சென்னை நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி அருகே இலங்கை அரசின் தூதரகம் உள்ளது. இந்த தூதரகத்துக்கு நேற்று மிரட்டல் கடிதம் ஒன்று வந்தது.
முகமது இஸ்மாயில் என்ற பெயரில் வந்த மிரட்டல் கடிதத்தில், ‘ எங்கள் தமிழ் இன மக்களை கொன்று குவித்த இலங்கை அதிபர் ராஜபக்சேவை கொலை செய்யாமல் விட மாட்டோம், எங்கள் மண்ணில் இருந்து தூதரகத்தை அகற்றவில்லையென்றால் 15-ந்தேதி(நாளை) தூதரகத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என்று’ கூறப்பட்டுள்ளது.
மிரட்டல் கடிதம் தொடர்பாக இலங்கை தூதரக அதிகாரிகள் போலீசில் புகார் அளித்தனர். இதன்பேரில் போலீசார் வெடிக்குண்டு மிரட்டல் கடிதம் தொடர்பாக புலனாய்வு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தற்போது தூதரகம் முன்பு கூடுதலாக போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். சந்தேகத்துக்கிடமாக யாரும் நடமாடுகிறார்களா? என்பது குறித்து மாறு வேடத்திலும் போலீசார் கண்காணிக்கிறார்கள்.
தமிழ் நாட்டில் நடைபெற்ற மாணவர் போராட்டங்களின் பின்னர் மிரண்டுபோயுள்ள இந்திய அரசு, எதிர்காலத்தில் அதனைக் கையாள்வதற்குப் பல்வேறு தந்திரோபாயங்களைப் பயன்படுத்தி வருகிறது. சீன ஆதிக்கம், பாதுகாப்பு, பயங்கரவாதம் போன்றவற்றைக் காரணம்காட்டும் இந்திய அரசு தனது பல்தேசிய நிறுவவனங்ஜகளை நிலப்பறிப்பில் ஈடுபடுத்தி வருகிறது.









I think Sri Lanka will open a Consulate General in all the State Capitals in India. That is the outcome that Honourable R. Sampanthan finally got.