Sunday, April 26, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

பதவிக்காக தமிழினப் படுகொலைக்கு துணைபோன முதல்வர் கருணாநிதி:ஜெயலலிதா.

இனியொரு... by இனியொரு...
03/21/2009
in இன்றைய செய்திகள்
0 0
1
Home இன்றைய செய்திகள்

21.03.2009.

பதவிக்காக தமிழினப் படுகொலைக்கு துணைபோன முதல்வர் கருணாநிதியை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இது குறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில்

“மாநில நிர்வாகம் எதுவும் பின்னுக்குத் தள்ளப்படவில்லை’ என கருணாநிதி கூறியுள்ளார். கடுமையான மின்வெட்டு, விஷம் போல் ஏறும் விலைவாசி, வெறிச்சோடிக் கிடக்கும் தொழிற்பேட்டைகள், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழப்பு, வேலையில்லாத் திண்டாட்டம், சட்டம் – ஒழுங்கு சீரழிவு என ஏராளமானவற்றை மாநில நிர்வாகம் பின்னுக்குத் தள்ளப்பட்டிருப்பதற்கு சான்றாகக் கூறலாம்.

“ஆம்புலன்ஸில் வந்து உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியை சந்திக்கத் தயாராக இருக்கிறேன்’ என்று மருத்துவமனையிலிருந்து கடிதம் எழுதியதாக கருணாநிதி கூறுகிறார். ஆனால் வழக்கறிஞர்களையும், நீதிபதிகளையும், பொதுமக்களையும் கண்மூடித்தனமாகத் தாக்க காவல் துறையினருக்கு யார் உத்தரவிட்டது என்பது குறித்து இதுநாள் வரையிலும் பதில் அளிக்கவில்லை.

இதன் மூலம் குழந்தையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டிவிடும் கருணாநிதியின் கபட நாடகம் வெட்ட வெளிச்சமாகிவிட்டது. நான் ஏதோ வசைமாறி பொழிந்து அறிக்கைகள் விட்டதாக கருணாநிதி ஒரு பட்டியலிட்டுள்ளார். அந்த பட்டியலில் உள்ள வார்த்தைகளைப் பார்க்கும்போது அவை வசைமாறி பொழியும் அறிக்கைகள் அல்ல. உண்மை நிலையை நாட்டு மக்களுக்கு எடுத்துரைக்கும் அறிக்கைகள் என்பது விளங்கும். 4.10.2008 அன்று நான் வெளியிட்ட அறிக்கையில் “கருணாநிதி பேச்சு, மூச்சற்றுப் போவார், வாய் மூடிக் கிடப்பார்’ எனக் குறிப்பிட்டதாக கருணாநிதி கூறியுள்ளார். தமிழர்களின் நலன், பாதுகாப்பு, நல்வாழ்வு என்பன பற்றிய பேச்சு எழும்போதெல்லாம் கருணாநிதி பேச்சு, மூச்சற்றுப் போவார். வாய்மூடிக் கிடப்பார் என்றுதான் நான் குறிப்பிட்டிருந்தேன்.

அண்டை மாநிலங்களுடனான நதிநீர் பிரச்னை, இலங்கைத் தமிழர்கள் பிரச்னை, கச்சத் தீவு பிரச்னை என்றால் வாய்மூடிக் கிடப்பார் என்பதுதான் இதற்குப் பொருள். இதுதான் உண்மை நிலை. அதில் தவறு ஒன்றும் இல்லை.

காவிரி பிரச்னை தொடர்பாக 19.2.2007 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கருணாநிதி கூட்டினார். ஆனால் இன்றுவரை அந்த பிரச்னையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிடக் கூட மத்திய அரசு முன்வரவில்லை. இது குறித்து மத்திய அரசிடம் கருணாநிதி வற்புறுத்தியது இல்லை. அதனால்தான் இலங்கைத் தமிழர் பிரச்னை குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டும் தார்மீக உரிமை கருணாநிதிக்கு இல்லை என தெரிவித்திருந்தேன்.

10.10.2008 அன்று நான் வெளியிட்ட அறிக்கையில் தமிழர்கள் மீது கருணாநிதிக்கு உண்மையிலேயே அக்கறை இருக்குமானால், இலங்கை ராணுவத்துக்கு பயிற்சி அளிக்கும் மத்திய அரசுக்கு, தி.மு.க. அளித்து வரும் ஆதரவை உடனடியாக திரும்ப பெற வேண்டும். அப்படிச் செய்தால்தான் மத்திய அரசு மனிதாபிமான அடிப்படையில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக செயல்பட முன்வரும் என தெரிவித்திருந்தேன். என்னுடைய கோரிக்கைகள் ஏற்கப்பட்டிருக்குமானால், இந்த நேரத்தில் இலங்கையில் நிச்சயமாக போர் நிறுத்தம் ஏற்பட்டிருக்கும். தமிழினப் படுகொலை தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும்.

அற்ப பதவி சுகத்திற்காக, தமிழினப் படுகொலைக்கு துணைபோன கருணாநிதியை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்பதை கருணாநிதிக்கு இந்தத் தருணத்தில் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

மக்கள் பிரச்னைகளில் கவனம்: அ.தி.மு.க. பொதுச் செயலாளர் என்ற முறையிலும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையிலும் ஜனநாயக ரீதியில், உண்மை நிலையை அறிக்கைகள் வாயிலாக மக்களுக்கு தெரிவிக்க வேண்டியது எனது கடமை. நான் ஆற்றும் ஜனநாயகக் கடமைகளையெல்லாம் வசைமாறி பொழியும் அறிக்கைகள் என கருணாநிதி குறிப்பிடுவது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. எனவே, மரபுக்கு ஒவ்வாத அறிக்கைகள் வெளியிடுவதையும், என்னைக் குறை கூறுவதையும் கருணாநிதி நிறுத்திக் கொள்ள வேண்டும். எனது அறிக்கைகளில் உள்ள மக்கள் பிரச்னைகளின் உண்மை நிலைகளைப் புரிந்து கொண்டு, அவற்றைத் தீர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என தனது அறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளதாக இந்திய இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

குறுகிப்போன ஒரு நிலப்பரப்பில் விடுதலைப்புலிகள்:உக்கிர மோதல்கள் .

Comments 1

  1. Karunaharamoorthy says:
    17 years ago

    ஜெயலலிதாவின் தற்போதைய மனமாற்றம் எதிர்வரவுள்ள இந்தியதேர்தலையிட்டான பல்டி என்பதை முழு உலகமும் அறியும். ஆனாலும் அவரது பேச்சுக்கள் மு.கருணாநிதியை
    தன் செயலுக்காக பச்சாதாபங்கொள்ள வைக்கும் என்பதுவும் உண்மை.
    இன்றைய அவரது உணர்ச்சிமிகு(?) பேச்சுக்களை வைத்துக்கொண்டு ஒரு வேளை நாளை அவர் அமைக்கும் கூட்டணி வெற்றிபெற்று அவரது செல்வாக்குபெற்ற கட்சியின்/ அல்லது
    அவரது ஆட்சியேதான் மத்தியில் அமைந்தாலும் ஈழத்தமிழருக்கான நிலைப்பாட்டில்தான்
    அவர் இருப்பார் என்றெல்லாம் நாம் நம்பிக்கைகொள்ள முடியாது.

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In