விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜி11 உச்சிமாநாட்டில் உரையாற்றுகையில் கூறியுள்ளார்.
ஜோர்தானில் நடைபெற்ற இம்மாநாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றியபோது “”எனது அரசாங்கம் எமது ஆயுதப் படைகளின் முழுமையான பங்களிப்புடன் முன்எப்போதும் இல்லாதவாறான மனிதாபிமான நடவடிக்கையொன்றை மேற்கொண்டிருந்தது.
இறுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக தோற்கடித்துள்ளது என்பதை அறிவிப்பதில் நான் பெருமைடைகிறேன்” எனக்கூறியதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
பயங்கரவாதத்தை முற்றாக தோற்கடித்த ஒரு நாட்டின் தலைவராக தான் தாயகம் திரும்பப்போவதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
இதேவேளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது ஜோர்தானிலிருந்து முன்கூட்டியே இலங்கைக்குத் திரும்பத் தீர்மானித்துள்ளார். அவர் நாளை மறுநாள் இலங்கைக்குத் திரும்புவதற்கு முன்னர் திட்டமிடப்பட்டிருந்தது. எனினும் நாளை காலையே அவர் நாடு திரும்பவுள்ளதாக அரசாங்க அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.







