமாவளவன், ராமதாஸ் ஆகியோருக்கு அதில் அரசியல் ஆதாயம் தான்.
    பேச ஒரு விடயம் கிடைத்துவிட்டது. விடுவார்களா? சம்பந்தப் பட்டோர் ஒரு சமூகமாக இருந்தாலென்ன, தனிமனிதராயிருந்தாலென்ன, பிழைப்பு பிழப்புத்தான்.
    கருணாநிதி எதிர்க் கட்சியில் இருந்தால் இந்தக் கூட்டத்தை விட வன்மையாக இம் மனிதாபிமானமற்ற முடிவை எதிர்த்திருப்பார். எல்லா முடிவுகளும் டில்லியிலல்லவா எடுக்கப்படவேண்டியுள்ளன.

  8. Raj says:
    16 years ago

    வை கோ உம் திருமாவும் முல்லிவாய்க்காலில் நிக்க வில்லையே என்ரு தான் கவலை.

    • Garammasala says:
      16 years ago

      தயவு செய்து இப்படியெல்லாம் ஆசைப் படாதீர்கள்.
      அவர்கள் நின்று 40000இல் இருவராகி அல்லது 300000இல் இருவராகியிருந்த்தால் அதை வைத்தே தமிழ்நாட்டில் எவ்வளவு அரசியல் றீல் விடப்பட்டிருக்கும்! யோசித்துப் பாருங்கள்.
      “பிரபாகரன் மீன்டும் வருபவார்” தொடரில்நடந்த்திருக்கக் கூடியவற்றைக் கற்பனை செய்து பாருங்கள்!

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

விஜய் vs சீமான்  vs பொடெமோஸ் : 9% : 10% : 20%

05/02/2026
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

04/28/2026

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In