Thursday, April 23, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result
Indian News | SriLankan Tamil News | Articles |
No Result
View All Result

பாசிசத்தை வீழ்த்திய 60ஆம் ஆண்டு : என். குணசேகரன்

இனியொரு... by இனியொரு...
09/21/2008
in அரசியல்
0 0
0
Home அரசியல்

வரலாற்றில் சில அத்தியாயங்கள் மறக்கக் கூடாதவை. மனிதகுலம் புத்தெழுச்சி பெற்றிடவும், சரியான படிப்பினைகளை தனது அறிவுச் சொத்தாக்கி, பாதுகாக்கவும் வரலாற்றில் சில நிகழ்வுகளை மீண்டும் மீண்டும் நினைவுறுத்திக் கொள்ள வேண்டும்.அத்தகு மகத்தானதோர் வரலாற்று நிகழ்வு பாசிசத்தின் வீழ்ச்சி. அந்த வீழ்ச்சியோடு முடிவுக்கு வந்த இரண்டாம் உலகப் போர். இந்தச் சாதனையை நிகழ்த்தி மனித இனத்தையே காப்பாற்றி வீரகாவியம் நிகழ்த்தியது, சோவியத் யூனியன். அந்நாட்டு ராணுவமான செஞ்சேனைக்கு உலகம் நன்றிக்கடன் பட்டுள்ளது.

இரண்டாம் உலகப் போர் நிகழ்த்திய நாசமும், அழிவும் சொல்லில் அடங்காது. போரில் லட்சக்கணக்கானோர் மடிந்து போயினர். மனிதன் அதுகாறும் சாதித்த அனைத்தின் மீதும் உலகந்தழுவிய அளவில் அழிவு தாண்டவமாடியது. உயிரோடு அன்று வாழ்ந்து வந்த கோடிக்கணக்கான மக்களும் சொல்லொணத் துன்ப துயரங்களுக்கு ஆளாயினர்.போர் எவ்வளவு கொடூரமானது என்பதும், அதை எந்த வகையிலாவது தவிர்க்க வேண்டும் என்பதும் இரண்டாம் உலகப் போரின் பேரழிவு நமக்கு எடுத்துரைக்கும் எச்சரிக்கை.எண்ணற்ற துயரங்களுக்கு இடையில் அன்றைய சோவியத் மக்களும், செஞ்சேனையும், பாசிசத்தை வீழ்ச்சி அடையச் செய்தனர். இது ஒருநாடு பெற்ற வெற்றி என்பதாகக் கருதிடக் கூடாது. சோசலிசம் எனும் தத்துவம் உலக மக்களை அடிமைத்தனம், சுரண்டல் ஆகியவற்றிலிருந்து மீட்டு உண்மையான சுதந்திரத்தை கொண்டு வர எத்தகு தியாகத்தையும் செய்திடவல்ல மேன்மையான தத்துவம் என்பதையே இந்த வெற்றி எடுத்துக்காட்டுகிறது.ஏனெனில், பாசிசம் மனித இனத்தின் சுதந்திர வேட்கையை முற்றாக ஒழிக்க முயன்றது. ஆக்கிரமிப்புப் போர்களை நடத்தி, நாடுகளையும் மக்களையும் தனது அடக்குமுறை ஆட்சியின் கீழ் கொண்டு வந்தது. தனது மேலாதிக்கத்தை நிலைநிறுத்த உலகமே அழிந்து போனாலும் அழியட்டும் என்ற வெறியோடு பாசிசவாதிகள் செயல்பட்டனர்.பாசிச வீழ்ச்சிக்குப் பின், மகத்தான சரித்திர மாற்றங்கள் நிகழ்ந்தன. இவையும் இந்த நிகழ்வின் மகத்துவம். காலனி ஆதிக்கம் உடைக்கப்பட்டு அடிமை நாடுகள் விடுதலை பெற்றன. பல ஐரோப்பிய நாடுகள் சுதந்திரக்காற்றை சுவாசித்தன.

சீனா, வியட்நாம், வடகொரியா ஆகியன ஆக்கிரமிப்பு சக்திகளிடமிருந்து விடுதலையாகி சோசலிச பாதையை தேர்ந்தெடுத்தன. இந்தியா உள்பட பல ஆசிய ஆப்பிரிக்க நாடுகளுக்கு விடுதலை கிட்டியது.1945, மே 9ஆம் நாள்தான் இந்த வெற்றி முழுமையடைந்த தினம். சோவியத் செஞ்சேனை ஜெர்மனியில் நுழைந்து, ஜெர்மானிய பாராளுமன்றமான ரீச்°டாக் மீது வெற்றிக் கொடியை ஏற்றியது.இந்த மகத்தான தருணத்தை, ஜெர்மனியில் அன்று வாழ்ந்த எழுத்தாளர் தாம° மான் எழுதினார்.“இந்த மணித்துளிகள் வெற்றி பெற்றவர்களுக்கு மட்டுமல்ல, ஜெர்மானியர்களுக்கே மெய்சிலிர்க்க வைக்கும் நேரம் ஆகும். கொடூர மிருகமான (பாசிச) டிராகன் வீழ்ந்தது”“‘தேசிய சோசலிசம்’ என்ற பெயரில் அனைவரையும் நடுங்கிட ஒடுங்கிடச் செய்த பூதம், கடைசியாக ஒழிந்தது. இட்லர் நாடு என்ற இழிச் சின்னத்தை எறிந்து விட்டு, ஜெர்மனி அதிலிருந்து மீண்டது.”முதல் உலகப் போர் முடிந்த பிறகு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் போரில் தோல்வியடைந்த ஜெர்மனியை வெர்செய்ல்° உடன்படிக்கை எனும் ஒப்பந்தத்திற்கு இணங்கச் செய்தனர். இது ராணுவம் மற்றும் பொருளாதார ரீதியாக கடும் நிபந்தனைகளை விதித்து ஜெர்மானிய மக்களை வாட்டிடும் வகையில் அமைந்தது. கிட்டத்தட்ட 300 கோடி டாலர் அளவிற்கு நஷ்ட ஈடாக ஜெர்மனி, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு நஷ்ட ஈடாக கொடுக்க வேண்டுமென வலியுறுத்தினர்.இந்த வெர்செய்ல்° உடன்படிக்கை ஜெர்மானிய மக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் இட்லர் தனது இனவெறி கொள்கைகளை, சோசலிச முலாம் பூசி, மக்கள் ஆதரவைப் பெற்றிட வாய்ப்பை ஏற்படுத்தியது.இதே போன்று இத்தாலியுடன் செய்து கொண்ட அமைதி ஒப்பந்தங்களும் இத்தாலிய மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி முசோலினி தலைமையில் பாசிசம் இத்தாலியில் வேரூன்ற வாய்ப்பு ஏற்பட்டது. முசோலினிக்கும், இட்லருக்கம் பெரும் தொழிலதிபர்கள், நிலச் சுவான்தார்கள் பக்கபலமாக இருந்தனர். ஏனெனில் இவர்கள் முதலாளித்துவ வளர்ச்சிக்கும் உலகச் சந்தையையும் கைப்பற்றிட ஏணியாக பயன்படக்கூடிய மக்கள் தலைவர்கள் என்று இத்தாலி, ஜெர்மனி நாட்டு முதலாளித்துவம் கருதியது.இந்த அச்சு நாடுகளில் ஒன்றான ஜப்பான், அமெரிக்காவின் அராஜக நடவடிக்கையான அணு ஆயுதத் தாக்குதலை எதிர் கொண்டது. ஜெர்மனி, இத்தாலி போன்று அதிகாரப்பூவர்மாக பாசிசத்தை ஜப்பான் ஏற்கவில்லை என்றாலும், அதன் அன்றைய அரசாங்கத்தில் இருந்த ராணுவ மேலாதிக்கம், 1936 – 37ஆம் ஆண்டுகளில் ஜெர்மனி இத்தாலி, ஜப்பான் ஏற்றுக் கொண்ட உடன்படிக்கைகள் மூலம் இவை மூன்றும் சேர்ந்த அச்சு நாடுகள் என்ற கூட்டணியை உருவாக்கியது.முதல் உலகப் போருக்குப் பின்முதலாம் உலகப் போருக்குப் பிறகு, பிரிட்டன், பிரான்° ஆகிய நாடுகளின் ஏகாதிபத்தியவாதிகள் ஒருபுறமும், ஜெர்மன் முதலாளித்துவம் மறுபுறமும் என பிரிந்து நின்றன.முதல் உலகப் போரில் தனது காலனி நாடுகளை பிரிட்டன், பிரான்° நாடுகளிடம் ஜெர்மனி இழந்தது. அவற்றை மீண்டும் கைபற்றிட முனைந்தது.ஏகாதிபத்தியவாதிகளின் சூழ்ச்சிஇந்த நிலையில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகள் ஒரு சூழ்ச்சி செய்தார்கள். இட்லர் தங்களது காலனிகளின் மீது கை வைப்பதற்கு பதிலாக சோவியத் யூனியனை கைபற்றுவதில் கவனம் செலுத்தும்படி தூண்டினர். அன்று பிரிட்டிஷ் பிரதமராக இருந்த சேம்பர்லின் உள்ளிட்ட ஏகாதிபத்திய கூட்டம் இதனைச் செய்தது.இந்த சூழ்ச்சியின் மூலம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள் என பலன் பெற அவர்கள் முனைந்தனர். அதாவது, ஒருபுறம் சோவியத் சோசலிசத்தை அழித்து விடலாம். மறுபுறம் தாங்கள் போருக்கான யுத்த செலவை மீண்டும் ஏற்று நஷ்டம் அடைவதைத் தவிர்க்கலாம். இட்லர் ஜெர்மனியையும், சோவியத் யூனியனையும் மோதவிட்டு, இருவரின் அழிவில் தங்களது ஏகாதிபத்திய வேட்டையை வலுப்படுத்திக் கொள்ளலாம் என்று அவர்கள் கணக்கிட்டனர்.வெளியில் இட்லர் பக்கமோ, சோவியத் பக்கமோ தாங்கள் இல்லை என்றும் நடுநிலைமையே தங்கள் கொள்கை என்பது போல் காட்டிக் கொண்டனர். ஆனால் உண்மையில் திரை மறைவு ஆதரவு நல்கினர்.°டாலின் தலைமையிலான அன்றைய சோவியத் யூனியன் பிரிட்டனையும், பிரான்சையும், பாசிசத்திற்கு எதிரான கூட்டு நடவடிக்கைக்கு அழைத்தது. இட்லர் சோவியத் நாட்டுக்கும் கம்யூனிசத்திற்கும் எதிராகப் பேசுவது வெறும் வெற்று வேஷம் எனவும், உண்மையில் இட்லர் சோவியத் யூனியனை தாக்குவது மட்டுமல்ல, பிரிட்டன் பிரான்சையும், மற்ற மேற்கத்திய நாடுகளையும் தாக்க முனைவான் என்று சோவியத் யூனியன் எச்சரித்தது. அவர்கள் இதனை காதில் வாங்கவில்லை.ஆனால், சோவியத் எச்சரிக்கை செய்தது போன்றுதான் பிந்தைய நிகழ்ச்சிகள் அரங்கேறின.இட்லர் முதலில் பிரான்சையும், பிரிட்டனையும் தாக்கிவிட்டுத் தான் சோவியத் மீது தாக்குதல் தொடுத்தான்.°டாலின் ராஜதந்திரம்பிரிட்டன், பிரான்° மீது தாக்குதலுக்கு சற்று முன்பாக அவன் சோவியத் யூனியனோடு ஒரு உடன்படிக்கை செய்து கொண்டான். பர°பரம் இருநாடுகளும் ஒன்றையொன்று தாக்கிக் கொள்வதில்லை என்பதே அந்த உடன்படிக்கை.இதற்கு பின்னணியாக இட்லரின் மிகப் பெரிய திட்டம் இருந்தது. அவன் சோவியத்தினை தாக்கும் நோக்கத்தை கைவிடவில்லை. முதற்கட்டமாக பிரிட்டன் பிரான்சை பலகீனமடையச் செய்து, அந்த நாடுகளைக் கைப்பற்றி, மேலும் பலம் பெற்று பின்னர் சோவியத் யூனியனை தாக்கிடலாம் என்பதே அவனது திட்டம். ஏனெனில், சோவியத்தோடு போர் புரிந்து வெற்றி பெறுவது அவ்வளவு சுலபமில்லை என்று அவனுக்குத் தெரியும்.°டாலின் இந்த திட்டத்தையும், அன்றைய நிலைமைகளையும் நன்குணர்ந்தே இட்லருடன் அந்த உடன்படிக்கையில் சோவியத்தின் ஒப்புதலை தெரிவித்தார்.தாற்காலிகமாக சோவியத் மீது இட்லர் தாக்குதலை செய்யாமல் இருக்க இந்த உடன்படிக்கை உதவியது. இது ஏற்பட்டு ஒன்றரை ஆண்டு கழித்துதான் சோவியத் மீது இட்லர் தாக்குதல் தொடுத்தான். இந்த ஒன்றரை ஆண்டு அவகாசம் சோவியத் யூனியன் மாபெரும் யுத்தத்திற்கு தன்னைத் தயார் செய்து கொள்ள உதவியது.இட்லர் போன்றவர்களோடு ஒரு உடன்படிக்கையை சோவியத் யூனியன் எப்படி செய்து கொள்ளலாம் என்று கேள்வி எழுப்பி, சோவியத் மீதும் °டாலின் மீதும் அன்றும், இன்றும் கூட அவதூறுகள் தொடுக்கப்பட்டன.அதற்கு °டாலின் “ஒரு அண்டை நாட்டில் இட்லர் ரிப்பன்ட்ராப் போன்ற அரக்கர்களும், மனித மாமிசம் தின்னும் கொடூரர்களும் ஆட்சி புரியலாம். ஆனால் அந்த நாட்டோடு, சமாதானத்தை விரும்பும் ஒரு நாடு அமைதியை நிலைநாட்ட ஒரு சமாதான உடன்படிக்கை ஏற்படுத்திக் கொள்வது தவறில்லை” என விளக்கினார். இட்லரோடுதான் ஏற்படுத்திக் கொண்டது ஒரு சமாதான உடன்படிக்கை என்றும் இதனை எந்த நாட்டோடும் செய்து கொள்ளலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.இட்லரின் இனவெறிதுவக்கத்தில் °டாலின் சொன்ன கூட்டு பாதுகாப்பு உடன் படிக்கைக்கு செவி சாய்க்காத பிரான்° உள்ளிட்ட நாடுகள் பெரும் சோதனைக்கு ஆளாயின.இட்லரின் திடீர் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் போர் துவங்கிய ஓராண்டில் பிரான்சும் இதர ஐரோப்பிய நாடுகளும் நாஜி படைகளிடம் தோல்வியுற்று வீழ்ந்தன. 1939ஆம் ஆண்டு செப்டம்பர் 1-ஆம் தேதி போலந்தை கைப்பற்றியதோடு துவங்கிய இந்தப் போர், 1945ஆம் ஆண்டு வரை நடந்தது. இவ்வாண்டுகளில் ஐரோப்பா உள்ளிட்டு வடஆப்பிரிக்க நாடுகளையும் இட்லர் வெற்றி கொண்டான்.இந்தக் காலத்தில் இட்லர் யூத இனத்தை அழிப்பதிலும் தீவிரம் காட்டினான். யூதர்களை படுகொலை செய்யும் முகாம்களில் மனிதர்கள் வேட்டையாடப்பட்டனர். ஆ°ச்விட்° என்ற இடத்தில் அமைக்கப்பட்டிருந்த முகாம்தான் மிகவும் பெரியது. இட்லர் படைகளும், அவனது கூட்டாளிகளான இத்தாலி, ஜப்பான் நாட்டு கொடுங்கோலர்களின் படைகளும் ஆக்கிரமித்த நாடுகளில் இருந்த யூதர்களம் வேட்டையாடப்பட்டனர்.இந்த சித்திரவதை, படுகொலை முகாம்களில் சுமார் 60 லட்சம் யூதர்கள் கொல்லப்பட்டனர். இனவெறி, மனித இனத்தை எத்தகைய கொடூரத்துக்கு ஆளாக்கிடும் என்பதற்கு வரலாற்றுச் சான்றாக இவை அமைந்துள்ளன.1941ஆம் ஆண்டு ஜூன் 22ஆம் தேதி இட்லர் சோவியத் யூனியன் மீது தாக்குதல் தொடுத்தான். இட்லரின் நாஜி படைகளுக்கு எதிரான போராட்டத்திற்கு ராணுவ ரீதியான திறமை, உலக நிலைமை பற்றிய தீர்க்க தரிசனமான பார்வையும், தெளிவும், கூர்மதியோடு கூடிய ராஜதந்திர முயற்சிகள் ஆகிய அனைத்தும் தேவைப்பட்டன. இந்த திறமைகளும் சிறப்புக்களும் கொண்டவராக °டாலினும், சோவியத் தலைமையும் அன்றைக்கு விளங்கியது. அதனால்தான் அனைத்து மேற்கத்திய நாடுகளும் இட்லர் தாக்குதலில் அடிபணிய நேர்ந்தபோது, சோவியத் மட்டும் உறுதியாகப் போராடி, இட்லரின் பாசிச வெறியாட்டத்தை முடிவுக்கு கொண்டு வர முடிந்தது.குறிப்பாக, °டாலின் மேற்கொண்ட ராஜதந்திர நடவடிக்கைகள் ஒரு பெரும் காவியமாக திகழ்கிறது.ஒருபுறம், நேச நாடுகள் என்று அழைக்கப்படும் பிரிட்டன், பிரான்°, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் ஒற்றுமையை பாதுகாத்து இட்லரை முறியடிக்க வேண்டிய கடமையையும் அவர் ஆற்றினார்.அதே நேரத்தில், இந்த ஏகாதிபத்திய நாடுகள் பாசிச எதிர்ப்பில் காட்டிய தயக்கம், ஊசலாட்டம், சோவியத் யூனியனுக்கு எதிரான வஞ்சம், ஆகிய அனைத்தையும் °டாலினும் சோவியத் நாட்டு கம்யூனி°ட் தலைமையும் மிக லாவகமாக எதிர் கொண்டனர். இந்த ஏகாதிபத்திய நாடுகள் இட்லர் தோல்விக்குப் பிறகு, சோவியத் யூனியனும் கடும் வீழ்ச்சி கண்டு சிதிலமாகிட வேண்டுமென விரும்பினர்.ஆனால், அவர்கள் எதிர்பார்ப்புக்கு மாறாக, இட்லர் வீழ்ந்த பிறகும், கடுமையான வரலாறு காணாத நாசத்தை சோவியத் யூனியன் சந்தித்த போதும், அடுத்த பத்தே ஆண்டுகளில் சோவியத் யூனியன் தன்னை புனரமைத்துக் கொண்டு உலகப் பெரும் சக்தியாக உருவெடுத்தது. இது சோசலிசத்தின் மகத்துவம்.மக்கள் யுத்தம்இந்தப் போரில் சோவியத் யூனியன் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு அளவற்ற தியாகம் செய்ததற்கு முக்கிய காரணம், இட்லரின் ஆக்கிரமிப்பிலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்ற நோக்கம் மட்டுமல்ல; உலக மக்களை பாசிசப் பிடியிலிருந்து விடுவிக்க வேண்டுமென்பதுதான்.அதனால்தான் இந்தப் போர் சோவியத் யூனியன் தலையிட்ட பிறகு, ‘தேசபக்த மக்கள் யுத்தம்’ என மாறியது. தொடக்கத்தில் ஏகாதிபத்திய நாடுகள் தங்களுக்குள் உலகை பங்கு போட்டுக் கொள்ள இந்தப் போரை துவக்கினர்.கூட்டாளிகளாக இருந்த ஜரோப்பிய, அமெரிக்கத் தலைமை வஞ்சக சூழ்ச்சிகளை சோவியத் யூனியனுக்கு எதிராக செய்தாலும், °டாலின் அந்த நாடுகளின் மக்களை நம்பினார்.சோவியத் மீது தாக்குதல் துவங்க இருந்த சமயத்தில் °டாலின் தனது ரேடியோ உரையில் குறிப்பிட்டார்.“… இந்த விடுதலைப் போரில், நாம் (சோவியத்) மட்டும் தனித்து இல்லை.இந்த மாபெரும் போரில் நமது உண்மையான கூட்டாளிகள் ஐரோப்பா, அமெரிக்காவில் உள்ள மக்கள்தான். இட்லரின் கொடுங்கோண்மைக்கு ஆளான ஜெர்மானிய மக்களும் நமது கூட்டாளிகள்தான். எனவே, இது சுதந்திரத்திற்கான மக்களின் கூட்டணி.”முதலாளித்துவ தலைமை, சோசலிசத் தலைமையும்°டாலினும், கம்யூனி°ட் தலைமையும் மக்களின் தேசபக்த உணர்வுகளையும் வளர்த்து சுதந்திரம், ஜனநாயகத்தை பாதுகாக்கும் போராட்டத்தில் மக்களை ஈடுபடுத்தினர்.வரலாற்றில் சூரப்புலியாகவும், மாமனிதராகவும் முதலாளித்துவ மீடியாக்களில் இன்றும் சித்தரிக்கப்படுகிறவர் அன்றைய பிரிட்டிஷ் பிரதமர் வின்°டன் சர்ச்சில். அவர் மக்களுக்கு அறைகூவல் விடும்போது, “ஜெர்மனி நமது நாட்டின் மீது படையெடுக்கும் போது, மக்கள் அனைவரும் வீட்டில் பாதுகாப்பாக தங்கியிருக்க வேண்டுமென கேட்டுக் கொண்டனர். இதுதான் பாசிசத்திற்கு எதிராக மக்களைத் திரட்டுவதில் முதலாளித்துவ தலைமை காட்டிய அக்கறை. °டாலின் மக்களிடம் உரையாற்றும் போது, சோசலிசத்துக்கே உரிய மேன்மையான நாட்டுப்பற்று உணர்வுகளை தட்டியெழுப்பி அவர்களை போரில் ஈடுபடுத்தினார். அவரது ரேடியோ உரை வருமாறு:“நமது நாட்டில் எதிரிகள் ஆக்கிரமித்துள்ள இடங்களில் கொரில்லா முகாம்களை தரையிலும், மலைப்பகுதிகளிலும் அமைந்திருங்கள். எதிரி முகாம்களை அழித்து ஒழிக்கும் குழுக்களை அமைத்திடுங்கள்… நமது பகுதிகளை ஆக்கிரமித்துள்ள எதிரிகளுக்கு வாழ்க்கை நரகமயமாக்கிடும் வகையில் அவர்களது பகுதிகளில் உள்ள சாலைகள், பாலங்கள், தொலைத் தொடர்பு வசதிகளை அழித்திடுங்கள்.கொரில்லாக்களும், மக்களும் சேர்ந்து நாஜிப்படைகளை அழித்திட்ட வீர காவியத்தை வரலாறு பயிலும் அனைவரும் அறிவார்கள். சர்ச்சில் போன்ற அன்றைய கம்யூனி°டு எதிரிகளிலும், ஜார்ஜ் புஷ் போன்ற இன்றைய எதிரிகள் கூட சோவியத் மக்களின் போர்த்திறனை போற்றிட வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார்கள்.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

புலிகள் பாரிய தாக்குதல் ஒன்றுக்கான ஆயத்தங்கள்!? :பாதுகாப்பு ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் .

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In