நேபாளத்தின் புதிய பிரதமராக அந்நாட்டு பிரதம நீதியரசர் கீல் ராஜ் ரெக்மி நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் தெரிவின் மூலம், சில மாதங்களாக நாட்டில் நிலவி வந்த அரசியல் பதற்ற நிலைமைக்கு தற்காலிக தீர்வு காணப்பட்டுள்ளது.
ரெக்மி தலைமையிலான அரசாங்கம், நேபாளத்தில் இடைக்கால ஆட்சியை நடாத்தும் எனவும், எதிர்வரும் ஜூன் 21-ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி மாளிகையில் நடந்த பதவியேற்பு விழாவில், ரெக்மிக்கு ஜனாதிபதி ராம்பரண் யாதவ் பதவிப்பிரமாணமும், ரகசியக்காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.









Sri Lanka – Shri Lanka is also special. different and unique like Nepal.